ஒரு மணி நேரத்திலேயே ‘யசோதா’வுக்கு ஓகே சொன்ன சமந்தா.; இன்று வருகிறார்!

ஒரு மணி நேரத்திலேயே ‘யசோதா’வுக்கு ஓகே சொன்ன சமந்தா.; இன்று வருகிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கக்கூடிய ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் மூத்தத் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார்.

வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் படத்தில் நடித்திருக்கின்றனர்.

தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் சினிமாத் துறையில் 40 வருடங்களாக இருக்கிறார். நேரடித் தெலுங்கு படங்கள் உட்படப் பல மொழிமாற்றம் செய்த 45 மேற்பட்டப் படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

‘ஆதித்யா 369’ போன்ற கல்ட் க்ளாஸிக் படங்களையும் அவர் தயாரித்து இருக்கிறார். இப்போது அவர் பான் இந்தியா படமான ‘யசோதா’ வை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நவம்பர் 11ம் தேதி வெளியிட இருக்கிறார்.

‘யசோதா’ படம் குறித்தான சில சுவாரஸ்யமானத் தகவல்களை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பகிர்ந்து இருக்கிறார். அதில் இருந்து,

*‘யசோதா’ சமந்தாவின் முதல் பான் இந்தியா திரைப்படம், இது எப்படி ஆரம்பித்தது?

‘சம்மோஹனம்’ படத்திற்குப் பிறகு நான் தயாரித்திருக்கும் நேரடி படம் ’யசோதா’. என்னுடைய மாமா எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் ஆசீர்வாதம் இந்தப் படத்தில் உண்டு என நம்புகிறேன்.

கடந்த 2020, செப்டம்பர் மாதம் 25ம் தேதி அவர் நம்மை விட்டு பிரிந்தார். அந்த சமயத்தில் நான் சில நாட்கள் சென்னையில் தங்கியிருந்து எஸ்.பி. சரணுக்கு ஆறுதலாக இருந்தேன்.

என்னுடைய நிர்வாகத் தயாரிப்பாளர் செந்தில் கேட்டுக் கொண்டதற்காக ஹரி மற்றும் ஹரிஷிடம் இருந்து ‘யசோதா’ படத்தின் கதைக் கேட்டேன். தனித்துவமான இந்தக் கதை எனக்கு பிடித்திருந்தது. கோவையைச் சேர்ந்த சிலத் தயாரிப்பாளர்களும் இந்தக் கதையைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். அதன் பிறகுதான் நானும் என் தரப்பிலிருந்து சில கருத்துகளைச் சொன்னேன்.

தமிழ்த் தயாரிப்பாளர்களிடம் சென்ற கதை உங்களிடம் வந்தது எப்படி?

நான் ஹைதராபாத் வந்தடைந்ததும், என்னுடைய நிர்வாகத் தயாரிப்பாளர் என்னிடம் வந்து, இந்தப் படத்தில் இருந்து சில தமிழ் தயாரிப்பாளர்கள் பின் வாங்கி விட்டார்கள். நீங்கள் இப்போது படத்தைத் தயாரிக்க ஆர்வமாக உள்ளீர்களா எனக் கேட்டார்.

பின்பு, இந்தக் கதையை நான் மீண்டும் ஒருமுறை அக்டோபர் மாதத்தில் கேட்டுவிட்டு இந்தத் திரைக்கதை கேட்கும் விஷயத்தை மீண்டும் டெவலப் செய்து வரும்படி கேட்டுக் கொண்டேன்.

இந்தக் கதையின் உள்ளடக்கத்தைப் பார்த்து, 7-8 மாதங்கள் கழித்து மீண்டும் திரைக்கதையில் வேலை பார்த்து இன்னும் மெருகேற்றி வந்தார்கள். பிறகே, ‘புஷ்பா’ & ‘கே.ஜி.எஃப்’ படங்களின் டப்பிங் போய்க் கொண்டிருந்தது. பின்பு, சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு இந்தப் படத்தை பான் இந்தியா படமாக பெரிய அளவில் வெளியிட முடிவு செய்தோம்.

*இந்த ஸ்கிரிப்ட் தயாரானதும்தான் சமந்தாவிடம் கதை சொன்னீர்களா?*

ஆமாம்! ‘யசோதா’ படத்தைப் பான் இந்தியா அளவில் வெளியிடவும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் சரியான நபராக சமந்தா இருப்பார் என நினைத்தோம். ’ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸ் மூலம் தேசிய அளவில் பார்வையாளர்களின் கவனத்தை சமந்தா கவர்ந்திருந்தார்.

அதனால், அவர் இந்தக் கதையைக் கேட்பாரா இல்லையா என்ற சந்தேகமும் இருந்தது. சமந்தா எல்லாருடையக் கதைகளையும் கேட்கத் தயாராக இருப்பதாக அவரின் மேலாளர் மகேந்திரா எங்களுக்கு நம்பிக்கைக் கொடுத்தார்.

கடைசி வருடம் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அவர் கதையைக் கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டார். மேலும், பல மொழிகளில் வெளியாவதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார். வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பல முக்கியமான நடிகர்களைத் திரைக்கதையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தோம்.

*‘யசோதா’ படத்தில் சமந்தாவுடன் வேலை பார்த்தது அனுபவம் எப்படி இருந்தது?*

’யசோதா’ படத்தின் கதையைக் கேட்ட நொடியில் இருந்து அவர் கதையுடன் பயணம் செய்ய ஆரம்பித்தார். ’சாகுந்தலம்’ படம் முடித்ததும் அவருடைய கவனம் முழுவதும் இந்தப் படம் மீதுதான் இருந்தது.

*சமந்தாவின் உடல்நலன் குறித்து நிறையத் தகவல் வந்துள்ளது. படத்தின் வெளியீட்டின் போது அவர் இல்லாமல் இருப்பது எப்படி இருக்கிறது?*

சமந்தாவின் உடல்நிலைப் பற்றி அவர் படம் முடித்ததும் டப்பிங்கின் போது தெரிய வந்தது. அவர் தெலுங்கில் டப்பிங் பேசிய அதே சமயம் தமிழிலும் அவர் டப்பிங் பேசினார். அப்போது அவர் எனர்ஜி லெவல் குறைவாகவே இருந்தது. வேறு டப்பிங் கலைஞரைக் கொண்டு வரலாம் என நாங்கள் கருத்து தெரிவித்தோம்.

அவர் குரல் தமிழில் அனைவருக்கும் தெரியும் என்பதால் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் டப்பிங் பணிகளை மேற்கொண்டார். அவரின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். சமந்தாவின் உடல்நிலை, பற்றி அவர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு சில நாட்கள் முன்புதான் எங்களுக்கும் தெரிய வந்தது. இந்தியில் சமந்தாவுக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார்.

*‘யசோதா’ படத்தின் கதை என்ன? வாடகைத் தாய் வியாபாரம் பற்றி கூற வருகிறதா?*

அப்படி கிடையாது. வாடகைத் தாய்க்கு பின்னால் நடக்கும் குற்றங்களைப் பற்றி நாங்கள் சொல்ல வருகிறோம்.

*நீங்கள் இதற்கு முன்பு நிறைய கதாநாயகர்களை வைத்து வித்தியாசமான கதையை முயன்று பார்த்திருக்கிறீர்கள். ஆனால், முதல் முறையாக கதாநாயகியை மையப்படுத்திய கதையை எடுத்து இருக்கிறீர்கள். எதற்காக இந்த ரிஸ்க்?*

இதில் எந்தவொரு ரிஸ்க்கோ அல்லது பரிசோதனை முயற்சியோ கிடையாது. ’யசோதா’ படம் நிஜமாக என்னை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘ஆதித்யா 369’ திரைப்படம் மூலம் நிச்சயம் உங்களை இந்தத் துறை அடுத்த 30 ஆண்டுகளுக்கு நினைவில் வைத்திருக்கும் பாலு அங்கிள் ஒருமுறை சொல்லி இருந்தார்.

எனக்கு டைம் ட்ராவல் கான்செப்ட் மிகவும் பிடிக்கும். ’யசோதா’ படம் கேட்கும் அதே எண்ணம்தான் இருந்தது.

*கதாநாயகியை மையப்படுத்திய படத்தை பான் இந்தியா படமாக வெளியிடுவதில் ரிஸ்க் இருப்பதாக நினைக்கிறீர்களா?*

கதை நன்றாக இருந்தால் பார்வையாளர்கள் நிச்சயம் படத்தைக் கொண்டாடுவார்கள். முதல் முறையாக, ஒரு படத்தின் வெளியீட்டிற்கு முன்பு எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் இருக்கிறேன். பட வெளியீட்டிற்கு பின்பும் அப்படியே இருப்பேன்.

*‘யசோதா’வுக்காக பெரிய செட் அமைத்திருக்கிறீர்கள். ஏன்?*
இந்த நாட்களில் பெரும்பாலான மருத்துவமனைகள் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக கட்டிட அமைப்பு மற்றும் சகல வசதிகளோடு இருக்கின்றன.

கொரோனாவின் மூன்றாம் அலைக்கு மத்தியில் நாங்கள் இந்தப் படத்தை நாங்கள் எடுக்க வேண்டி இருந்தது. அந்த சமயத்தில் நாங்கள் மருத்துவமனையில் படமாக்கி இருந்தால் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருந்திருக்கும். அதனால், நாங்கள் செட் அமைத்து 55 நாட்கள் படமாக்கினோம். கலை இயக்குநர் அஷோக் அற்புதமான செட்டை உருவாக்கினார்.

*இந்தப் படத்தின் வசனங்கள் எப்படி இருக்கிறது?*

இயக்குநர்கள் ஹரி, ஹரிஷ் இருவரும் தமிழுக்கு அறிமுகமான அளவிற்கு தெலுங்கில் பரிச்சியம் இல்லை. எனவே, மூத்த பத்திரிக்கையாளர்களான புலகம் சின்னநாராயண, டாக்டர் சல்லா பாக்கியலட்சுமி அவர்களை அறிமுகப்படுத்தினோம்.

சின்ன நாராயணாவுடன் எனக்கு 15 வருடங்களாகப் பழக்கம். திரைப்படங்கள் குறித்து அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர்கள் படத்திற்குப் பொருத்தமான வரிகளை எழுதியுள்ளார்கள்.

*சென்சார் டிப்பார்ட்மெண்ட் படத்தைப் பார்த்ததும் என்ன சொன்னார்கள்?*
அவர்களுக்கும் பிடித்திருந்தது. தென்னிந்திய மக்கள் மட்டுமே இதுபோல சிந்திக்க முடியும் என பாராட்டினார்கள்.

*தயாரிப்பாளர்கள் தற்போது ஃபினான்சியராகவும் நடத்தப்படுகிறார்கள், அவர்கள் பட உருவாக்கத்தில் ஈடுபடுவதில்லை என்பதையும் கேள்விப்படுகிறோம். உங்கள் கருத்து என்ன?*

காலம் எல்லாவற்றையும் மாற்றும். இந்தக் கொரோனா காலத்திற்குப் பின்பு படம் எடுத்தால் அடுத்த ஒரு ஐந்தாறு மாதங்களுக்குத் தயாரிப்பாளர்கள் பயத்துடன் தான் இருக்கிறோம். எல்லா மொழிப் படங்களையும் அனைவரும் பார்க்கிறார்கள். அதனால், கதைகள் பல இங்கு கேலிகளை சந்திக்க நேரிட்டு, கலெக்ஷனும் பாதிக்கப்படுகிறது. அதனால், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள்.

*‘யசோதா’ படத்தின் பட்ஜெட் மிகப் பெரிய அளவில் உள்ளது. தயாரிப்பில் வேறு யாரேனும் உங்களுடன் இருந்தார்களா?*

சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் இணைத் தயாரிப்பாளராக இருந்து எனக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்.

*இன்றைய நாளில் தயாரிப்பாளர்களின் குழந்தைகளும் சினிமாத் துறைக்குள் வருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து எப்படி?*

என்னுடைய மகன் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் சினிமா மிகவும் பிடிக்கும். வெளிநாடிலும் சரி இங்கும் சரி தவறாமல் படங்கள் அபார்த்து விடுவார். ஆனால், அவரிடம் நான் படங்களில் நுழைய வேண்டாம் என்றுதான் சொல்லி இருக்கிறேன். நிறைய ஏற்ற இறக்கங்களை நான் சந்தித்து விட்டேன்.

என்னுடைய மகள் வித்யா டிஜிட்டல் வேலை பார்த்து வருகிறார். ஸ்பாட்டிஃபையில் இருக்கிறார். ‘சம்மோஹனம்’, ‘ஜெண்டில்மேன்’ மற்றும் ‘யசோதா’ படங்களில் அவர் எனக்கு உதவியாக இருந்தார். என் மகனுக்கு சினிமா வேண்டாம் என்றேன்.

ஆனால், மகளுக்கு ‘உன் விருப்பம்’ என்று சொல்லி விட்டேன். அவரும் ‘என் எல்லை எனக்குத் தெரியும் அப்பா’ என்று சொன்னார். நான் ஓய்வு பெறும்போது செய்திருக்கும் வேலையில் திருப்தி அடைந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

*நந்தமூரி பாலகிருஷ்ணாவின் படத்தை நீங்கள் ஏற்கனவே தயாரித்துள்ளீர்கள். மீண்டும் அவருடன் இணையத் திட்டம் இருக்கிறதா?*

எனக்கு எப்போதுமே பாலகிருஷ்ணாவுடன் நல்ல உறவு இருக்கிறது. சமீபத்தில்தான் அவரைப் பார்த்தேன். அவர் ‘யசோதா’வின் கதையைக் கேட்டு விட்டு பாராட்டினார். என்னுடைய தயாரிப்பின் கீழ் இன்னும் பிரம்மாண்டமாக வரும் என்றார். நாங்கள் எப்போது சந்தித்தாலும் சினிமா பற்றி பேசிக் கொள்வோம்.

என்னுடைய எதிர்ப்பார்ப்பு மற்றும் ஆர்வத்திற்கு ஏற்றதுபோல யார் கதை சொன்னாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராகவே உள்ளேன்.

JUST IN நடிகர் கூல் சுரேஷ் திடீர் கைது.; ரசிகர்கள் அதிர்ச்சி.. ‘பரோல்’ கிடைக்குமா.?

JUST IN நடிகர் கூல் சுரேஷ் திடீர் கைது.; ரசிகர்கள் அதிர்ச்சி.. ‘பரோல்’ கிடைக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெண்பா நடித்த ‘காதல் கசக்குதய்யா’ என்ற படத்தை இயக்கியவர் துவாரக் ராஜா.

இவரது இயக்கத்தில் கார்த்திக் & லிங்கா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பரோல்’.

இந்த படம் இன்று நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

வழக்கமாக ஒரு புதிய படம் ரிலீஸ் என்றால் அந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து விமர்சனம் செய்வது நடிகர் கூல் சுரேஷ் வழக்கம்.

இவர் கடந்த சில மாதங்களாக இதுபோல ஒவ்வொரு படத்திற்கும் பிரமோஷன் செய்து வருகிறார்.

இதுவே தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் அவருக்கு பட வாய்ப்புகளும் வருகின்றத்

இந்த நிலையில் இன்று வெளியாகும் ‘பரோல்’ படத்தை பார்க்க ஒரு கைதி போல வந்து இருக்கிறார் கூல் சுரேஷ்.

இன்னும் சில நேரங்களில் அவர் ‘பரோல்’ படத்தை விமர்சனம் செய்வார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

JUST IN மாரி செல்வராஜ் மகிழ்திருமேனி & ‘ரெட் ஜெயன்ட்’ செண்பகமூர்த்தி ஆகியோரை மேடையில் கலாய்த்த உதயநிதி

JUST IN மாரி செல்வராஜ் மகிழ்திருமேனி & ‘ரெட் ஜெயன்ட்’ செண்பகமூர்த்தி ஆகியோரை மேடையில் கலாய்த்த உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி & நிதி அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற வருகிறது.

இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது…

” நான் 2019 ஆம் ஆண்டு ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்க ஒப்பு கொண்டு விட்டேன்.

ஆனால் படத்தை 3 வருடங்களுக்கு மேலாக எடுத்துக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி கொண்டே இருக்கிறார் மகிழ்திருமேனி” என பேச தொடங்கினார் உதயநிதி.

அப்போது இடைமறித்த மகிழ் திருமேனி.. “படம் ஆரம்பித்த உடனேயே இரண்டு கொரோனா லாக்டவுன் வந்துவிட்டது. அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்று விட்டார் உதயநிதி. அதன் பிறகு எனக்கு இரண்டு முறை கொரோனா வந்தது.

இதுபோன்ற காரணங்களால் படம் தள்ளிக் கொண்டு போனது. மேலும் எந்த ஹீரோயினையும் பிடிக்கவில்லை என்றார் உதயநிதி. அதனால் ஹீரோயினி தேடிக் கொண்டே இருந்தேன். இதுதான் காரணங்கள்.” என்றார்.

அதன் பின்னர் உதயநிதி பேசியதாவது..

மகிழ் திருமேனி 90 நாட்கள் படத்தை எடுத்தார் என்றால்.. மாரி செல்வராஜ் 120 நாட்கள் மேலாக ‘மாமன்னன்’ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இருவரும் என்னை வச்சி செய்கின்றனர்.

மகிழ் இயக்கிய ‘தடம்’ படத்தில் முதலில் நான்தான் நடிக்க இருந்தேன். எனக்கு கதை பிடித்திருந்தது.

ஆனாலும் ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி நடிக்க விடவில்லை. இங்கு வருவோர் எல்லாரும் அவரைப் பார்த்து வணக்கம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். காரணம் அவர்தான் அனைவருக்கும் சம்பளம் நிர்ணயம் செய்கிறார்” என அவரையும் போட்டு கலாய்த்தார் உதயநிதி.

Udhayanidhi Stalin speech at Kalaga Thalaivan Audio Launch

JUST IN தமிழ் சினிமாவை மிரட்டி வச்சிருக்காரு உதயநிதி.; சுந்தர் சி. உனக்கு கதை வேணுமா? – மிஷ்கின்

JUST IN தமிழ் சினிமாவை மிரட்டி வச்சிருக்காரு உதயநிதி.; சுந்தர் சி. உனக்கு கதை வேணுமா? – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி & நிதி அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற வருகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மிஷ்கின் பேசியதாவது…

“தமிழ் சினிமாவை மிரட்டி வச்சிருக்காரு உதயநிதி.. இனிமே நடிக்க மாட்டேன் என அடிக்கடி சொல்றாரு. ரசிகர்கள் தான் அவரை நடிக்க வற்புறுத்த வேண்டும்.

மாலை நேரம் நான் வருத்தமாக இருந்தேன். இன்று கிரிக்கெட் மேட்ச்சில் இந்தியா தோற்றுவிட்டது.

ஆனால் தற்போது இந்த விழா மேடையை பார்த்தவுடன் மகிழ்ச்சியாக உள்ளேன்.

என்னிடம் நிறைய கதை கிடைக்கிறது. எப்போது உதயநிதி நடிக்க ரெடி என்றாலும் நான் அவரை இயக்க ரெடியாக உள்ளேன்.

சுந்தர் சி உனக்கு கூட கதை வேண்டும் என்றால் கேளு. என் கதையை தருகிறேன்.

சைக்கோ பார்ட் 2 எடுக்க மாட்டேன்.. உதயநிதி என் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஓகே சொன்னால் புதிய கதையில் அவரை இயக்குவேன்” எனப் பேசினார் மிஷ்கின்.

Mysskin speech at Kalaga Thalaivan Audio Launch

JUST IN நடிக்க மறுத்த விஜய்.. உதறிய உதயநிதி.; போட்டு உடைத்த சுந்தர் சி

JUST IN நடிக்க மறுத்த விஜய்.. உதறிய உதயநிதி.; போட்டு உடைத்த சுந்தர் சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’.

இந்த படத்தின் இசை விழா தற்போது சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற வருகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுந்தர் சி பேசியதாவது…

“எனது கதையில் இரண்டு ஹீரோக்கள் மட்டும் நடிக்க மறுத்தார்கள். ஒருத்தர் தளபதி விஜய். அடுத்தவர் மக்கள் தளபதி உதயநிதி.

உதயநிதிக்கு எழுதிய கதையில் அவர் நடிக்க மறுத்துவிட்டதால் வேறு ஒருவரை நடிக்க வைக்கலாமா ? என்று கேட்டேன். அதற்கு ஓகே சொன்னார். அந்த அளவுக்கு நல்ல மனசு.

அந்த படம் தான் ‘தீயா வேலை செய்யணும் குமாரு…’ அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

அது போல உதயநிதியை எந்த நேரம் வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம். அவர் எளிதாக அணுகக் கூடியவர். அவர் நல்ல மனிதன்” என பாராட்டி பேசினார் சுந்தர் சி.

sundhar c speech at Kalaga Thalaivan Audio Trailer Launch

யுவன் ஷங்கருக்கு ஐக்கிய அரபின் ‘கோல்டன் விசா’..!

யுவன் ஷங்கருக்கு ஐக்கிய அரபின் ‘கோல்டன் விசா’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் நடிகர் விக்ரமுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ‘கோல்டன் விசா’ வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ‘கோல்டன்’ விசாவை வழங்கியுள்ளது.

கோல்டன் விசா என்பது ஒரு நீண்ட கால வசிப்பிடமாகும், இது வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேசிய ஸ்பான்சர் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது மற்றும் அவர்களின் வணிகத்தின் முழு உரிமையையும் வழங்குகிறது.

மேலும், பார்த்தீபன், நாசர், ரஹ்மான்,வெங்கட் பிரபு, கமல்ஹாசன், அமலா பால், த்ரிஷா மற்றும் ராய் லட்சுமி ஆகியோரும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர்.

United Arab Emirates ‘Golden Visa’ for Yuvan Shankar

More Articles
Follows