காடுவெட்டி குரு-வின் வாழ்க்கை சினிமாவாகிறது..; இவர்தான் ஹீரோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலங்களின் வாழ்க்கையை திரைப்படமாக்குவது வழக்கமான ஒன்று தான்.

ஆனால் இது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு… தி ஐயன் லேடி, குயின் மற்றும் ‘தலைவி’ ஆகிய பெயர்களில் படமாகிறது.

இதில் கௌதம் மேனன் இயக்கிய குயின் வெப் சீரிஸ் ரிலீசாகிவிட்டது.

அதுபோல் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கிரிக்கெட் வீரர் எம்எஸ். தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களும் வெளியாகியது.

இந்த நிலையில் மறைந்த பாமக சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் வாழ்க்கையும் சினிமாவாகிறதாம்.

இதில் காடுவெட்டி குரு கேரக்டரில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்க, சாதிக் இசையமைக்கிறார்.

RK Suresh will be lead in Kaaduvetti Guru biopic

மணிரத்னத்துடன் 9 டாப் ஹீரோக்கள் 9 இயக்குனர்கள் இணையும் ‘நவரசா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா லாக் டவுன் முடிந்து பல தொழிலுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டி இருந்தாலும் சினிமா சூட்டிங் மற்றும் தியேட்டர்களுக்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை.

இதனையடுத்து முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் கவனம் ஓடிடி தளத்திற்கும் வெப் சீரிஸ் பக்கத்திற்கும் திரும்பியுள்ளது.

இந்த நிலையில் பிரம்மாண்டமான முறையில் 9 நடிகர்களை வைத்து 9 இயக்குநர்கள் வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவிருக்கிறார்களாம்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்க உள்ள இந்த வெப் சீரிஸை 9 பிரபல இயக்குநர்கள் இயக்க உள்ளனர்.

கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி, கெளதம் மேனன், கார்த்திக் நரேன், சித்தார்த், சுதா கொங்கரா, ஜெயந்திரா ஆகியோர் இயக்கவுள்ளனர்.

தயாரிப்பாளர் மணிரத்னமும் ஒரு எபிசோட்டை இயக்க உள்ளாராம்.

முன்னணி ஹீரோக்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

‘180’ படத்தை இயக்கிய ஜெயந்திரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

அரவிந்த்சாமி இயக்க உள்ள தொடரில் சித்தார்த் நடிக்கிறார்.

தமிழில் விக்ரமை வைத்து ‘டேவிட்’, துல்கர் சல்மானை வைத்து ‘சோலோ’ படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார் விஜய் சேதுபதியை இயக்க உள்ளார்.

‘சூரரைப் போற்று’ புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளார்.

மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த தொடர்களை அமேசான் பிரைமில் வெளியிடவுள்ளார் மணிரத்னம்.

Maniratnam Suriya Vijay Sethupathi GV Prakash to team up for Web Series

பிரச்சினைக்கு தீ மூட்டுவதில் உள் நோக்கம்; கந்த சஷ்டி கவசம் விவகாரம் பற்றி ராஜ்கிரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாகவே கந்தர் சஷ்டி கவசம் பற்றிய சர்ச்சை வீடியோவை பாத்திருப்போம். அதற்கு ஆதரவும் முக்கியமாக பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகரும் இயக்குனருமான ராஜ்கிரண் தெரிவித்துள்ளதாவது…

ஒவ்வொரு மனிதனுக்கும்,
எந்த வகையிலேனும்,
தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள
உரிமை இருக்கிறது.

அது, அவனது சுதந்திரம்.

முருகப்பெருமானை நம்புவோர்க்கு,
“கந்தர் சஷ்டி கவசம்” என்பது,
“ஒரு பாதுகாப்பு அரண்”.

இதை ஆழ்ந்து படித்தால்,
அறிவியல்பூர்வமான,
மனோதத்துவரீதியான
ஆத்ம பலன்கள் இருக்கின்றன…

இறைவனை நம்பாதோர்க்கு,
“நம்பாமை” என்பது,
அவர்களின் சுதந்திரம்.

நம்பிக்கை கொண்டோர்க்கு,
“நம்புதல்” என்பது,
அவர்களின் சுதந்திரம்.

இதில், அவரவர் எல்லையோடு
அவரவர்கள் நின்று கொள்வது தான்,
மேன்மையானது.

தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள்
புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,
மிகவும் கீழ்மையானது…

இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில்,
நோயோடும், நோய் பயத்தோடும்,
பொருளாதார சீர்கேட்டோடும்,
உண்ண உணவின்றி
கோடிக்கணக்கான நம் மக்கள்
தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்,

இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில்,
யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம்
இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

என ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

Rajkiran talks about Kanda Shashti Kavacham controversy

ரஜினி கட்சி அறிவிப்பு எப்போது..?; கராத்தே தியாகராஜன் சொன்ன ரகசியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 25 வருடங்களாக நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசாதவர்களே இல்லை.

90ஸ் கிட்ஸ் எனப்படும் 1990களில் பிறந்த குழந்தைகள் கூட தற்போது ரஜினியை கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

இதை கூட ரஜினி… இப்போ உள்ள பசங்க செம டேலண்ட்டாக இருங்காங்க என கூறி வருகிறாராம்.

ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் முதன்முறையாக கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி தான்.. நான் அரசியலுக்கு வருவது உறுதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என அறிவித்தார்.

அதன்பின்னரும் அவரை கலாய்த்து மீம்ஸ் வந்தாலும் அவர் கட்சி ஆரம்பிப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை தினம் தினம் செய்து வருகிறார்.

ரசிகர்கள் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமனம் செய்தார். மேலும் பல்வேறு துறை சார்த்த வல்லுனர்களுடன் அவ்வப்போது ஆலோசனையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரஜினிகாந்த் கட்சி பற்றி அறிவிப்பார் என தகவல்கள் கசிந்தன.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்தும் நின்று போனது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் 2020 நவம்பர் மாதத்திற்குள் புதிய கட்சியை தொடங்குவார் ரஜினியின் நெருங்கிய நண்பரும் அரசியல் பிரமுகருமான கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று ஜீலை 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்.

Rajini will launch his political party on Nov 2020 says Karate Thiyagarajan

பேட்ட & மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி ‘புஷ்பா’ படத்தில் விலகல் ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட படத்தில் ரஜினிக்கும்… மாஸ்டர் படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.

அதுபோல் சிரஞ்சீவியின் உறவினர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘உப்பெனா’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சிரஞ்சீவியுன் ‘சைரா’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் தற்போது அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விலகியுள்ளார்.

ஐந்து மொழிகளில் உருவாக உள்ள இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி மறுத்துவிட்டார் என சர்ச்சை ஆனது.

இந்நிலையில் அப்படத்தில் நடிக்க தேதிகள் இல்லை, அதனால் தான் நடிக்க மறுத்துவிட்டேன் என விஜய் சேதுபதி தற்போது தெரிவித்துள்ளார்.

Here is reason Why Vijay Sethupathi quit from Pushpa movie

ஆகஸ்ட் 1 முதல் தியேட்டரில் சினிமா.; 2 நபர் டிக்கெட் கட்டணத்தில் ஒருவர் படம் பார்க்கலாம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

4 மாதங்களுக்கு பிறகு தற்போது கொரோனா உடன் மக்கள் வாழ தொடங்கியுள்ளனர்.

ஆனால் சினிமா தியேட்டர்களை மட்டும் இன்னும் திறக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் உத்தரவிடவில்லை.

தியேட்டர்கள் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் தியேட்டர்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தன.

பாதுகாப்பு அம்சங்களை கண்டிப்புடன் பின்பற்றுகிறோம் என அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பலத்த கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வயதானவர்கள், சிறியவர்களுக்கு அனுமதி கிடையாது, ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடைவெளி, சானிட்டைசர் உள்ளிட்ட வசதிகள் என சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளது.

அது போல் சினிமா சூட்டிங்குகளுக்கும் கூட ஆகஸ்ட் முதல் அனுமதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அதிலும் குழந்தைகள் & வயதான நடிகர்களை அனுமதிக்கத் தடை வரும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் பலத்த பாதுகாப்புடன் ஆகஸ்ட் 1 முதல் தியேட்டர்கள் திறக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா டிக்கெட்கள் விலை இரண்டு மடங்காக உயர்வு எனவும் தகவல்.

அதுபோல் புதுச்சேரியில் ஆகஸ்ட் 1முதல் பேருந்துகள் இயங்கும் எனவும் தெரிய வந்துள்ளது.

More Articles
Follows