பிரபாஸின் சாஹோ… ஹாலிவுட் டிசைனை காப்பியடித்து சிக்கிய பாகுபலி ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு இந்தியா முழுக்க பிரபலமாகி விட்டார் பிரபாஸ்.

எனவே இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

இந்நிலையில் நேற்று பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அடுத்த படமான ‘சாஹோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

ஆனால் அது ‘பிளேட் ரன்னர் 2049’ என்ற ஹாலிவுட் பட டிசைனில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற தகவலும் சில நிமிடங்களில் வெளியானது.

அந்த ஹாலிவுட் படத்தின் நாயகன் ரியான் கோஸ்லிங் அணிந்திருந்த நீளமான கோட், முகத்தின் பாதியை ஒரு கருப்புத் துணியால் மறைத்திருப்பது, பின்னணியில் பனி மூட்டம் என அப்படியே காப்பியடித்து ‘சாஹோ’ போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

வழக்கமாக இதுபோல் காப்பியடித்தால் பழைய பட போஸ்டரைத்தான் காப்பியடிப்பார்கள்.

ஆனால் ‘பிளேட் ரன்னர் 2049’ படம் இந்த மாதம் 6ம் தேதி தான் ரிலீஸ் ஆனது.

இதனால் பாகுபலி ஹீரோவையும் ‘சாஹோ’ இயக்குனரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் போஸ்டர் மட்டும்தான் காப்பியா? இல்லை படமும் அப்படிதானா? என கேட்டு வருகின்றனர்.

Saaho first look poster copied from Ryan Goslings Blade Runner

ஐடி ஆபிஸில் ஆஜராக உத்தரவு; எதையும் சந்திப்பேன் என விஷால் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷாலின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறையின் ஒரு பிரிவு (ஜிஎஸ்டி) அதிரடி சோதனை நடத்தியது.

சோதனையின் பின்னர் அதிகாரிகள் விஷாலுக்கு சம்மன் அனுப்பினர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

உங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம் :ரூ. 51 லட்சத்தை அரசு கணக்கில் செலுத்தியிருக்க வேண்டும்.

அப்படி செலுத்த தவறியதால் இந்த தொகையை இரண்டு அல்லது மூன்று தவணைகளில் உடனடியாக கட்ட வேண்டும்.

என்றாலும் இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக வருகிற 27ம் தேதி சென்னையிலுள்ள வருமானவரித்துறை அலுவலத்தில் ஆஜராக வேண்டும்.

அப்போது ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வரி தொடர்பான கணக்கை எடுத்து வர வேண்டும்.
என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஷால் பேசியதாவது…

மெர்சல் பட விவகாரத்தில் ஒரு சிலருக்கு எதிராக கருத்துக்களை கூறியிருந்தேன்.

அதற்காக இந்த சோதனை நடந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஒரு வேளை உள்நோக்கத்துடன் நடந்திருந்தால் அதை நான் சந்திப்பேன்.

நான் நேர்மையாக தொழில் செய்து முறையாக வரி கட்டுகிறேன். அதனால் எந்த பிரச்சினைகளையும் என்னால் எதிர்க்கொள்ள முடியும்.” என தெரிவித்தார் விஷால்.

இதனிடையில் அரசியல் கட்சித் தலைவர்கள் செய்யும் தவறுகளை எங்கள் விஷால் தட்டிக்கேட்டால் அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறீர்களா? என அவரது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் அடித்துள்ளனர்.

I am paying Tax regularly so I can face anything says Vishal

மீண்டும் நடிக்க வருவீங்களா? என கேட்டதற்கு சூடான சிம்பு-தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் உடன் ‘மயக்கம் என்ன’ மற்றும் சிம்பு உடன் ‘ஒஸ்தி’ ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டும் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யா.

இனி நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு பக்கம் போனார்.

அங்கு ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அமெரிக்காவில் எம்பிஏ படிக்க சென்று விட்டார்.

தற்போது அவர் படிப்பை முடித்துவிட்டதால் வழக்கம்போல மீண்டும நடிக்க வருவீங்களா? எப்போது என? அவரை ட்விட்டரில் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

இதனால் சூடான அந்த நாயகி,

“நான் நடிப்பதை விட்டு 5 வருடங்கள் ஆகிவிட்டது. மேலும் இனி நடிக்க வரமாட்டேன் என ‘பின்ட் டுவீட்’ செய்துவிட்டேன். அதை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.” என பதிலளித்துள்ளார்.

Dhanush Simbu movies heroine Richa Gangopadhyay latest updates

கௌதம் கார்த்திக்கை தொடர்ந்து அதர்வாவை இயக்கும் கண்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்து அண்மையில் வெளியான படம் ‘இவன் தந்திரன்’.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வெற்று வசூலை குவித்தது.

இப்படத்தை தொடர்ந்து கண்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அதர்வா நடிக்கவிருக்கிறாராம்.

இதன் சூட்டிங்கை ஜனவரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகீறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ பட இசையமைப்பாளர் ரதான் என்பவர்தான் இப்படத்திற்கு இசையமைக்கிறாராம்.

‘இமைக்கா நொடிகள்’, ‘செம போத ஆகாத’, ‘ஒத்தைக்கு ஒத்த’ ஆகிய படங்களில் தற்போது அதர்வா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2.0 இசை வெளியீடு; கமலுக்காக காத்திருக்கும் ரஜினி-ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘2.0’ பட இசை வெளியீடு வரும் 27ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியை லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டாக ரூ. 12 கோடி செலவில் நடத்தவுள்ளது.

இப்படத்தில் இடம்பெறவுள்ள ஒரு பாடலை ஏ.ஆர்.ரகுமான் லைவ்வாக பாடவிருக்கிறாராம்.

கிட்டதட்ட 12 ஆயிரம் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துள் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக பல லட்ச ரூபாய்க்கு டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளன.

இந்நிலையில் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

அவர் தரப்பில் இன்னும் முழுமையான சம்மதம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

ரஜினியின் நெருங்கிய நண்பர் கமல் என்பதாலும் ஷங்கரின் இந்தியன்2 படத்தில் கமல் நடிக்கவிருப்பதால் நிச்சயம் கலந்துக் கொள்வார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

இசை-ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்ள பிடிக்காது… விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசியதாவது…

இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது.

தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. எனக்கு பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது பிடிக்காது.

ஆனால் இந்த விழாவில் எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் வெளியே சில சர்ச்சைகள் இருந்தாலும் இங்கு வந்துள்ளேன். விக்ராந்த் என்னுடைய தம்பி, சந்தீப்பும் என்னுடைய தம்பி தான்.

தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நடித்துவருகிறார்.

அவருக்கு இரண்டு மொழிகளில் மார்கெட் இருப்பது நல்ல விஷயம். தயாரிப்பாளர்களுக்கு அது பெரிதும் உதவும்.
மெஹ்ரீனுடன் நான் “ தம்ப்ஸ் அப் “ விளம்பரத்தில் நடித்துள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அவர் தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார்.

அவரும் வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் இவர்கள் அனைவரையும் அடுத்த இடத்துக்கு அழைத்து செல்லும். இது என்னுடைய பட விழா போல் உள்ளது.

இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் இமான், தயாரிப்பாளர் ஆண்டனி என்று அனைவரும் இங்கு உள்ளார்கள்.

தயாரிப்பாளர்கள் அனைவரும் டிஜிட்டல் Platformல் படத்தை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாத்திக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு அவர்கள் தங்களுடைய படத்தை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட வேண்டும்.

சாட்டிலைட் உரிமையை இன்று அதிகமாக விற்பனையாவது இல்லை. அதனால் டிஜிட்டலில் இன்று படத்தை வெளியிட தயாராக உள்ள நிறுவனங்களை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அணுகி அதை பற்றிய தகவலை சேகரித்து பின் வெளியிடலாம்.

துப்பறிவாளன் மற்றும் மகளிர் மட்டும் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதை போல் தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தை அனுகி தங்களுடைய திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றார் விஷால்.

More Articles
Follows