பைரசிக்கு எங்க வீட்டில் தடா; சங்குசக்கரம் பட குழந்தையால் பெற்றோர் முடிவு

பைரசிக்கு எங்க வீட்டில் தடா; சங்குசக்கரம் பட குழந்தையால் பெற்றோர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sangu chakkaramமாரிசன் இயக்கத்தில் சினிமாவாலா பிக்சர்ஸ் சார்பாக சதீஷ் மற்றும் லியோ விஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் சங்கு சக்கரம்.

இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், மலேசியா ஆர்.ஜே. நடிகை கீதா மற்றும் 10க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சென்னை 2 சிங்கப்பூர் படத்தயாரிப்பாளர் பேசினார். அப்போது தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களால் நஷ்டம் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும் படம் ரிலீஸ் ஆகி 1 மாதம் கழித்து இதுபோல் திருட்டுத்தனமாக வெளியிட அவர் வேண்டுக்கோள் விடுத்து கண்ணீர் விட்டு அழுதார்.

இதனை அங்குள்ள சங்கு சக்கரம் படக்குழந்தைகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் விளைவாக அதில் உள்ள ஒரு குழந்தை, தன் பெற்றோர் கம்ப்யூட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டித்துள்ளார்.

குழந்தையின் முடிவால் மனம் மாறிய பெற்றோர் இனி கம்ப்யூட்டரில் படம் பார்ப்பதில்லை. தியேட்டரில் மட்டும்தான் படம் பார்ப்பேன்” என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நெகட்டிவ் மீம்ஸ்-செய்திகள் மனநிலையை பாதிக்கும்; ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ்

நெகட்டிவ் மீம்ஸ்-செய்திகள் மனநிலையை பாதிக்கும்; ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த மே மாதம் தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்த ரஜினிகாந்த். தற்போது மீண்டும் இன்று தனது ரசிகர்களை இன்று சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார்.

இன்று டிசம்பர் 26 ஆம் தொடங்கிய இச்சந்திப்பு 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க தினமான இன்று காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார்.

முதல் நாளான இன்று சூப்பர் ஸ்டாருடன் அவருக்கு மிகவும் நெருக்கமான மூத்த தயாரிப்பாளர் கலைஞானம் மற்றும் முள்ளும் மலரும் படத்தின் இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டனர்.

விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது…

” மே மாதம் நடந்த சந்திப்புக்கு பின் காலா படத்தின் சூட்டிங்க், மழை போன்ற சில காரணங்களினால் என் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. இப்பொழுது தான் அந்த பொன்னான நேரம் வாய்த்துள்ளது.

என் பிறந்த நாளன்று என்னை பார்க்க ரசிகர்கள் பலரும் வீட்டிற்கு வந்துள்ளனர். நான் பிறந்த நாளன்று மிகவும் தனிமையே விரும்புவேன், வெகுகாலமாகவே பிறந்த நாளன்று யாரையும் சந்திப்பதில்லை.

இம்முறை வழக்கத்திற்கு மாறாக நிறைய ரசிகர்கள் என்னை சந்திக்க முயன்று ஏமாற்றம் அடைந்துவிட்டனர், அதற்கு மிக வருத்தப்பட்டேன், மன்னிக்கவும்.

ரசிகர்கள் பலரும் என்னை சந்திக்க பெரிதும் முயல்கின்றனர். கிடைக்கின்ற நேரத்திற்கேற்ப வருங்காலத்தில் நாம் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும், சமூக வலைத்தளங்களில் இருந்து பாஸிட்டிவ்வான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். தந்தை மகளை வெட்டினார். மகன் தாயை வெட்டினார். கற்பழிப்பு இப்படி நிறைய நெகட்டிவ்வான செய்திகள் நாள்தோறும் வருகிறது.

மேலும் நெகட்டிவ்வான மீம்ஸ் வருகிறது. அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நம் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்திவிடும். பாசிட்டிவ்வான விஷயங்கள் மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அவர் தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார் ரஜினிகாந்த்.

முன்னதாக ஒகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி வியூகம் அமைப்பதற்குள் போர் முடிந்துவிடும்… : எஸ்வி சேகர்

ரஜினி வியூகம் அமைப்பதற்குள் போர் முடிந்துவிடும்… : எஸ்வி சேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini sve shekarசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன் ரசிகர்களை 2வது கட்டமாக இன்று சந்தித்து வருகிறார்.

அப்போது அவர் பேசும்போது…

எனக்கு அரசியல் தெரியும். எனவேதான் அரசியலுக்கு வர தயங்குகிறேன்.

யுத்தம் களத்திற்கு வரும்போது வீரம் மட்டும் முக்கியமில்லை. வியூகம் முக்கியம். என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து நடிகரும் அரசியல் பிரமுகரும் ரஜினியின் நண்பருமான எஸ்வி. சேகர் கூறியதாவது…

நான் ரஜினியின் நண்பர்தான். அவர் 45 வயதில் எடுக்க வேண்டிய அரசியல் முடிவை 68 வயதில் எடுக்கிறார்.

அப்படி ஒருவேளை அவர் எடுத்து அதை ஜெயித்துவிட்டால் நிச்சயம் அவருக்கு ஆண்டவன் அருள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.

ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வியூகம் அமைக்க வேண்டும் என்கிறார். போர் வருவதற்கு முன்பு வியூகம் அமைக்கலாம்.

போர் வந்துவிட்ட பிறகு வியூகம் அமைக்கிறேன் என்றால் போரை தள்ளி வைக்க முடியாது. அதற்குள் போர் முடிந்துவிடும்” என்றார்.

S Ve Shekar talks about Rajinis speech in Fans meeting

டிசம்பர் 31ல் அரசியல் குறித்த என் முடிவை தெரிவிப்பேன்: ரஜினி

டிசம்பர் 31ல் அரசியல் குறித்த என் முடிவை தெரிவிப்பேன்: ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini stage speechரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் கடந்த 20 வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் ரஜினிகாந்த் அடிக்கடி அரசியல் குறித்து பேசி வருவதால் அரசியல் பிரபலங்களும் அவரின் அரசியல் குறித்த முடிவை அறிய ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தல் ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினி.

அப்போது அவர் பேசியதாவது….

எனது அரசியல் பிரவேசம் பற்றி அறிய மக்களை விட ஊடகங்கள்தான் அதிக ஆர்வத்தில் உள்ளனர்.

எனக்கு அரசியல் புதிது அல்ல. 1996 முதலே அரசியலில் உள்ளேன்.

(1996ஆம் ஆண்டுதான் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து ரஜினி வாய்ஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

என் அரசியல் நிலைப்பாட்டை வருகிற டிசம்பர் 31ஆம் அறிவிக்கிறேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை. அது என்ன என்பதை அன்று அறிவிப்பேன்.” என்று பேசினார்.

On Dec 31st 2017 i will announce my political stands says Rajinikanth

அரசியலுக்கு வர தயக்கம் காட்டுவது ஏன்..? ரஜினிகாந்த் விளக்கம்

அரசியலுக்கு வர தயக்கம் காட்டுவது ஏன்..? ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini speechரஜினிகாந்த் தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.

அப்போது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது….

அரசியல் எனக்கு புதிது அல்ல; அரசியலின் ஆழம் தெரியும். அதை முழுமையாக தெரிந்திருப்பதால் தயங்குகிறேன்.

இல்லையென்றால் எப்போதோ அரசியலுக்கு வந்திருப்பேன்.

கடந்த சந்திப்பின் போது போர் வரும்போது பார்க்கலாம் என்றேன்; போர் என்றால் தேர்தல்?.

இப்போ தேர்தல் வந்துட்டா?

எடுக்கும் முடிவை மனதில் இருந்து எடுக்கக்கூடாது. மூளையில் இருந்து எடுக்க வேண்டும்.

யுத்ததுக்கு வந்தால் ஜெயிக்க வேண்டும். தோற்க கூடாது.

வீரம் மட்டும் முக்கியமல்ல. வியூகம் ரொம்ப முக்கியம்.

எனது அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31ல் அறிவிப்பேன்.” என்றார்.

Rajinikanth reveals Why he hesitate to enter into politics

பத்து வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு யுவன் இசை

பத்து வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு யுவன் இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yuvan shankar raja composing music for Maari2அண்மைக்காலமாக தனுஷ் படங்களுக்கு அவரின் நண்பர் அனிருத் இசையமைத்து வந்தார்.

இந்த கூட்டணி 3, மாரி, வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணிபுரிந்தது.

சில காரணங்களால் அந்த கூட்டணி பிரிய தற்போது தன் படங்களுக்கு ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் திடீரென பத்து வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவுடன் இணையவுள்ளார் தனுஷ்.

மாரி2 படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளதாக அப்பட இயக்குனர் பாலாஜிமோகன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2008ல் வெளியான யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ், யுவன் கூட்டணி இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார்.

நடிகர் கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Yuvan shankar raja composing music for Maari2

Balaji Mohan‏Verified account @directormbalaji 1h1 hour ago
Privileged to be working with one of my all time favourite music directors! Happy to officially announce that @thisisysr sir is on board for #Maari2 & music work has started! @dhanushkraja sir & #Yuvan sir combo back after 10 years!

More Articles
Follows