மெட்ராஸ் மீட்டரில் *லூசுப் பெண்* இந்துஜாவுடன் இணையும் சம்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ராஸ் மீட்டர் சமீபத்திய யூடியூப் வீடியோவான ‘லூசு பொண்ணு’க்கு அடிப்படை. ஒரு திரைப்பட இயக்குனர் கலை கண்ணன் (சம்பத்), நீலா (இந்துஜா) மற்றும் தீபக் (வைத்தியா) ஆகிய மூன்று கதாபாத்திரத்திரங்களை கொண்டு, 7 நிமிட வீடியோவை நாம் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் இங்க்மர் பெர்க்மனை நடிகை இங்க்ரிட் பெர்க்மென் என தவறாக புரிந்து கொள்ளும் இயக்குனர் கலை கண்ணன், லூசுப் பெண்ணாக இந்துஜாவின் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு ஆகியவை நம்மை ரசிக்க வைக்கிறது.

ராஜா ராமமூர்த்தி இந்த வீடியோவின் கருவை எழுதியிருக்கிறார். குருராஜ் எடிட்டிங் உடன் சேர்த்து இந்த வீடியோவை இயக்கியிருக்கிறார்.

“லூசு பொண்ணு’ என்பது ‘மானிக் பிக்ஸி ட்ரீம் கேர்ள்’ இணையான ஒரு இந்தியன் வீடியோ ஆகும். ‘லூசு பொண்ணு’ என்ற பெயர் குறிப்பிடுவது போலவே ‘2 வயது குழந்தை மனநிலையில்’ இருக்கும் நாயகியை, நாயகன் மீட்டெடுக்க வேண்டும்.

தமிழ் சினிமாவின் எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பெண்களின் யதார்த்தமான வாழ்க்கையையும், வலுவான பெண் கதாபாத்திரங்களையும் எழுதி வருகிறார்கள்.

சம்பத் மற்றும் இந்துஜா இந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்ததற்கு நன்றி.

குரு மற்றும் மெட்ராஸ் மீட்டர் குழுவினர் மிகவும் அற்புதமான வேலையை செய்துள்ளனர் என்றார் ராஜா ராமமூர்த்தி.

மெட்ராஸ் மீட்டர் யூடியூப் சேனல் ஒப்பீட்டளவில் அதிக சந்தாதாரர்களை கொண்ட, அன்லிமிடெட் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் மிகப்பெரிய சேனலாக உருவாகியுள்ளது.

ட்ரெண்ட்லௌட் சிஇஓ எம்.சிதம்பரம் கூறும்போது, “மெட்ராஸ் மீட்டர் முற்றிலும் சீரமைக்கப்பட்ட ஒரு சேனல். இந்த மெட்ராஸ் மீட்டர்ஸ் வெற்றிக்கு முதுகெலும்பாக உள்ள விசுவாசமான பார்வையாளர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பயணத்தை மெட்ராஸ் மீட்டர் 2.0 என்று சொல்லலாம்.

இந்த சேனலில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களை பார்க்கும், நிறைய ஆச்சரியப்பட வைக்கும் வீடியோக்களை இனி வழங்க இருக்கிறோம். மொத்தத்தில் மெட்ராஸ் மீட்டர் இஸ் பேக்.

ருசியான உணவுகள் சமைக்கும் சமையல் நிகழ்ச்சிகள், சமகால பிரச்சினைகளை பிரதிபலிக்கும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை என அனைத்தும் கிடைக்கும் தளமாக மாற இருக்கிறது மெட்ராஸ் மீட்டர்.

Sambath and Indhuja starring Loosu Ponnu

பிக்பாஸ் புகழ் மஹத் ராகவேந்திரா – ஐஸ்வர்யா தத்தா இணையும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட் இயக்குனர் ராண்டி கென்ட்டிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த பிரபு ராம்.சி இயக்கும் ரோம்-காம் திரைப்படத்தில், மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இயக்குனர் பிரபு ராம் படத்தை பற்றி கூறும்போது…

“ரோம்-காம் படங்களின் தீவிரமான ரசிகன் நான். அது எந்த மொழி, எந்த நாட்டு படமாக இருந்தாலும் தவறாமல் பார்த்து விடுவேன். சேட்டிலைட் சேனலில் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்த காலம் முதல் எனக்கு ரொமாண்டிக் காமெடி படங்கள் இயக்கும் இயக்குனராக வேண்டும் என்பது ஆசை” என்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஃபேவரைட்டான, மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரையும் இந்த படத்துக்குள் கொண்டு வருவதற்கு பின் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்களையும் இயக்குனர் பகிர்ந்து கொள்கிறார்.

அவர் கூறும்போது, “இந்த திரைப்படம் வட சென்னை பையன் மற்றும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணை சுற்றி நிகழும் கதை. அவர்கள் தங்கள் இயல்பு மற்றும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்டவர்கள். பக்கத்து வீட்டு பையன் போன்ற இயல்பான கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவரை நான் தேடிக் கொண்டிருந்தேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்தபோது, மஹத்தின் இயல்பை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் நியாயம் செய்வார் என்று உடனடியாக உணர்ந்தேன். அதேபோலவே ஐஸ்வர்யா தத்தா, அவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருப்பார் என்று நம்புகிறேன் என்றார்.

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் தேர்வு முழுவீச்சில் நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த ரோம்-காம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

Mahat Raghavendra And Aishwarya Dutta Team Up For A Rom Com

மலேசியாவில் மாட்டிக் கொண்ட 49 தமிழர்களை மீட்ட கருணாஸ் MLA

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருநெல்வேலி மாவட்டம் தலைவன் கோட்டை, மளடிக்குறிச்சி, அரியூர்,பாரப்பட்டி,சங்கரன் கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 49 க்கும் மேற்ப்பட்டவர்கள் (பெரும்பாலானோர் முக்குலத்தோர்) மலேசியாவில் உள்ள தனியார் டவர் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றனர்.

அங்கு நிர்வாகத்திற்கும் பணியாற்றும் தமிழர்களுக்கும் இடையே ஏற்ப்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர்களுக்கு சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டது. சம்பள நிலுவையின் காரணமாக தகராறு ஏற்பட இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அங்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் தலைமறைவானார்கள். கிட்டதட்ட பலநாட்கள் உண்ண உணவும் உறைவிடமும் இல்லாமல் காட்டிலேயே தங்கினர்.

இந்த தகவல் முக்குலத்தோர் புலிப்படையின் நெல்லை மாவட்ட செயலாளர் திரு.ராஜகுணசேகர பாண்டியன் மூலமாக

மனிதநேயர் சேது கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ அவர்களுக்கு தெரியவந்தது. இந்த தகவலை மலேசியாவில் உள்ள மரியாதைக்குரிய குமார் மூலமாக சம்மந்தபட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட *கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ* அவர்கள் மலேசியாவில் உள்ள பாத்தி கேம்ப் முருகன் கோவிலுக்கு பாதிக்க பட்டவர்களை அழைத்து வந்து அதிகாரிகள் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தினார்.

இது சம்மந்தமாக பாராளுமன்ற அதிகாரிகளை சந்தித்தது மட்டுமல்லாமல் மலேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு.குலசேகரன் அவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் திரு காமாட்சி அவர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்த்தித்து முறையிட்டார்.

மக்கள் பிரதிநிதிகள் உதவியுடன் மலாக்கா அதிகாரிகள் ஜக்கி,கண்ணன்,குணா ஆகியோர் மூலமாக 49 தமிழர்களுக்கும் திரும்பவும் பணியாற்றும் வாய்ப்பையும் தங்குவதற்கு ஒரு ஹோம் கேம்ப் ஏற்படுத்தி கொடுத்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்பு சம்மந்தபட்ட மலேசிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நேரில் சந்தித்து நன்றி கூறி தாயகம் திரும்பினார் தமிழின பற்றாளர் *சேது கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ.*

கருணாஸ் எம்.எல்.ஏ வின் முயற்சிக்கு பலதரப்பினரும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Karunas MLA helped 49 Tamil peoples who were into trouble at Malaysia

சென்னையை கண்டுக்கிறோம்.; கஜாவை கண்டுக்கல.. ஆரி ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தோனி கபடிகுழு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அபிலாஷ், லீமா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை ஐயப்பன் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் ஜேக்கப் பேசுகையில்,

இப்படத்திற்காக முதலில் 2 பாடல்கள் தான் என்று முடிவு செய்தோம். பிறகுதான் 3 பாடல்களை சேர்த்து 5 பாடல்கள் இசையமைத்தோம். கிரிக்கெட், கபடி, மற்றும் காதல் என்று மூன்றும் சேர்ந்த கலவையாக இப்படம் இருக்கும்.

டூரிங் டாக்கீஸ் படத்தின் இயக்குனர் இஷாக் பேசுகையில்,

அபிலாஷ் எனக்கு சிறுவயது முதலே எதிரி. சிறுவயதில் நான் வீட்டிற்கு வரும் நேரத்தில் ‘மைடியர் பூதம்’ நெடுந்தொடர் ஓடிக்கொண்டிருக்கும். அத்தொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் அபிலாஷ் நடித்திருப்பார்.

நான் சினிமாவிற்கு வந்தபிறகு நானும் அபிலாஷூம் ஒரே அறையில் தங்கியிருந்தோம். எனக்கு ஒரு நல்ல நண்பர். நான் இயக்கிய ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினேன்.

ஆனால், ‘தோனி கபடி குழு’ படத்தில் அவர் நாயனாக நடிக்கிறார். இப்படத்தை சம்பந்தபட்டவர்களைவிட நான்தான் அதிகமாக பார்த்திருக்கிறேன்.

படத்தின் நாயகி லீமா பேசுகையில்,

தலைப்புப் போலவே, படமும் வித்தியாசமாக இருக்கும். மேலும், இப்படத்தின் மூலம் கபடியைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நிறைய அறிந்து கொண்டேன்.

தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி பேசுகையில்,

பிற விளையாட்டுக்களை விட கபடியை கற்றுக் கொண்டால் தான் நடிக்க முடியும். எனக்கு அந்த அனுபவம் ‘வெண்ணிலா கபடி குழு’ வில் கிடைத்தது. கிரிக்கெட்டை விட கபடியில் தான் நம் நாட்டிற்கு அதிக பதக்கங்களை வென்றிருக்கிறோம். கிரிக்கெட்டிற்கும், கபடிக்கும் உள்ள வேற்றுமையைக் கூறும் படமாக இது இருக்கும்.

அபிலாஷின் சிறுவயது கனவு நனவாகியிருக்கிறது. சினிமாவில் வாய்ப்பு கேட்கும் அத்தனை பேராலும் நடிகராக முடியாது. வாய்ப்பு தேடும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும்.

அப்படி கிடைத்த வாய்ப்பை நிலைநிறுத்த அனைவரும் உழைக்க வேண்டும். ஆரியை 12 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் தனது உடலை அப்படியே வைத்திருக்கிறார். ஒரு நடிகரால் தான் இது முடியும்.

இணை தயாரிப்பாளர் கே.மனோகரன் பேசுகையில்,

இப்படம் உருவாக அடித்தளம் அமைத்தது நானாக இருந்தாலும் முடித்தது நந்தகுமார் தான். இக்கதையைக் கூற இயக்குநர் ஐயப்பன் ஆறு மாத காலமாக என்னைப் பின் தொடர்ந்தார்.

படத்தின் நாயகன் அபிலாஷ் பேசுகையில்,

சிறுவயதில் ‘மைடியர் பூதம்’ நெடுந்தொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதன்பிறகு 8 வருடங்கள் வாய்ப்புக்காக பல இடங்களிலும் முயற்சி செய்தேன். இஷாக் மூலம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. என்னைப் போலவே பல காலமாக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நல்ல கருத்துக்களையும், கதைகளையும் மக்கள் எப்போதும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறோம். இயக்குநர் தன் குழந்தை பிறந்ததற்குக் கூட செல்லாமல் இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். தயாரிப்பாளரும் எங்களுக்குத் தேவையானதை முழுமையாக செய்துக் கொடுத்தார்.

அதேபோல், தெனாலியின் தந்தை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் இறந்துவிட்டார். ஆனால், அவர் நடித்து முடித்துவிட்டுத்தான் இறுதிச் சடங்கிற்குச் சென்றார்.

படத்தின் இயக்குநர் ஐயப்பன் பேசுகையில்,

இயக்குநர் A.வெங்கடேஷிடம் 5 படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இப்படத்தின் கதையை முடிவு செய்த பிறகு எனது நண்பரான இப்படத்தின் தயாரிப்பாளரிடம் உதவி கேட்கச் சென்றேன்.

அவர் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு முன்பணம் கொடுத்தார். இப்படத்தை நான் தான் தயாரிப்பேன். அதுமட்டுமல்லாமல், இப்படத்தை வெளியிடும் செலவையும் நான் செய்கிறேன் என்றார். இப்படம் வாடிக்கையாக வரும் கதையாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது என்றும் கூறினார். மேலும், எவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க வேண்டும் என்றார்.

அதுபோல, நான்கு மாதத்திலேயே இப்படத்தை எடுத்து முடித்தோம். பிறகு நடிகர், நடிகைகள் மற்றும் மற்ற கதாபாத்திரங்களுக்கு புதுமுகங்களுக்கே வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

அபிலாஷ் மற்றும் லீனா இருவரும் கதையைக் கேட்டவுடனேயே ஒப்புக் கொண்டனர். லீனா ‘மதராசபட்டிணம்’ படத்தில் ஆர்யாவிற்கு தங்கையாக நடித்திருப்பார்.

ஒரு ஊரில் ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க கிரிக்கெட்டா? கபடியா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம் நாட்டிற்கு வருமானம் ஈட்டும் கிரிக்கெட்டா? அல்லது மண்ணின் வீர விளையாட்டான கபடியா? எதைத் தேர்வு செய்கின்றனர் என்பதே படத்தின் கதை.

இப்படத்திற்காக கள்ளக்குறிச்சி, பாதூர் போன்ற கபடி விளையாடும் ஊர்களுக்குச் சென்று அதன்படி ‘செட்’ அமைத்தோம். மற்றும் படப்பிடிப்பும் நடத்தினோம்.

நடிகர் ஆரி பேசுகையில்…

நம் பாரம்பரிய விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும்தான் அனைவரும் குரல் கொடுக்கின்றனர். எங்கெங்கிருந்தெல்லாமோ நிவாரண உதவி குவிகிறது. சென்னையைத் தாண்டி புற இடங்களில் ஏதாவது நேர்ந்தால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

அப்படி உதவி சென்று சேர்ந்திருந்தால் இன்று ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார் என்று கூறினார். அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நமக்கு வேலை இருக்காது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், சினிமாவை வாழவைக்க வேண்டும் என்றும், திரையரங்கத்தில் ஆன்லைன் பதிவுக்கு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும், சிறிய படங்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகளை அதிகப்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

TN peoples not giving much importance to Gaja Cyclone affected areas says Aari

கஜாவால் கடுமையான பாதிப்பு; அனைவரும் உதவ லாரன்ஸ் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பகுதி மக்களை சந்தித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

அதன்பின்னர் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

அன்பு நண்பர்களுக்கு

வணக்கம்…

கஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாக அறிவித்திருந்தேன். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்காக திருவாரூர் குன்னூருக்கு வந்து பார்த்தேன்.

நாம் சென்னையில் கேள்விப் பட்டது போல் இல்லாமல் ஒரு தெருவில் 50 வீடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்து அந்த பகுதி மக்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்தேன்..

நாம் கேள்வி பட்டதை விட அதிக பாதிப்பு டெல்டா மக்களுக்கு. அந்த பகுதி மக்களை மீட்டெடுக்க நாம் எல்லோரும் ஒன்றினைய வேண்டும். அவர்களுக்கு உதவ எல்லோரும் முன் வர வேண்டும். இது தான் என் தாழ்மையான வேண்டுகோள்…

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

All Tamil peoples must help Gaja cyclone affected peoples says Lawrance

*மார்டல் இன்ஜின்ஸ்* டிசம்பர் 7ல் உலகமெங்கும் ரிலீஸாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்டல் இன்ஜின்ஸ்… இதே பெயரில், பிலிப் ரீவ் எழழுதிய ஒரு நாவலை மையமாக வைத்து கிறிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கியுள்ள இந்த விஞ்ஞான நவீனம், லண்டன் நகரின் பின்னணியில் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கற்பனைக் காவியம்.

‘கிங் காங்’, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ தொடர் படங்கள், ‘தி ஹாபிட்’ தொடர் படங்கள் போன்ற மகத்தான படைப்புகளைப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கித் திரையில் உலா விட்ட பீட்டர் ஜாக்சன் இப்படத்தின் இணை தயாரிப்பாளர். 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நவீன் வாகனங்கள் மற்றும் மனிதர்கள் சக்கரத்தில் பயணிப்பதைத் திரையில் பலமுறை கண்டிருக்கிறோம். இப்படத்தில், அதற்கெல்லாம் அடுத்த கட்டமாக லண்டன் மாநகரமே சக்கரத்தில் பயணிக்கிறது!

விஞ்ஞான ரீதியிலான சில நிகழ்வுகளின் விளைவாக, மனித குலமே உருமாறி பல மாறுதல்களை ஆரத் தழுவிக் கொண்ட ஒரு காலகட்டம். ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும், கொலை செய்தும் வாழ்கிற ஒரு சூழல்.

ஹெல்டர் ஷா (ஹிரா ஹில்மர்) என்கிற ஒரு பெண், எதிர்பாராத விதத்தில் அங்கு வந்து சேர்கிறாள். அச்சமய, அவல, ஆபத்தான சூழ்நிலையை ஆளுகை செய்து வழி நடத்தவல்ல சக்தி அவளிடம் மட்டுமே உள்ளது!

வெளி உலக அனுபவம் அதிகமில்லாத ஓர் அப்பாவி, 16 வயது நிரம்பிய டாம் நேட்ஸ்வொர்த்தி. லண்டனில் வாழ்பவன்.

ஒரு கட்டத்தில், ஹஸ்டரும் டாமும் சந்திக்க நேரிடுகிறது. ஹெஸ்டர், தனது தாயின் மரணத்திற்குக் காரணமானவன் எனக் கருதும் தேடஸ் வெலண்டின் (ஹூகோ வீவிங்) என்பவனைக் கொல்ல முற்பட, சந்தர்ப்பவசத்தால், டாம் இடையில் வர, ஹெஸ்டரின் திட்டம் செயலிழந்து விடுகிறது!

இவர்கள் இருவரும், ஆனா ஃபாங் (ஜிஹா) என்கிற தேடப்படும் ஒரு பெண் குற்றவாளியோடு இணைந்து, எதிரிகளைச் சமாளித்து வெல்ல புதியதொரு திட்டம் தீட்டுகிறார்கள்.

ஒளிப்பதிவு – சைமன் ராபி; இசை – ஜன்கி XL; இயக்கம் – கிறிஸ்டியன் ரிவர்ஸ்.

வெளியீடு – December 7th
உருவாக்கம் – Universal Pictures
வெளியீடு – Hansa Pictures

Mortal Engines release on 7th December 2018 Worldwide

More Articles
Follows