திருச்சியில் தேர்வு எழுத வந்து ரசிகர்களிடம் சிக்கிய சாய்பல்லவி

திருச்சியில் தேர்வு எழுத வந்து ரசிகர்களிடம் சிக்கிய சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sai pallaviமலையாள சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறவர் நடிகை சாய் பல்லவி.

இவர் கடந்த 2016ம் ஆண்டு ஜார்ஜியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவராக (டாக்டராக) பணிபுரிய வேண்டுமென்றால் எப்எம்ஜிஇ தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

இதனையடுத்து தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேர்வை எழுத வந்துள்ளார் சாய்பல்லவி

நேற்று திருச்சியில் உள்ள எம்ஏஎம் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்திருக்கிறார்.

அப்போது அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துள்ளனர்.

அந்த செல்பிக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

GDP சரிவு.: டிரம்ப்க்கு அடுத்த இடத்தில் மோடி; காங். தலைவர்கள் கண்டனம்

GDP சரிவு.: டிரம்ப்க்கு அடுத்த இடத்தில் மோடி; காங். தலைவர்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trump modiGDP – ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிடிபி மைனஸ் 23. 9 விழுக்காடாகக் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக உற்பத்தி துறை மைனஸ் 39.3 விழுக்காடும், சுரங்கத்துறை மைனஸ் 23.3 விழுக்காடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

வேளாண்துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

இது கடந்த 45/50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சரிவு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது..

சுதந்திர இந்தியாவின் மிக மோசமான சரிவு. கடந்த மார்ச் மாதமே மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் ராகுல் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாவது..

உலகின் மிக வலிமையான இந்திய பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சரித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், பொருளாதார கொள்கையை தவறாக கையாள்வதில் பிரதமர் மோடி டிரம்ப்க்கு அடுத்த இடத்தில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மோகன் ராமன் மகளும் காமெடி நடிகையுமான வித்யூலேகா நிச்சயதார்த்தம்

மோகன் ராமன் மகளும் காமெடி நடிகையுமான வித்யூலேகா நிச்சயதார்த்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vidyullekha ramanகவுதம் மேனனின் இயக்கத்தில் ஜீவா நடித்த நீதானே என் பொன் வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்தவர் வித்யூலேகா.

இந்த படத்தின் மூலம் தான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஜில்லா, வீரம், தீயா வேலை செய்யணும் குமாரு, பவர் பாண்டி உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார் வித்யுலேகா.

இவரின் தந்தை மோகன் ராம் அவர்களும் பல படங்களில் நடித்துள்ளார்.

ஓவர் குண்டாக இருக்கும் வித்யுலேகா சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்திருந்தார்.

அப்போதே இவர் திருமணத்திற்கு தயாராகிறார் என்ற செய்திகள் வலம் வந்தன.

இந்த நிலையில் வித்யுலேகாவுக்கும் சஞ்சய் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

அரியர் ஸ்டூடண்ஸ் ஆல் பாஸ்..; ஆனா மார்க் எப்படி போடுறது..?

அரியர் ஸ்டூடண்ஸ் ஆல் பாஸ்..; ஆனா மார்க் எப்படி போடுறது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn college studentsதமிழக கல்லூரிகளில் அரியர் தேர்வுகளும் கட்டணம் செலுத்தி இருந்தாலோ அரியர் மாணவர்கள் தேர்ச்சி அடையச்செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு மாணவர்களிடையே பலத்த வரவேற்பு உருவானது. பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மதிப்பெண் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தள்ளது.

பல அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் வரவில்லையாம்.

அதாவது முந்தைய செமஸ்டர்களில் மாணவர்கள் பெற்ற எக்ஸ்டர்னல் (External) மற்றும் இண்டர்னல் (Internal) மதிப்பெண்கள் தேர்ச்சி வழங்கக்கூடிய அளவில் இல்லாததால் பாஸ் மார்க் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

முந்தைய செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ-யின் வழிகாட்டுதல் ஆகும்.

நாய்களுக்கு பட்டு வேட்டி சட்டை போட்டு ஓணம் கொண்டாடிய கீர்த்தி

நாய்களுக்கு பட்டு வேட்டி சட்டை போட்டு ஓணம் கொண்டாடிய கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதி கேரளாவில் திருவோணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கேரளாவை பூர்விகமாக கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் ஓணம் கொண்டாடி தன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார்.

இவர் தன வீட்டில் 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். அந்த நாய்களுக்கும் பட்டு வேட்டி பட்டு சட்டை அணிவித்து தன் குடும்பத்தாருடன் ஓணம் பண்டிகை கொண்டாடியதாக போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

keerthy suresh onam pics

யூடியுப் சேனலுக்கு ஆதார் அவசியம் செய்ய என மோடி-எடப்பாடிக்கு வனிதா வேண்டுகோள்..

யூடியுப் சேனலுக்கு ஆதார் அவசியம் செய்ய என மோடி-எடப்பாடிக்கு வனிதா வேண்டுகோள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanitha vijayakumarபிக்பாஸ் 3 நிகழ்ச்சி, ரியால்ட்டி ஷோக்கள்… யூடியுப் சேனல் என பிசியாகவே வலம் வருகிறார் நடிகை வனிதா.

சில மாதங்களுக்கு முன் பீட்டர் பாலை 3வது திருமணம் செய்து கொண்டு அந்த விவகாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

வனிதா என்ற தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

யாரோ சில மர்ம நபர்கள் வனிதா பெயரில் போலி யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இந்த தகவலை ரசிகர்கள் வனிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவர் யூடியூப் நிர்வாகத்திற்கு போலி சேனல் குறித்து புகார் அளித்துள்ளார்.

“இது போன்ற மோசடி சேனல்காரர்கள் மீது யூடியூப் நிர்வாகம் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரை வேண்டுமானாலும் சேனல் ஆரம்பிக்க அவர்கள் அனுமதிக்கிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்களின் பின்புலம், விவரங்கள் பற்றி சரிபார்ப்பதே இல்லை. யூடியூப் சேனல் ஆரம்பிப்பவர்களிடம் கட்டாயம் ஆதார் எண்ணை சமர்பிக்க சொல்ல வேண்டும்”, என தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புகாருடன் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரையும் வனிதா டேக் செய்துள்ளார்.

@vanithavijayku1 For your information, somebody start Duplicate youtube channel same like yours Chennal name (V V) and using your videos….

Ty …fraudulent channels must be taken up by @YouTubeIndia very seriously..they allow anyone to start or operate a channel…background and description is never checked..#Aadhaar must be asked with kyc completed.. @narendramodi @PMOIndia @CMOTamilNadu #cybersecurity #cybercrime

More Articles
Follows