‘ஒவ்வொரு இந்துவுக்கும் அவமானம்’… புதிய படம் தயாராகிறது

‘ஒவ்வொரு இந்துவுக்கும் அவமானம்’… புதிய படம் தயாராகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sankararaman murder case movie news Anupam Kher in Shankaracharya characterகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மானேஜராக இருந்தவர் சங்கர்ராமன்.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் கோயில் அலுவலகத்திலே வைத்து கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அதன்பின்னர் அவர்கள் நிரபராதிகள் என விடுதலை ஆகிவிட்டார்கள்.

அப்படி என்றால் அந்த சங்கர்ராமனை யார் கொலை செய்தார்கள்? என்ற விடை யாருக்குமே தெரியாது. (இதுதான் இந்திய சட்டத்தின் நிலை..)

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ’ஆச்சார்யா அரெஸ்ட்’ என்ற பெயரில் ஒரு புதிய படம் ஒன்று உருவாகவுள்ளது.

இத்ற்கு துணைத் தலைப்பாக அதாங்க டேக் லைனாக, ‘ஒவ்வொரு இந்துவுக்கும் அவமானம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.

கன்னட இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ராஜூ இயக்க, சங்கராச்சாரியராக அனுபம் கெர் நடிக்கிறாராம்.

மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்திலும் மன்மோகன் சிங்காக அனுபம் கெர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sankararaman murder case movie news Anupam Kher in Shankaracharya character

தனி ஒருவன் இந்தி ரீமேக்; யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?

தனி ஒருவன் இந்தி ரீமேக்; யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arjun Kapoor and Sidharth Malhotra to star in Thani Oruvan Hindi remakeமோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அர்விந்த் சாமி இணைந்து நடித்த ‘தனி ஒருவன்’ கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது.

இப்படம் மாபெரும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க, தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ராம் சரண், ராகுல் பிரீத், அர்விந்த்சாமி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாம்.

சித்தார்த் மல்ஹோத்ரா ஜெயம் ரவி வேடத்தில் நடிக்க, அர்ஜுன் கபூர்அரவிந்த் சாமி வேடத்தில் நடிக்கிறார்.
சபீர் கான் இயக்கவிருக்கிறார்.

இதெல்லாம் இருக்கட்டும். நயன்தாரா கேரக்டரில் யார் நடிக்கிறார்? என்றுதானே கேட்கிறீர்கள்.

கொஞ்ச நாள் பொறு தலைவா

Arjun Kapoor and Sidharth Malhotra to star in Thani Oruvan Hindi remake

விக்ரம்-சூர்யா-சிம்பு பாணியில் அசத்தும் கன்னட நடிகர்

விக்ரம்-சூர்யா-சிம்பு பாணியில் அசத்தும் கன்னட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kannada actor Rajkumar rao movie updatesஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் சுபாஷ் சந்திரபோஸ்.

விரைவில் இவரது வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸ் படமாக உருவாகவுள்ளது.

இதில் சுபாஷ் சந்திர போஸ் ஆக நடிக்கிறார் ராஜ்குமார் ராவ்.

இந்த கேரக்டருக்காக தனது உடல் எடையை அதிகரித்துள்ளார்.

தற்போது அப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இதை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கமல், விக்ரம், சூர்யா, சிம்பு உள்ளிட்ட ஒரு சில நடிகர்களே தங்கள் உடம்மை சினிமாவுக்காக இப்படி மாற்றி அமைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இதுபோன்ற பல வகையான முயற்சிகளை அடிக்கடி மேற்கொள்வாராம்.

கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும்….

Kannada actor Rajkumar rao transformation

Rajkumar-rao

தனுஷ்-அஜித்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் அக்‌ஷராஹாசன்

தனுஷ்-அஜித்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் அக்‌ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aksharahassan joins with Vikram after Ajithஷமிதாப் என்ற இந்திப் படத்தில் அமிதாப் மற்றும் தனுஷுடன் நடித்து தன் சினிமாவை பயணத்தை ஆரம்பித்தார் கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷராஹாசன்.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை கன்னடத்தில் தொடங்கவிருக்கிறார்.

நாகசேகர் இயக்கும் கன்னட படத்தில் விக்ரம் ரவிச்சந்திரன் எனும் அறிமுக ஹீரோவுடன் நடிக்கிறார்.

இவர் கன்னட சினிமாவின் கிரேஸி ஸ்டார் என்றழைக்கப்படும் ரவிச்சந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Aksharahassan joins with Vikram after Ajith

விவேகம் படத்தில் அஜித் பெயர்; மெர்சல் படத்தில் விஜய் பெயர் இதுதான்

விவேகம் படத்தில் அஜித் பெயர்; மெர்சல் படத்தில் விஜய் பெயர் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vivegamசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வந்த விவேகம் படத்தின் சூட்டிங் இன்றோடு முடிந்துவிட்டது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் விவரங்கள் கிடைத்துள்ளன.

இப்படம் 2 மணிநேரம் 20 நிமிட ஓடக்கூடியதாம்.

இப்படத்தில் அஜித் கேரக்டரின் பெயர் AK என கூறப்படுகிறது. (ஏகே என்றாலும் அஜித்குமார் என்றேதான் வரும்)

அனிருத்தின் பின்னணி இசை பேசப்படும் வகையில் உள்ளதாகவும், முறையான மூன்று ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மெர்சல் படத்தில் விஜய் கேரக்டர் பெயர் உறுதியாகியுள்ளது.

மெர்சல் படத்தின் முதல் பர்ஸ்ட் லுக்கில் வந்த கேரக்டர்தான் மருத்துவர் திலகம் மாறன்.

இத்தகவலை நாம் சென்ற மாதமே தெரிவித்து இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய்யின் மற்ற இரண்டு கேரக்டர்களில் ஒருவர் மேஜின் மேனாகவும், மற்றொருவர் பஞ்சாயத்து தலைவராகவும் நடிக்கின்றனர்.

Ajith name in Vivegam and Vijay name in Mersal movie revealed

இதோ அதற்கான லிங்க்…

https://www.filmistreet.com/cinema-news/sathyaraj-arrested-vijay-atlee-3-movie-updates/

அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி

அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Today Ajith fans got double happinessகடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு அஜித் நடித்த வேதாளம் வெளியானது.

2016ஆம் ஆண்டில் அவரது எந்த படமும் வெளியாகவில்லை.

அதனையடுத்து தொடங்கிய விவேகம் படத்தின் சூட்டிங் வெகு நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் சூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டதாக செய்திகள் வந்துள்ளன.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த செய்தி வந்த அதே நேரத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆனது என்ற தகவலும் வந்துள்ளது.

எனவே மற்ற ரசிகர்களுடன் இணைந்து அஜித் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Today Ajith fans got double happiness

More Articles
Follows