தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதுநாள் இப்படத்தின் தலைப்பை எஸ் 3 என்றே இப்படக்குழுவினர் கூறி வந்தனர்.
வருகிற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினவிழா தினத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் புரமோஷனுக்காக சூர்யா இன்று முதல் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலான ‘எஸ் 3’ என்பது தமிழக அரசின் வரிவிலக்கை பெறுவதற்கு தடையாக இருப்பதால் இந்த படத்தின் டைட்டில் ‘சி 3’ என்று தற்போது மாற்றப்பட்டுள்ளது.
‘சிங்கம் 3’ என்பதன் சுருக்கம்தான் ‘சி 3’ என்பது குறிப்பிடத்தக்கது
சூர்யாவுடன் இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ரோபா சங்கர், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
