‘கபாலி’க்கு சவால் விடும் ‘சுல்தான்’ பட வசூல்..!

sultan movie posterபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்துள்ள சுல்தான் படம் கடந்த ஜீலை 6ஆம் தேதி வெளியானது.

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியிருந்த படத்தில் நாயகியாக அனுஷ்கா சர்மா நடித்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பில் ரிலீசான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வெளியான 3 நாட்களிலேயே ரூ 105 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது வரையில் ரூ. 501 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் மட்டும் ரூ 365.60 கோடியும் வெளிநாடுகளில் ரூ 136.33 கோடியும் வசூலித்துள்ளதாம்.

இனிவரும் நாட்களில் இன்னும் எகிறும் எனவும் கூறப்படுகிறது.

ரஜினி நடித்துள்ள கபாலி படம் ரூ. 500 கோடியை வசூலிக்கும் என அதன் தயாரிப்பாளர் தாணு அண்மையில் தெரித்திருந்தார்.

தற்போது கபாலிக்கு சவால் விடும் வகையில் சுல்தான் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுல்தான் வசூல் விவரப்பட்டியல்… (10 நாள் வரை)

Sultan Day Wise India Overseas
1st Day Rs 36.54 Cr Rs 20.41 Cr
2nd Day Rs 37.20 Cr Rs 18.79 Cr
3rd Day Rs 31.66 Cr Rs 17.65 Cr
1st Weekend Rs 105.50 Cr Rs 56.87 Cr
4th Day Rs 37.10 Cr Rs 15.20 Cr
5th Day Rs 38.21 Cr Rs 19.27 Cr
6th Day Rs 15.54 Cr Rs 6.20 Cr*
7th Day Rs 12.92 Rs 4.10 Cr*
1st Week Rs 208.82 Cr Rs 102.23 Cr*
8th Day  Rs 10.82 Cr  Rs 3.04 Cr*
9th Day Rs 9.52 Cr  Rs 2.10 Cr*
10th Day    Rs 8.25 Cr*  Rs 1.99 Cr*
Total  upto 10th day Rs 237.41 Cr* Rs 109.36 Cr*
Worldwide Total Rs 346.77 Cr*
Overall Rating : Not available

Latest Post