காதலர் தினம் ஸ்பெஷல்..; சமந்தாவின் முதல் வெப் சீரிஸ் ரிலீஸ்

காதலர் தினம் ஸ்பெஷல்..; சமந்தாவின் முதல் வெப் சீரிஸ் ரிலீஸ்

samanthaகடந்தாண்டில் அமேசான் பிரைமில் வெளியான ’த ஃபேமிலி மேன்’ என்ற வெப் சீரிஸ் இந்தியாவில் அனைவரது கவனத்தையும் பெற்றது.

இப்போது, தி ஃபேமிலி மேன் இரண்டாவது சீசனும் உருவாகி வருகிறது.

ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே இயக்கியுள்ளனர்.

ஃபேமிலி மேன் சீசன் 2 தொடர் மூலம் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.

இது தான் அவர் நடிக்கும் முதல் வெப்சீரிஸ்.

இதில் சமந்தா நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த தொடரில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஷ்மி, ஷரத் கெல்கர் மற்றும் ஸ்ரேயா தன்வந்தரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் தேவதர்ஷினி, மைம் கோபி, அழகம் பெருமாள் போன்ற தமிழ் நடிகர்களும் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த ஃபேமிலி மேன் 2 அமேசான் பிரைம் வீடியோவில் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 12-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

Samantha in Family man 2 from Feb 12

‘மாஸ்டர்’ டீசர் ரெக்கார்டை அடித்து நொறுக்கிய ‘கேஜிஎஃப் 2’ டீசர்..; ஆனாலும் விட்டுக் கொடுக்காத விஜய் ரசிகர்கள்.. ஏன்?

‘மாஸ்டர்’ டீசர் ரெக்கார்டை அடித்து நொறுக்கிய ‘கேஜிஎஃப் 2’ டீசர்..; ஆனாலும் விட்டுக் கொடுக்காத விஜய் ரசிகர்கள்.. ஏன்?

Masterகன்னட நடிகர் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘கேஜிஎப்’ பட இரண்டாம் பாகமான ‘கேஜிஎப் சேப்டர் 2’ டீசர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

இன்று காலையில் வெளியிடவிருந்த நிலையில் டீசர் நேற்று இரவில் ‘லீக்’ ஆனதால் இரவு 9.29 மணிக்கே டீசரை வெளியிட்டனர்.

பத்து மணி நேரத்திற்குள் அதுவும் இந்திய இரவு நேரத்திலும் இந்த டீசர் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர் 24 மணி நேரத்தில் 1.85 மில்லியன் லைக்குகளைப் பெற்று சாதனை புரிந்தது.

அந்த சாதனையை 10 மணி நேரத்தில் ‘கேஜிஎப் 2’ டீசர் முந்திவிட்டது.

மேலும், ‘மாஸ்டர்’ டீசர் 78 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்குகள் பெற்றது.
அந்த சாதனையை ‘கேஜிஎப் 2 டீசர்’ 75 நிமிடங்களில் முறியடித்துவிட்டது.

பெரும்பாலும் கன்னட படங்களை அந்த மாதிலத்தவர் தவிர எவரும் பார்ப்பதில்லை.

ஆனால் KGF படம் அந்த எண்ணத்தை விரட்டியுள்ளது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படம் ரிலீசாகவிருந்தாலும் அனைத்திற்கும் பொதுவாக ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டிருந்தனர்.

தற்போது வரை 20 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்..

‘கேஜிஎப் 2’ டீசர் ஆங்கிலத்தில் வெளியானதால் இந்த சாதனையை செய்துள்ளது.

ஆனால், ‘மாஸ்டர்’ டீசர் தமிழில் மட்டுமே அந்த சாதனையை நிகழ்த்திவிட்டது என தளபதி விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

KGF Chapter 2 breaks Master teaser records

15 படங்களை கை வசம் வைத்திருக்கும் விஜய்சேதுபதி.; மக்கள் செல்வன் வேற லெவல் யா.!

15 படங்களை கை வசம் வைத்திருக்கும் விஜய்சேதுபதி.; மக்கள் செல்வன் வேற லெவல் யா.!

vijay sethupathiஎந்த மொழி.. எந்த வேடம்.. கெஸ்ட் ரோல் என்றாலும் தன் நடிப்பு முத்திரையை தவறாமல் பதிப்பவர் நடிகர் விஜய்சேதுபதி.

இவர் தற்போது மட்டும் கிட்டத்தட்ட 15 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அது பற்றிய விவரம் வருமாறு…

இந்த வருடத்தில் விஜய்சேதுபதியின் முதல் ரிலீஸ் விஜய்யின் ‘மாஸ்டர்’.

சீனுராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘மாமனிதன்’ ஆகிய இரண்டும் ரிலீசுக்கு ரெடியாகவுள்ளது.

ஆனால், பொருளாதாரம் & வழக்கு பிரச்சினையினால் இன்னும் ரிலீஸாகவில்லை.

தமிழில் லாபம்.. யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார், அனெபல் சுப்ரமணியம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள்

தெலுங்கில் `உப்பென்னா’
மலையாளத்தில் 19(1)

ஹிந்தியில் அமீர்கானுடன் `லால் சிங் சத்தா’ & மாநகரம் பட ஹிந்தி ரீமேக்கான ‘மும்பைகர்’ படம் ஆகிய படங்கள்..

இவையில்லாமல்…

இயக்குநர் மணிகண்டனின் `கடைசி விவசாயி’ & கோகுல் இயக்கத்தில் `கொரோனா குமார்’ ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றம்

தன் சொந்த மகளுடன் ‘முகிழ்’ என்ற ஒரு படம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோல்.

Vijay sethupathi’s upcoming films list

பொங்கல் விருந்தாக டபுள் ட்ரீட் வைக்கும் நடிகர் தனுஷ்

பொங்கல் விருந்தாக டபுள் ட்ரீட் வைக்கும் நடிகர் தனுஷ்

Dhanushபொங்கல் விருந்தாக விஜய்யின் மாஸ்டர் & சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

ஜெயம் ரவியின் பூமி படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் தன் ரசிகர்களுக்கு தனுஷும் விருந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய பட டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த டீசர் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறதாம்.

மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ டிரைலரும் பொங்கல் தினத்தன்று தியேட்டர்களில் ரிலீசாகும் எனச் சொல்லப்படுகிறது.

Dhanush treat to his fans on pongal

விஜய்யை பார்க்க ஆசைப்பட்ட விஜய்சேதுபதியின் அம்மா..; மனம் குளிர பேசிய தளபதி

விஜய்யை பார்க்க ஆசைப்பட்ட விஜய்சேதுபதியின் அம்மா..; மனம் குளிர பேசிய தளபதி

vijay sethupathi motherலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா, கௌரி, ஆண்ட்ரியா, சாந்தனு ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் சென்சார் செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ், ஹிந்தி & தெலுங்கு மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்த நிலையில் ஒரு பிரபல பத்திரிகைக்கு விஜய் உடன் நடித்த அனுபவம் பற்றி விஜய்சேதுபதி பேட்டி கொடுத்துள்ளார்.

அதில்… “விஜய் சார் சாதாரண விஷயம்கூட பெருசா பேச மாட்டார். ‘ஏன் சார், பேசவே மாட்டேங்கிறீங்க’ன்னு கூட அவர்கிட்ட கேட்டுட்டேன். அவர் இயல்பு அப்படி என்பதை தெரிஞ்சிக்கிட்டேன்.

என் அம்மா விஜய் சாரைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க. எனக்கே அது ஆச்சர்யமாத்தான் இருந்துச்சு.

ஷூட்டிங் ஸ்பாட் கூட்டிவந்து, அவருடன் போட்டோ எடுக்கவெச்சேன்.

‘என் பையன் ஒழுங்கா வேலை பார்க்கிறானா’ன்னு அம்மா கேட்டாங்க. அவங்க மனசு குளிருற அளவுக்குப் பேசிட்டார். விஜய் சார், ரொம்ப நன்றி சார்.”

இவ்வாறு அந்த பேட்டியில் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி #master #MasterFilm

Vijay Sethupathi on his mother meeting Thalapathy Vijay

அறவழிப் போராட்டம் வேண்டாம் Vs வேண்டும்..; உடையும் ரஜினி சாம்ராஜ்யம்..? டேமேஜ் ஆன இமேஜ்ஜை சரி செய்வாரா சூப்பர் ஸ்டார்..?

அறவழிப் போராட்டம் வேண்டாம் Vs வேண்டும்..; உடையும் ரஜினி சாம்ராஜ்யம்..? டேமேஜ் ஆன இமேஜ்ஜை சரி செய்வாரா சூப்பர் ஸ்டார்..?

Rajinikanthகொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் தன் உடல்நிலை காரணமாகவும் அரசியல் பிரவேசத்தில் இருந்து பின் வாங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

தன் உடல்நிலையை கவனிக்கும் மருத்துவர்களின் அறுவுறுத்தலைத் தொடர்ந்து கட்சி ஆரம்பிக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக நீண்ட அறிக்கையாக தெரிவித்தார் ரஜினி.

இதனால் தங்களின் 25 ஆண்டு கனவு கோட்டை நொறுங்கிவிட்டதாக ரஜினி ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

தங்களுக்கு அரசியல் ஆசை காட்டி மோசம் செய்துவிட்டதாகவும் அவரை மீண்டும் அரசியலுக்கு அழைக்கவும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வருகிற ஜனவரி 10-ம் தேதி வள்ளுவர் கோட்டம் “அறவழிப் போராட்டத்துக்கு ரஜினி ரசிகர்கள்” அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் விடுத்துள்ள அறிக்கையில்:

”ரஜினி ரசிகர் மன்றத்தினர், மக்கள் மன்றத்தினருக்கு வணக்கம்.

நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் ஆலோசனைகளை மீறி அரசியலுக்கு வந்தால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பிவரும் மக்கள் துன்பப்படக்கூடாது என்ற நல்லெண்ணப்படியும்தான் அரசியலுக்கு வரமுடியாத சூழல் குறித்து நம் அன்புத் தலைவர் வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றைக் கொடுத்திருந்தார்.

அதன் பின்னரும் அவரை அரசியலில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடச்சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல்.

*இந்தப் போராட்டத்திற்காக ஒரு சிலர் அதற்கான செலவுக்கென்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது.*

நம் தலைவரின் மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்களும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு சுதாகர் தன் கைப்பட கடிதம் எழுதி அறிக்கையாக வெளியிட்டார்.

இது வெளியான சில மணி நேரங்களில்… “தலைவரை அரசியலுக்கு அழைக்கும் நாங்கள் நிதி வசூல் செய்கிறோமா? என ரஜினி ரசிகர்கள் ஆவேசமடைந்தனர்.

இதனையடுத்து.. “நிதி வசூல் என்கிற எனக்கு வந்த செய்தியை அறிக்கையாக வெளியிட்டேன். அது அனைத்து ரஜினி ரசிகர்களையும் குறிப்பிடுவதாக சிலர் திசை திருப்புகின்றனர்.

யார் மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன்” என தன் ட்விட்டரில் மன்னிப்பு கடிதம் வெளியிட்டார் சுதாகர்.

ஆனாலும் “ஜனவரி 10ல் அறவழிப் போராட்டம்” நடந்தே தீரும் என ரஜினி ரசிகர்கள் சென்னையை நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.

ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் போராட்டம் வேண்டும் எனவும் மறுபக்கம் ரஜினி மன்றத்தினர் போராட்டம் வேண்டாம் எனவும் பிளவுப்பட்டு நிற்கின்றனர்.

தானா சேர்ந்த ரஜினி சாம்ராஜ்யம் சரிந்து விழுகிறதா? என்கிற சந்தேகம் தற்போது நடுநிலையார்களுடன் எழத் தொடங்கியுள்ளது.

45 ஆண்டுகளில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ரஜினி இமேஜ் தற்போது டேமேஜ் ஆகி வருவதை சூப்பர் ஸ்டார் சரி் செய்வாரா? என்பதை பார்ப்போம்.

Wll rajinikanth breaks his silence ?

More Articles
Follows