பான் இந்தியா படத்தில் தூய்மைப் பணிப்பெண்ணாக ரோகிணி

பான் இந்தியா படத்தில் தூய்மைப் பணிப்பெண்ணாக ரோகிணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி இருக்கிறார்.

மேலும், அவரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

விட்னஸ்

தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’, ஒரு அழுத்தமான, அதே சமயம் உணர்வுபூர்வமான திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது.

“தி பீப்பிள் மீடியா பேக்டரி” சார்பாக டி.ஜி.விஷ்வபிரசாத். தயாரிக்க, விவேக் குச்சிபோட்லா. இணைந்து தயாரித்துள்ளார்.

ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்க, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

விட்னஸ்

இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

பிலோமின் ராஜ் எடிட்டராகவும், ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பாடலாசிரியர் கபிலன் பாடல்களை எழுதியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

விட்னஸ்

Rohini starrer Pan India movie Witness

ஐந்து மொழிகளில் வெளியாகும் விட்னஸ்.
#Witness

▶️youtu.be/8l-RpIexc0E

#WitnessTrailer

@Shraddhasrinath @Rohinimolleti
@vishwaprasadtg @vivekkuchibotla @peoplemediafcy @negativespace04 @nuttypillai @Ramesharchi @philoedit @kavikabilan2 @SonyLIV
@venupro @pro_guna

‘இரண்டாம் திருமணம்’ பற்றி மனம் திறந்த மீனா

‘இரண்டாம் திருமணம்’ பற்றி மனம் திறந்த மீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாக மீனா மறுமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வலம் வருகின்றன.

அவரது கணவரின் நண்பரே அவரது வருங்கால மாப்பிள்ளை என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த வதந்திகளுக்கு மீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கணவரின் மறைவு வேதனையில் இருந்து இன்னும் மீளவில்லை என்று அவர் கூறினார். தனியுரிமையை மதிக்கும்படி அனைவரையும் அவர் வலியுறுத்தினார்.

மீனாவுடைய இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்.; நடிகை மீனா உருக்கமான பதிவு

‘இந்தியன் 2’ படத்தின் முக்கியமான காட்சியை படமாக்கும் இயக்குனர் ஷங்கர்

‘இந்தியன் 2’ படத்தின் முக்கியமான காட்சியை படமாக்கும் இயக்குனர் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த ஷெட்யூல் டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் படத்தின் படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் .

“அனைத்து ஷங்கர் படங்களைப் போலவே, இதுவும் ஏராளமான விஷுவல் காட்சிகளை கொண்டுள்ளது.

எந்திரன், 2.0 போன்று VFX இதில் அதிகம் இல்லாவிட்டாலும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு சிறந்த எஃப்பேக்ட்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது .

நாடு முழுவதும் தசரா அல்லது 2023 தீபாவளிக்கு படம் வெளியாக உள்ளது.

‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் இணைந்த ரஜினியின் ‘தர்பார்’ பட நடிகர்

ஒரு பாடலுக்கு 15 கோடி செலவு செய்த ‘RC 15’ படக்குழு..!

ஒரு பாடலுக்கு 15 கோடி செலவு செய்த ‘RC 15’ படக்குழு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘RC 15’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படக்குழு நியூசிலாந்து சென்றது முக்கியமான காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை அழகான இடங்களில் படமாக்கத் திட்டமிட்டிருந்திருக்கிறார்கள்.

இந்தப் பாடலுக்காக தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் செலவழித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ராம் சரண் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தான் சமுக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

‘RC 15’ movie team spent 15 crores to one particular song

விஜய்யின் ‘தளபதி 67’ பூஜையுடன் இந்த தேதியில் ஆரம்பமாகிறதா ?

விஜய்யின் ‘தளபதி 67’ பூஜையுடன் இந்த தேதியில் ஆரம்பமாகிறதா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தளபதி 67’ படத்தில் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கப் போகிறார் என்ற செய்தி நமக்கு தெரிந்ததே .

சுமார் 240 கோடி பட்ஜெட்டில் இப்படம் ஆரம்பிக்கபட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் பூஜை டிசம்பர் 5 ஆம் தேதி சிறப்பு ப்ரோமோ வீடியோவுடன் நடக்க இருக்கிறது .

இந்த சுவாரசியமான செய்தி தளபதி ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் பயோபிக் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

முன்னாள் முதல்வர் பயோபிக் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2013 முதல் 2018 வரை கர்நாடக மாநில முதல்வராக இருந்தவர் சித்தராமையா.

இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்,

இவரது வாழ்க்கையை (BIOPIC) திரைப்படம் எடுக்கவிருக்கின்றனர்.

பான் இந்தியா படபாக உருவாகும் இந்த படத்தை கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவராஜ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறாராம்.

இந்த நிலையில் சித்தராமையா கேரக்டரில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கத் அமைச்சர் முயற்சித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

சித்தராமையா

Vijay Sethupathi will be in Ex CM Siddaramaiahs biopic

More Articles
Follows