காதலர்களின் குடும்பங்களின் ஆணிவேரை ஆட்டம் காட்ட வரும் ‘ஐஸ்வர்யா முருகன்’

காதலர்களின் குடும்பங்களின் ஆணிவேரை ஆட்டம் காட்ட வரும் ‘ஐஸ்வர்யா முருகன்’

‘ரேணிகுண்டா’ படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம்.

அவரது இயக்கத்தில் மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி .ஆர். வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐஸ்வர்யா முருகன்’.

காதல், தமிழ் சினிமா ஆதி காலம் முதல் காதலையும் காதலர்களின் வலியையும், பிரிவையும், இன்பத்தையும் பல படங்களில் சொல்லியிருக்கிறது.

ஆனால் ஒரு காதல்.. காதலர்களின் குடும்பங்களின் என்னென்ன துயரங்களை உண்டாக்கும்.

காதல் சில நேரம் இரு குடும்பத்தையும் இலைகளையும்.. கிளைகளையும் தாண்டி வேரோடும்.. ஆணிவேரோடும் அசைத்து நிலை குலைத்து விடுகிறது.

காதலின் இந்த பக்கத்தை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் “ரிங்கா ரிங்கா ரோசா” பாடல் 2021 டிசம்பர் 15 வெளியாகிறது.

முதல் பாடல் போலவே ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அருண் பன்னீர்செல்வம், வித்யா பிள்ளை , ஹர்ஷ் லல்வானி ஜி. சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன், நாகேந்திரன் என முற்றிலும் புதுமுகங்களின் ஆக்கிரமிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

படத்திற்கு ஒளிப்பதிவு அருண் ஜெனா . இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் .இசை -கணேஷ் ராகவேந்திரா.

ஏற்கெனவே இவர் ‘ரேணிகுண்டா’ படத்திற்கு இசையமைத்தவர். எடிட்டிங் ஆண்டனியின் உதவியாளரான ஜான் ஆபிரகாம் . கலை -முகமது. சண்டைப்பயிற்சி -தினேஷ் .இவர் சண்டை இயக்குநர் ராஜசேகரின் உதவியாளர். நடனம் தஸ்தா.
Pro ஜான்சன்.

Renigunta director’s next is titled Aishwarya Murugan

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ப்ளான்.: ஏழை மாணவர்களுக்கு உதவிட ரஜினி முடிவு

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ப்ளான்.: ஏழை மாணவர்களுக்கு உதவிட ரஜினி முடிவு

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவர் இன்று டிசம்பர் 12 தன் 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனைமுன்னிட்டு ரஜினிக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், முதல் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனவே வழக்கம் போல அவரது பிறந்தநாளை ரசிகர்கள் மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் நிறைய தியேட்டர்களில் ரஜினி படங்களை பிரத்யேகமாக திரையிட்டு வருகின்றனர்.

கிட்டதட்ட தமிழகத்தின் அனைத்து சேனல்களிலும் ரஜினி படங்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன.

சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டாகி வருகிறது.

இந்த நிலையில், தனது 72ஆவது பிறந்தநாளில் அனைவரும் வியக்கும் வகையில் ஒரு சிறந்த காரியத்தை தொடங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

ஏழை குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக ரஜினிகாந்த பவுண்டேசன் என்ற அமைப்பை ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார்.

இந்தத் திட்டம் வழக்கறிஞர் எம்.சத்ய குமாரால் நிர்வகிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ளார்.

Rajinikanth foundations will train 100 students for TNPSC exams

JUST IN சிம்பு ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி.; கொரோனா ரிசல்ட் என்ன.?

JUST IN சிம்பு ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி.; கொரோனா ரிசல்ட் என்ன.?

சிம்பு நடித்த மாநாடு படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.

தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்பட இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதையை எழுதியுள்ளார்.

நேற்று (டிசம்பர் 10) இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Actor STR aka Simbu admitted in hospital

புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள் & ரூ.10 லட்சம் வழங்கிய அல்லு அர்ஜுன்

புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள் & ரூ.10 லட்சம் வழங்கிய அல்லு அர்ஜுன்

புஷ்பா படக்குழுவின் கடின உழைப்பால் ஈர்க்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், அதன் முக்கியமான 35-40 உறுப்பினர்களுக்கு தலா ஒரு துலாம் (11.66 கிராம்) மதிப்புள்ள தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அனைத்து தயாரிப்பு பணியாளர்களுக்கும் ரூ 10 லட்சம் ரொக்க பரிசாக வழங்கியுள்ளார்.

ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் அல்லு அர்ஜுனின் இந்த செயல், புஷ்பா குழுவினர் மற்றும் அவரது ரசிகர்களின் பாராட்டை மட்டுமில்லாது, அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பையும் பெற்றுள்ளது.

“புஷ்பா குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் அல்லு அர்ஜுன் மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே, அவர்களுக்கு தங்கம் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்க விரும்பினார். தனது எண்ணத்தை உடனடியாக அவர் செயல்படுத்தினார்,” என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 டிசம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட உள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து, சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழகத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.

ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள புஷ்பா தி ரைஸ், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.

Allu Arjun gifts gold coins and Rs 10 lakh to PUSHPA team

தேசிய விருது பெற்ற விகாஸ் பாலுடன் ரஹ்மான் கூட்டணி

தேசிய விருது பெற்ற விகாஸ் பாலுடன் ரஹ்மான் கூட்டணி

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் பிசியாக இருப்பவர் நடிகர் ரஹ்மான். மணிரத்னத்தின் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனில் நடித்து முடித்த அவர் பாலிவுட்டின் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான விகாஸ் பால் இயக்கும் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட படைப்பான ‘ கண்பத்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

லண்டனில் படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் டைகர் ஷெராப், ரஹ்மான், க்ரிதி சநோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

அமிதாப் நடித்த ‘ பிளாக் ‘ படத்தின் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட் பிரவேசம் செய்த விகாஸ் பால் அதன் பின் நிறைய படங்களுக்கு கதை- திரைக்கதை எழுதியுள்ளார்.

மேலும் ‘குயின்’ , ‘சில்லார் பார்ட்டி’, ‘சூப்பர் 30’ போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மூன்று முறை தேசிய விருதும் மற்றும் பல விருதுகளும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பின் மத்தியில் தன் மகள் திருமணத்துக்காக சென்னை வந்த ரஹ்மான் தன் முதல் பாலிவுட் பிரவேசம் பற்றி இவ்வாறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

“மூன்று மாத கால ஹிந்தி டூஷன் , ஸ்கிரிப்ட் ரீடிங், மேக்கப் டெஸ்ட் என்று நிறைய ஹோம் வொர்க் செய்த பின் தான் லண்டனில் படப்பிடிப்புக்கு சென்றேன்.

பொதுவாகவே தென்னிந்திய நடிகர்- நடிகைகளை பாலிவுட் சினிமாக்காரர்கள் அவ்வளவாக மதிக்க மாட்டார்கள் என்று தான் கேள்வி பட்டிருக்கிறேன் .

ஆனால் நான் கேள்வி பட்டதுக்கு மாறாக இருந்தது, அங்கு எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான அனுபவங்கள். அவர்களது நேரம் தவறாமை , பிளானிங் , எனக்கு கிடைத்த உபசரிப்பு, வரவேற்பு, காட்டிய அன்பு எல்லாமே என்னை ஆச்சர்யப்பட வைத்தது. குறிப்பாக பெரியவன் – சிறியவன் பாகு பாடில்லாமல் நடிகர் டைகர் ஷெராப் மற்றும் நடிகர்களும் இயக்குனரும் புரொடக்க்ஷன் பாய் லைட் மேன் போன்றோர்களிடம் நண்பர்கள் போல பழகுவது என்னை ஆச்சாரியப்படுத்திய புதிய அனுபவமாகும்.

டைகர் ஷெராப் பற்றி எவ்வளவு புகழ்ந்தாலும் அது மிகையாகாது. எல்லோரிடமும் ஒன்று போல அன்புடனும் பாசத்துடன் பழகுபவர்.

இரண்டு நாள் அவருடன் பழகினாலே இவரை போல ஒரு மகன் நமக்கும் இருந்தால் என்று ஆசைப்படுவோம். பெரிய ஹீரோவாக இருந்தும் பழகுவதில் அவ்வளவு பணிவு.பழக்கதிலும் தொழிலிலும் மிகவும் அர்ப்பணிப்பு மனமுடையவர். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

என்னுடன் நடித்த க்ரிதி சனோனும் பழகுவதற்கு மிக இனிமையானவர் . படப்பிடிப்புக்கு சென்ற முதல் நாளிலேயே நீண்ட காலமாக மிகவும் பரிச்சயமானவரைபோல தான் என்னுடன் பழகினார். ஒவ்வொரு சீன் எடுக்கும் போதும் ” சார் அப்படி நடித்தால் நல்லா இருக்குமா, இந்த சீன்ல நம்ம இப்படி நடிக்கலாமா என்று அபிப்ராயம் கேட்பார் க்ரிதி.

சிறந்த எழுத்தாளரான இயக்குநர் விகாஸ் பால், தான் பெரிய இயக்குநர் என்ற எந்த வித பந்தாவும் இல்லாமல் அன்பாக பழகுவார். யாருடைய மனமும் நோகக்கூடாது என்ற மனபான்மையுடன் வேலை வாங்குவார். அவருடன் பழகினால் அவரை விட்டு பிரிய நமக்கு மனசு வராது. அவ்வளவு பாசக்காரர்”.
படத்தில் என்னுடைய கேரக்டர் பற்றியும் மற்றும் பல விஷயங்களை பின் கூறுகிறேன்”

இவ்வாறு ரஹ்மான் கூறினார்.

Actor Rahman joins with Vikas Paul for bollywood film

மீண்டும் பயமுறுத்த வரும் ‘சிவி 2’ – கழுத்து மேல் பேய் நினைவிருக்கா.?

மீண்டும் பயமுறுத்த வரும் ‘சிவி 2’ – கழுத்து மேல் பேய் நினைவிருக்கா.?

சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி.

ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது.

துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் அதிக பொருட் செலவில் சிவி (பாகம்-2) என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார்கள்.

இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக படமாக்கியுள்ளார்கள்.

விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள்.

காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவ மனைக்கு தேடிச் செல்கிறார்கள்.

அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார், அதில் பல ரத்தம் உறைய வைக்கும் சில சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இதன் பின்னணியில் விறுவிறுப்பு குறையாமல் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தில் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் யோகி, சரண் ராஜ் அவர்களின் மகன் தேஜா சரண்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்திரி, குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குனர் – K.R.செந்தில் நாதன்
ஒளிப்பதிவாளர் – B.L. சஞ்சய்
படத்தொகுப்பாளர் – S.P.அஹமத்
இசையமைப்பாளர் – F.S.பைஜில்
சண்டை – பில்லா ஜெகன்
கிரியட்டிவ் ஹெட் – v. அணில் குமார்
கலை- சூரியா
இணை தயாரிப்பு – விஜய் – பானு
தயாரிப்பாளர் – லலிதா கஸ்தூரி கண்ணன்
மக்கள் தொடர்பு – R.குமரேசன்

Kollywood horror thriller Siivi sequel is ready

More Articles
Follows