அருண் விஜய் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக சமுத்திரகனி

அருண் விஜய் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக சமுத்திரகனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து #AV33 படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்.

இவரது அனேக படங்களில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார்.

தற்போது #AV33 படத்திற்கும் அருண்விஜய் -ன் அண்ணனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இப்படத்தின் படபிடிப்பு சென்னை, காரைக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் தொடர்ந்து இப்பொழுது பழநி யில் பரபரப்பாக நடந்து வருகிறது.

சுமார் 45 நடிகர் நடிகைகள் மற்றும் 100க்கும் அதிகமான ஜூனியர் ஆர்டிஸ்ட் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில்,
சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

#AV33 பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருவதால் அவர் டைரக்டர் ஹரியை தொடர்பு கொண்டு, படத்தில் நடிக்க முடியாத காரணத்தை விளக்கினார். எனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும், ஆதலால் எனக்கு பதிலாக வேறு நடிகரை கொண்டு படப்பிடிப்பை நடத்துங்கள் என்று இயக்குநர் ஹரியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்தோடு நான் வாங்கிய அட்வான்ஸை திரும்ப தந்து விடுகிறேன். நாம் அடுத்த படத்தில் இணைவோம் என்று பிரகாஷ் ராஜ் கூறியதை தொடர்ந்து, எல்லா மொழிகளிலும் பிசியாக இருக்கும் சமுத்திரகனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரமாக சமுத்திரகனி நடித்து வருகிறார்.

அருண் விஜய், ப்ரியா பவானிசங்கர், சமுத்திரகனி மற்றும் பெரும் நட்சத்திரங்கள் பங்கேற்க “AV33” படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் யோகிபாபு, ராதிகா, KGF கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பழனியை தொடர்ந்து படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடரும்.

நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வகையில் இயக்குநர் ஹரியின் தனித்த முத்திரையில், கிராமத்து பின்னணி கலந்த, குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

Samuthirakani replaces Prakash Raj in director Hari’s film

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் & விஜய்சேதுபதி இணையும் ‘மைக்கேல்’

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் & விஜய்சேதுபதி இணையும் ‘மைக்கேல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து தயாரிக்கும் ‘மைக்கேல்’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார்.

இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியானது.

‘புரியாத புதிர்’, ‘ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ மற்றும் விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘மைக்கேல்’.

இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.

இதில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்

இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார்.

இந்த நிறுவனம் தற்போது இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் தயாராகும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – சந்தீப் கிஷன் ஆகிய இருவரும் முதன் முறையாக ‘மைக்கேல்’ படத்தில் இணைந்திருப்பதால், இப்படத்தின் அறிவிப்பு வெளியானவுடனே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த படம் குறித்து ரஞ்சித் ஜெயக்கொடி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

A wise man once said.,
மனிதன் இயல்பாகவே அன்பை விரும்பும் சாதுவான பிராணி அல்ல. எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படுவோமென எதிர்பார்த்து திருப்பி அடிக்கத் தயாராவே இருக்கக் கூடிய மூர்க்கமான மிருகம்.
Here is the Title Poster of my Next
#MICHAEL?
@VijaySethuOffl ❤️
@sundeepkishan ❤️ https://t.co/IE5gA61sOH

Sundeep Kishan, Vijay Sethupathi, Ranjit Jeyakodi, Sree Venkateswara Cinemas LLP, Karan C Productions LLP’s Pan India Film Titled Michael

இருள் நிறைந்த இரவுகளுக்குப் பிறகு பிரகாசமான ஒளி..; இறைவனுக்கு நன்றி சொன்ன சிம்பு

இருள் நிறைந்த இரவுகளுக்குப் பிறகு பிரகாசமான ஒளி..; இறைவனுக்கு நன்றி சொன்ன சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மஹா, மாநாடு ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன.

தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

இதில் வெந்து தணிந்தது காடு படத்தை கெளதம் மேனன் இயக்க வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்நிலையில் தற்போது தனது புதிய படமொன்றை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சிம்பு, ”எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், இருண்ட இரவுகளுக்குப் பிறகும் பிரகாசமான ஒளி இருக்கிறது. நன்றி இறைவா” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இத்துடன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாகவும் சிம்புவே தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Silambarasan TR’s Vendhu Thanindhathu Kaadu second schedule begins.

விநாயகர் சதுர்த்திக்கு ஜெயலலிதா தரிசனம்..; ஓடிடி-க்கு 1 தியேட்டருக்கு 1.. விஜய்சேதுபதி முடிவால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி

விநாயகர் சதுர்த்திக்கு ஜெயலலிதா தரிசனம்..; ஓடிடி-க்கு 1 தியேட்டருக்கு 1.. விஜய்சேதுபதி முடிவால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள் தற்போது தமிழக அரசு உத்தரவின்படி திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தியேட்டர்கள், 50% இருக்கையுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றனர்.

ஹர்பஜன்சிங் நடித்துள்ள ‘பிரண்ட்ஷிப்’ மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கோடியில் ஒருவன்’ படங்களின் சென்சார் சான்றிதழ் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு படத்திற்கும் யு/ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

மேலும் ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ படம் செப்டம்பர் 9 அன்றும், விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள ‘தலைவி’ படமும் செப்டம்பர் 10ல் வெளியாகிறது.

தலைவி படம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர மேலும் 3-4 படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி, டாப்சி பண்ணு நடித்த அனபெல் சேதுபதி படம், ‛டிஸ்னி ஹாட்ஸ்டாரில்’ செப்டம்பர் 17ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்கள் திறந்தும் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டதால் இது தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Theatre owners dissappoints with Vijay Sethupathi’s decision

முதன்முதலாக தமிழில் ஆளுநர் உரை.. உழவர் சந்தை.. மீண்டும் ரேசன் கடை.. காரைக்காலில் விவசாய கிணறுகள்..; புதுச்சேரி பட்ஜெட் ஹைலைட்ஸ்

முதன்முதலாக தமிழில் ஆளுநர் உரை.. உழவர் சந்தை.. மீண்டும் ரேசன் கடை.. காரைக்காலில் விவசாய கிணறுகள்..; புதுச்சேரி பட்ஜெட் ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.10,100 கோடிக்குத் தயார் செய்து அனுப்பப்பட்ட திட்ட வரையறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

எனவே அதன் அடிப்படையில் புதுச்சேரியின் முதல் அமைச்சரும், நிதித்துறை அமைச்சருமான என் ரங்கசாமி 2020-2021 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை கவர்னர் உரையுடன் தொடங்கிது.

புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முதலாக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் கவர்னர் உரையை வாசித்தார்.

இன்றைய பட்ஜெட் சிறப்பம்சங்கள்..:

புதுச்சேரியில் 9,924 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

இதில் பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கையில், ரூ.2140 கோடி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கும், ரூ.1715 கோடி கடன் மற்றும் வட்டிக்கும், ரூ.1591 கோடி மின்சாரம் வாங்கவும், ரூ.1290 கோடி முதியோர் ஓய்வூதியத்திற்கும், ரூ.1243 கோடி பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டத்தைப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உயர்த்த பிரதான் மந்திர் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டப்பபடும்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.

காரைக்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 60 லட்சம் ரூபாய் செலவில் 6 புதிய கிணறுகள் அமைக்க உள்ளது.

விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூபாய் 5,000 மானியம் வழங்கப்படும்.

புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன, விவசாயிகளுக்கு 10 ஆயிரம் தேக்கு, சந்தன மரங்கள் வழங்கப்படும்.

பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் செங்குத்து தோட்டம் உருவாக்கப்படும்.

ஆரோக்கியமான கன்றுகள் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுவினுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

புதிய உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கறவை மாடுகள் பாராமரிக்கவும், கூட்டுறவு சங்கங்களில் அல்லாதவர்களுக்கு 75 விழுக்காடு மானியத்தில் தீவனம் நடப்பாண்டு வழங்கப்படும்.

இலவச அரிசி வழங்க ரூ.197.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான சத்திய கூறுகள் ஆராயப்படும்.

100% கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்ற அரசு பாடுபடும்.

மாணவர் இடை நிற்றலை தவிர்க்க கல்வி கற்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்.

இதற்காக கல்வித்துறைக்கு ரூ.742 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

புதுச்சேரி மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லை. 24 மணி நேரமும் மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்க நடவடிக்கை.

கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்றுள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி.

கிழக்கு கடற்கரை சாலையில் சாலையில் அனைத்து வசதிகள் உள்ளடக்கிய வேளாண் நவீன வளாகம் அமைக்கப்படும்.

புதுச்சேரியில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வரும் செப். 23 மற்றும் 24ந்தேதி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலை சுற்றி, தேரோடும் நான்கு வீதிகளையும் செப்பனிட ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

5 கோடி ரூ. செலவில் கட்டப்படும் நீச்சல் குளம் இந்த ஆண்டு திறக்கப்படும்.

2 கோடி ரூபாய் செலவில் பாகூரில் புதிய பேருந்து நிலையம், ஏனாமில் 7 கோடி மதிப்பில் ஏ.என்.எம். பள்ளி அமைக்கப்படும்.

மாகி பகுதியில் 19 கோடி ரூபாய் செலவில் கடலோர காவல் நிலையம், தங்கும் விடுதி அமைக்கப்படும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஆடுகள் வாங்க கடன் வழங்கப்படும்.

கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும்.
அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் உள்ளிட்டவைகளை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

புதுச்சேரியில் மூட்டப்பட்டுள்ள நியாவிலைக் கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

புதுச்சேரி மாநிலத்தில் ஆதி திராவிட மணமகள் நிதியுதவி திட்டம் ரூ. 75,000 இருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும்.

பாட்கோ கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

Puducherry government budget highlights 2021

சிவன்-எமன் மோதும் மிரட்டலான ‘மாயன்’..; உலகத்தின் முதல் கேரக்டர் இன்ட்ரொடக்‌ஷன் இல்லுஸ்ட்ரேட்டட் வீடியோ

சிவன்-எமன் மோதும் மிரட்டலான ‘மாயன்’..; உலகத்தின் முதல் கேரக்டர் இன்ட்ரொடக்‌ஷன் இல்லுஸ்ட்ரேட்டட் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் மற்றும் ஜி.வி.கே.எம் எலிபண்ட் பிச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மாயன்’.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜேஷ் கண்ணா.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில், ‘மாயன்’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், மாயன் படக்குழுவினர் இன்று இப்படத்தின் கதாபாத்திரங்களை மோஷன் போஸ்டராக லஹரி மற்றும் டி-சீரிஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதில் வினோத் மோகன் – ஆதி சிவனாகவும், ஜான் விஜய் – எமதர்ம சக்கரவர்த்தியாகவும் மற்றும் சாய் தீனா – வீரா சூரனாகவும் வரைகலை வடிவில் பிரம்மாண்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவே உலகத்தின் முதல் கேரக்டர் இன்ட்ரொடக்‌ஷன் இல்லுஸ்ட்ரேட்டட் மோஷன் போஸ்டர் என்று படக்குழுவினர் சார்பில் பதிவிட்டுள்ளனர்.

இந்த மோஷன் போஸ்டர் இப்படத்தின் மீதான ஆர்வத்தையும், எதிர்ப்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது.

நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க…

Here is #Mayan character motion poster !!!

More Articles
Follows