முதலில் ஆர்மி பக்கங்களை உருவாக்கிய ரியல் குயின் ஓவியா.; சனம் ஷெட்டியின் பிறந்தநாள் வாழ்த்து

sanam shetty oviyaதமிழ் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்தவர் ஓவியா.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி் மூலம் உலகத் தமிழர்களிடையே பிரபலமானார்.

ஏப்ரல் 29 இன்று ஓவியா தன் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

எனவே ட்விட்டரில் ஓவியா பர்த்டே ‘காமன் டிபி’யை வெளியிட்டார் பிக்பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி.

அப்போது ஓவியாவை மிகவும் பாராட்டி தள்ளியுள்ளார்.

“ரியாலிட்டி ஷோக்களின் முதல் ரியல் குயின். உலக அளவில் இதயங்களை வென்றவர், முதல் ஆர்மி பக்கங்களுக்குக் காரணமானவர்.

அவருடைய அப்பாவித்தனத்திற்காகவும், போராட்ட குணத்திற்காகவும் நினைவு கூற வேண்டியவர்.

ஒன் அன்ட் ஒன்லி ஓவியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார் ஷனம்.

“உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி” என ஓவியா தெரிவித்துள்ளார்.

Sanam Shetty birthday wishes to Oviya

Overall Rating : Not available

Latest Post