‘CM-கேப்மாரி’; விஜய் தந்தை எஸ்ஏசி-க்கு ஆர்.கே.செல்வமணி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னைக்கு மிக அருகிலுள்ள பையனூரில் எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்துடன் திரைப்பட தொழிலாளர்களுக்கான குடியிருப்பும் கட்டப்படுகிறது.

அதாவது ஒரு சினிமா உருவாக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த நகரத்தில் இருக்கும்.

இதே நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்பு அரங்கம் கட்டுவதற்கு 5 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

இதன்படி ஒரு கோடி ரூபாயை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெப்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது…

தமிழக அரசும், முதல்வரும் திரைப்படத்துறைக்கு நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ‛சி.எம்.கேப்மாரி’ என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார்.

இதற்கு எங்கள் கண்டத்தை தெரிவிக்கிறோம். அவர் பட டைட்டிலை மாற்ற வேண்டும்.

அதுபோல் தமிழர்களுக்கு எதிராக பேசி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அவருக்கும் எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் அதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணையும் பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படம் திருப்பாச்சி. இப்படத்தை இயக்கியவர் பேரரசு. 2005ஆம் ஆண்டில் இப்படம் வெளியானது.

இப்படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் ஆனது.

இதனையடுத்து சில தமிழ் படங்களை இயக்கிய இவர் மலையாளத்திலும் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்தை இயக்கவுள்ளார்.

பிகில் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம், ஆகிய படங்களை முடித்துவிட்டு தளபதி 65 படத்தில் விஜய் அவருடன் இணையவுள்ளார்.

காதல் அம்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ள பேரரசுக்கு, என்னுடைய வாழ்த்துகள்” என்று ஜாக்குவார் தங்கம் பேசியதால் இந்த தகவல் உறுதியாகியுள்ளது எனலாம்.

Perarasu to Direct Vijays Thalapathy 65

மம்மூட்டி – நயன்தாராவுடன் இணையும் விஜய் ஆண்டனி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் உள்ளிட்ட பல படங்களில் மம்மூட்டி அண்ட் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்கள் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தை விபின் என்பவர் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் அவரின் கால்ஷீட் பிரச்சினையால் தற்போது அவருக்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது உறுதியாகும் பட்சத்தில் இப்படம் மூலம் விஜய்ஆண்டனி மலையாள சினிமாவில் அறிமுகமாவார் எனத் தெரிகிறது.

Vijay Antony also part of Mammootty Nayantharas Malayalam movie

மனித கம்ப்யூட்டராக மாறினார் அஜித்தின் லேட்டஸ்ட் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.

இவர் தற்போது கணிதவியலாளர் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார்.

கேரளாவைச் சேர்ந்த அனு மேனன் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

சகுந்தலாதேவி என்ற தலைப்பு அருகே மனித கம்யூட்டர் என்ற வார்த்தையும் உள்ளது.

இப்படத்தை அடுத்தாண்டு 2020ல் கோடையில் வெளியிட உள்ளனர்.

Vidya Balans First Look from Human Computer Shakuntala Devi

அஜித் பிரச்னையில்ல; ஆனால் ரஜினி-விஜய்.? குழப்பத்தில் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிரஞ்சீவி நடிப்பில் அவரது மகன் ராம்சரண் தயாரித்துள்ள படம் ‘சைரா’ நரசிம்ம ரெட்டி.

இதில் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப், அனுஷ்கா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

வருகிற அக்டோபர் 2ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பிரம்மாண்ட விழா செப்டம்பர் 18ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

இதில் படக்குழுவினர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

ஆனால் தன் பட நிகழ்ச்சிகளிலேயே கலந்துக் கொள்ளாதவர் நயன்தாரா. இப்பட விவகாரத்தில் அவரின் நிலைப்பாடு என்ன? என்பது இதுவரை தெரியவில்லை.

ஒருவேளை இதில் அவர் கலந்துக் கொண்டால் அதற்கு அடுத்த நாளே விஜய்யுடன் நடித்துள்ள பிகில் படத்தின் இசை விழாவிலும் கலந்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டிலும் கலந்துக் கொண்டால் நிச்சயம் ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்துக் கொள்ள நேரிடும்.

அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு இசை வெளியீட்டு விழா எதுவும் நடைபெறவில்லை. அதனால் அஜித் ஒரு பிரச்சினையாக இவருக்கு தெரியவில்லை.

அஜித்தும் கலந்துக் கொள்ளமாட்டார். ஆனால் ரஜினி, விஜய் படங்கள் இசை விழா என்றால் நிச்சயம் பிரம்மாண்டமாக இருக்கும்.

எனவே ரஜினி, விஜய், சிரஞ்சீவி, அமிதாப் விசயத்தில் என்ன செய்ய போகிறார் நயன்தாரா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

நயன்தாராவைப் போல அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோரும் பிரபலமான நடிகைகள் தான். ஒரு வேளை நயன்தாரா வரவில்லை என்றால் மற்ற இருவரும் என்ன செய்வார்கள்? என்பதையும் வெயிட் அண்ட் சீ..

Will Nayanthara attend Rajini Vijay Chiranjeevi movies audio launch

ரஜினி-விஜய்க்கே கிடைக்காத அப்ளாஸ் அஜித்துக்கு மட்டும் எப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகர்களில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.

இவரை தமிழக ரசிகர்கள் தல என்றே அழைக்கின்றனர்.

ரசிகர் மன்றமே வேண்டாம் என்று இவர் சொன்னாலும் இவருக்கான ரசிகர்கள் வட்டம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது.

எந்தவொரு ஹீரோவாக இருந்தாலும் தனக்கு முடி நரைத்துவிட்டால், அதில் கருப்பு டை அடித்துவிட்டுதான் படத்தில் நடிப்பார்கள். ஆனால் தன் வெள்ளைத் தாடி, மீசை, நரைத்த தல முடி என இயற்கையான தோற்றத்துடன் நடித்து வருகிறார் இவர்.

மேலும் படத்தின் சில காட்சிகளில் தன் வயது உட்பட உண்மையான தகவல்களை அனைத்தையும் சொல்லி நடித்திருக்கிறார் தல.

சினிமாவில் நடிப்பதை தவிர இவர் எதுவும் செய்யவில்லை. அதாவது பாடுவதோ, இயக்குவதோ, பாடல் எழுதுவதோ என எதையும் செய்யவில்லை.

தான் உண்டு தன் வேலையுண்டு என செய்து வருபவர்.

ஆனால் சினிமாவைத் தாண்டியும் நிஜ ஹீரோவாகவே மக்கள் மனதில் வலம் வருகிறார்.

பைக் ரேஸ் முதல், விமானம் ஓட்டவும் செய்கிறார். பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர் இவர் தான்.

மேலும் ஐஐடி மாணவர்களுக்கே விமான பயிற்சிகளில் (தக்ஷா) ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

இதனால் இவரின் பெருமை ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

அஜித் பெயரை எங்கேயாவது யாராவது சொன்னால் கூட ரஜினி, கமல், விஜய்க்கு கிடைக்காத கரவொலி சத்தம் இவருக்கு (சில நேரங்களில்) மட்டும் கிடைக்கிறது. அதற்கு என்ன காரணம் தெரியுமா..?

சினிமா உலகில் 1970-80களில் பிரபல நடிகர்கள் கையாண்ட் யுக்தியை இப்போதும் அஜித் கையாள்கிறார்.

அதாவது இப்போது உள்ளது போல் டிவியோ, சோஷியல் நெட்வொர்க் அப்போது இல்லை. எனவே நடிகர்களை நாம் காண வேண்டுமென்றால் தியேட்டருக்கு வந்தே ஆக வேண்டும்.

அப்போது தியேட்டரில் கூட்டல் அலை மோதும். போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத கூட்டம், அடிதடி எல்லாம் இருக்கும். எனவே படங்களும் 100 நாட்கள் ஓடியது. மக்களும் தங்கள் அபிமான நடிகர்களை திரையில் ரசித்து வந்தனர்.

அதை தான் அஜித், நயன்தாரா போன்றவர்கள் தற்போது செய்து வருகின்றனர்.

தன் பட பூஜை, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, புரோமோசன் நிகழ்ச்சிகளுக்கே எதற்கும் அஜித் வருவதில்லை. இதற்கு இவர் தரப்பில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

சமூக பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பதில்லை. பேட்டி கொடுப்பதில்லை.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதிலும் அஜித்துக்கு அக்கவுண்ட் இல்லை. ரசிகர்களையும் அடிக்கடி சந்திப்பது இல்லை.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் மற்ற நடிகர்களின் விழாக்களில் கலந்துக் கொள்கிறார்கள். அந்த பட பாடல்களை நேரில் ரிலீஸ் செய்கிறார்கள் அல்லது யூடிப்பில் வெளியிட்டு ஆதரவளிக்கிறார்கள்.

அதுபோல் விஜய்யும் சில நேரங்களில் மற்றவர்களை பாராட்டி பேசுகிறார். தன் பட இசை வெளியீட்டு விழாக்களில் ரசிகர்களை சந்திக்கிறார்.

இவர்களை எல்லாம் ரசிகர்கள் எப்படியாவது எங்கேயாவது சந்தித்து விடுகிறார்கள். அல்லது அவர்களின் பேச்சை டிவியில் பார்த்து ரசிக்கிறார்கள்.

ஆனால் இது எதையும் அஜித் செய்வது இல்லை. எனவே அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அப்போது அவரின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது வேறு வழியின்றி தல தரிசனம் காண தியேட்டருக்கு கட்டுக்கடங்காத அளவில் விரைகிறார்கள்.

அதுபோல் அஜித் பற்றிய பேச்சுக்கள் பொது நிகழ்ச்சியில் எழும் போது ஆர்ப்பரிக்கிறார்கள்.

இதுவே டிஜிட்டல் உலகத்திலும் அஜித் செய்யும் ராஜதந்திரம் எனலாம்.

How Ajith getting more Applause than Rajini and Vijay

More Articles
Follows