ஓடிடி தளத்திற்காக சமுத்திரகனி இயக்கி நடித்த ‘விநோதய சித்தம்’

ஓடிடி தளத்திற்காக சமுத்திரகனி இயக்கி நடித்த ‘விநோதய சித்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’”மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.

இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.

“விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சமுத்திரகனி கூறுகையில்…

, ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது.

இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ள முடியும்.

இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார்

தம்பி இராமையா அவர்கள், ‘இந்த கதை அனைத்து மக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலை முடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்’ என்றார்.

முனிஸ்காந்த் அவர்கள் கூறுகையில், ‘சமுத்திரகனி இயக்கத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. முண்டாசுப்பட்டி, பசங்க 2, மாநகரம், மரகதநாணயம் படங்களை போல் இப்படமும் எனக்கு நல்ல பெயரை பெற்று தரும்’ என்றார்.

சஞ்சிதா ஷெட்டி அவர்கள், ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் இந்த படத்தை முழுமையாக விரும்புவார்கள். இது ஒரு குடும்ப பொழுதுபோக்காக இருக்கும். இந்த படத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”.

தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள், ‘”தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனது குடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’.

இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என்றார்.

ஜீ5 ஒரிஜினல் படமான ‘விநோதய சித்தம்’ அக்டோபர் 13 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது

Samuthirakani-Thambi Ramaiah star in new Family Drama ‘Vinodhaya Sitham’ a ZEE5 Original Film from October 13

சிக்கலில் மாட்டிக் கொண்ட ரஜினி ரசிகர் விஜய் சத்யா

சிக்கலில் மாட்டிக் கொண்ட ரஜினி ரசிகர் விஜய் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது “ரஜினி ”
A.வெங்கடேஷ் இயக்குகிறார்.

விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக செரின் நடிக்கிறார். மற்றும் வனிதா, மூக்குத்தி முருகன், குக் வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்து வருகிறார். பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடவிருக்கிறார்.

ரஜினி படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளார்கள்.

தயாரிப்பு – V.பழனிவேல்
திரைக்கதை எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ்

இந்த படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது…

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. தற்போது டப்பிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு மாதமாக பிரீ புரொடக்சன் பணியை சிறப்பாக செய்ததால் இத்தனை நடிகர்களை வைத்து ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்தேன்.

திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி உள்ளேன். ரஜினி ரசிகரான விஜய் சத்யா ( ரஜினி ) தனது வாழ்வில் எதிர்பாராத விஷயமாக ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்.

அது என்ன மாதிரியான சிக்கல்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடித்துள்ளது. நான் இயக்கிய படங்களிலேயே இந்த படத்தில் தான் ஒரு மிருகத்தை நடிக்க வைத்திருக்கிறேன்.

அந்த நாய் வரும் காட்சிகள் அனைத்தும் அவ்வளவு சிறப்பாக இருக்கும், அப்படி ஒரு ஆர்ட்டிஸ்டை போல நடித்துள்ளது. படப்பிடிப்பு முடியும்போது நானும் அந்த நாயும் நண்பர்களாகி விட்டோம்.

விஜய் சத்யா இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அப்படி சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார் இயக்குனர் A.வெங்கடேஷ்.

விரைவில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர் V.பழனிவேல் திட்டமிட்டுள்ளார்.

Rajini fan Vijay Sathya is in trouble

‘டிக் டாக்’ இலக்கியா இயக்குநர் சொன்னபடி ஒத்துழைப்பு தந்தார்… – அருண்குமார்

‘டிக் டாக்’ இலக்கியா இயக்குநர் சொன்னபடி ஒத்துழைப்பு தந்தார்… – அருண்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிக் டாக் மூலம் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா.

இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ” டிக்டாக் இலக்கியா ” என்று அழைக்கப்படுகிறார்.

இவரைப் பிரதான நாயகியாக வைத்து ‘நீ சுடத்தான் வந்தியா’என்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள்.

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘ உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கைத்துறையின் ‘ ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் அதை தணிக்கை செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவிற்கு அனுப்பவே, அங்கும் ஒரு முடிவு எட்டப்படாமல் எட்டுப்பேர் கொண்ட குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இறுதியில் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.ஒருவழியாக ‘ஏ’ சான்றிதழ் பெற்று விட்ட இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இப்படத்தைத் தயாரித்ததுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் அருண்குமார். அவர் தனது அனுபவம் பற்றி கூறும்போது,…

” படப்பிடிப்பில் இருந்த போது கூட என்னால் நம்ப முடியவில்லை .நாம் தான் படம் எடுக்கிறோமா? நாம் தான் இதில் நடிக்கிறோமா என்று எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. எனக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. இதன் மூலம் தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. நான் தயாரிப்பாளர் என்பதால் நடிக்க விரும்பவில்லை.பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை.

எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன்.நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை .அதற்கு , முன் தயாரிப்பாகக் கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.பிறகுதான் நடிக்க வந்தேன்.

எனது நண்பருக்குத் தெரிந்தவர் மூலம் தான் கதாநாயகி டிக் டாக் இலக்கியா இந்தப் படத்துக்கு அறிமுகமானார், நடித்தார். இயக்குநர் சொன்னபடி நடித்துக் கொடுத்து ஒத்துழைப்பு தந்தார்.

கதாநாயகியாக நடித்திருக்கும்’ டிக் டாக்’ புகழ் இலக்கியா படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசும்போது,

” இந்தப் படத்தில் நடித்துப் பார்த்தபோதுதான் சினிமா எவ்வளவு சிரமம் என்பதைத் தெரிந்து கொண்டேன் .

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. மேலும் நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது .

உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.படக் குழுவில் இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். ஒருவழியாக பிறகுதான் மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன்.அனைவரும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும்.என்னையும் வாழ்த்த வேண்டும் “என்கிறார்.

படத்தில் இயக்குநர் துரைராஜ்,ஒளிப்பதிவாளர் செல்வகணேஷ்,இசையமைப்பாளர் துரைராஜன்,பாடலாசிரியர் லோகேஷ் என ஆர்வமுள்ளவர்கள் இணைந்திருக்கிறார்கள்.

படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்று உள்ளது.கதாநாயகி இலக்கியா பற்றி ஆயிரம் விமர்சனங்கள் பேசப்பட்டாலும் சமூக ஊடகங்களில் பலவாறாகச் சீண்டப்பட்டாலும் படக்குழுவினருக்கு அவர் தந்த ஒத்துழைப்பைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நடிகையாக அவர் தனது கடமையைச் சரிவரச் செய்தார் என்று கூறுகிறது படக்குழு.

விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. ரசிகர்களுக்கு கவர்ச்சி அனுபவமாக படம் அமைய உள்ளது.

Actor Arun Kumar praises Tik Tok Elakkiya’s performance in her debut film

சாக்‌ஷி அகர்வாலுடன் கை கோர்த்து ‘குறுக்கு வழி’-யில் செல்லும் துர்வா & பிரனய்

சாக்‌ஷி அகர்வாலுடன் கை கோர்த்து ‘குறுக்கு வழி’-யில் செல்லும் துர்வா & பிரனய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வல்லதேசம் வெற்றிக்கு பிறகு இயக்குனர் N.T.நந்தா இயக்கும் இரண்டாவது படம் ‘குறுக்கு வழி’.

சூப்பர் டூப்பர் படத்தின் நாயகனாக நடித்து பலரது பாராட்டை பெற்ற நடிகர் துர்வா, பிரனய் இப்படத்தின் நாயகர்களாக நடிக்க சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கின்றார்.

கவிஞர் சினேகன், தீபன், ஷிரா, மிப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இயக்கம், ஒளிப்பதிவு – N.T.நந்தா
கலை – ஆரோக்யராஜ்
புரொடக்‌ஷன் எக்ஸிகுயுடிவ் – KKS ராஜா
புரொடக்‌ஷன் மேனேஜர் – R.ஸ்வாமிநாதன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் ‘குறுக்கு வழி’ படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

Durva and Pranay joins for Sakshi Aggarwal’s Kurukku Vazhi

வலிமைக்கு வந்த சோதனை : பொங்கலுக்கு ராஜமௌலி & பிரபாஸ் படங்கள் மோதல்..; தாக்கு பிடிப்பாரா தல.?!

வலிமைக்கு வந்த சோதனை : பொங்கலுக்கு ராஜமௌலி & பிரபாஸ் படங்கள் மோதல்..; தாக்கு பிடிப்பாரா தல.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

அடுத்தாண்டு 2022 பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

2022 பொங்கலுக்கு ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக 99% தகவல்கள் வந்துள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட் அகியோரது நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த ‘ஆர்ஆர்ஆர்’ படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மற்றொரு பிரம்மாண்ட படமான பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ படமும் 2022 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’.

இப்படத்தை ‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷ்யாம்’ வெளியாகவுள்ளது.

ஆர்ஆர்ஆர் & ராதே ஷ்யாம் ஆகிய இரண்டும் படங்களுடன் அஜித் மோதுவாரா? இல்லை பின்வாங்குவாரா? என பார்ப்போம்..

Will Valimai release on pongal 2021 ?

‘திரௌபதி’ பிடிக்கல.. ‘ருத்ர தாண்டவம்’ படத்தை மக்கள் பார்க்க அதிகமாக பேசும் மோகன்…; தங்கர் பச்சான் கடிதம்

‘திரௌபதி’ பிடிக்கல.. ‘ருத்ர தாண்டவம்’ படத்தை மக்கள் பார்க்க அதிகமாக பேசும் மோகன்…; தங்கர் பச்சான் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ருத்ர தாண்டவம்’ பட இயக்குநர் மோகன் அவர்களுக்கு வணக்கம்.

என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை; தங்களின் “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தை கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதை தெரிவிக்கிறேன்.

ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையை செய்தது போல் இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை என உணர்கிறேன்.

உங்களின் முந்தைய திரைப்படம் “திரௌபதி” பெரும் வணிக வெற்றியை அடைத்திருந்தாலும் எனக்கு அது பிடித்தமானதாக இல்லை.

அத்துடன் ருத்ர தாண்டவம் பார்த்து பாராட்டுபவர்களின் பட்டியலையும் அவர்களின் பாராட்டுகளையும் காண நேர்ந்த பொழுது நான் இந்தப் படத்தை பார்த்துதான் ஆக வேண்டுமா எனவும் நினைத்தேன். படம் பார்த்து முடிந்ததும் அவ்வாறு எண்ணியதற்காக இப்பொழுது மனம் வருந்துகிறேன்.

மக்கள் நாள்தோறும் சந்திக்கின்ற காண நேர்கின்ற இன்றைய சிக்கல்களைத்தான் காட்சிகளாக கருத்துகளாக முன் வைக்கின்றீர்கள் என்பதால் இப்படத்தை பார்த்தவர்களால் மற்றவர்களுடன் இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

எப்படியாவது இத்திரைப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகமாகவே நீங்கள் பேசுவதை காண்கிறேன். இனி அது தேவையில்லை. இனி உங்களின் படைப்பு மக்களிடத்தில் பேசிக்கொள்ளும்.

மக்களின் பலவீனத்தை பணமாக்குவதற்காக பொழுதுப்போக்கு எனும் போதைப்பொருளை திரைப்படங்களாக உருவாக்கி சமூகத்தை பின்னோக்கி சீரழிப்பவர்களுக்கிடையில் விழிப்புணர்வைத் தூண்டும் உங்களின் ருத்ர தாண்டவத்தை மக்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

ஒரு திரைப்படத்தின் வெற்றி முதலீடு செய்த தொகையை பல மடங்காக திருப்பி எடுப்பது மட்டுமல்ல.

சமூகத்தை நல்வழிப் படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை விதைப்பதும் ஆகும். இத்திரைப்படம் குறித்த குறைகள் எனக்குத் தேவையில்லை.

இவ்வணிகச்சூழலில் கிடைத்த நடிகர்களைக்கொண்டு கிடைத்த வசதி வாய்ப்புகளைக்கொண்டு எவரும் பேசத்துணியாதவைகளை திரை ஊடகத்தின் மூலமாக பல கோடி மக்களின் இதயங்களுக்கு கடத்தியிருக்கும் உங்களுக்கும் திரைப்படக்குழுவினருக்கும் இம்மக்களில் ஒருவனாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்போடு…

தங்கர் பச்சான்
சென்னை மாநகரம்- 600032
29.09.2021

Thangar Bachan praises Rudra Thandavam movie

More Articles
Follows