நடிகை ஆஷ்னாவுக்காக அடித்துக் கொண்ட ஆர். ஜே. விஜய் & மா.கா.பா. ஆனந்த்

நடிகை ஆஷ்னாவுக்காக அடித்துக் கொண்ட ஆர். ஜே. விஜய் & மா.கா.பா. ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் படைப்புகளை உருவாக்குவது எளிது. அதனை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவது கடினம். இந்நிலையில் நடிகர் ஆர் ஜே விஜய் , மா. கா.பா ஆனந்த் மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலை அறிமுகப்படுத்துவதற்காக, திரையுலக பிரபலங்களுக்கு இடையே நடைபெற்ற பட்டிமன்றத்தின் முன்னோட்ட காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர் ஆனிவீ இசையில், இயக்குநர் டோங்லீ இயக்கத்தில், நடிகை ஆஷ்னா ஜாவேரி, மா. கா. பா. ஆனந்த் மற்றும் ஆர். ஜே. விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் பாடலை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது. இதற்காக ரசிகர்களை ஆர்வமூட்டும் வகையில், திரை பிரபலங்களான நடிகர் மா. கா. பா. ஆனந்தும், நடிகர் ஆர். ஜே. விஜயும் தனி தனி அணியாக பிரிந்து பட்டிமன்றம் நடத்தினர்.

உச்சிமலை காத்தவராயன்

இதற்கு முன்னதாக ட்வீட்டரில் இருவரும் சுவராசியமான கருத்து மோதல்களில் ஈடுபட்டனர்.

நடிகை ஆஷ்னா ஜாவேரி தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் இதனை பார்வையிட்ட நடிகரும், பாடலாசிரியருமான ஆர். ஜே. விஜய்..

‘ அழகே பொறாமைப்படும் பேரழகு..’ என பதிவிட்டார்.

உடனடியாக மா. கா. பா. ஆனந்த் ட்விட்டரில்,

” தம்பி இது ரொம்ப பழைய விசயம்” என பதிவிட்டதுடன்..,

” தம்பி அடிபட்டா தேவை மெடிக்கல் கிட்-டு ஆஷ்னாவ கரெக்ட் பண்ண தேவை ஒரு செமையான ட்வீட் -டு நீ போயிரு இந்த ஏரியாவை விட்டு..” என பதிவிட..,

உச்சிமலை காத்தவராயன்

பதிலுக்கு ஆர். ஜே. விஜய் ட்விட்டரில்..

” க்யூட்-டுக்கு எதுக்கு ட்வீட் -டு ஆஷ்னா தான் என்னோட ஹார்ட் பீட்-டு” என என பதிவிட்டு, மோதலை தொடங்கினார்.

‘மழை வந்தா தேவ அம்பர்லா
பெண்ணே நீ தான் மை சிண்ட்ரெல்லா..’ என்ற வரிகளைக் குறிப்பிட்டு, இசையமைப்பாளர் ஆனிவீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஆஷ்னா ஜாவேரியின் பிரத்யேக புகைப்படத்தைப் பதிவிட்டார்.

இவர்களின் தீவிரமான மோதலைக் கண்ட இயக்குநரும், தயாரிப்பு நிறுவனமும், ‘வாங்க பேசிக்கலாம்’ என சமாதான ட்வீட்டை பதிவிட்டது.

பிறகு இருவருக்கும் இடையே ‘ஆஷ்னாவிற்காக’ பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்தப் பட்டிமன்றத்தின் இரு அணிகளும் ரைமிங் வேர்ட்ஸ்களாலும், டைமிங் வேர்ட்ஸ்களாலும் மோதிக்கொண்டனர்.

‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலுக்காக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தின் முன்னோட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் பாடல் வெளியாகிறது.

பாடலை ரசிகர்களிடம் வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்திய படக்குழுவினரின் முயற்சியை இணையவாசிகளும், திரையுலகினரும் பாராட்டுகிறார்கள்.

உச்சிமலை காத்தவராயன்

RJ Vijay Clash with Ma Ka Pa Anand for Actress Azhna Zaveri

தெலுங்கு படங்களை தமிழகத்தில் வெளியிட விடமாட்டோம்.; சீமான் எச்சரிக்கை

தெலுங்கு படங்களை தமிழகத்தில் வெளியிட விடமாட்டோம்.; சீமான் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் பண்டிகை தினங்களில் தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த நிலையில் இந்த தீர்மானம் குறித்து சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…

தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தெலுங்கு படங்களை தமிழகத்தில் வெளியிட விடமாட்டோம் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“விழாக்காலங்களில் நேரடித் தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

எண்ணற்ற தெலுங்குத்திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்த்திரைப்படங்கள் வெளியாவதற்குக் கெடுபிடி விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத்தவறான முன்னுதாரணமாகும்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களைச் சேர்ந்த திரைத் துறையினருக்கும் புகலிடமாகவும், மூலமாகவும் விளங்கிய தமிழ்த் திரையுலகை வஞ்சிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால், தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அன்புத்தம்பி விஜய் அவர்களது வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கானத் திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

நேரடித்தெலுங்குத் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குத் திரைப்படங்களோ எதுவாகினும் தமிழகத்தில் எவ்விதப் பாரபட்சப்போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாது.

தமிழ்த்திரைப்படங்களுக்கு இணையாகத் திரையரங்குகளைப் பெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும்.

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, காந்தாரா, கே.ஜி.எப். எனப் பிறமொழி படங்களுக்கு தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்போது, அப்படங்களுக்கு இருந்த மக்கள் ஆதரவுதான் அளவுகோலாக வைக்கப்பட்டதே ஒழிய, மொழிப்பாகுபாடு ஒருபோதும் காட்டப்பட்டதில்லை. ‘கலைக்கு மொழி இல்லை’ என்றுகூறி, தமிழ்த்திரையுலகிலும், திரையரங்க ஒதுக்கீட்டிலும் மற்ற மொழியினருக்கும், அவர்களது திரைப்படங்களுக்கும் பெருவாய்ப்பு வழங்கி, ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ எனப் பெயரைத் தாங்கி நிற்கும் தமிழ்த்திரையுலக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாகும்.

திரைப்படைப்புகளுக்கும், படப்பிடிப்புகளுக்கும் மற்ற மொழியினரையும், மற்ற மாநில திரைத்துறையையும் பயன்படுத்திக் கொண்டு, திரையரங்க ஒதுக்கீட்டில் காட்டப்படும் சமத்துவமற்ற இத்தகைய அணுகுமுறை நலம் பயக்கக் கூடியதல்ல! தென்னிந்திய நடிகர்களுள் முதன்மையானவராகத் திகழும் தம்பி விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கே இந்நிலையென்றால், மற்ற படங்களின் நிலை என்னவாகும்? எனும் கேள்விதான் எழுகிறது.

இச்சிக்கல், விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல; தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடியாகும். இதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது.

ஆகவே, தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்குத்திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோமென வன்மையாக எச்சரிக்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

We will not allow Telugu movies to release in Tamilnadu Seeman Warning

ரசிகர்களுக்கு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு விஷால் வைக்கும் விருந்து

ரசிகர்களுக்கு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு விஷால் வைக்கும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷால் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘துப்பறிவாளன் 2’.

இதன் சூட்டிங் பாதி முடிவடைந்த நிலையில் மீதி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை இல்லாமல் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ்ஜே. சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இத்துடன் விஷால் நடிப்பில் ‘லத்தி’ படமும் வேகமாக உருவாகி ரிலீசுக்கு தயாராகவுள்ளது

அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கிய இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக விஷால் நடித்துள்ளார்.

இதில் நாயகியாக சுனைனா நடிக்க பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள் ராணா & நந்தா இணைந்து ராணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ளனர்.

இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள நிலையில் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் வெளியீடாக ‘லத்தி’ ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vishals Laththi will be released on Christmas 2022

விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் இணையும் – கமல்ஹாசன்…

விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் இணையும் – கமல்ஹாசன்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த படம் ‘விக்ரம்’.

இந்தப் படம் தமிழ் சினிமாவின் பல ரெக்கார்டுகளை முறியடித்து.

தற்போது, லோகேஷ் கனகராஜ் அடுத்த படியாக விஜய்யை வைத்து ‘தளபதி 67’ படத்தை இயக்கயுள்ளார்.

இப்படத்தில் சஞ்சய் தத், விஷால், கவுதம் மேனன், திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வந்த தகவலின் படி ‘தளபதி 67’ திரைப்படத்தில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kamal Hassan to join Vijay’s ‘Thalapathy 67’

ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்தை ட்ரோல் செய்த உதயநிதி ஸ்டாலின்..

ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்தை ட்ரோல் செய்த உதயநிதி ஸ்டாலின்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பதால், கோலிவுட்டில் முன்னணி விநியோகஸ்தராக இருக்கும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஒரு ஊடகத்திற்கு அளித்த வீடியோ பேட்டியில், நடிகர் ஆர்யா அனுப்பிய வீடியோ மூலம் உதயநிதி ஸ்டாலினிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

ஆர்யாவின் எந்தப் படத்தில் நடிக்க உதயநிதி தேர்வு செய்வார் என்ற கேள்விக்கு நடிகர் உடனடியாக ‘கேப்டன்’ என்று பதிலளித்தார்.

உதயநிதி, படத்தை விநியோகிக்க ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு படத்தைப் பார்க்கவில்லை என்றும், ஆர்யாவின் வார்த்தைகள் நன்றாக இருப்பதாகவும் அவர் கூறியதை நம்புவதாகவும் கூறினார்.

உதயநிதியும் படத்தை ட்ரோல் செய்தார்,ஆர்யாவின் மற்ற படங்களான ‘மதராசப்பட்டினம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ நன்றாக இருந்ததாகவும், ‘கேப்டன்’ தனக்கு மிஸ் ஆகிவிட்டது என்றும் கூறி பேச்சை முடித்தார்.

Udayanidhi Stalin trolled Arya’s ‘Captain’.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி?

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்திய தகவலின் படி விஜய் சேதுபதி தனது முதல் தென்னிந்திய வெப் தொடருக்கு தயாராகிவிட்டார்.

“காக்கா முட்டை” மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த தென்னிந்திய வெப் தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தயாரிக்க முன் வந்துள்ளது.

இது தென்னிந்தியாவின் பிரம்மாண்ட வெப் சீரிஸ் என்று கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி இதற்கு முன் மணிகண்டனுடன் ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows