தொண்டன் படத்தின் கதை என்ன..? சமுத்திரக்கனி விளக்கம்

thondan 2சமுத்திரக்கனி தயாரித்து இயக்கி, நடித்துள்ள படம் தொண்டன்.

இதில் விக்ராந்த், சுனைனா, அர்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாரகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை இன்று சென்னையில் வெளியிட்டனர்.

அதன்பின் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினார் சமுத்திரக்கனி. அவர் பேசியதாவது…

பெண்கள் விடுதியில் ஒருவன் புகுந்து ஒரு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தான் என்கிற உண்மை சம்பவத்தை பற்றிய கதைதான் இது.

ஆனால் அந்த காமுகனை பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்த்து அடித்தால் என்னவாகி இருப்பான் என்று பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறேன்.

மேலும் இதில் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் பற்றிய சம்பவங்களை சொல்லியிருக்கிறோம்.

ஒருவர் ஆம்புலன்ஸில் உயிர்க்கு போராடுபவர்களை பற்றிதான் நினைக்கிறோம்.

ஆனால் அந்த வாகனத்தை ஓட்டிச் செல்லபவர்களுக்கும், அதில் முதலுதவி செய்பவர்களின் மனவலியை பற்றி இப்படம் சொல்லும்.

மேலும் இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை பற்றிய அனைத்தையும் அலசியுள்ளேன்.

இந்த தொண்டனுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று பேசினார்.

Samuthirakani revelaed the story of his Thondan movie

 

Overall Rating : Not available

Related News

சமுத்திரகனி இயக்கி நடித்துள்ள தொண்டன் படம்…
...Read More
தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார்…
...Read More

Latest Post