கன்னட இயக்குனருடன் இணையும் சந்தானம்–தான்யா ஹோப் ஜோடி

கன்னட இயக்குனருடன் இணையும் சந்தானம்–தான்யா ஹோப் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு நேற்று பெங்களூரில் பூஜையுடன் ஆரம்பமானது.

இப்படத்தை ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை ‘புரொடக்‌ஷன் No10’ ( சந்தானம்15 ) ஆக தயாரிக்கிறார்கள்.

தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் இப்படத்தை கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார்.

இதில், சந்தானம் ஜோடியாக, ‘தாராள பிரபு’ ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார். மேலும், பாக்யராஜ், பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதாநாயகனும், நாயகியும் வெவ்வேறு விளம்பர நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். தொழில் முறை போட்டியில் எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடை பெறும் தொழில் முறை யுத்தத்தை முழு நீள நகைச்சுவை ‘சந்தானம்’ பாணியில் டைரக்டர் உருவாக்குகிறார்.

இதன் படபிடிப்பு இன்று பூஜையுடன் பெங்களூரில் ஆரம்பமானது. இந்த படபிடிப்பை தொடர்ந்து சென்னை, பாங்காங்க், லண்டன் நகரங்களில் படபிடிப்பு நடைபெறுகிறது.

சந்தானம் படங்களில் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.

இது ஒரு சந்தானம் அக்மார்க் திரைப்படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளது.

தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj )
இசை: அர்ஜூன் ஜன்யா ( Arjun Janya )
ஒளிப்பதிவு: சுதாகர் எஸ்.ராஜ் ( sudhakar S.Raj )
கலை: மோகன் பி.கேர் ( ( Mohan B.Kere )
ஸ்டண்ட்: ரவி வர்மா ( Ravi Varma )
நடனம்: குலபுஷன், சந்தோஷ் சேகர் ( Kulabhushan, santhosh Shekar )

Santhanam and Tanya hope joins for a new film

பெண்மையை சிதைக்கும் கொடுமை.: சடங்குமுறையை சாடிய கார்த்திகேயனுக்கு 200 விருதுகள்

பெண்மையை சிதைக்கும் கொடுமை.: சடங்குமுறையை சாடிய கார்த்திகேயனுக்கு 200 விருதுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாதாரணமாக சிறு கீறல் நம் உடலில் ஏற்பட்டாலே ஏற்படும் வலியினைத் தாங்குவது மிகச்சிரமம், ஆனால் சடங்கு முறை என்ற பெயரில் நம் இந்தியாவின் தென் மற்றும் பெரும்பாலான வட மாநிலங்களில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் பெண் உறுப்பினை சிதைக்கும் கொடுமையினை குறும்படமாக எடுத்து ஏறத்தாழ இந்தியா மட்டுமல்லாமல் அயல்நாடுகளிலும் இதுவரையிலும் 170க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார் மானா மதுரையைச் சேர்ந்த இளைஞர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோந்த கார்த்திகேயன், நடிப்பதற்காக பனிரெண்டு வருடங்களுக்கு முன்பாக சென்னை வந்தார். வந்த இடத்தில் நண்பர் துணை இயக்குநராக முயற்சிக்கலாம் என்ற யோசனையின் பேரில் டி.என்.பி கதிரவன், சதுரங்கவேட்டை வினோத் சாரிடம் கதை டைப் செய்வது போன்ற பணிகளுக்குப் பின்னர்.கர்நாடகாவில் ஐயப்பா பி ஷர்மா, நடிகர் சாய்குமார் பிரதரிடம் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

சாதாரணமான இயக்குநராக மட்டுமல்லாமல், சமூகத்திற்கு பலனளிக்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கில் சிதை உருவானது.

சிதை கதையை கூறியவுடன் பிஜு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உடனே அந்த கதையை எடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். படப்பிடிப்பு ஒரே நாளில் முடிவடைந்து, வெளியிட்டாலும் படத்துக்கான வரவேற்பு குறைவாகவே இருந்தது.

அதன் பின்னர் நாளுக்கு நாள் இந்த குறும்படத்திற்கு விருதுகள் வந்துக்கொண்டே இருந்தததைத் தொடர்ந்தே மக்கள் கவனத்தைச் சென்றடைந்தது.

சிதை குறும்படத்தை பார்த்த இயக்குநர் வெங்கட்பிரபு, மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பிக்பாஸ் ஆரி அர்ஜுனன், காமெடி நடிகர் சாம்ஸ் ஆச்சரியப்பட்டு, நன்றாக இருப்பதாகக்கூறியதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு இப்படியெல்லாமா நடந்துக்கிட்டு இருக்கு என்ற அங்கலாய்த்தனர்.

ட்ரெய்லரை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட, பலரும் வாழ்த்தி மகிழ்வித்து வருகின்றனர்.

இந்த சடங்கு முறைய பற்றி மக்களுக்கு புரிய மாதிரி சொல்லுங்க?

இந்த சடங்கு முறை மூவாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நம்ம ஊர்ல பூப்புனித நீராட்டு விழா எப்படி நடக்குதோ உலகத்தில நிறைய இடங்கள்ல இந்த சடங்கு முறை நடந்துக்கிட்டிருக்கு. இத தடுக்கத்தான் எங்கள் குறும்படம் மூலமா உலகத்துக்கு சொல்லியிருக்கிறோம்.

சடங்கு முறையின் பெயர் என்ன?

சடங்கு முறை பெயர் – காஃப்டா, 4 வயது குழந்தையின் பிறப்புறுப்பில் ப்ளேடால் அறுத்து தைத்து 40 நாள் தனி அறைக்குள் அடைத்து விடுவார்கள் இதான் சடங்கு முறை.

இந்த சடங்கு முறை நடத்துவதற்கான காரணம்? அதை பற்றி சொல்லுங்கள்?

அதற்கான காரணத்தை திரைப்படத்தில் சொல்கிறோம். சடங்கு முறை வலியை இக் குறும்படத்தில் சொல்லியிருக்கிறோம்.

சடங்கின் வாழ்க்கை முறையை பற்றி திரைப்படத்தில். எல்லாத்தையும் சொல்லிட்டா மக்களுக்கு சுவாரஸ்யம் போயிரும்ல வெயிட் பண்ணுங்க கண்டிப்பா தரமான விஷயத்தை சொல்கிறேன்.

திரைப்படத்திற்கான திரைக்கதை முடித்து விட்டீர்களா?

கதையையும் முடிந்தது. இந்த படத்தில் கேமராமேன் வெற்றி சார் அசிஸ்டெண்ட் சுபாஷ் நாதன் தான் எங்கள் படத்தின் கேமராமேன்

விரைவில் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் அறிவிப்பு வெளியாகும்.

இந்த குறும்படம் எத்தனை விருதுகள் பெற்றுள்ளது அதைப்பற்றி?

200 விருதுகள் பெற்றுள்ளது. அதிகபட்சமாக விருதினை பெற்ற பெஸ்ட் ஸ்கிரிப்ட் 50 விருது. கடைசியாக இக் குறும்படத்தில் உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Director Karthikeyan talks about his short film “Sithai”

கீர்த்தி சுரேஷுடன் இணைந்தது பற்றி செல்வராகவன் என்ன சொல்கிறார்.?

கீர்த்தி சுரேஷுடன் இணைந்தது பற்றி செல்வராகவன் என்ன சொல்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் இச்சித்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  பிரைம் உறுப்பினர்கள் மே 6 முதல் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இத்திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்.

அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள தமிழ் அதிரடி சித்திரமான சாணி காயிதம் படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ இன்று (26 April, 2022) வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மற்றும் பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

சாணி காயிதம் திரைப்படம் பிரைம் வீடியோவில் 6 May 2022 முதல் பிரத்யேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும். இப்படம் தெலுங்கில் சின்னி என்றும் மலையாளத்தில் சாணி காயிதம் என்றும் வெளிவருகிறது.

கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழும் மனதை நெகிழ வைக்கும் வாழ்க்கைப் பயணத்தை சாணி காயிதம் சித்தரிக்கிறது. ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள், அவருடன் தனது கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்கிறாள்.

ராக்கி பட இயக்குனரின் அடுத்த சம்பவம் . வெளியானது மிரட்டலான சாணி காயிதம் பட டிரைலர்

தனது கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இதுவரை நான் நடித்த கதைகளில் இருந்து முற்றிலும் விலகிய கதை பாணியை சாணி காயிதம் கொண்டுள்ளது. அனுபவமில்லாத அதே சமயம் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். என்னுடைய பாத்திரமும், இயக்குநர் அருணின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும் தொலைநோக்குப் பார்வையும்தான் இந்த கடினமான படத்தின் ஒரு பகுதியாகப் பங்கேற்க என் ஆர்வத்தைத் தூண்டியது.

அதற்கு மேலாக, இயக்குனர் செல்வராகவன் உடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மேலும் சிறப்பைச் சேர்த்தது! இந்த பாத்திரத்தில் நான் ஆத்மப் பூர்வமாக பங்கேற்றுள்ளேன் பிரைம் வீடியோவில் சாணி காயிதத்தை. 6 May முதல், உலகெங்கிலும் உள்ள எனது ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள் என அறிவது புதிய உற்சாகத்தைத் தருகிறது. அவர்களது விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார்..

தற்போது நடிகராகவும் உருவெடுத்துள்ள பிரபல இயக்குனர் செல்வராகவன் கூறுகையில்….

“இந்தப் படத்துக்காக நான் முதல்முறையாக கேமராவின் முன்னால் நின்று நடித்ததால் சாணி காயிதம் எனக்கு ஸ்பெஷலான படமாகும். ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும் திறமையான கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியைத் தந்தது.

இயக்குனர், அருண் மாதேஸ்வரன், தனது துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் மற்றும் கதையிலும் கலைஞர்களிடமிருந்தும் முழுமையான திறனை வெளிப்படுத்தியுள்ளார். பிரைம் வீடியோவில் சாணி காயிதம் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளராக யாமினி யக்ஞமூர்த்தி, இசையமைப்பாளராக சாம் சிஎஸ், கலை இயக்குநராக ராமு தங்கராஜ், எடிட்டராக நாகூரான் ராமச்சந்திரன், ஸ்டண்ட் இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளர் சித்தார்த் ரவிப்பட்டி .

Prime Video launches the Trailer of the upcoming Tamil Revenge Action-Drama – Saani Kaayidham

சிவகார்த்திகேயன் வழக்கு.; ஞானவேல்ராஜா படங்களுக்கு தடை..? கோர்ட் தீர்ப்பு என்ன.?

சிவகார்த்திகேயன் வழக்கு.; ஞானவேல்ராஜா படங்களுக்கு தடை..? கோர்ட் தீர்ப்பு என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019-ம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘மிஸ்டர் லோக்கல்’ படம் வெளியானது.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.

இந்த படம் சுமாராகவே ஓடியது.

இந்த நிலையில் இந்த மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஞானவேல்ராஜா சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை அவர் தயாரிக்கும் படங்களில் முதலீடு செய்யத் தடை தேவை.

மேலும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடுகளை தடை செய்ய வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தனக்கு சம்பள பாக்கி ரூ.4 கோடி தர வேண்டும் என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட பதினைந்து கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது நீதிபதி மூன்று ஆண்டுகளாக சம்பளப் பாக்கியை கேட்டு ஏன் வழக்கு தொடரவில்லை. தற்பொழுது டிடிஎஸ் தொகையை வசூலிக்கும் வருமான வரித்துறையின் நடவடிக்கை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கும் நிலையில் மற்றொரு வழக்காக ஏன் இதை தொடர்ந்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

பின்னர் சிவகார்த்திகேயன் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு.

பிரச்சினைக்கு தீர்வு காண சமரச தீர்வாளரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 3 படங்களை வெளியிட தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.

Here’s Court verdict on Sivakarthikeyan and Gnanavel Raja movie issue

ஹிந்தியில் ரீமேக்காகும் ‘சூரரைப் போற்று’.; சூர்யா – அக்‌ஷய்குமார் கூட்டணி

ஹிந்தியில் ரீமேக்காகும் ‘சூரரைப் போற்று’.; சூர்யா – அக்‌ஷய்குமார் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’.

இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது.

இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.

நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‘சூரரை போற்று’ இந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அபுடான்டியா என்டர்டைன்மென்ட் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

ஜோதிகா, சூர்யா ஆகியோருடன் இணைந்து தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா அவர்களும் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் ராஜசேகர் பாண்டியன் மற்றும் சிக்கா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இனணகிறார்கள்.

Soorarai Pottru
‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக் விவகாரம்: சூர்யாவுக்கு சாதகமான தீர்ப்பு

‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கை தமிழில் இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சதீஷ் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை பிந்தியா மற்றும் அரவிந்த் மேற்கொள்கிறார்கள்.

அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதிகா மதன் நடிக்கிறார்.

படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் தொடங்கியது.

‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கின் தொடக்கவிழாவில் கலந்துக் கொள்வதற்காக, கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் படபிடிப்பிலிருந்து சூர்யா மும்பைக்குச் சென்றார். அவரது வருகை படக்குழுவினரை உற்சாகப்படுத்தியது.

Hindi remake of Suriyas Soorarai Pottru begins

விமல் மீது போலீஸில் புகார் அளித்தார் ‘மன்னர் வகையறா’ பட தயாரிப்பாளர் மகள்

விமல் மீது போலீஸில் புகார் அளித்தார் ‘மன்னர் வகையறா’ பட தயாரிப்பாளர் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விமல் நடிப்பில் ’மன்னர் வகையறா’ என்ற படத்தின் ஆரம்ப தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசன் அவர்களின் மகள் ஹேமா இன்று (25-04-2022) காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமல் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியதாவது,

பொருள் : ரூபாய் 1,73,78,000/- திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, இறைச்சி கடைகள் நடத்தி, அதன் பின்னர் சிறிய சிறிய தொழில்கள் செய்து தன்னை ஒரு தொழில் அதிபராக நிலை நிறுத்தி கொண்டவர் மறைந்த என் தந்தை கணேசன். சினிமா மீது தீராத ஆவல் கொண்டிருந்த அவரை மூளைச்சலவை செய்து ” மன்னர் வகையறா ” என்ற திரைப்படத்தை துவக்க வைத்தவர் நடிகர் விமல்.

படத்தின் பட்ஜெட்டை ரூ. 5 கோடி என்றும், ரூ. 1.5 கோடி மட்டும் முதலீடு செய்தால் மீதி தொகையை சினிமா உலகத்திற்குள் கடனாக பெற்று கொள்ளலாம் என்றும் நடிகர் விமல் அளித்த உத்தரவாதத்தை நம்பிய எனது தந்தை சென்னைக்கு வந்து ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வைத்து கொண்டு பட தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தார். அப்போதே எங்கள் குடும்பத்திற்குள் கலகம் ஆரம்பமாகிவிட்டது. நானும் எனது தாயாரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எங்கள் பேச்சை கேட்காமல் விமல் போன்ற மண் குதிரைகளை நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

இனி அவர் விஷயத்தில் நானும் என் விஷயத்தில் அவரும் தலையிட மாட்டோம்.. – விமல்

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டுக்கோட்டையில் படப்பிடிப்பு துவங்கியது. 60 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, ஆறு மாத காலத்திற்குள் படத்தை வெளியிட்டு விட்டு, பின்னர் சினிமாவிற்குள் கால் வைக்க மாட்டேன் என எனது தந்தையும் எங்களுக்கு உறுதி அளித்ததால் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பணிகளை பார்வையிட எனது அம்மாவும் சம்மதித்தார்.

17 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்த வேளையில், விமலுக்கும் கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை வர, இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்ததால் மனம் வெறுத்து போன என் தந்தை அதற்கு மேல் படப்பிடிப்பை தொடர மனமில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்ய சொல்லிவிட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தந்தையை சந்தித்த விமலிடம் ” உன்னை நம்பி தான் இந்த துறைக்கு வந்து முதலீடு செய்தேன். தனி மனித ஒழுக்கம் இல்லாத உன்ன நம்பி மேற்கொண்டு ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. இந்த படம் அப்படியே கிடக்கட்டும். என் நஷ்டத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுகட்டி விடுவேன் ” என்று கூறி மேற்கொண்டு படத்தை தயாரிக்க விருப்பமில்லை என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.

சில நாட்கள் கழித்து அப்பாவை சென்னைக்கு அழைத்த விமல், இந்த படத்தை நம்பி தான் எனது எதிர்காலம் உள்ளது. எனவே படத்தை நானே மேற்கொண்டு தயாரித்து, படத்தை வெளியிட்டு விட்டு, நான் செலவு செய்த தொகை போக மீதமிருக்கும் தொகையில் தங்கள் தொகையை தங்களிடம் கொடுத்து விடுகிறேன் என கூறியதாலும், விமலின் எதிர்காலம் இந்த படத்தில் இருக்கிறது என்பதாலும் விமலின் யோசனைக்கு என் தந்தை ஒப்புகொண்டு 10.03.2016 அன்று ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.

மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஒப்பந்தத்தை பெற்று கொண்ட பின்பு ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை விமல் படத்தை ஆரம்பிக்காமல், படத்தின் மீது கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்து வந்ததால், ஜூன் மாதம் 15 ஆம் தேதி விமலை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்து தரும்படி கேட்டார் அப்பா. அதற்கு மறுத்து விட்டார் நடிகர் விமல்.

இதனால் ஜூன் மாதம் 17 ஆம் தேதி முறைப்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார் எனது தந்தை. திரையுலகுக்கு எனது தந்தை புதியவர் என்பதாலும், விமல் ஒரு முக்கிய பிரமுகர் என்பதாலும் எனது தந்தைக்கு சாதகமான பதில் சங்கத்திலிருந்து வரவில்லை. இதனால் மனம் உடைந்து போன என் தந்தை அமைதியாகிவிட்டார்.

அதன் பிறகு படத்தை தயாரித்து, வெளியீட்டிற்கு விமல் தயாரான போது, விமலை சந்தித்து தான் முதலீடு செய்த தொகையை திருப்பி கேட்டார் அப்பா. விமலிடமிருந்து சாதகமான பதில் வராததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எனது தந்தை (வழக்கு எண் : C.S.No.58/2018)

இந்த வழக்கின் காரணமாக படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு எனது தந்தையுடன் சமரசம் செய்து கொண்ட நடிகர் விமல் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் Memorandum of Settlement (ஆவண எண் : 7782/2018) தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி எந்த தொகையையும் இதுவரை விமல் திருப்பித்தரவில்லை. பணத்திற்கு ஈடாக தருவதாக சொன்ன கால்ஷீட்டையும் தரவில்லை.

இந்நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் மற்ற மொழி டப்பிங் உரிமைகள் என் தந்தை வசம் வந்துவிட்டது. ஆனால் என் தந்தைக்கு தெரியாமல் 21.06.2019 அன்று படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வேறொருவருக்கு விற்று எங்களை மோசடி செய்துவிட்டார் நடிகர் விமல்.

எனவே ஐயா அவர்கள் மோசடி செய்த நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு சேர வேண்டிய ரூபாய்.1,73,78,000/- தொகையை பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Mannar Vagaiyara producer’s daughter complaint againt actor Vimal

More Articles
Follows