ஏ1 படத்தை தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு-3’ படத்தில் நடிக்கும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் வெற்றி பெறவே, தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்தார்.

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இதன் பின்னர் ஏ1 படத்தில் நடித்தார். இந்த படமும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த பாகமான ‘தில்லுக்கு துட்டு 3’ படத்தை 3டியில் எடுக்க சந்தானம் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது டகால்டி என்ற படத்தில் சந்தானம் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்பட தயாரிப்பாளரான சௌத்ரியே தில்லுக்கு துட்டு 3 படத்தையும் தயாரிக்க உள்ளார் என்றும் முந்தைய பாகங்களை இயக்கிய ராம் பாலாவே இப்படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்யை மிரட்டும் மலையாள நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் இந்தாண்டு 2019 தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய்.

இதில் நாயகிகளாக ராஷ்மிகா, ராசி கண்ணா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடிக்கும் கைதி படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரேம்ஜிக்கு மேரேஜ்..? பெண் கிடைச்சிடுச்சா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி.

இவர் அஜித்துடன் மங்காத்தா, சூர்யாவுடன் மாசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரின் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு 40 வயதை கடந்துவிட்ட போதிலும் திருமணம் நடக்கவில்லை.

எனவே இவரது பெற்றோர்கள் நண்பர்கள் பெண் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆணும் பெண்ணும் இணைந்து நிற்கின்ற வாசகத்துடன் கேம் ஓவர் என வரையப்பட்ட டீசர்ட் உடன் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனால் பிரேம்ஜிக்கு பெண் கிடைத்து விட்டது என பலரும் கூறி வருகின்றனர்.

ஜப்பானிலும் யுரேசியாவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழா, திபுரான் உலக திரைப்படவிழா, அட்லாண்டா திரைப்படவிழா , அமெரிக்காவில் நடைபெற்ற நியுயார்க் மற்றும் கலிபோர்னியா திரைப்படவிழாக்கள்
சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது. இன்னும் பல சர்வதேச திரைப்படவிழாவிலும் தேர்வு செய்யபட்டு உலக திரைப்பட விழாக்களில் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள்,

தற்போது ஜப்பானில் நடைபெறும் மாபெறும் Fukuoka உலக திரைப்பட விழாவிலும் யுரேசியாவில் நடைபெறும் மாபெறும் உலக திரைப்பட விழாவிலும் இயக்குனர் வஸந்த் எஸ் சாயின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது! உலக திரைப்பட விழாவில் கொண்டாடப்படும் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வீடியோவை பார்க்க

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி வசனம் எழுதி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இயற்கை விவசாயம் குறித்து விழா நடத்திய இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் வயலிலும் இயற்கை விவசாயத்தை பாரம்பரிய நெல்லில் செய்தும்,சினிமாவிலும்
இயற்கை விவசாயத்தை பற்றி குத்தூசி என்ற திரைப்படத்தை எடுத்த இயக்குனர் சிவசக்தி
அவர்கள்,தனது பிறந்த ஊரான கள்ளக்குறிச்சி அருகே மாத்தூர்
கிராமத்தில் இயற்கை விவசாயம் அறிமுக விழா நடத்தினார்.

விழாவில் நம்மாழ்வார் படத்தை திறந்துவைத்து
இயற்கைவிவசாயம் ஏன் வேண்டும் , அதன் சிறப்பு பற்றியும் சான்றோர்கள் பேசினார்கள்.மற்றும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் காட்டுயாணம் காலாநமக்,மாப்பிள்ளை சம்பா தந்தும் ,ஏரி கரையில் நட பனை விதையும் , அனைவருக்கும் விதைபந்தும், பள்ளிமாணவர்களுக்கு
மரகன்றும் தந்தனர்.நிகழ்ச்சியில் 465 வகையான பாரம்பரிய நெல் கண்காட்சி வைத்தனர்.
அனைவருக்கும்
உணவாக பாரம்பரிய அரிசியான காட்டுயாணம் கஞ்சி.
மாப்பிள்ளை சம்பா சாதம் வழங்க பட்டது.உழவர்களுக்கு ஒரே கருத்தாக உங்கள் வயலில் உங்களுக்காண உணவை பாரம்பரிய நெல்லில் இயற்கை விவசாயம் செய்யுங்கள். விதைநெல்லை பாதுகாத்தும்.

இயற்கையை போற்றி வாழ்வோம் என்று கூறினார்கள். விழாவை
குத்தூசி இயற்கை போற்றும் நண்பர்கள் மற்றும் பசுமை சிகரம் அறக்கட்டளை.
எழில் இயற்கை
வேளாண் பண்னையும்
சேர்ந்து இவ்விழாவை நடத்தினார்கள் .

கல்லூரி மாணவிகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ் விக்ரம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். விக்ரமிற்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமிற்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது. தெலுங்கில் பெரிய வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரிமேக் ஆகி வருவது அனைவரும் அறிந்த செய்தி. முழுதாக தயாரான அப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

அந்த டீசர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் துருவ் விக்ரம் சில தினங்களுக்கு முன்பு சென்னை வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது அவரை மாணவிகள் சூழ்ந்து கொண்டனர். மாணவிகள் மத்தியில் கலகலப்பாக உரையாடிய அவர், நிகழ்ச்சியில் ஒரு பாடலும் பாடி அசத்தினார். கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற “கல்யாண வயசு தான்” என்ற பாடலை அவர் பாட மாணவிகள் கைகள் தட்டி உற்சாகப் படுத்தினார்கள்.

மேலும் மாணவிகள் அனைவரும் துருவ் விக்ரமோடு செல்பி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக ஆதித்ய வர்மா படத்தின் டீசர் திரையிடப்பட்டது. அவ்வேளையில் மாணவிகள் சந்தோசக் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். துருவ் விக்ரமிற்கு படம் வெளிவரும் முன்பே ஒரு ரசிகர் படை உருவாகி வருகிறது.

More Articles
Follows