எஜமான்-சிங்காரவேலன்-சின்னக்கவுண்டர் படங்களின் 2ஆம் பாகம் எடுக்கும் ஆர்.வி. உதயகுமார்

எஜமான்-சிங்காரவேலன்-சின்னக்கவுண்டர் படங்களின் 2ஆம் பாகம் எடுக்கும் ஆர்.வி. உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RV Udhyakumar plans to make sequels of Ejamaan Singaravelan and Chinna Gounder movie

கலைஞர்கள் எதிர்பார்ப்பது தனக்கான அங்கீகாரத்தை தான். அப்படிப்பட்ட அங்கீகாரம் தான் அவர்களுக்கு விருதுகளாக வழங்கப்படுகின்றன.

அந்தவகையில் 2௦17ஆம் வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோஸில் நடைபெற்றது.

பாஸ்கர் மீடியா, ஆர்கேவி பிலிம் இன்ஸ்டிடியூட் இந்தியன் கிளாசிகல் ஆர்ட்ஸ் & கல்சுரல் ட்ரஸ்ட் மற்றும் ஆரோக்கியம் இனிப்பு துளசி சாறு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த விழாவினை சிறப்பாக நடத்தின.

இவ்விழாவில் 2௦17ஆம் வருடத்திற்கான ரைசிங் ஸ்டார் விருதுகளை இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமாரும் பேரரசும் வழங்கி சிறப்பித்தார்கள்.

மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருமதி கோ.கோமதி IRS அவர்கள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார். ஜாகுவார் தங்கம் பவர் ஸ்டார் மற்றும் தமிழ் நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் தலைவர் D.S.R சுபாஷ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

சிறந்த அறிமுக நடிகராக நந்தன் (பள்ளிப்பருவத்திலே), சிறந்த அறிமுக நடிகையாக அதிதி பாலன் (அருவி), சிறந்த வில்லனாக டேனியல் பாலாஜி (இப்படை வெல்லும்), சிறந்த இயக்குனராக அருண்பிரபு புருஷோத்தமன் (அருவி), சிறந்த கதாசிரியராக கோபி நயினார் (அறம்) சிறந்த அறிமுக இயக்குனராக ஜிப்ஸி ராஜ்குமார் (அய்யனார் வீதி), சிறந்த இசையமைப்பாளராக ஷாம் (விக்ரம் வேதா), சிறந்த மக்கள் தொடர்பாளராக செல்வரகு, இந்தியன் கல்ச்சுரல் அகடமி ஆசிரியர் மற்றும் நிறுவனர் மேரி மேக் மோகன் பால், ,அறிமுக நாயகன் லாபி பால் ஆகியோர் உட்பட பல பிரிவுகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது…

“நீண்ட நாட்களுக்கு பிறகு விரைவில் படங்களை இயக்க முடிவு செய்துள்ளேன்.

நான் இயக்கவுள்ள படங்களுக்கு டைட்டில் பிரச்சனை வராது.

எஜமான்-2, சிங்காரவேலன்-2, சின்னக்கவுண்டர் 2 என டைட்டில்களை வைத்து விடுவேன்” என்றார்.

ரஜினிக்கு எஜமான், கமலுக்கு சிங்காரவேலன், விஜயகாந்த்துக்கு சின்னக் கவுண்டர் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்தான் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

RV Udhyakumar plans to make sequels of Ejamaan Singaravelan and Chinna Gounder movie

பாண்டிராஜ் படத்திற்காக இணையும் சிவகார்த்திகேயன்-சூரி-சதீஷ்

பாண்டிராஜ் படத்திற்காக இணையும் சிவகார்த்திகேயன்-சூரி-சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan Soori Sathish joins hands with Director Pandirajடிவியில் ஜொலித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை தன் மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் பாண்டிராஜ்.

அதன்பின்னர் சிவகார்த்திகேயன் தன் கேரியரில் படு வேகமாக முன்னேறி இன்று முன்னணி நாயகர்கள் வரிசையில் இடம் பிடித்துவிட்டார்.

இந்நிலையில் பாண்டிராஜின் பசங்க புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்காக மீண்டும் இணையவுள்ளார்.

இவருடன் சிவாவின் நெருங்கிய நண்பர்களான சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் இணையவுள்ளனர்.

ஒரு புதிய படத்தின் அறிவிப்பை இந்த மூவரும் வெளியிடவுள்ளனர்.

இன்று மாலை 5,30 மணிக்கு இந்த தகவல் வெளியாகவுள்ளது.

Sivakarthikeyan Soori Sathish joins hands with Director Pandiraj

siva soori sathish

அரசியல் சாக்கடை ரஜினி வருகையால் சுத்தமாகும்.: ராகவா லாரன்ஸ்

அரசியல் சாக்கடை ரஜினி வருகையால் சுத்தமாகும்.: ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sure Rajinikanth will became Chief Minister of TN says Actor Lawranceசில தினங்களுக்கு முன் மதுரை மாவட்ட ரசிகர்களை சந்திக்கும்போது.. உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போட ஆசை. ஆனால், ராகவேந்திரா மண்டபம் சைவ மண்டபம் என்பதால் முடியவில்லை.

எனவே விரைவில் கிடா விருந்தளிப்பேன் என பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் ரஜினி செய்வதற்கு முன்பே, அவரது மதுரை ரசிகர்கள் கிடா வெட்டி விருந்து வைத்துவிட்டனர்.

மதுரை அழகர் கோயில் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு, பொதுமக்களுக்கு ஆட்டுக்கறி விருந்தளித்து விழாவை நடத்தியுள்ளனர்.

பொது இடத்தில் கிடாக்களை மொத்தமாக வெட்டுவதை தவிர்க்கவும் என்று பீட்டா அமைப்பு கேட்டுக் கொண்டதால், ஆட்டுக்கறி கடையில் இருந்து கறி வாங்கி சமைத்து விருந்து வைத்துள்ளனர்.

இந்த விழாவை தொடங்கி வைக்க வந்த ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது…

“கார் துடைத்துக் கொண்டிருந்த என்னை நடிகராக்கி அழகு பார்த்தவர் ரஜினிகாந்த்.

எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அவர். மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால், எனது மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் குத்திக் கொண்டே இருக்கும் என்று ரஜினி சார் கூறியதைப் போல், என்னை வாழவைத்த ரஜினி அவர்களுக்கு, மக்களை பாதுகாக்க செல்லும் போது, அவருக்கு ஆதரவாக நான் நிற்கவில்லை என்றால், என் மனசாட்சி என்னை வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ விடாது”

ரஜினி அவர்களின் ஆன்மீக அரசியலில், நான் அவரின் காவலனாக இருப்பேன்.

கட்சி, சின்னம், கொள்கை எதுவும் அறிவிக்காமல் இருக்கும் போதே இவ்வளவு பரபரப்பு என்றால், அவற்றையெல்லாம் ரஜினி அறிவித்த பிறகு தான் உண்மையில் அரசியல்வாதிகளுக்கு தலை சுத்தப் போகிறது.

நடிகர்களை மக்கள் ஏற்கிறார்களா? இல்லையா? என்பதை தேர்தலுக்கு பின்பு தெரியும்.

தற்போது அரசியலை சாக்கடை என்கிறார்கள். ரஜினி வந்ததும் அரசியல் சுத்தமாகும். அவர் வந்தால் கோட்டையை பிடிப்பது உறுதி என்றார்.

Sure Rajinikanth will became Chief Minister of TN says Actor Lawrance

மஹாவீர் கர்ணா என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும் விக்ரம்

மஹாவீர் கர்ணா என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram signed Hindi film Mahavir Karna directed by RS Vimalவாலு பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படம் இந்த வாரம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் மற்றும் ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இதனையடுத்து புதிய ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கிலும் தயாராகும் என கூறப்படுகிறது.

ரூ. 300 கோடியில் தயாராகவுள்ள இப்படத்தை ஆர்.எஸ். விமல் என்பவர் இயக்குகிறார்.

இவர் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘எந்நு நின்டெ மொய்தீன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யுனைடெட் ஃபிலிம் கிங்டம் தயாரிக்கிறது.

Vikram signed Hindi film Mahavir Karna directed by RS Vimal

vikram hindi

காதலர் தினத்தை குறிவைக்கும் ஜீவா-நிக்கி கல்ராணியின் கீ

காதலர் தினத்தை குறிவைக்கும் ஜீவா-நிக்கி கல்ராணியின் கீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva and Nikki Galrani starring Kee movie release updatesபுதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்துள்ள படம் ‘கீ’.

இவர்களுடன் அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

தற்போது இதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே அடுத்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தை பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Jiiva and Nikki Galrani starring Kee movie release updates

kee feb 9

அதிக விலைக்கு விற்பனையானது தானா சேர்ந்த கூட்டம் படம்

அதிக விலைக்கு விற்பனையானது தானா சேர்ந்த கூட்டம் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Thaana Serndha Kootam trade updates

சி3 படத்திற்கு பிறகு சூர்யா நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், நவரச நாயகன் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வருகிறது.

ரிலீசுக்கு 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை 86 கோடிக்கு ரூபாய்க்கு விலைபோயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேங் என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் வெளியாகிறது.

Suriya Thaana Serndha Kootam trade updates

More Articles
Follows