ஆர்.கே.சுரேஷின் அடுத்த அதிரடி ‘தென்னாட்டான்’

ஆர்.கே.சுரேஷின் அடுத்த அதிரடி ‘தென்னாட்டான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk sureshவிநியோகஸ்தர், தயாரிப்பாளர், வில்லன் என பன்முகம் கொண்ட ஆர்.கே. சுரேஷ், அண்மைகாலமாக பல படங்களில் ஹீரோவாக கமிட் ஆகி வருகிறார்.

இவரின் அடுத்த படத்திற்கு ‘தென்னாட்டான்’ என்று பெயரிடப்பட்டு அதன் பூஜை போடப்பட்டது.

இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார். படத்தைப் புதுமுக இயக்குநர் எம்.விஜய் பாண்டி இயக்குகிறார்.

திவிஷா ரேஷ்மா கிரியேஷன் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.

படக்குழுவினர் கலந்து கொள்ள தயாரிப்பு அலுவலகத்தில் பூஜை எளிமையாக போடப்பட்டது.

ஆகஸ்ட் இறுதியில் இதன் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.

RK Suresh Next Action Avatar Thennattan movie Pooja Starts today

rk suresh next project

மீண்டும் ஆளுமா டோலுமா; அஜித் ஃபேன்ஸ் ஆங்கில ஆட்டத்திற்கு ரெடியா?

மீண்டும் ஆளுமா டோலுமா; அஜித் ஃபேன்ஸ் ஆங்கில ஆட்டத்திற்கு ரெடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith dance Aaluma Doluma songசில பாடல்களை கேட்டால் இதமாக உறங்க தோன்றும். சில பாடல்களை கேட்டால் எழுந்து நின்று ஆட தோன்றும்.

இதில் இரண்டாம் வகையை சேர்ந்த பாடல்தான் அஜித்-அனிருத் கூட்டணியில் உருவான ஆலுமா டோலுமா பாடல்.

புனே இளவரசி வரை சென்றடைந்த இப்பாடல் அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகமாக்கியது.

இந்நிலையில் இதன் ஆங்கில வரிகள் கொண்ட பாடல் ஒன்று விரைவில் ஒரு தனியார் யூடியுப் சேனலில் வெளியாகவுள்ளதாம்.

இன்னோ கெங்கா Inno Genga என்ற பிரபல பாடகர் இதனை ஆங்கிலத்தில் எழுதி பாடியிருக்கிறார்.

அப்புறம் என்ன அஜித் பேன்ஸ்..? அடுத்த ஆட்டத்திற்கு தயார்தானே..?

Aaluma Doluma song English version is getting ready

விஷால்-தனுஷ்-விஜய்சேதுபதி ஆகியோரை பற்றி Dr ராஜசேகரின் மகள் ஷிவானி

விஷால்-தனுஷ்-விஜய்சேதுபதி ஆகியோரை பற்றி Dr ராஜசேகரின் மகள் ஷிவானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Dr Rajasekar daughter Sivani talks about Vishal Dhanush Vijay Sethupathiஇயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு “ இது தாண்டா போலீஸ்“ போன்ற பல வெற்றி படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்தவர் Dr. ராஜசேகர்.

இப்படத்தில் நடித்தபோது அப்பட நாயகி ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

தற்போது இவர்களைத் தொடர்ந்து இவர்களது மூத்த மகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

அப்பாவும், அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சின்ன வயதில் இருந்தே அறிமுகம் இருந்திருக்கு.

சின்ன வயதில் இருந்தே பரதநாட்டியம், குச்சிபிடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறேன். இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு.

கீ போர்ட், கிடார், வீணை ஆகியவற்றை நன்றாக வாசிப்பேன். நானும் தங்கை ஷிவாத்மிகாவும் யூடியுப் பார்த்து பாடி கொண்டே இருப்போம் இது எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. நானும் தங்கையும் கிக் பாக்சிங் படித்து வருகிறோம்.

எனக்கு பிட்னஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அது எனக்கு ஒரு அடிக்சன் மாதிரி. நான் பொறந்தது மட்டும் தான் தமிழ் நாடு வளர்ந்தது ஹைதராபாத்தில் தான்.

உறவினர்கள் அனைவரும் சென்னையில் தான் இருக்கிறார்கள். அவர்களோடு பேசும் போது தமிழில் தான் பேசுவோம்.

நான் 3வது வருடம் மருத்துவம் படித்து வருகிறேன். நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன்.

தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த 3 படத்தை பார்த்து எமோஷனல் ஆகி அழுது இருக்கிறேன்.

விஷாலை எனக்கும் மிகவும் பிடிக்கும் அவர் மேன்லியாக இருப்பார். அவர் எங்கள் குடும்ப நண்பரும் கூட. நடிகர் விஜய் சேதுபதி செம ஆக்டர். அவரை பிடிக்கும். அவர் நடிக்கும் படம் சென்சிபிலாக இருக்கும்.

அப்பா தான் என்னுடைய ஆள் டைம் ஹீரோ, அப்பா அம்மா சேர்ந்து நடித்த படங்களை ஒண்ணு விடாமல் பார்த்திருக்கிறேன். முதலில் டாக்டர் ஆகிவிட்டு அப்புறம் ஆக்டர் ஆகிவிடுவோம்” என்றார் ஷிவானி.

Actor Dr Rajasekar daughter Sivani talks about Vishal Dhanush Vijay Sethupathi

????????????????????????????????????????????????????????????

விஸ்வரூபம்2 டிரைலர் வதந்தி பற்றி கமல் கருத்து

விஸ்வரூபம்2 டிரைலர் வதந்தி பற்றி கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishwaroopam posterகமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் மிகப்பெரிய வெற்றி அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இன்னும் 2 வாரங்கள் சூட்டிங் மீதம் இருப்பதால், அதற்காக உக்ரைன் நாட்டுக்கு சென்று அங்கு லொக்கேஷன்களை பார்த்து வருகிறார்களாம்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஸ்வரூபம்2 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் கமல்.

இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகக்கூடும் என கூறப்பட்டு வரும் நிலையில், இதன் டிரைலர் வருகிற ஜீன் 23ஆம் ரம்ஜான் திருநாளில் ரிலீஸ் ஆகலாம் என செய்திகள் வந்தன.

இந்நிலையில் இதுகுறித்து தன் மறுப்பை தெரிவித்தள்ள கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
False news about trailer of VR2. RKFI is bound to inform admirers of progress. We facilitate Tamil VR2’s release. We own the Hindi rights

Kamal tweets regarding Vishwaroopam 2 trailer and its hindi rights rumours

தெலுங்கு சினிமாவில் இந்தியா-சூர்யா பெயரில் ஒரு படம்

தெலுங்கு சினிமாவில் இந்தியா-சூர்யா பெயரில் ஒரு படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Allu Arjun New movie titled Naa Peru Surya Naa Illu Indiaதெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அல்லு அர்ஜுன்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள DJ படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து நா பேரு சூர்யா என் வீடு இந்தியா என்று பெயரிட்டுள்ள புதிய படத்தில் இவர் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் முக்கிய வேடத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து நடிக்கிறார்களாம்.

இவர்கள் இருவருக்குமே நெகட்டிவ்வான ரோல் என சொல்லப்படுகிறது.

Allu Arjun New movie titled Naa Peru Surya Naa Illu India

ரஜினி கட்சி பெயரில் அவரின் சூப்பர் ஹிட் படச்சொல்..?

ரஜினி கட்சி பெயரில் அவரின் சூப்பர் ஹிட் படச்சொல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini style stillsகடந்த 20 நாட்களாக காலா படத்தின் சூட்டிங்கில் நடித்து வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தற்போது சில நாட்கள் ஓய்வுக்காக சென்னை வந்துள்ளார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன் என கூறியிருந்தார்.

இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறம் ரஜினியின் கட்சி பெயர் மற்றும் கட்சி கொடி டிசைன் ஆகியவை பற்றிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

முக்கியமாக ரசிகர்களுடன் பேசும்போது போர் வரும்போது சந்திப்போம் என ரஜினி கூறியிருந்தால், கட்சிப் பெயரில் படை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பே படையப்பா என்ற வார்த்தை ரசிகர்களிடையே பிரபலமான ஒன்றுதானே… அப்போ அப்படியிருந்தால் நல்லதுதானே…

More Articles
Follows