தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீமராஜா படத்தில் சமந்தாவுடன் டூயட் பாடியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படம் இந்தாண்டு 2018 விநாயக சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இதனையடுத்து ரவிகுமார் இயக்கத்தில் ரகுல் பிரத்தி சிங்குடன் டூயட் பாடவுள்ளார் சிவகார்த்திகேயன்.
இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
மேலும் ஷங்கரின் 2.0 படத்தில் பணியாற்றிய நிறைய டெக்னீசியன்கள் இதில் பணியாற்றவுள்ளனர்.
இதனையடுத்து ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தில் முக்கிய ரோலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சமீபத்திய நாயகி சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.