‘பேட்ட’ கெட் அப்பில் தனுஷ்; ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்

‘பேட்ட’ கெட் அப்பில் தனுஷ்; ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanchana Natarajan to play Dhanushs pair in Karthik Subbaraj movieரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ்.

இப்படத்தை அடுத்து நிமிஷா என்ற மலையாள நடிகை நடிக்கும் அல்லி என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இவையில்லாமல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஒரு படத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.

இதே சமயத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தையும் இயக்கி வருகிறார்.

இதன் சூட்டிங் தற்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.

‛பேட்ட படத்தில் ப்ளாஷ்பேக்கில் முறுக்கு மீசை ரஜினி வருவார்.

தற்போது அதே போல தனுஷ் முறுக்கு மீசையுடன் இவரின் படத்தில் நடித்து வருகிறார். சுருளி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்து வரும் நிலையில் மற்றொரு நாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்து வருகிறார்.

இவர் ‛நோட்டா, கேம் ஓவர் படங்களில் நடித்திருந்தார்.

தனுஷ் – சஞ்சனா இருவருக்கும் நடைபெறும் திருமண விழாவுக்கான போஸ்டர் ஒன்று தற்போது லீக்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது மதுரை பின்னணியில் கொண்ட கதையாகும். 2014ல் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

Sanchana Natarajan to play Dhanushs pair in Karthik Subbaraj movie

Sanchana Natarajan to play Dhanushs pair in Karthik Subbaraj movie

ரஜினி கமல் விக்ரம் பற்றி ‘தபங்3’ மீட்டிங்கில் சல்மான்கான் பேச்சு

ரஜினி கமல் விக்ரம் பற்றி ‘தபங்3’ மீட்டிங்கில் சல்மான்கான் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Salman Khan talks about Rajini Kamal Vikram in Dabangg 3 meetடான்ஸ் மாஸ்டர் நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், சோனாக்ஷி சின்ஹா, கிச்சா சுதீப் நடித்துள்ள படம் ‛தபங் 3′ நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்தை சல்மான்கான் தயாரித்துள்ளார்.

இப்பட புரமோசனுக்காக சென்னை வந்த சல்மான்கான் நிருபர்களிடம் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

எப்போதும் தென்னிந்திய படங்களை ரீ-மேக் செய்வதில் எனக்கு அதிக ப்ரியம் உண்டு. விக்ரம் நடித்த ‛சேது’ படத்தை ரீமேக் செய்து நடித்தேன்.

வாண்டட் படத்தின் ஷூட்டிங்க்கு சென்னை வந்திருந்தேன். நடிகராக ஆவதற்கு முன்பே ஒரு விளம்பரபடத்திற்காக சென்னை வந்துள்ளேன்.

பிரபுதேவா ஒர்க்கிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை நன்றாக ஆட வைப்பார், காமெடி செய்ய வைப்பார்.

அதனால்தான் தபங் 3ஐ அவரை இயக்கச் சொன்னேன். அவருடன் அடுத்த படமும் செய்கிறேன்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த படத்தில் நிறைய வேலைகள் செய்துள்ளனர்.

இப்போது நிறைய தமிழ் படங்கள் முக்கியமாக ரஜினி கமல் விக்ரம் படங்கள் பாலிவுட்டில் வெற்றி பெறுகிறது.

பாகுபலி, எந்திரன் படங்களை நாங்க ரசித்தோம். அதுபோல தபங் உள்ளிட்ட எங்களது படங்களையும் நீங்க ரசிக்கனும். அதனை வெற்றி பெற வைக்க வேண்டும்”. என சல்மான்கான் பேசினார்.

Salman Khan talks about Rajini Kamal Vikram in Dabangg 3 meet

2019 இந்தியா 100 ஸ்டார்ஸ்: தென்னிந்தியாவில் ரஜினி பர்ஸ்ட்; விஜய் & அஜித் எங்கே?

2019 இந்தியா 100 ஸ்டார்ஸ்: தென்னிந்தியாவில் ரஜினி பர்ஸ்ட்; விஜய் & அஜித் எங்கே?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Forbes India celebrity 100 list is here Rajini is Top in South Indiaநடப்பாண்டில் 2019 அதிக சம்பளம் பெற்ற டாப் 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த ஆண்டு ஈட்டப்பட்ட வருவாய் மற்றும் அவர்களின் புகழ் அளவை மையமாக வைத்து இந்த தரவரிசையை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

அதிக சம்பளம் பெற்ற 100 இந்திய பிரபலங்களின் எப்போதும் நடிகர்களே முதலிடம் இருப்பார்கள். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாததாக முதல் முறையாக நடிகர்களை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதே போன்று டாப் 10 பட்டியலில் முதல் முறையாக 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

2019 ம் ஆண்டில் பெற்ற சம்பளம், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட தளங்கள் மூலம் பெற்ற புகழ், பொழுதுபோக்கு அம்சம், முதலீடு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், டைரக்டர் ஷங்கர், சிவா, கார்த்திக் சுப்பராஜ் & இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு….

1. விராத் கோஹ்லி (253.72 கோடி)
2. அக்சய் குமார் (293.25 கோடி)
3. சல்மான் கான் (229.25 கோடி)
4. அமிதாப் பச்சன் (239.25 கோடி)
5. எம்எஸ்.தோனி (135.93 கோடி)
6. ஷாருக்கான் (124.38 கோடி)
7. ரன்வீர் சிங் (118.2 கோடி)
8. ஆலியா பட் (59.21 கோடி)
9. சச்சின் டெண்டுல்கர் (76.96 கோடி)
10. தீபிகா படுகோனே (48 கோடி)

தென்னிந்தியா…

ரஜினி – 13வது இடம் (100 கோடி)
ஏ.ஆர்.ரகுமான் – 16வது இடம் (94.8 கோடி)
ஷங்கர் மகாதேவன் – 24வது இடம் (76.48 கோடி)
மோகன்லால் – 27 வது இடம் (64.5 கோடி)
பிரபாஸ் – 44வது இடம் (35 கோடி)
விஜய் – 47 வது இடம்(30 கோடி)
அஜித் – 52வது இடம் (40.5 கோடி)
மகேஷ் பாபு – 54 வது இடம்(35 கோடி)
டைரக்டர் ஷங்கர் – 55 வது இடம்(31.5 கோடி)
கமல்ஹாசன் – 56வது இடம் (34 கோடி)
மம்முட்டி – 62 வது இடம்(33.5 கோடி)
தனுஷ் – 64 வது இடம்(31.75 கோடி)
சிறுத்தை சிவா – 80வது இடம் (12.17 கோடி)
டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் – 84வது இடம் (13.5 கோடி)

Forbes India celebrity 100 list is here Rajini in first place

எனக்கு திருப்தி தந்த படம் “ஹீரோ” யுவன் சங்கர் ராஜா புகழாரம் !

எனக்கு திருப்தி தந்த படம் “ஹீரோ” யுவன் சங்கர் ராஜா புகழாரம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yuvan shankar raja“ஹீரோ” படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பற்றி பேசும்போது படக்குழு மொத்தமும் திவீர ரசிக மனப்பான்மைக்கு போய்விடுகின்றனர். அனைவருமே அவரின் இசைக்கு மயங்கி அவரது பின்னணி இசையையும், பாடல்களையும் வானளாவ புகழ்கின்றனர். ஆனால் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவோ இதற்கு நேர்மாறாக கூறுகிறார். எனது இசை படத்திற்கு மிகப்பெரும் பலமென மொத்த படக்குழுவும் கூறுகிறார்கள் ஆனால் அது முற்றிலும் உண்மையில்லை. படம் உருவாகி வந்திருக்கும் விதத்தை கண்டு நான் பிரமித்துபோய்விட்டேன். படத்தின் ஒவ்வொரு துளியிலும், பங்கேற்றிருக்கும் அத்தனை உறுப்பினர்களும், தங்கள் உடலாலும் ஆத்மாவாலும் முழு உழைப்பை தந்து ஒரு மிகப்பெரும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். என்னிடம் கதை சொன்னபோது இருந்ததை விட இப்போது மிகப்பிரமாண்டமான முறையில் இப்படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் எனக்கு வேறு வழியே இல்லை நான் எனது மிகச்சிறந்த உழைப்பை தரவேண்டிய நிலைக்கு உந்தப்பட்டேன். PS மித்ரன் படத்தில் இசைக்கு உருவாக்கி தந்திருக்கும் வெளி என்னை பல புதிய முயற்சிகளுக்கு இட்டுச்சென்றது. முற்றிலும் புதிதான சில இசைக் கோர்வையை இதில் முயன்றிருக்கிறேன். அதில் ஒன்று 18 நிமிட நீண்ட காட்சியின் பின்னணி இசைக்கோர்வை ஆகும். அந்த காட்சியின் பின்னணி கோர்வை ரெக்கார்டிங்கில் எங்கள் குழுவில் மொத்தப்பேரும் கடும் உழைப்பை தந்திருக்கிறார்கள் இது ஒரு பெரும் சவலான பணியாக இருந்தது. இசை வெளியீட்டிலேயே இதனை நான் கூறியிருந்தாலும் மீண்டும் மீண்டும் கூறுவதில் எனக்கு மகிழ்ச்சியே. மிக சமீபத்தில் எனக்கு பெரிதும் மனநிறைவை தந்த படமாக “ஹீரோ” இருந்தது.

மேலும் அவர் படம் பற்றி கூறும்பொழுது…

சமூகத்தில் இந்த தருணத்திற்கு தகுந்த செய்தியை அழுத்தி சொல்லும் படமாக ஹீரோ இருக்கிறது. படக்குழு அதை சரியாகவும், நேர்த்தியான படைப்பாகவும் தந்திருக்கிறார்கள். பொன்மொழி ஒன்று இருக்கிறது. “ஹீரோக்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்” என்று, என்னைப் பொறுத்தவரை இந்த “ஹீரோ” திரைப்படம் “ஹீரோக்கள் பிறப்பதில்லை சூழ்நிலைகளே அவர்களை உருவாக்குகிறது” என்பதை சொல்லும். படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களும் அதனை உணர்வார்கள் மேலும் படம் அவர்களை ஒரு நீண்ட சிந்தனைக்கு இட்டு செல்வதாகவும் இருக்கும். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜீன் சார், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா மற்றும் நடித்துள்ள அனைவரும் மிகச்சிறந்த பங்களிப்பை தந்துள்ளார்கள். தயாரிப்பாளர் கோட்டாப்பாடி J ராஜேஷ் இல்லையென்றால் இப்படம் இவ்வளவு பிரமாண்டமாக உருவாகியிருக்க முடியாது. அவரால் தான் இப்படம் மிகப்பெரிய அளவில் மார்கெட்டிங் செய்யப்பட்டு பிரமாண்டமான முறையில் வெளியிடப்படுகிறது.

2019 டிசம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் “ஹீரோ” திரைப்படத்தை கோட்டப்பாடி J ராஜேஸ், KJR Studios சார்பில் தயாரித்துள்ளார். PS மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் இயக்கத்தில் நடிக்க ஆசை – கல்யாணி ப்ரியதர்ஷன் !

சிவகார்த்திகேயன் இயக்கத்தில் நடிக்க ஆசை – கல்யாணி ப்ரியதர்ஷன் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hero stillsவெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பொன்னான வாய்ப்பு தனக்கு கிடைத்ததில்
கல்யாணி ப்ரியதர்ஷன் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளார். அவரது தமிழ் சினிமா அறிமுகம் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் “ஹீரோ” திரைப்படம் மூலம் இந்த வாரம் அரங்கேறுகிறது. “ஹீரோ” டிசம்பர் 20, 2019 அன்று வெளியாகிறது.

டிரெய்லரில் மிகச் சிறு காட்சிகளிலே அவர் காட்டப்பட்டிருந்தாலும் அவரது அழகும், துள்ளல் உடல்மொழியும் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. “ஹீரோ” படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்து கூறும்போது…

நான் ‘மீரா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ‘மீரா’ மிகவும் முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண். எதையும் பேசவும், செய்யவும் முன் பலமுறை யோசித்து செய்யும் பெண். நிஜ வாழ்வில் அதற்கு நேரெதிரானவள் நான். துடுக்குத்தனத்துடன் நினைத்ததை அப்படியே உளறி விடுவேன் எனக் கூறிச் சிரிக்கிறார்.

மேலும் படத்தின் மையம் கல்வி நிலையை பற்றி பேசுவதை குறித்து கூறும்போது…

நான் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் படித்தவள் இரண்டு இடங்களிலும் கல்வி சொல்லித்தரப்படும் முறையை அறிந்தவள். அந்த வகையில் “ஹீரோ” இன்றைய இந்தியாவின் கல்வி நிலையை அழுத்தமாக அலசும் படைப்பாக, எது சரியானதென்பதை வலியுறுத்தும் படைப்பாக இருக்கும். மேலும் ரசிகர்களை நம் நாட்டின் கல்வி நிலை குறித்த நீண்ட சிந்தனைக்கு இப்படம் இட்டு செல்லும் என்றார்.

“ஹீரோ” படக்குழுவினருடன் பணியாற்றியது குறித்து கூறும்போது….

இயக்குநர் PS மித்ரன் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் பெரும் திறமைக்காரராக இருக்கிறார். ஒவ்வொரு சிறு காதாப்பாத்திரத்தையும் கச்சிதமாக படைத்திருக்கிறார். நான் சொல்வதை விட படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் அவரை பெரிய அளவில் கொண்டாடுவார்கள். சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனம் கொண்ட மனிதர் படப்பிடிப்பில் உள்ள ஒவ்வொருவரையும் அன்பாக பார்த்து கொள்வார். ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் அவரிடம் ஒரு திறமையான இயக்குநர் மறைந்திருக்கிறார். ஒரு நாள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். “ஹீரோ” படத்தின் பின்னால் மறைந்திருக்கும் “சூப்பர் ஹீரோக்கள்” பற்றி இசை விழாவிலேயே பேசியிருக்கிறேன். உணர்வை சில்லிடவைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் இசை, ஜார்ஜ் C வில்லியம்சின் கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு என, இத்தனை சரித்திர நாயகர்கள் ஒன்றிணைந்திருக்கும் படத்தில், நான் நடித்திருப்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. என் மேல் நம்பிக்கை வைத்து என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு தயாரிப்பாளர் ராஜேஷ் சாருக்கு நன்றி. இப்படத்தின் மீதான அவரது நம்பிக்கை அசாதாரணமானது. படத்தை இத்தனை பிரமாண்டமாக உருவாக்கியதாகட்டும், இப்போது மிகப்பெரிய அளவில் வெளியிடுவதாகட்டும் அவருக்கு நிகர் அவரே என்றார்.

2019 டிசம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் “ஹீரோ” திரைப்படத்தை கோட்டப்பாடி J ராஜேஸ், KJR Studios சார்பில் தயாரித்துள்ளார். PS மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி , இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் ‘கடைசி விவசாயி’

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி , இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் ‘கடைசி விவசாயி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi in kadaisi vivasayiநாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதனைத் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்குப் பிறகு, நீண்ட மாதங்களாகவே தன் அடுத்தப் படத்தில் பணிபுரிந்து வந்தார். ‘கடைசி விவசாயி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பல்வேறு திரையுலகினரும் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறேன் எனக் கூறியிருப்பதே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டன், “விவசாயத்தை ஒரு தொழிலாக பார்க்காமல், ஒரு வாழ்வியலாக பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது தான் கதையின் கரு. ஒரு கிராமத்தில் நல்ல விஷயங்களே நடக்காமல் இருக்கிறது. குலதெய்வம் கும்பிடாமல் இருக்கிறது என்று அதை கும்பிட ஊர் தயாராகும். அதை கும்பிடும் வழிமுறைக்கு அனைவரும் ஒரு மரக்கா நெல் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தெரியவரும், அந்த ஊரில் யாரும் விவசாயம் செய்யவில்லை என்று. 20 வருடமாக குலதெய்வத்தை கும்பிடவில்லை என்பதால் யாருக்குமே இந்த நெல் விஷயம் ஞாபகத்தில் இருக்காது. அப்போது அந்த ஊரில் வயதான பெரியவர் ஒருவர், சின்ன நிலத்தில் தனக்கான விவசாயத்தை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 85 வயது மதிக்கத்தக்க பெரியவர், அவருக்கு காதும் அவ்வளவாக கேட்காது. அவர் உண்டு, தோட்டமுண்டு என்று இருப்பார். அந்த ஊரே அவரிடம் போய் நெல் கேட்கும். அவர் என்ன செய்கிறார், குலதெய்வக் கோயில் கும்பிடுவது எப்படி மாறியுள்ளது, வழிபாட்டு முறையில் நமக்கு இருக்கும் நம்பிக்கை என அனைத்தும் திரைக்கதையாக இருக்கும்.கிராமத்தில் ஒரு துக்கத்தைச் சொன்னால் கூட நையாண்டியாக சொல்வார்கள். ஆகையால் படத்தில் காமெடியை தவிர்க்கவே முடியாது. படம் முழுக்க காமெடி இருந்துக் கொண்டே இருக்கும். நாகரீகம் வளர்வதற்கு முன்னாள் இருந்த மனிதர்களும், நாகரீகத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதர்களும் வரும் போது எப்படி காமெடி இல்லாமல் இருக்கும். அதே போல், அந்த உரையாடல் நம்மை யோசிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும்.

உசிலம்பட்டியைச் சுற்றி சுமார் 16 கிராமங்களில் படமாக்கியிருக்கேன். அங்கிருக்கும் விவசாய முறை ரொம்ப பழசு. நம்ம தமிழர்களோட விவசாய முறையை இன்னும் கையில் வைத்திருப்பது கரிசல்காட்டு விவசாயிகள் தான். அவர்களை கடைசி விவசாயிகளாகத் தான் பார்க்கிறேன். இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்து விவசாயம் முடிந்துவிடப் போகிறதோ என்று நினைத்துவிடாதீர்கள்.
கிராமத்தில் இருப்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன். நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப்படமும் இருக்கும். விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் சின்ன கேரக்டர் பண்ணியிருக்காங்க. இருவரது கேரக்டருமே ரொம்ப அருமையாக வந்துருக்கு. ஏன் அவர்களை நடிக்க வைத்தேன் என்று படம் பார்த்தால் தெரியும்” என்று தெரிவித்தார்.

2020-ம் ஆண்டு ஜனவரி மாத வெளியீட்டுக்கு தயாராகி வரும் இந்தப் படத்துக்கு தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார் இளையராஜா. கலை இயக்குநராக தோட்டாதரணி பணிபுரிந்துள்ளார். படத்தின் களம் கிராமம் என்றாலும் அதில் நீதிமன்றம், கோவில் திருவிழா போன்ற பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கியுள்ளனர். மேலும், இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான அரங்குகளில் கூட நேரடி ஒலிப்பதிவிலேயே இந்தப் படம் உருவாகியுள்ளது.சினிமா ரசிகர்களுக்கு இந்த ‘கடைசி விவசாயி’ ஒரு விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

More Articles
Follows