மனோபாலாவிடம் இருந்த புகைப்படங்களை வைத்தே கண்காட்சி நடத்தனும் – ரோகிணி

மனோபாலாவிடம் இருந்த புகைப்படங்களை வைத்தே கண்காட்சி நடத்தனும் – ரோகிணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி பேசும்போது…

“மனோபாலா ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட.. அவரிடம் எந்த விஷயம் குறித்து கேட்டாலும் அதற்கு ஒரு புகைப்படத்தை அனுப்பி வைத்து அது குறித்து பல விவரங்களை கூறுவார். அவரிடம் இருந்த புகைப்படங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்த வேண்டும். அது அவருக்கு பெருமை சேர்த்த மாதிரி இருக்கும்” என்று கூறினார்.

Rohini asks to hold an exhibition with the photographs of Manobala

பிடித்தமானவர்கள் இறப்பது அதிர்ச்சியளிக்கிறது.; மூவர் நினைவேந்தலில் டெல்லி கணேஷ் உருக்கம்

பிடித்தமானவர்கள் இறப்பது அதிர்ச்சியளிக்கிறது.; மூவர் நினைவேந்தலில் டெல்லி கணேஷ் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டில் நம்மை விட்டு மறைந்த நடிகர்கள் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் மறைவு தமிழ் திரையுலகிவிற்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது.

கடந்த 40 வருடங்களாக தமிழ் திரையுலகில் நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் தங்களது பங்களிப்பை அளித்து வந்த அவர்களது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (14.05.23) மாலை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தியாகராய நகர்
சர்.பி.டி.தியாகராய மஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன், தமிழ் தயாரிப்பாளார்கள் சங்க செயலாளர் ராதா கிருஷ்ணன், தயாரிப்பாளர் டி.சிவா, பெப்சி துணை தலைவர் சுவாமிநாதன், திரப்பட கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ், நடிகை சச்சு, ரோஹிணி, தேவயானி, நடிகர் சரவணன், பசுபதி, அஜய் ரத்னம், மன்சூர் அலிகான், பொன்வண்ணன், அனுமோகன், வையாபுரி, டெல்லி கணேஷ், உதயா, விக்னேஷ், எம்.ஏ.பிரகாஷ், தளபதி தினேஷ், ஶ்ரீமன், வாசு டேவன், ஹேமசந்திரன், சவுந்தர்ராஜா, இயக்குனர் ஆர்.வி உதயகுமார், லியாகத் அலிகான் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலர் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு இந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் அவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் பேசிய பலரும் இந்த மூவருடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் டெல்லி கணேஷ் பேசும்போது..

“மனோபாலா நடிகர் ஆவதற்கு முன்பிருந்தே எனக்கு பழக்கமானவர். இப்போது கூட கைநிறைய படங்களை வைத்திருந்தார். அதேபோல மயில்சாமி ஒரு தைரியமான ஆள். நானும் மயில்சாமியும் சுந்தர்.சி இயக்கிய லண்டன் படத்தில் இணைந்து நடித்தபோது அவ்வளவு சந்தோசமான அனுபவங்களாக இருந்தது.

டிபி கஜேந்திரன் நல்ல காமெடி படங்களை கொடுத்துள்ளார். அவர் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு முன்னாடியே இப்படி நமக்கு பிடித்தமானவர்கள் இறப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இவர்கள் இன்னும் பத்து வருடம் இருந்திருக்கலாம். அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.

நடிகை சச்சு பேசும்போது,

‘இந்த வருடம் பிறந்ததிலிருந்து அடுத்தடுத்து இப்படி மூன்று துயர செய்திகள் வெளியாவது வேதனை அளிக்கிறது. மனோபாலா இயக்கிய டிவி சீரியலில் நான் நடித்திருக்கிறேன். நடிகர் சங்க கட்டட விஷயத்தில் நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவோம். சீக்கிரம் கட்டடத்தை முடிக்க வேண்டும் என்று அடிக்கடி மனோபாலா சொல்லிகொண்டு இருப்பார்” என்று கூறினார்.

இயக்குனர் லியாகத் அலிகான் பேசும்போது…

“கோடி ரசிகர்களை சிரிக்க வைத்த இவர்கள் மண்ணில் வாழ மாட்டோம் உங்கள் மனதில் வாழ்வோம் என்று கூறி நம்மை அழ வைத்துவிட்டு சென்று விட்டனர். மயில்சாமி சமூக அக்கறை கொண்ட துணிச்சலான நடிகர். அதேபோல கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல டி.பி.கஜேந்திரன் வெகு திறமைசாலி..

மனோபாலா யாரிடமும் ஈகோ பார்காத மனிதர். அவரது படத்திற்கு ஒருமுறை கதாசிரியர் கலைமணி ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்தும் அளவுக்கு வசனங்களை எழுதிக்கொடுத்து அனுப்பினார் ஆனால் மதியத்திற்குள்ளேயே அவற்றை படமாக்கிவிட்டு அடுத்த காட்சிகளை கேட்டு ஆள் அனுப்பினார் மனோபாலா. அந்த அளவிற்கு வேகமும் அதேசமயம் தரமும் கொண்ட படங்களை இயக்கியவர் மனோபாலா” என்று கூறினார்.

It’s shocking when favorites die – Delhi Ganesh

ஷாருக்கானுடன் டேட்டிங் செய்து அற்புதமாக இருந்தது.; திருமணமான விஜய் பட நடிகை ஓபன் டாக்

ஷாருக்கானுடன் டேட்டிங் செய்து அற்புதமாக இருந்தது.; திருமணமான விஜய் பட நடிகை ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா.

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் பாலிவுட்டில் நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.

கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜொனாஸை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடி வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர்.

பிரியங்கா சோப்ரா தற்போது நடித்திருக்கும் ‘லவ் அகைன்’ என்ற திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

இப்படத்தின் பெயர் ‘லவ் அகைன்’ என்பதால், பாலிவுட்டில் தனது பழைய நண்பர்களைப் பற்றி பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

நிக் ஜோன்ஸை சந்திப்பதற்கு முன்பு அவர் ஷாகித் கபூர், ஹர்மான் பவேஜா, ஷாருக்கான், ஆகியோருடன் காதலில் இருந்த காலத்தில் டேட்டிங் செய்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

நான் டேட்டிங் செய்த அனைவருமே அற்புதமானவர்கள்.

நான் எப்படியெல்லாம் எங்கள் நட்பு இருக்க வேண்டும் என்பதை நினைத்தேனோ அப்படியெல்லாம் இருந்தோம் என்று அவர் கூறினார்.

மேலும், பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ரா

The people I’ve dated have been amazing.; Vijay Film Actress Open Talk

நடிகை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு.; ‘ஃபர்ஹானா’ பதட்டத்தில் ஐஸ்வர்யா.?!

நடிகை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு.; ‘ஃபர்ஹானா’ பதட்டத்தில் ஐஸ்வர்யா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 12ஆம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ஃபர்ஹானா திரைப்படம் வெளியானது.

இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்க ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்க ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் முக்கிய வேடங்களில் அனுமோள், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா கட்டி செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அண்மையில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானதை தொடர்ந்து ஃபர்ஹானா திரைப்படமும் இஸ்லாமியர் சர்ச்சைக்குள்ளான படமா என ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால் இது இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றிய படம் அல்ல என்றும் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ணின் போராட்டங்கள் பற்றிய படம் என பலமுறை படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு தமிழக அரசு சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மேலும் பர்கானா திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் சென்னை பிரசாத் லேப் வளாகத்தினுள் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Police security at the farhana actress’s house

‘இந்தியன் 2’ அப்டேட் : எடிட்டிங்கில் ஷங்கர்.. டப்பிங்கில் கமல்ஹாசன்

‘இந்தியன் 2’ அப்டேட் : எடிட்டிங்கில் ஷங்கர்.. டப்பிங்கில் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது.

இப்படத்திற்கான இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது தற்போது சென்னையில் தொடங்க உள்ளது.

இயக்குனர் ஷங்கர், ‘இந்தியன் 2’ படத்தின் எடிட்டிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் தனக்கான போர்ஷனுக்கான டப்பிங்கை கமல்ஹாசன் முடித்துள்ளார்.

இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், ‘இந்தியன்2’ படத்தை முடித்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் அடுத்து ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kamal dubs for his portions in indian 2

அவர்கள் அறிவில் குறைந்தவர்கள் இல்லை.; ‘தி கேரளா ஸ்டோரி’ & “ஃபர்ஹானா’ படங்கள் ஓப்பீடு? அமீர் ஆவேசம்

அவர்கள் அறிவில் குறைந்தவர்கள் இல்லை.; ‘தி கேரளா ஸ்டோரி’ & “ஃபர்ஹானா’ படங்கள் ஓப்பீடு? அமீர் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மே 12 ஆம் தேதி வெளியான ஃபர்ஹானா’ படம் குறித்து நடிகரும் இயக்குனர் அமீர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது…

மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,

செல்வி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள “ஃபர்ஹானா” திரைப்படம் குறித்து ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் அத்திரைப்படத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் உருவாகி உள்ளது.

மேலும் இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ.? என்கிற நோக்கில் அவரது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் செய்தி உண்மையிலேயே எனக்கு வருத்தம் தருவதாக இருக்கிறது.

இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தி மத வேற்றுமையை உருவாக்கும் ஒரே நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தையும், “ஃபர்ஹானா” திரைப்படத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கும் அளவிற்கு தமிழர்களும் இஸ்லாமியர்களும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை. இஸ்லாமியர்களை பற்றி இயக்குனரும், தயாரிப்பு நிறுவனமும் அவர்கள் அறிந்து வைத்திருக்கும் விதத்திலேயே ஃபர்ஹானா திரைப்படத்தை எடுத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும் என்பதாலும், அவருக்கு இஸ்லாமியர்கள் மீது அன்பும், மரியாதையும் இருப்பதை நான் உணர்ந்திருப்பதாலும், இஸ்லாமிய கோட்பாடுகளை இழிவுபடுத்தும் உள் நோக்கோடு இத்திரைப்படத்தில் நடித்திருப்பார் என்பதையும், தீய நோக்கத்தோடு இத் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் எடுத்திருக்கும் என்பதையும் நான் நம்பவில்லை.

எனவே இஸ்லாமிய கதாபாத்திரங்கள் உள்ள எல்லாத் திரைப்படத்துக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை ஒரு சகிப்பின்மை கொண்ட சமூகமாக சித்தரிக்க வேண்டாம் என்று இந்த அறிக்கையின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மதவேற்றுமையை கடந்து ஒரு அமைதிப் பூங்காவாகவே எப்போதும் திகழ்கிறது. இனியும் அப்படியே தொடரும் என்ற நம்பிக்கையோடு ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் காவல்துறையின் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
அமீர்

சென்னை
14th MAY 2023

Don’t compare The Kerala story and Farhana says Ameer

More Articles
Follows