பிரிட்டன் வரை சீறிப்பாயும் சிங்கம்

பிரிட்டன் வரை சீறிப்பாயும் சிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singam suriyaசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கம் 3’ (‘எஸ் 3’) பட டீசர் சமீபத்தில் வெளியாகி குறுகிய காலத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இணையத்தில் சாதனை படைத்து வருகிறது.

விரைவில் இதன் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

படம் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி (அதாவது சரியாக இன்னும் 30 நாட்களில்) வெளியாகவிருக்கிறது.

எனவே, தற்போதே இதன் வியாபாரம் சீறி பாய்ந்து வருகிறது.

இதன் தமிழக ரிலீஸ் உரிமையை உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் ரிலீஸ் உரிமையை இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய விலையை கொடுத்து பிரபல நிறுவனமான ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது.

மீண்டும் ‘பிச்சைக்காரன்’ ஆகும் விஜய் ஆண்டனி?

மீண்டும் ‘பிச்சைக்காரன்’ ஆகும் விஜய் ஆண்டனி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antonyஇசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தனக்கு ஏற்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து, அதில் வெற்றி வாகை சூடி வருகிறார்.

இவர் நடித்துள்ள சைத்தான் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது ஜீவா ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் எமன் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸாகி தமிழ் மற்றும் தெலுங்கில் சக்கை போடு போட்ட பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் விரைவில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தையும் அதன் இயக்குனர் சசியே இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா ரேஞ்சுக்கு உயர்ந்த நயன்தாரா படம்

ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா ரேஞ்சுக்கு உயர்ந்த நயன்தாரா படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara 55ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் பிறந்த நாள் வரும்போது, அவர்களின் படங்களை தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்ய நினைக்கின்றனர்.

ஒருவேளை படங்கள் இல்லாவிட்டாலும், பட பாடல்கள், டீசர், பர்ஸ்ட் லுக், ட்ரைலர் என எதையாவது ரிலீஸ் செய்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

இது பெரும்பாலும் நடிகர்களுக்கே அமையும்.

தற்போது முதன்முறையாக நயன்தாரா படத்திற்கும் இதுபோன்ற ஏற்பாட்டை செய்துள்ளார் படத் தயாரிப்பாளர்.

மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 55வது படம் உருவாகிவருகிறது.

இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் 17ஆம் தேதி தொடங்கும்போது நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட இருக்கிறார்களாம்.

இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் தன் முதல் படைப்பாக தயாரிக்கிறார்.

விஜய் விழாவில் வானதி சீனிவாசன்; போஸ்டர் போட்ட ரசிகர்கள்

விஜய் விழாவில் வானதி சீனிவாசன்; போஸ்டர் போட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay bannerகறுப்பு பணத்தை ஒழிக்க, ரூ. 500, 1000 நோட்டுக்களை செல்லாது என மோடி அறிவித்தார்.

இதனை நடிகர் விஜய் வரவேற்றாலும், மக்கள் கஷ்டப்படுவது வேதனையாக உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பா.ஜ. கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன், கஷ்டப்படும் ஏழைகளுக்கு விஜய் உதவலாமே என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் சார்பாக அவரது ரசிகர்கள், விஜய்யின் பிறந்த நாள் விழாவில் வானதி சீனிவாசன் கலந்து கொண்ட படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த ரத்த தான முகாம் விழாவானது கடந்த ஜீன் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனை மாற்றப் போகும் பொன்ராம்

சிவகார்த்திகேயனை மாற்றப் போகும் பொன்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan ponramசிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ரெமோ.

இப்படத்திற்கு முன்பே சிவகார்த்திகேயனின் கேரியரில் பெரும் ஹிட்டடித்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன்.

இந்த இரு படங்களையும் இயக்கியவர் பொன்ராம்.

தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் சிவா, அடுத்து பொன்ராம் இயக்கத்தில்தான் நடிக்கவிருக்கிறார்.

முந்தைய படங்களை போல் இல்லாமல் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வேறொரு பரிமாணத்தை கொடுக்கப் போகிறாராம் பொன்ராம்.

அதாவது சரித்திர கால பின்னணியில் இப்படத்தை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் மாறுபட்ட கதையை (Alien Fantasy) தேர்ந்தெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘சிம்புவை முதல்ல பாராட்டியவரே தனுஷ்தான்…’ – கௌதம் மேனன்

‘சிம்புவை முதல்ல பாராட்டியவரே தனுஷ்தான்…’ – கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu dhanush gautham menonஒரே நேரத்தில் சிம்பு-தனுஷ் இருவரையும் இயக்குபவர் கௌதம் மேனன்.

சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வருகிறார்.

இவர்கள் இருவரையும் இயக்கி வருவது குறித்து கௌதம் தன் சமீபத்திய பேட்டியில் கூறும்போது…

‘அச்சம் என்பது மடமையடா’ ட்ரைலரைப் பார்த்துட்டு, ‘சிம்பு நல்லா பண்ணியிருக்கார் ப்ரோ. ட்ரைலர் சூப்பர்ன்னு’ முதல்ல மெசேஜ் பண்ணினதே தனுஷ்தான்.

ஃபைட்டுக்கு மட்டும் தனுஷ் ரிகர்சல் பார்ப்பார். மத்தபடி வேற எல்லாம் ஒரே முறைதான்.

என்னை நோக்கி பாயும் தோட்டா படமே தனுஷ் ஸ்பெஷல்தான்.’’

இவ்வாறு தெரிவித்துள்ளார் கௌதம் மேனன்.

More Articles
Follows