தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வானொலி (அட அதாங்க ரேடியோ) என்றாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் ஆர்ஜே பாலாஜி.
இவர் தற்போது சினிமாவில் காமெடி செய்து கலக்கி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில் சிறந்த காமெடியன் விருதை நானும் ரௌடிதான் படத்திற்காக பெற்றார்.
இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஆர்ஜே. பாலாஜி.
இதுகுறித்து அவர் கூறியதாவது…
“முதலில் இதற்கான வாய்ப்பு வந்தபோது நான் நிஜம் என நினைக்கவில்லை. பின்பு சென்னை வந்தபின் மணிரத்னம் சாரை சந்தித்தேன்.
அவர் என்னிடம் அரை மணி நேரம் கதை சொன்னார். பின்பு அவருடன் செல்ஃபி எடுத்துகொண்டேன்.
நாயகன், தளபதி, அஞ்சலி உள்ளிட்ட மணிரத்னம் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். இன்று அவர் படத்தில் நான் நடிக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
இது எப்படி இருக்கிறது என்றால் நாம் கபாலி படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு போக நினைக்கலாம். ஆனால் கபாலியாக மாற நினைக்க முடியாது.
என்னைப் போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவனுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தது அப்படிதான் உள்ளது.
இது கனவு நிஜமானதாக நினைக்கவில்லை. அதுக்கும் மேல இது.” என்றார்.