ஆர்.கே.சுரேஷின் உறவினரை சாம்பியனாக்கும் சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெண்ணிலா கபடி குழு“ , “ஜீவா“ போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித்திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது “ சாம்பியன் “ என்ற புட்பாலை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படப்பிடிப்பை கேமராவை இயக்கி தயாரிப்பாளர் G.K. ரெட்டி துவக்கிவைத்தார்.

இதில் நடிகர் , நடிகையர் என படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். G.K. ரெட்டி , அஞ்சாதே நரேன், R.K. சுரேஷ் , ஜெயபிரகாஷ் , ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

அரோல் குரோலி இசையில் , சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறார்.

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் K.ராகவி இப்படத்தை தயாரிக்கிறார். டிசம்பர் வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.

RK Suresh nephew Roshan as Champion in Suseenthirans movie

சற்குணம் தயாரித்து இயக்கும் களவாணி2 படத்தில் இணைந்தார் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமல், ஓவியா இணைந்து நடித்த படம் ‘களவாணி’. இப்படத்தின் மூலம் தான் சற்குணம் இயக்குநராக அறிமுகமானார்.

2010-ல் வெளியான இப்படம் கமர்ஷியலாக வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது இதன் 2ஆம் பாகம் உருவாகிவருகிறது.

முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே தனது ‘வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் இயக்கி தயாரிக்கிறார்.

முதல் பாகத்தில் இணைந்து நடித்த விமல், ஓவியா .இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

முதலில் ஓவியா மறுத்துவிட்டதாக கூறப்பட்டது

இந்நிலையில் இன்று முதல் இப்பட சூட்டிங்கில் ஓவியா கலந்துக் கொள்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Oviya joins Kalavani 2 aka K2 shooting

சீமானை சுற்றி முகமூடி நபர்கள்; யார் இவர்கள்.? போஸ்டரால் பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் இயக்குனருமான சீமான் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

அந்த கட்சி தொடர்பான பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தினம் தினம் போராட்டங்கள் நடத்தி அறிக்கைகள், பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

இவரின் புகைப்படங்கள், பேட்டிகள் தொடர்பான வால் போஸ்டர்களை நாம் அடிக்கடி தெருக்களில் பார்க்கலாம்.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் யார் இவர்கள்..? என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் சீமானை சுற்றி முகமூடி அணிந்த பல பெண்கள் உள்ளிட்ட மர்ம நபர்கள் உள்ளனர்.

மேலும் எங்களை அடக்க நினைப்பது அதிகாரமா? ஆணவமா? என்ற வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மில்டன் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கும் ஒரு படத்திற்கு யார் இவர்கள்? என பெயரிட்டு இருந்தனர்.

அதில் கடுகு படப்புகழ் சுபிக்ஷா நாயகியாக நடிக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்து வருகிறார்.

ஒருவேளை இந்த படத்துக்கும் அந்த போஸ்டருக்கும் தொடர்பு இருக்குமோ? என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Naam Tamilar Seemans Yaar Ivargal poster goes viral

Breaking: தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள்..; உளவுத்துறை மீது ரஜினி குற்றச்சாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

அதில் 13 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி சென்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ரஜினி.

அவர் பேசும்போது…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே.

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர்.

உளவுத்துறை சரியான தகவலை முன்பே கொடுத்திருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இறுதியாக சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர்.

சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.

சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.

இல்லையென்றால் தமிழகத்திற்கு பெரும் பிரச்சினையாகும்.

ஜனங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் – ரஜினி
 தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தங்கள் ஆலையை திறக்க நீதி மன்றம் செல்ல நேரிடும்.

நீதிமன்றம் சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது

நீதிபதிகளும் மனிதர்களே. அவர்கள் அனுமதி கொடுக்கமாட்டார்கள்.” என்று பேசினார்.

Rajinikanth speech about Tuticorin Sterlite protest

#Breaking: தமிழகம் போராட்ட பூமியாக மாறினால் ஆபத்து : ஜெ. வழியை பின்பற்ற ரஜினி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார்.

தற்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்.

அவர் பேசியதாவது…

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.

சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர்.

அரசாங்கம் அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்திற்கு பெரும் பிரச்சினையாகும்.

தமிழகத்தில் அடிக்கடி போராட்டங்கள் நடைபெறக் கூடாது. அப்படி நடைபெற்றால் தமிழகத்தில் எந்த ஆலையும் வராது. வேலை வாய்ப்பு கிடைக்காது.

பிரச்சினைக்கு நீதி மன்றத்தை நாட வேண்டும். எல்லாவற்றிற்கும் போராட்ட என்றால் அது பிரச்சினையாகும் என்பது என் தாழ்வான கருத்து.

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் சிலபோராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன.

எனவே மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று பேசினார்.

Govt should follow Jayalalitha style to control Terrorism in TN says Rajinikanth

 

Breaking: துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம்; ரஜினி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் உயிரிழந்தனர். எனவே அவர்களின் குடும்பத்தினரை சந்திக்க இன்று ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார்.

அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது…

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 10000 அளிக்க உள்ளேன்.

அதில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை இங்குள்ள ஹோட்டலில் சந்திக்கிறேன். அவர்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் வீட்டுக்கு ரஜினி செல்லக்கூடாது என தமிழக அரசு தடை போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini announce that he will give 2 lakhs compensation to people family those who lost a live in Sterlite protest

 

More Articles
Follows