பிரபுதேவாவின் ‘தபாங்-3’ பட டான்ஸ்க்கும் எதிர்ப்பு கிளம்பிடுச்சி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக சினிமாவில் கதைக்கும் பட காட்சிகளுக்கும் எதிர்ப்பு கிளம்பும். இந்த முறை பட நடனத்திற்கு கூட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழில் நடிகராக பிசியாக இருந்தாலும் ஹிந்தியில் சில படங்களை அவ்வப்போது இயக்கி வருகிறார் பிரபுதேவா.

தற்போது சல்மான்கானை வைத்து தபாங்-3 படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற டிசம்பர் 20-ந்தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் இதன் டிரைலர் அண்மையில் வெளியானது.

இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பாடலில் சாமியார்கள் வெஸ்டர்ன் நடனம் ஆடுவது போல காட்சிகள் உள்ளது.

இதற்கு மராட்டியத்தை சேர்ந்த இந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து தணிக்கை குழுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாம்.

சாதுக்கள் வெஸ்டர்ன் டான்ஸ் ஆடுவது இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பரில் 30 தமிழ் படங்கள் ரிலீஸ்; தாங்குமா கோலிவுட்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிசம்பர் மாதம் பருவ மழை தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் பரவலாக இடை விடாது மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் தமிழகம் தாங்குமா..? என ஒரு பக்கம் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் மட்டும் 30 தமிழ் படங்கள் ரிலீசாகவுள்ளது. இந்த வாரம் டிசம்பர் 6ல் 4 படங்கள் வெளியாகிறது.

அந்த படங்களின் பெயர் பட்டியல் இதோ…

டிசம்பர் 6….

பா.ரஞ்சித் தயாரித்து அட்டகத்தி தினேஷ்-.ஆனந்தி நடித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள தனுசு ராசி நேயர்களே

துரை இயக்கத்தில் சுந்தர்.சி நடித்துள்ள இருட்டு

பிகில் பட புகழ் கதிர் நடித்த ஜடா

டிசம்பர் 13…

பரத் நடித்துள்ள காளிதாஸ்

மாதவன்-அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம்.

சுசீந்திரன் இயக்கியுள்ள சாம்பியன்

ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள்,

ஜீவாவின் சீறு,

விமலின் கன்னிராசி ஆகியவை வெளியாகவுள்ளது.

டிசம்பர் 20 தேதியில்…

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ

ஜோதிகா அண்ட் கார்த்தி நடித்துள்ள தம்பி

த்ரிஷா நடித்துள்ள கர்ஜனை

இவையில்லாமல் இன்னும் சில படங்களும் டிசம்பரில் வெளியாக தயாராகவுள்ளன.

அமலாபாலின் அதோ அந்த பறவை போல

சசிகுமாரின் நாடோடிகள்-2,

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி ஜெய் நடித்துள்ள கேப்மாரி,

பாரதிராஜா, வசந்த் ரவி நடித்துள்ள ராக்கி,

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள சைக்கோ

சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா,

அல்டி, வேழம், கருத்துக்களை பதிவு செய், பஞ்சாட்சரம், தேடு, இருளன், மதம், இ.பி.கோ 306, உன் காதல் இருந்தால், நான் அவளை சந்தித்த போது, அவனே ஸ்ரீமன் நாராயணா (கன்னட டப்) ஆகிய படங்களும் ரிலீசாகவுள்ளன.

ஜெயலலிதா இறந்தநாளில் ‘குயின்’ டிரைலரை வெளியிடும் கௌதம்மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 3 இயக்குனர்கள் திரைப்படமாக்கி வருகின்றனர்.

ஆனால் இயக்குனர் கவுதம் மேனன், பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து ‘குயின்’ என்ற பெயரில் ஒரு வெப்சீரிஸ் ஆக இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் ‘குயின்’ டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசரில் ஜெயலலிதாவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணனின் முகம் காட்டப்படவில்லை.

வருகிற டிசம்பர் 5ஆம் தேதி டிரைலரை இணையத்தில் வெளியிட உள்ளனர். இதில் இன்னும் பல சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கும் என நம்பலாம்.

டிசம்பர் 5ஆம் தேதி தான் ஜெயலலிதா இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவாக மாற மாத்திரைகளை சாப்பிடும் கங்கனா ரனாவத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‛தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் புகழ் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

இந்த கேரக்டருக்காக பரதநாட்டியம் கற்றுக் கொண்ட கங்கனா தற்போது ஜெயலலிதா போல் கொஞ்சம் குண்டாக சில ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறாராம்.

ஜெயலலிதா ஒரு விபத்தில் சிக்கியதால் அதிக அளவில் ஸ்டெராய்டுகள் எடுத்திருந்தாராம். எனவே அதற்காக தானும் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் கங்கனா.

தற்போது வரை 9 கிலோ கூடியிருக்கிறாராம் கங்கனா.

சூர்யா & கௌதம் மேனனை மீண்டும் இணைக்கும் ஐசரி கணேஷ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த பட டிரைலர் 2020 பொங்கல் சமயத்தில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ஹரி இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் (தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அப்படத்தை கௌதம் மேனன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கெனவே காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவும் கௌதமும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பார் படத்துடன் மோத தயாரான சசிகுமாரின் 2 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

ரஜினி படங்கள் வரும்போது பெரும்பாலும் மற்ற அதே நாளில் ரிலீசாகாது. ஆனால் பொங்கல் பண்டிகை பெரிய பண்டிகை என்பதால் நிறைய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் & சத்யராஜ் இணைந்து நடித்துள்ள எம்ஜிஆர் மகன் என்ற படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

மேலும் சசிகுமாரின் மற்றொரு படமான ராஜவம்சம் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

ஆக அடுத்த வருட பொங்கல் ரேஸ் செமயாய் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows