யார் (வரலட்சுமி) தேவையோ அவரை பயன்படுத்தி கொள்வார் விஷால்; RK சுரேஷ் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர் கே சுரேஷ் நடித்திருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ‘என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது நடிகர் சங்க தேர்தல் குறித்து ஆர் கே சுரேஷ் பேசியதாவது…

நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி நான்காண்டுகள் தான் ஆகிறது. அதனால் பொறுப்புகளுக்கு போட்டியிட இயலாது. மறைந்த என்னுடைய அன்பு அண்ணன் ஜே கே ரித்தீஷ் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக நான் என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் நிச்சயமாக செய்வேன்.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலைத் தவிர்த்து வேறு அனைவருக்கும் என்னுடைய ஆதரவு உண்டு.அதே சமயத்தில் நடிகர்
உதயா உள்ளிட்ட பலர் இணைந்து ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அணிக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பேன். விஷால் மீது நான்ஊழல் குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர் அப்படிப்பட்ட ஆளில்லை. அவர் தனக்கு யார் தேவையோ அவர்களை பயன்படுத்திக் கொள்வார்.

அவர் தேர்தலில் போட்டியிட்ட போது அவருடன் ரித்திஷ் சார் இருந்தார். பிறகு அவர் அவரைவிட்டு பிரிந்துவிட்டார். அவருடன் இணைந்திருந்த உதயா தற்போது இல்லை.

அவருடைய மேனேஜர் முருகராஜ் விஷாலுடன் இருந்தார். தற்போது அவரும் இல்லை. வரலட்சுமிக்கும் இதே நிலை தான். அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

நடிகர் சங்கத்தில் திருமண மண்டபங்கள் கட்டலாம். வணிகத்திற்கான ஏற்பாடுகளை செய்யலாம். ஆனால் நாடகக் கலைஞர்களுக்கு சேரவேண்டிய உடனடியான உதவிகள் எதுவும் சேரவில்லையே…?

நான் எஸ் .வி .சேகர் அணியில் சேரவில்லை. அவர் எந்த அணியில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை.

மிகப்பெரிய தயாரிப்பாளர்கள் யாரும் தற்போது இல்லை. அவர்கள் தற்போது மாதந்தோறும் ஒய்வூதிய தொகையை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர், தமிழ் நடிகர்கள் சங்கம் என்று விதிப்படி மாற்றியமைக்க மீண்டும் முயற்சிப்போம். விஷால் நடிக்கட்டும். அவரை நடிக்க அனுமதியுங்கள்.

‘பில்லா பாண்டி’ பட விசயத்தில் எனக்கும் விஷாலுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இந்நிலையில் ‘பில்லா பாண்டி’ படத்தின் கதை நன்றாக இருக்காது. அதனால் ஓடவில்லை என்று அவர் சொன்னது எனக்கு வருத்தமாகயிருந்தது. அப்படி சொல்லியிருக்கத் தேவையில்லை. ” என்றார் ஆர். கே.சுரேஷ்.

RK Suresh clarifies about Vishal and Varalakshmi issue

Mr Local ஸ்பெஷல் ஷோ இல்லை; சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி படங்களை திகட்ட திகட்ட தருபவர் டைரக்டர் எம்.ராஜேஷ்.

இவரது படங்களில் சந்தானத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். முதன்முறையாக சந்தானம் இல்லாமல் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

பொதுவாக அண்மைக்காலமாக டாப் ஸ்டார் படங்களுக்கு அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு காட்சிகள் இருக்கும்.

ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இருந்தும் இப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சென்னையில் காலை 8 மற்றும் 9 மணிக்கே காட்சிகள் தொடங்குகின்றன.

No special shows for Mr Local Sivakarthikeyan fans disappointed

கொலைகாரனுக்காக ‘ஆண்டவனே துணையாய்’ அழைக்கும் அருண்பாரதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு கொலைகாரன் திரைப்படத்திற்காக ஒரு பக்கா மாஸான அதிரடியான பாடல் ஒன்றை எழுதியுள்ளார் கவிஞர் அருண்பாரதி.

விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இவர்.

தொடர்ந்து காளி, திமிருபுடிச்சவன், சண்டக்கோழி2, களவாணி2, தில்லுக்குதுட்டு2, சிதம்பரம் இரயில்வேகேட் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்த நிலையில் விஸ்வாசம் திரைப்படம் இவருக்கு அழுத்தமான அடையாளத்தை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் விஜய்ஆண்டனி, அர்ஜூன் இருவரும் நடிக்கும் கொலைகாரன் திரைப்படத்திற்காக “ஆண்டவனே துணையாய்” எனும் அதிரடியான பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தப்பாடல் பற்றிக் கூறுகையில், இது கதைக்கு அவசியமான பாடல் என்றும் படத்தின் ஒட்டுமொத்த கதையும் இந்தப் பாடலில் அடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் கொலைகாரன் மற்றும் கொலைகாரனை துப்பறியும் துப்பறிவாளன் என விஜய் ஆண்டனி, அர்ஜூன் இருவருமே இந்தப் பாடலுக்குள் வருவதால், இருவருக்கும் மாஸ் குறையாமல், அதேசமயம் கதைக்களத்தை தாங்கியும் இந்தப் பாடல் வரிகள் உருவாக்கப் பட்டிருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர், ஆன்ட்ரூ இசையமைப்பாளர். சைமன் ஆகியோரோடு இரவு ஒன்பது மணிக்கு அமர்ந்து இரவு இரண்டு மணிக்குள் இந்தப் பாடலை உருவாக்கினோம் என்று கூறிய அருண்பாரதி தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் இளம் பாடலாசிரியர்களில் முண்ணனியில் இருக்கிறார்.

Viswasam fame Lyricist Arun Bharathy lyrics in Kolaigaran movie

‘100’ படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அதர்வா முரளி – ஹன்சிகா மோத்வானி நடித்த “100” பாக்ஸ் ஆபிஸில் நம்பமுடியாத ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளன.

இந்த வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆரா சினிமாஸ் காவியா வேணுகோபால் கூறும்போது, “எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்! எல்லா இடங்களிலும் இருந்து பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பை கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்து கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என இரு தரப்பிலும் இருந்து தொலைபேசியில் அழைத்து படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பற்றி சிலாகித்து பேசுகிறார்கள். அவர்களது வாய்மொழி பாராட்டை விடவும், இந்த படத்திற்காக 50 காட்சிகள் மற்றும் 25 திரையரங்குகள் அதிகரித்துள்ளன என்பதில் பெருமிதம் கொள்கிறோம். பொதுவாக, முதல் வாரத்தில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, முதல் மூன்று நாட்களை விட குறைவாக தான் இருக்கும். ஆனால், இங்கு அது தினம் தினம் அதிகரித்து வருவதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். திரைப்படத்தின் கருப்பொருளும், சாம் ஆண்டன் அதை வணிக ரீதியான முறையில் கொடுத்ததும் மிகச்சிறப்பாக, படத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. கூடுதலாக, அதர்வா முரளியின் திரை ஆளுமையும் படத்துக்கு மதிப்பு சேர்த்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தின் உணர்வுபூர்வமான அம்சங்கள் குடும்ப ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது” என்றார்.

சாம் ஆண்டன் இயக்கிய ‘100’ திரைப்படத்தை ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரித்திருந்தார். ஜிகுரு ஸ்ரீ மிஸ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் சிஎஸ் பதம்சந்த் ஜெயின், தமிழ்நாடு முழுக்க இந்த திரைப்படத்தை வெளியிட்டார்.

மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியின்றி வாழ்பவர்கள் இந்த உலகில் மிகவும் குறைவு. அந்த குறைவானவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவர் செய்து வரும் அறம் சார்ந்த சேவைகள் எல்லாம் பலபேர்களை வாழ்வில் கரம் பிடித்து தூக்கி விட்டிருக்கிறது.

தன் அன்னைக்கு கோவில் கட்டியதோடு இல்லாமல் கடந்த அன்னையர் தினத்தன்று தாய் அமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தெய்வங்களை காக்கும் பொருட்டு சில பலமான முன்னெடுப்புகளை துவங்கியுள்ளார். அதைப்போலவே தன்னை நாடி வரும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் தான் தேடிச் சென்றும் நல்லுதவி செய்வதற்காக தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறார்.

இதைப்பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது,

“என்னுடைய ஒவ்வொரு படிகளுக்கும் அடிநாதமாக இருப்பது இளைஞர்கள் தாய்மார்கள் ஆகிய ரசிகர்களும் முக்கியமாய் குழந்தைகளும் தான். அவர்களுக்கு வெறும் நன்றி சொல்வதோடு என் கடமை முடிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஒவ்வொரு முயற்சிகளாக செய்து வருகிறேன். தற்போது தாய் அமைப்பு ஒன்றை நிறுவி இருக்கிறோம்.

மக்களுக்கு சேவை செய்ய இனி எனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் 15-நாட்கள் மக்களை நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். காஞ்சனா சீரிஸ் படங்கள் தொடர்ந்து 100 கோடிகளுக்கும் மேல் வசூல் குவிக்கிறது என்றால் அதற்கு குழந்தைகள் தான் பெரிய காரணம். அதனால் இந்த சேவையை குழந்தைகளிடம் இருந்தே துவங்க விருப்படுகிறேன். குடும்பச் சூழல் காரணமாக கல்வி கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம். மேலும் பல நல்ல யோசனைகள் உள்ளது. அவை அனைத்தையும் நடைமுறைப் படுத்த நல்லோர்கள் வாழ்த்தும் ஆண்டவன் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

இதன் துவக்கமாக கஜா புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர் கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி அதன் கிரகபிரவேசத்தை இன்று நேரில் சென்று நடத்தியுள்ளார் லாரன்ஸ்.

கொடுப்பவர்களுக்குத் தான் தெய்வம் கொடுக்கும் என்பார்கள். லாரன்ஸ் அவர்களுக்கு தெய்வம் ஒருபோதும் கொடுப்பதை நிறுத்தாது என்ற நம்பிக்கையை அவர் தொடர்ந்து பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார். வாழ்க அவரது சேவை!

தளபதி 63 படத்திற்கு வெறித்தனமான டைட்டில் வைக்கும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

அட்லி இயக்கிவரும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதில் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக மைக்கேல் என்ற கேரக்டரில் விஜய் நடித்து வருகிறார்.

விஜய்யுடன் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஜய் பிறந்தநாளையொட்டி ஒரு நாள் முன்னதாக ஜூன் 21-ந் தேதி பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.

இப்படத்திற்கு விஜய் ரசிகர்களை கவரும் வகையில் வெறி, வெறித்தனம், கேப்டன் மைக்கேல் (CM) உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை வைக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

More Articles
Follows