பிரித்திவிராஜ் பிறந்தநாளில் பிரபாஸ் பட குழுவினர் கொடுத்த ட்ரீட்

பிரித்திவிராஜ் பிறந்தநாளில் பிரபாஸ் பட குழுவினர் கொடுத்த ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வெளியான பிருத்விராஜின் ‘சலார்’ வரதராஜ மன்னாரின் கேரக்டர் லுக்

முன்னணி நட்சத்திர நடிகரான பிருத்விராஜின் பிறந்த நாளான இன்று, ‘சலார்’ படத்தில் அவர் நடிக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘சலார்’. இந்தப் படத்தில் நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் கேரக்டர் லுக் போஸ்டர், அவருடைய பிறந்தநாளான இன்று அக்டோபர் 16ல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘சலார்’ படத்தைப் பற்றிய புதிய தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக பட குழுவினர், நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை வாய்ப்பாகக் கருதி, அவர் நடித்திருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத் தோற்றப் புகைப்படத்தை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

‘ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நட்சத்திர நடிரகான பிரித்விராஜ் சுகுமாரன், வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், ‘சலார்’ படத்தைப் பற்றிய நேர் நிலையான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்’ என பட குழுவினர் உற்சாகமாக தெரிவிக்கிறார்கள்.

‘சலார்’ படத்தில் இடம்பெறும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரம், கதையின் நாயகனான பிரபாஸிற்கு இணையான கதாபாத்திரமாக படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இந்த இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் அற்புதமான நடிப்பை காண்பதற்கு ரசிகர்களிடம் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

பிருத்விராஜின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில்…

“பிருத்விராஜ் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர், ‘சலார்’ படத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான வேறு நடிகரை நாங்கள் பெற்றிருக்க இயலாது.

படத்தில் அவர் வரதராஜ மன்னார் கதாபாத்திரத்தில் பொருத்திக்கொண்டு நடித்த விதம், அவரது அற்புதமான நடிப்புத் திறமையை நிரூபிக்கிறது. அவரது தனித்துவமான நடிப்பு, ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரித்விராஜ், பிரபாஸுடன் இணைந்து நடித்திருப்பதும், இவ்விருவரையும் இயக்கியதும் அற்புதமான அனுபவம்” என்றார்.

‘கே ஜி எஃப் 2’ படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் பிரசாத் நீல் மற்றும் அதன் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ், ‘சலார்’ படத்தில் இணைந்திருப்பது, இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக மாற்றம் பெற்றிருக்கிறது.

‘பாகுபலி’ நட்சத்திரமும், ‘கே ஜி எஃப்’ தயாரிப்பாளர்கள் மற்றும் அதன் தொழில்நுட்பக் குழுவினரும், ‘சலார்’ படத்தில் இணைந்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் கூடிய எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் பணியாற்றுவதால் இணையவாசிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

‘கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்திய இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பிரசாந்த் நீல், ‘சலார்’ படத்தை இயக்குவதால் இந்த திரைப்படம், திரையுலக ரசிகர்களிடையே நம்பிக்கைக்குரிய படைப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சலார்’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் பன்முக ஆளுமை திறன் கொண்ட நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், வரதராஜ மன்னார் எனும் அற்புதமான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘பாகுபலி’ மற்றும் ‘கே ஜி எஃப்’ ஆகிய இரண்டின் கலவையாக ‘சலார்’ உருவாகி வருகிறது. ‘பாகுபலி’ படத்தின் நட்சத்திரமான பிரபாஸ், ‘கே ஜி எஃப்’ படத்தின் தயாரிப்பாளரான ஹோம்பாலே பிலிம்ஸ், கே ஜி எஃப் இயக்குநர் பிரசாத் நீல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருடன் இணைந்து இந்திய ரசிகர்களுக்காக பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

JUST IN வாடகைத்தாய் சர்ச்சை: விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்த விக்கி – நயன்தாரா தம்பதி

JUST IN வாடகைத்தாய் சர்ச்சை: விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்த விக்கி – நயன்தாரா தம்பதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் 9 தேதி நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

திருமணமான 4 மாதங்களில் அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

இவர்கள் ஏற்கனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றதில் விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் வந்தன.

எனவே நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தியது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வாடகைத்தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி. விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களை சமர்பித்துள்ளனர் விக்னேஷ் சிவன்–நயன்தாரா தம்பதி.

6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததிற்கும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பித்துள்ளனர்.

Nayanthara – Vignesh Shivan couples submit Surrogacy documents

‘நந்திவர்மன்’ அப்டேட் : சோழர்களை தொடர்ந்து பல்லவர்களும் விரைவில்..

‘நந்திவர்மன்’ அப்டேட் : சோழர்களை தொடர்ந்து பல்லவர்களும் விரைவில்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்’ படத்தால் சோழர்கள் பற்றிய கருத்துகளும், விவாதங்களும் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இதற்கு காரணம் அச்சு ஊடகத்தில் இருந்த பொன்னியின் செல்வன் வெள்ளித்திரையில் திரைப்படமாக உருவெடுத்தது தான்.

இந்த நிலையில், சோழர்களை தொடர்ந்து பல்லவர்களும் வெள்ளித்திரையில் தோன்ற இருக்கிறார்கள்.

ஆம், அறிமுக இயக்குநர் பெருமாள் வரதன் இயக்கியுள்ள ‘நந்திவர்மன்’ திரைப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னவர்களில் முக்கியமானவரான நந்திவர்மன் பற்றிய பெருமைகளையும், ரகசியங்களையும் வெளிக்கொண்டு வரும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடித்த சுரேஷ் ரவி நாயகனாக நடித்திருக்கிறார். ஆஷா கவுடா நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே.கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’ படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய பெருமாள் வரதன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘நந்திவர்மன்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நந்திவர்மன் சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில் அவர் வாழ்ந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது.

அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல் பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருவதால், தற்போதைய காலக்கட்டத்திலும் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள்.

இதற்கிடையே, அந்த ஊரில் புதைந்த நந்திவர்மனின் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தொல்லியல் துறையினர் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள்.

அதன் பின்னணி என்ன? என்பதை சுவாரஸ்யமான வரலாற்று கதையுடன், தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் இப்படத்தை பெருமாள் வரதன் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்படத்தின் டீசர் பல விவாதங்களையும், கேள்விகளையும் ஏற்படுத்தும் வகையில் உருவாகியிருக்கிறது.

மேலும், ‘நந்திவர்மன்’ படத்தின் இசை உரிமையை சரிகம நிறுவனம் வாங்கியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க செய்திருப்பதோடு, திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் ‘நந்திவர்மன்’ படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, சோழர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் மக்களை பல்லவர்கள் பற்றி பேச வைத்திருக்கிறது.

டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றிருப்பது பற்றி தயாரிப்பாளர் அருண்குமார் கூறுகையில்…

“’நந்திவர்மன்’ படத்தை சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக படமாக்கினோம். அதற்கு காரணம், படத்தை தரமாக எடுப்பதற்காக தான். தற்போது டீசர் வெளியாகி இருக்கிறது, டீசரை பார்த்தாலே தெரியும் படம் எவ்வளவு பிரம்மாண்டமாக வந்திருக்கும் என்று. இதனால் தான் ரசிகர்களிடம் டீசர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படமும் நிச்சயம் அனைத்து தரப்பினரையும் கவரும்.” என்றார்.

இயக்குநர் பெருமாள் வரதன் பேசுகையில்…

“நான் செஞ்சிகோட்டைக்கு ஒரு முறை சென்றிருந்த போது, அப்பகுதியில் உள்ள ஒரு பெரியவர் அங்கு நடக்கும் சில அமானுஷ்ய விஷயங்கள் பற்றி கூறினார். அதை கேட்கவே வியப்பாக இருந்தது. பிறகு மறுநாள் அதே இடத்திற்கு நான் சென்றேன், அப்போது மற்றொருவர் அதே விஷயங்களை சொன்னார். இப்படி அப்பகுதியில் இருக்கும் பலர் அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து சொன்னார்கள். அப்போது அங்கு யார் ஆட்சி செய்தது என்று விசாரித்ததில், பல்லவ மன்னர்கள் தான் அப்பகுதியை ஆண்டதாக சொன்னார்கள். பிறகு தான் பல்லவர்கள் பற்றியும், அங்கு நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது ஒரு ஐந்து பல்லவ மன்னர்களின் பெயர்கள் தெரிய வந்தது, அதில் நந்திவர்மன் முக்கியமானவராக இருந்ததால் அவருடைய பெயரை தலைப்பாக வைத்துவிட்டேன்.

அதுமட்டும் அல்ல, செஞ்சிகோட்டையில் நிலவும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, இப்போதும் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் யாராலும் செல்ல முடியாது. வழி இருக்கிறது, அது நமக்கும் தெரிகிறது, ஆனால் அங்கு நம்மால் செல்ல முடியாது.

வெறும் அமானுஷ்ய விஷயங்களை மட்டும் சொல்லாமல் பல்லவர்களின் பெருமைகள் பற்றியும் படத்தில் சொல்லியிருக்கிறோம்.

பாண்டிச்சேரி கடற்கரையில் சில தூண்கள் இருக்கும், அவை செஞ்சி கோட்டையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தூண்களாகும். பல்லவர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன, அவற்றில் அந்த தூண்களும் ஒன்றாகும். இந்தியாவிலேயே முதன்மை சுற்றுலாத்தளமாக மகாபலிபுரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை உருவாக்கிய பல்லவர்கள் பற்றியும், அவர்களுடைய பெருமைகள் பற்றியும் இதுவரை சொல்லாத பல தகவல்களை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.

நந்திவர்மன்

ஐந்து நிமிடம் பல்லவர்களின் வரலாற்றை 2டி அனிமேஷன் மூலம் சொல்கிறோம். அதை தொடர்ந்து தொல்லியல் துறையினர் ஒரு கிராமத்தில் நந்திவர்மன் வாழ்ந்த இடத்தை தேடி செல்கிறார்கள். அப்போது அவர்களுக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களும் அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களில் பல்லவர்கள் பற்றிய பல ரகசியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பு செஞ்சி கோட்டையில் நடத்தினோம். அமானுஷ்ய விஷயங்கள் நடக்கும் அந்த இடத்தில் மட்டும் படப்பிடிப்பு நடத்தவில்லை. அதற்கு பதிலாக செங்கல்பட்டு பகுதியில் அந்த காட்சிகளை படமாக்கினோம். இந்த படத்தை எடுக்கும் போது எங்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டதோடு, சில அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களும் நடந்தது. குறிப்பாக, செங்கல்பட்டு பகுதியில் படப்பிடிப்புக்காக பெரிய பள்ளம் தோன்றினோம், அப்போது அதில் ஒரு கொடூரமான முகம் போன்ற வடிவமைப்புக் கொண்ட பாறை தெரிந்தது, அதை தொடர்ந்து அப்பகுதியில் போட்ட பிரம்மாண்ட செட் ஒன்று புயலில் சிக்கி சிதைந்து போனது, நல்ல வேலையாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதுமட்டுமா, படத்தின் ஹாட்டிஸ்க் கரெப்ட் ஆகிவிட்டது. இப்போது கூட டீசரை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட லேப்டாப் கரெப்ட் ஆகிவிட்டது. இப்படி பல சிக்கல்கள் எங்களை தொடர்வதே ஒரு அமானுஷ்யம் போலத்தான் இருக்கிறது.” என்றார்.

படத்தின் நாயகன் சுரேஷ் ரவி பேசுகையில்…

“காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் காவல்துறையின் மற்றொரு முகத்தை காட்டினோம். அப்போது அனைவரும் என்னிடம் கேட்டது, போலீஸுக்கு எதிரான படத்தில் நடித்து விட்டீர்கள், போலீஸாக நடிப்பீர்களா? என்பது தான். நானும் பார்த்துக்கலாம் என்று சாதாரணமாக இருந்தேன்.

ஆனால், பெருமாள் வரதன் இந்த கதையை என்னிடம் சொல்ல வரும் போது, இது போலீஸ் வேடம் என்பது தெரியாது. பிறகு கதை முழுவதையும் அவர் என்னிடம் சொன்ன போது தான் போலீஸ் வேடம் என்பது தெரிந்தது. எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, இவ்வளவு சீக்கிரம் நான் போலீஸ் வேடத்தில் நடிப்பேன் என நினைத்து பார்க்கவில்லை.

‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’ போன்ற வெற்றி படங்களில் பெருமாள் வரதன் பணியாற்றியிருக்கிறார், என்பதால் அவரிடம் கதை கேட்க சென்றேன். பொதுவாக நடிகர்கள் ஒரு கதையை கேட்டால், இதில் நமக்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது, என்று பார்ப்பார்கள், நானும் அப்படித்தன.

ஆனால், இந்த படத்தில் நான் நடிப்பதற்கு என்னை தாண்டி ஒரு காரணம் என்றால் அது இயக்குநர் பெருமாள் வரதன் மற்றும் தயாரிப்பாளர் அருண்குமார் ஆகியோர் தான். அவர்களுடைய உழைப்பு மற்றும் படத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான்.

இயக்குநர் பெருமாள் வரதன் எப்போதும் இந்த படத்தின் சிந்தனையாகவே இருப்பார், சில நாட்கள் தூக்கம் வரவில்லை என்று இரவு 1 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விடுவார்.

படப்பிடிப்பு தொடங்க மூன்று நாட்களே இருக்கும் நிலையில், பெருமாள் வரதன் நள்ளிரவு 1 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டு அங்கிருந்து எனக்கு போன் செய்தார். நான் தான் சார், மூன்று நாட்களில் படப்பிடிப்பு இருக்கு ஓய்வு எடுங்க, என்று கூறினேன்.

அந்த அளவுக்கு அவர் எப்போதும் இந்த கதையின் சிந்தனையாகவே பயணித்துக்கொண்டிருக்கிறார். அதேபோல், தயாரிப்பாளர் அருண்குமாரும் இந்த கதை ரொம்ப நல்லா இருக்கு, படமும் பெரிய அளவில் வரும் என்பதால் தான் சார் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தேன், என்றார். முதல் படமாக இருந்தாலும் பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் இருக்கிரார். இவர்கள் இரண்டு பேருக்காக தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் எடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும், அதுவும் முதல் படம் என்றால் அவர்கள் எப்படி உழைக்க வேண்டும் என்பதும் தெரியும், ஆனால் இவர்கள் உழைப்போடு சினிமா மீது ரொம்பவே பேஷனாக இருக்கிறார்கள். அவர்களுடைய ஆர்வம் என்னை வியக்க வைத்தது.

ஒரு புது டீம், இப்படி ஒரு படத்தை பண்ணுவது சாதாரண விஷயம் அல்ல, இருந்தாலும் இதை நாங்கள் சாத்தியமாக்கியுள்ளோம். இனி இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்கள் கையில் தான் இருக்கிறது. நல்ல படைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் ஊடகங்கள் பாராட்டும் வகையில் தான் படம் உள்ளது. நிச்சயம் ‘நந்திவர்மன்’ அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும்.” என்றார்.

’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு நிறைய வரலாற்று சரித்திர படங்கள் வரும் என்று சொல்லப்படுகிறது. நீங்களும் அந்த படத்தை பார்த்து தான் ‘நந்திவர்மன்’ படத்தை எடுத்தீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் பெருமாள் வரதன், “’பொன்னியின் செல்வன்’ படம் அல்ல, அப்படம் பற்றிய முதல் அறிவிப்பு வெளியாகும் முன்பே இந்த படத்தின் முழு திரைக்கதையை எழுதி முடித்து விட்டேன்.

சில மாதங்கள் தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருந்தேன். அந்த காலக்கட்டத்தில் தான் பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு வெளியானது. எனவே, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முன்பாகவே என் படம் உருவாக வேண்டியது, தயாரிப்பாளர் கிடைக்காததால் கொஞ்சம் தாமதாமாகி விட்டது.

எனவே, பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து இந்த படத்தை எடுக்கவில்லை. இதுவரை எந்த ஒரு படத்திலும் சொல்லப்படாத சம்பவங்கள் நிறைந்த படமாகவும், பல்லவர்கள் பற்றி தெரிந்துக் கொள்ள கூடிய தகவல்கள் அடங்கிய படமாகவும் ‘நந்திவர்மன்’ இருக்கும்” என்றார்.

நந்திவர்மன்

Nandivarman Tale and secrets of Pallava Dynasty laced with supernatural mystery

‘சர்தார்’ படத்தில் சங்கி.; இதுவொரு இந்தியன் ஸ்பை; கார்த்தி ஓபன் டாக்

‘சர்தார்’ படத்தில் சங்கி.; இதுவொரு இந்தியன் ஸ்பை; கார்த்தி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படக் குழுவினர்கள் பேசியதாவது

நடிகர் கார்த்தி பேசும்போது…

மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு..
பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது. வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி இந்தளவிற்கு பயத்தை ஏற்படுத்த முடியுமா? என்று அந்த படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது.

பக்கத்திலேயே இருக்கும் விஷயத்தை நாம் கவனம் செலுத்தவில்லை. அதை மித்ரன் புரிந்து கொண்டு படத்தை இயக்கியது நம் எல்லோருக்கும் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அந்த படம் எல்லா மொழிகளிலும் நன்றாக ஓடியது. அதிலும் அவர் முதல் படம் என்பதே ஆச்சிர்யபட வைத்தது. அவர் மீது ஆர்வம் அதிகமானது. அதன் பிறகு ஹீரோ படத்தை இயக்கினார். பின்பு இந்த படத்திற்கு லக்ஷ்மன் சந்திக்க வைத்தார். அப்போது இந்த படத்தின் ஒரு வரியைக் கூறினார்.

மிலிட்டரியில் 80-ல் ஒரு உளவாளி குழுவை உருவாக்கினார்கள். மிலிட்டரிகாரர்களை உளவாளியாக நடிக்க சொல்லி கொடுத்தார்கள். பிறகு, ஏன் கஷ்டப்பட வேண்டும்? ஒரு நடிகரை மிலிட்டரிகாரராக மாற்றிவிட்டால் என்ன என்று யோசித்தார்கள்.

அதன்படி ஒரு நாடக நடிகரை அழைத்து வந்து பயிற்சி கொடுத்து உளவாளியாக மாற்றி பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்தார்கள் என்று தகவல் கூறினார். அதைக் கேட்டதும் மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த கதையை முழுதாக எழுதிவிட்டு வாருங்கள் என்று கூறினேன்.

கார்த்தி

அவர் எழுதி விட்டு இந்தக் கதாபாத்திரம் இரட்டை கதாபாத்திரமாக மாறி இருக்கிறது என்று கூறினார். மறுபடியும் இரட்டை வேடமா? வேண்டாம் என்று கூறினேன். ஆனால் மித்ரன் கதை கேளுங்கள். இந்த கதைக்கு இரட்டை பாத்திரம் தேவைப்படுகிறது என்று கூறினார். கதைக் கேட்டதும் தானாகவே உளவாளிக்கான பல பார்வைகள் வந்தது.

அனைத்து நடிகர்களின் வாழ்க்கையிலும் இது மாதிரி ஒரு காதபாத்திரம் நிச்சயம் வரும். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார் காலத்திலும் வந்திருக்கிறது. ரஜினி சார், கமல் சார் காலத்திலும் நடந்திருக்கிறது. அண்ணனும் அயன் படத்தில் பல்வேறு வேடங்களில் தோன்றினார். அவருக்கு எல்லாம் பொருந்தும் என்பது அனைவருக்கும் தெரியும்.

எனக்கு இந்த படத்தில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னுடைய கேரியரில் இது மிகவும் முக்கியமான படம். மேலும், எத்தனை வேடங்கள் போட்டாலும் எதற்காக போடுகிறோம் என்பதில் தான் அந்த வேடத்திற்கு மரியாதை கிடைக்கும்.

அதேபோல், நம் இந்திய உளவாளி, நம் மண்ணில் இருக்கும் ஒருவன், அவன் எப்படி சிந்திப்பான், எதற்காக உளவாளி ஆகிறான் என்பது எனக்கு பிடித்திருந்தது.

மேலும், அதை எப்படி ஏமாற்றாமல் உண்மையாக பண்ண முடியும் என்பதற்கு தான் பெரிய மெனக்கெடல் தேவைப்பட்டது. முதல்முறையாக வயதான தோற்றத்தில் நடிப்பதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. 40, 50 மற்றும் 60 வயதிற்கு மேல் உடல் ரீதியாக எப்படி மாற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள நேர்ந்தது.

இந்த படம் பெரிய விஷயத்தை பேசுகின்றது. அது எப்படி எளிமையாக புரிய வைக்கப் போகின்றோம் என்று நினைக்கும்போது தான் இப்படத்தின் ஹீரோ என்று கூறிய அதிசய குழந்தையாக ரித்விக் வந்தான்.

‘ஜூராசிக் பார்க்’ படத்தை நம்ப வைத்தது எது என்றால் குழந்தைகளின் ரசனை தான். அவர்களின் ரசனையும், அப்பாவித்தனமும் தான் நம்மை யதார்த்தில் நுழைய வைத்தது.

இறுதிக் காட்சியில் நானும் மித்ரனும் இது சரியாக வருமா? என்று பேசிக்கொண்டிருக்கும் போதே விஜி என்று ரித்விக் அழைப்பான். அங்கேயே எல்லாம் உடைந்து விட்டது. அப்போது, நம்முடைய பிரச்சினை அவனுடைய பிரச்சினையாக மாறியதை கவனித்தேன்.

மேலும், உளவாளி படம் என்பதால் ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிகினியும், சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என்று கேட்காதீர்கள். இது இந்தியன் ஸ்ப்பை த்ரில்லராக இருக்கும். நாங்கள் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்.

மித்ரன் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு அனைவருமே மிகவும் பொருந்தினார்கள். குறிப்பாக பெண்கள் சரியாகப் பொருந்தினார்கள். லைலா கதாபாத்திரத்திற்கு புதிதாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் உறுதியாகவும் இருக்கும் வேண்டும் என்று மித்ரன் கூறினார். அப்போது லைலாவிடம் பேசினேன். அவர் பிதாமகனில் பார்த்தது போலவே இன்னமும் அப்படியே இருக்கிறார். அவர் உடனே ஒப்புக் கொண்டு வந்தது படத்திற்கு பெரிய பலம் சேர்த்தது.

கார்த்தி

பிறகு ராஷி கண்ணா வந்தார் அவர் வந்ததும் இப்படத்தை கமர்சியல் என்று சொல்லிவிடக் கூடாது என்ற பயம் வந்தது. ராஷி நம்ம ஊர் பெண்ணாக மாறுவதற்கு கடின முயற்சி எடுத்தார். அவரது கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு சௌகார்பேட்டை பெண்ணாக கதையோடு ஒன்றி மாறினார்.

ரெஜிஷா முதல் நாள் படப்பிடிப்பிலேயே அவருடைய பாத்திரத்தைப் புரிந்துகொண்டு கதாபாத்திரமாகவே வந்தார். என்னமா? 100 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டது போல, முதல் நாளிலேயே வந்திருக்கிறாய் என்று கேட்கும்படி அழகாக உள்ளே வந்தார்.

உளவாளி படம் என்று கூறிவிட்டோம். ஆனால், பக்கத்திலேயே அமேசானும், நெட்ஃபிளிக்ஸ்-ம் இருக்கிறார்கள். பொன்னியில் செல்வன்-1 –ஐ சிவாஜி புத்தகம் படிப்பது போல் வீடியோ வெளியிட்டார்கள். அதுபோல, இப்படத்தை எப்படி காட்டப் போகிறார்கள் என்று ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஃபிரேம் வைக்கும் போதும் பயத்துடன் தான் பணியாற்றினோம்.

மேலும், ஒரு தளம் போடுவார்கள், பிரமாண்டமாக இருக்கும். இங்கு ஒரு வாரம் படப்பிடிப்பு இருக்குமா? என்று கேட்டால், இல்லையில்லை இரண்டு நாட்கள் தான் என்பார்கள். இதைப் பார்க்கும்போது தீரன் படம் தான் நினைவிற்கு வந்தது. அந்த படத்தில் என்னை ஓட வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

அதுபோல, இந்த படத்திலும் காட்சிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு தளம் மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பு நிறுவனத்தில் செய்து கொடுத்தார்கள். அதிலேயே இப்படத்தின் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. திலீப் மாஸ்டருடன் நிறைய ஒத்திகை பார்த்தோம். இறுதியாக படம் பார்க்கும்போது நன்றாக வர வேண்டும் என்பதற்காக அனைவருமே கடினமாக உழைத்தார்கள்.

கார்த்தி

இப்படம் நன்றாக வருவதற்கு ஜி.வி.யும் முக்கிய காரணம். அவர் அமைத்துக் கொடுத்த தீம் இசை இப்படத்திற்கு ஒரு தரத்தைக் கொடுத்தது. படப்பிடிப்பிலும் அவருடைய இசையை கேட்டுத்தான் காட்சிகள் அமைத்தோம். வில்லனாக நடித்த சங்கி சாருக்கு நன்றி. மித்ரன் முதலில் வில்லன் கதாபாத்திரம் எழுதிவிட்டு தான் மற்ற பாத்திரங்களை எழுதுவேன் என்றார். வில்லன் பாத்திரம் எப்படி சிந்திப்பான், அவனுடைய சித்தாந்தம் என்ன என்பதை கூர்ந்து எழுதினார்.

எனக்கு இரட்டை வேடம் ஆகையால், வில்லனைவிட என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று மித்ரனிடம் கூறினேன். ஏனென்றால், இன்று நம் ஒவ்வொருவருக்குமே அவரவர் செய்யும் வேலைகளில் அங்கீகாரம் தேவைப்படுகிறது.

நாம் ஒரு சிறிய செயல் செய்தாலும் சமூக வலைதளங்களில் லைக், கமெண்ட் வேண்டும் என்பதிற்காக பதிவிடுகிறோம். அப்படி இருக்கும்போது, உளவாளி என்பவர்கள் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் அவர்கள் செய்யும் செயல்கள் வெளியே தெரியாமல் சேவை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியும் மக்கள் இருக்கிறார்களா? என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.

அப்படிப்பட்ட தியாகம் செய்யக் கூடிய கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. சர்தாராக ஒவ்வொரு வசனம் பேசும்போதும் உறுதியாக உணர்ந்தேன். அதற்கு எதிராக விஜி என்கிற பாத்திரம். நான்கு பேருக்கு நல்லது செய்தால் கூட, அதை 40 ஆயிரம் பேருக்கு தெரியும்படி செய்ய வேண்டும் என்று நினைப்பவன்.

இரட்டை வேடத்தில் நடிக்கும்போது முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், ஒரு கதாபாத்திரம் போலீஸ், இதில் தீரனோ, சிறுத்தை கதாபாத்திரத்தின் சாயலோ வரக்கூடாது என்று நினைத்தேன். அது அழகாக அமைந்தது. அதிலும், ரித்விக் உடன் இருக்கும் காட்சிகளில் நான் உற்சாகமாக இருந்தேன். பார்த்த உடனேயே நீங்கள் போலீஸா? நான் நம்ப மாட்டேன் என்று கூறிவிட்டான். அவனை சமாதானப்படுத்துவதே பெரும் பாடாக இருந்தது.

ஒரு குழுவாக இணைந்து ஆய்வுக் கூடத்தில் பணியாற்றுவது போல் தான் நான், ஜார்ஜ், திலீப் மற்றும் மித்ரன் பணியாற்றினோம். இறுதியாக ரூபனிடம் கொடுத்தோம். மித்ரன் இப்படத்திற்கு 3 வருடமாக செய்த ஆராய்ச்சியை கூறினால் அது ஆவணப் படமாகி விடும். தீபாவளி அன்று வெளியாவதால், எந்த விஷயம் இருக்க வேண்டும், எது இருக்கக் கூடாது என்பதை பிரித்து எடுத்து 3இ என்று சொல்லக்கூடிய பொழுதுபோக்கு, ஈடுபாடு மற்றும் எட்ஜுகேட் கொடுத்தது மிக முக்கியமான வேலையாகப் பார்க்கிறேன்.

தீபாவளி அன்று வெளியாவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், தீபாவளி அன்று வெளியாகும் படங்களை நினைவில் வைத்திருப்பார்கள். இனிமேல் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அப்படி ஒரு படமாக சர்தார் இருக்கும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

மேலும், இப்படத்தை ரெட் ஜெயிண்ட் வழங்குகிறார்கள் என்பது மிகப் பெரிய தைரியம் கொடுக்கிறது. படத்தை யார் எடுத்துக் கொண்டு சென்றாலும் உதவும் மனப்பான்மையுடன் விநியோகிக்கிறார்கள். அனைத்து படங்களுமே எந்தவித சிக்கலும் இல்லாமல் வெளியாகிறது. இதற்காக ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கும், உதய்க்கும், ராஜா மற்றும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வெற்றியடைய வேண்டும் என்று நினைத்தால், முதலில் அந்த வெற்றிக்கு நீ தகுதியாக இருக்கிறாயா? என்று யோசித்துப் பார் என்று அண்ணன் கூறுவார்.

கார்த்தி

அந்த தகுதிக்கு ஏற்ப நாங்கள் உழைத்திருக்கிறோம் என்று நம்புகிறேன். தீபாவளிக்கு சர்தார் மற்றும் சிவாவின் பிரின்ஸ்-ம் வருகிறது. இரண்டு படங்களும் வெவ்வேறு கேளிக்கையுடன் வருகிறது. அனைவருக்கும் சிறப்பு தீபாவளியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

வந்தியதேவனுக்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அதன்பிறகு வேறொரு படம் கொடுக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

முனீஸ்காந்த் சார் அருமையான நடிகர். அவர் அருகில் இருந்து அவரை ரசித்துக் கொண்டே இருந்தேன். வி.கே.ராமசாமி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எது பேசினாலும் அழகாக இருக்கும்.

சும்மா நின்றுக் கொண்டிருந்தாலே அவ்வளவு அழகாக இருக்கும். அவரை மாதிரி தான் முனீஸ்காந்த் சாரையும் பார்த்தேன். என்னுடைய சித்தப்பாவாக நடித்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களை அவர் செய்வதே அழகாக இருக்கும். அவருடன் பணியாற்றியதில் உற்சாகமாக இருந்தேன். ஒவ்வொரு வேடம் போடுவதற்கும் இரவு பகலாக பணியாற்றிய பிரவினுக்கு நன்றி. அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. பல பேருக்கு இரவு பகல் பாராது உழைத்ததில் உடல்நலம் சரியில்லாமல் போனார்கள். அவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி என்றார்.

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது…

இப்படத்தின் டிரைலர் வெளியாவதில் உற்சாகமாக உள்ளேன். இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த மேடையை ஒப்படைக்கிறேன் என்றார்.

இயக்குநர் பி எஸ் மித்ரன் பேசும்போது….

இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நிறைய மெனக்கெடல் இருந்தது. நிறைய உழைக்க வேண்டியிருந்தது. அதற்கு முதல் காரணம் லக்ஷ்மன் சார் தான். எல்லாத்தையும் தாண்டி நம்பிக்கை வைக்க வேண்டும். இவ்வளவு பணம் செலவு செய்து படம் எடுக்கிறோம் என்றால் அதற்கு தேவையான நம்பிக்கையை அவர் தான் கொடுத்தார்.

இரவும் பகலுமாக வேலை செய்துள்ளோம். நடிகர்கள், துணை இயக்குனர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் இரவும் பகலுமாக வேலை செய்துள்ளனர். உடல் ரீதியாகவே இது ஒரு கடினமான படம். கிட்ட தட்ட ஒரு பயிற்சி மாதிரி.

கார்த்தி நான் உங்களை மிகவும் சிரமப் படுத்தியுள்ளேன். ஏனென்றால், ஏகப்பட்ட வித்யாசமான தோற்றங்கள் அவருக்கு இருந்தது. ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஏற்றவாறு தயாராக வேண்டும்.

இதுவரை நான் வேலை பார்த்த நடிகர்களை விட கார்த்தி சாருக்கு அவரின் நடிப்பின் மேல் ஈடுபாடு அதிகம். அவருடைய உடை, முடி, மேக்கப் அனைத்திலும் அவர் கவனத்துடன் இருப்பார். அது எனக்கொரு பயம் தந்தது. நாம் அதை விட்டுவிடக் கூடாது என்ற ஒரு எண்ணத்தை தந்தது. அவருடைய ஒத்துழைப்பும், சிரமமும் எனக்கு ஊக்கமளித்தது. இந்தப் படத்தில் நடித்ததற்கு கார்த்தி சாருக்கு நன்றி.

ரஜிஷா தான் இந்தப் படத்திற்கு அரவணைப்பு கொடுத்தார். ஆக்ஷன் திரில்லர் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பு தந்ததற்கு ரஜிஷாவுக்கு பெரும் பங்குள்ளது.

பி எஸ் மித்ரன்

ராஷி கண்ணா அவர் மிகவும் வலிமையான மற்றும் அறிவார்ந்த நடிகர். முதல் முதலில் நான் அவரை சந்தித்தப் போது, இவர் வட மாநிலத்தை சேர்ந்த பெண். அதனால் ஆங்கிலத்தில் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால், அவரை சந்தித்ததுமே “ஹாய் சார், எப்படி இருக்கீங்க” என்று தமிழில் பேச ஆரம்பித்தார். அதன் பிறகும் தமிழில் தான் பேசினார்.

அவர் சிறந்த நடிகர், மிகவும் வலிமையாக தனிமையிலுள்ள ஒரு கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்துள்ளார்.

லைலா மேடமுடன் முதலில் நான் தொலைபேசியில் பேசிய போது, என்னை மேடம் என்று அழைக்காதீர்கள். லைலா என்று அழையுங்கள் என்றார். உங்களை என்னால் அப்படி அழைக்க முடியாது, நான் உங்களை மேடம் என்று தான் அழைப்பேன் என்றேன்.

ஆனால், அவர் படம் வெளியான பின்பு என்னை மேடம் என்று அழைக்க கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். நானும் அவரை படம் வெளியான பின்பு மேடம் என்று அழைக்கப் போவதில்லை.

அவர் ஒரு அற்புதமான நடிகை, நான் சிறுவயதில் “கண்ணாலே மியா மியா” பாடலை தான் கேட்டு ரசிப்பேன். முதல் முறை அவரை பார்த்தபோதும் அந்தப் பாடல் தான் நினைவுக்கு வந்தது. இப்படத்தில் லைலா மேடம் நடித்ததற்கு எனக்கு பெருமையாகவுள்ளது.

நாங்கள் இப்படத்தில் வில்லனை மிகவும் வலிமையான கதாபாத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்தோம். அப்போது தான் “பேகம் ஜான்” என்ற படத்தைப் பார்த்தேன்.

அதில் சங்கி பாண்டே சார் வில்லனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் பிரமாதமாக நடித்திருந்தார். அதன் பின் அவரிடம் கேட்டபோது அவர் உடனே ஒப்புக் கொண்டார். அவருக்கு அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு அவருக்கு நன்றி.

என் நண்பர்கள், ரூபன், ஜார்ஜ், திலீப் இவர்கள் எல்லாம் என்னுடைய தூண்கள் என்றே சொல்லலாம். இவ்வளவு பெரிய படத்தை இயக்குகிறேன் என்றால், அதற்கு இவர்கள் என்னுடன் இருக்கும் தைரியத்தால் தான். இவர்கள் யாரும் என்னை ஒரு இயக்குனராக பார்க்க மாட்டார்கள். என்னை தலையில் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். அது எனக்கு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்.

கலை இயக்குனர் கதிர் சார் தான் இந்த படத்தில் அதிகப்படியான சித்திரவதை அனுபவித்தவர் என்று நினைக்கிறேன். அவரை 7 அல்லது 8 நாட்கள் தளம் அமைக்கச் சொல்லிவிட்டு நாங்கள் இரண்டு நாட்களில் படப்பிடிப்பை நடத்திவிட்டு கிளம்பிவிடுவோம். பின்பு அவரை வேறு ஒரு தளம் அமைக்கச் சொல்லி கேட்போம். 80 காலகட்டத்தை மீண்டும் அமைக்கும் பணி அவருடையது. அதை அவர் சிறப்பாகவே செய்துள்ளார்.

ஆடை வடிவமைப்பாளர் பிரவீன்.. இந்த படத்தை தவிர வேறு எந்தப் படத்திற்கும் இவ்வளவு ஆடைகளை வடிவமைத்திருக்க மாட்டார். இந்த படத்தில் அவ்வளவு வித்தியாசமான ஆடைகள் தேவைப்பட்டது.

நாங்கள் மிகவும் உறுதியான நம்பிக்கையோடு படப்பிடிப்பை ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் பட்டணம் ரஷீத் சார் தான். அவர் தான் ஹீரோவின் தோற்றத்திற்கு வடிவம் அமைத்து தந்தார்.

எனக்கும் கார்த்திக்கும் சிறிய தயக்கம் இருந்தது. காரணம், முதல் முறையாக கார்த்தி சார் இப்படி ஒரு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது தான். ஆனால், பட்டினம் ரஷீத் சார் அவரின் அனுபவத்தை படத்திற்காக கொடுத்தது ஒரு முக்கியமான விஷயம்.

ஜி வி பிரகாஷுடன் முதல் முறை வேலை பார்க்கிறேன். இசை, பின்னணி இசை அமைக்கும் வேலை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

இந்த படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகிறது. பண்டிகை நாட்களில் வெளியாகும் என்னுடைய முதல் படம் இது. படம் நன்றாக இருக்கும் என நம்புகிறோம், நன்றி” என்றார்.

படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது,

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. இது என் நண்பர்கள் மித்ரன் – ஜார்ஜ் உடனான ஒரு பயணம் தான். 10 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த படம். இதை முதலில் லக்ஷ்மன் சாரிடம் கொண்டு சென்றோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பளித்ததற்கு நன்றி. அதன் பின்பு தான் கார்த்தி சார் இணைந்தார். இந்த படத்தை மித்ரனின் ஒரு பார்வையாக தான் நான் பார்க்கிறேன்.

கார்த்தி எது செய்தாலும் இரண்டு முறை செய்யவேண்டும். டபுள் ஆக்ஷன் என்பதால். இதுவரை கார்த்தி நடித்த படங்களை விட இப்படத்தில் நன்றாக நடித்துள்ளார்.

கதிர் எங்களுக்கு சித்தப்பா மாதிரியான ஒருவர். அவர் ஒரு நல்ல வழிகாட்டி. இந்த படத்தின் சண்டை காட்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. இப்படம் ஒரு நல்ல ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்றார்.

மாஸ்டர் ரித்விக் பேசும்போது,

இது என்னுடைய இரண்டாவது படம். திரையரங்கில் வெளியாவதில் முதல் படம். அதிலும் தீபாவளிக்கு வெளியாவதில் ரொம்ப சந்தோஷம். கார்த்தி சாருடன் நடித்ததில் மிகப் பெரிய சந்தோஷம். இந்த படத்திற்காக என்னை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர் லக்ஷமன் குமார் சாருக்கு மிகப் பெரிய நன்றி. பி.எஸ்.மித்ரன் சாருக்கும் பெரிய நன்றி என்றார்.

நடிகை ரஜிஷா பேசும்போது,

மித்ரன் சாருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஏனென்றால், என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால், அந்த கதாபாத்திரத்தைப் பற்றி இப்போது கூற இயலாது. இதுபோன்ற வலிமையான கதாபாத்திரத்தை என்மீது நம்பிக்கை வைத்துக் கொடுத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பு கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் சாருக்கு நன்றி.

கார்த்தி சார் பொறுமை மற்றும் அன்பான நடிகராக இருந்தார். இதுபோன்ற கொடுக்கும் மனப்பான்மை கொண்ட நடிகருடன் நான் இதுவரை நடித்ததில்லை. என்னை அழகாக காட்டிய ஜார்ஜ் சாருக்கு நன்றி. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.

நடிகை ராஷி கண்ணா பேசும்போது,

இப்படத்தின் டிரைலர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். மித்ரன் மிகவும் சிறந்த இயக்குநர். மித்ரன் போன்ற இயக்குநர்கள் கையில் தமிழ் சினிமா பாதுகாப்பாக உள்ளது. பல கதாபாத்திரங்கள் அமைத்து, பெண்ணியம் மற்றும் சமூக கருத்துகளையும் பொறுப்புணர்வோடு கதை அமைப்பது கடினம். அப்படியொரு ஒரு கடினமாக கதையை மிகவும் சுலபமாகவும், எளிமையாகவும் கையாண்டிருக்கிறார் மித்ரன். அவர் இயக்கும் அனைத்துப் படங்களையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல் அவரது இயக்கத்தில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.

ராஷி கண்ணா

சங்கி பாண்டே சார் அருமையாக நடித்திருக்கிறார். அவரை திரையில் பார்க்க ஆசைப்படுகிறேன். ஜார்ஜ் எனக்குப் பிடித்த ஒளிப்பதிவாளர். இந்த படத்தில் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்.

கார்த்தி மிகவும் பாதுகாப்பான நடிகர். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ரஜிஷா நன்றாக நடித்திருக்கிறார். அவர் இன்னும் நிறைய தமிழ் படங்கள் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

சண்டைப் பயிற்சி இயக்குநர் திலிப் சுப்புராயன் பேசும்போது,

கார்த்தி சாருடன் நான் பணியாற்றிய அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அந்த வரிசையில் இப்படமும் ஹிட் தான்.

இப்படத்தின் ஆக்ஷனில் நிறைய வித்தியாசமான சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளோம்.

இந்த தீபாவளி சரவெடி தீபாவளியாக இருக்கும் என்றார்.

சங்கி பாண்டே பேசும்போது…

கார்த்தி சினிமாவிற்கான அவர் செய்யும் அர்ப்பணிப்பு நம்ப முடியாத ஒன்று. நான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததால் ஹீரோயின்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த படத்தை என் ஹிந்தி மொழியில் நீங்கள் வெளியிடவில்லை என்ற கேள்வி தான். இது ஒரு ‘பான்’ இந்தியன் படம் போன்று உள்ளது. நிச்சயம் அனைவரும் இப்படத்தை கொண்டாடுவார்கள் என்றார்.

நடிகை லைலா பேசும்போது,

கார்த்தி சாருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. கார்த்தி சாரின் குடும்பத்திலுள்ள அனைவருடனும் நடித்துவிட்டேன். என்னை மீண்டும் திரைத்துறைக்கு அழைத்து வந்த பி எஸ் மித்ரனுக்கு நன்றி” என்றார்.

சர்தார்

Karthi and Mithran speech at Sardar Trailer launch

மனிதன் – இயற்கை மோதல்.; பாலமான காவல் தெய்வம்.; ‘காந்தாரா’ பட ரிஷப் ஷெட்டி பேட்டி

மனிதன் – இயற்கை மோதல்.; பாலமான காவல் தெய்வம்.; ‘காந்தாரா’ பட ரிஷப் ஷெட்டி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’.

இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு அக்டோபர் 15 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வெளியிட்டிருக்கிறார்.

இன்று வெளியான ‘காந்தாரா’ தமிழக மக்களிடமும் நல்லதொரு வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினார்

அதன் போது அவர் பேசியதாவது….

“ காந்தாரா – அடர்ந்த வனத்தினூடாக இருக்கும் மர்மமான பகுதி. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கர்நாடகாவில் இது குறித்த நம்பிக்கை இருந்து வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடைபெறும் மோதலைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

நான் அடிப்படையில் விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து திரையுலகிற்கு அறிமுகமானேன். இந்த படத்தை என்னுடைய சொந்த ஊரில் தான் படப்பிடிப்பு நடத்தினேன்.

நான் சிறிய வயதில் என்னென்ன பார்த்து ரசித்தேனோ… அதனைத் தான் இந்த படத்தில் படமாக்கி இருக்கிறேன்.

அப்பொழுது இருந்த சமூகம்… மக்களின் நம்பிக்கை… நம்முடைய கலாச்சார வேர்கள் ஆகிய அனைத்தையும் முன்னிலைப்படுத்தி தான் இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும், அவர்கள் வாழ்கின்ற பகுதியில் காவல் தெய்வங்கள் என்றும், குலதெய்வங்களும் உண்டு. அது போன்ற காவல் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான் நாங்கள்.

காவல் தெய்வங்கள் தான், சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தது என எண்ணுகிறேன்.

‘காந்தாரா’ படத்தில் இடம்பெற்றிருப்பது போல் நான் சிறிய வயதில் தெய்வ வேடமிட்டு வருபவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் சமமாகவே கருதுவார்கள்.

இது தற்போது எம் மாதிரியான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதனை பற்றி விவரிப்பதை விட, இதனை மையப்படுத்தி சமூகத்தில் ஒரு நேர் நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்த இயலும் என்பதனை படைப்பாக்கி இருக்கிறேன்.

இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையை மையப்படுத்தி தான் இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.” என்றார்.

Kantara movie director cum hero Rishab shetty open talk

பஞ்சாயத்து யூனியன் தூய்மை பணிகளுக்காக வாகனம் வழங்கிய சூர்யாவின் 2D நிறுவனம்

பஞ்சாயத்து யூனியன் தூய்மை பணிகளுக்காக வாகனம் வழங்கிய சூர்யாவின் 2D நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் வழங்கினார்.

தமிழ் திரையுலகில் ‘ஜெய் பீம்’ போன்ற படைப்புகளை உருவாக்கி, சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை, நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஏற்படுத்தியது. படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக அளித்து வருகிறது.

சூர்யா

அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன வாகனத்தை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது. இந்த வாகனத்தை நடிகர் சூர்யா சார்பாக அவரது தந்தையான நடிகர் சிவக்குமார், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி மன்ற தலைவரான வள்ளி எட்டியப்பனிடம் வழங்கினார்.

இதன்போது 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் கானாத்தூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நடிகர் சூர்யா, திரையுலக நலன், மாணவ மாணவிகளின் கல்விச் செலவு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகவும் இயன்ற அளவில் உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

தன்னலமற்ற இவரது சமூக சேவையை திரையுலகினரும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகிறார்கள்.

சூர்யா

Surya’s 2D company donates a vehicle for cleanliness work

More Articles
Follows