சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய அடுத்த பிரபலம்.?

சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய அடுத்த பிரபலம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo stillsசிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ரெமோ.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீடு ஆகஸ்ட் இறுதியிலும் படத்தின் சென்சார் செப்டம்பரிலும் நடைபெற உள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளரான ஆர் டி ராஜா, தன் முதல் பட தயாரிப்பையே பிரம்மாண்டமாக செய்து வருகிறார்.

மேலும் விளம்பரங்களையும் வித்தியாசமான முறையில் கையாண்டு வருகிறார்.

கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய ஏரியாக்களின் உரிமைகள் விற்ற நிலையில், தற்போது வட ஆற்காடு, தெற்கு ஆற்காடு ஏரியாக்களை எஸ் பிக்சர்ஸ் சார்பாக ஜி.சீனிவாசன் என்பவர் வாங்கியிருக்கிறாராம்.

சிம்புவுடன் நடிக்க காத்திருந்த நடிகை காலமானார்

சிம்புவுடன் நடிக்க காத்திருந்த நடிகை காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu stillsஜி.வி. பிரகாஷ் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இப்படத்தில் மனீஷா யாதவின் பாட்டியாக பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று மரணமடைந்தார்.

இதுகுறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

“சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) படத்தை இயக்கிவருகிறேன்.

என்னுடைய இரண்டாவது படத்திலும் ஜோதி லட்சுமிக்கு ஒரு கேரக்டர் கொடுத்திருந்தேன்.

ஆனால் அவர் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்தார். அதற்குள் அவரை மரணம் தழுவிக் கொண்டது” என்று தெரிவித்தார்.

பின்குறிப்பு: ‘ராகம் தாளம் பல்லவி’ படத்தில் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, மாயா என்று மூன்று கவர்ச்சி நடிகைகளை ஒரே பாடலுக்கு நடனமாட வைத்தவர் டி. ராஜேந்தர்.

இதில் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பற்றி பாப்ரி என்ன சொன்னார் தெரியுமா.?

விஜய் பற்றி பாப்ரி என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay 60 heroinesபரதன் இயக்கும் படத்தில் விஜய்யுடன் கீர்த்தி, அபர்ணா மற்றும் பாப்ரி கோஷ் உள்ளிட்ட மூன்று நாயகிகள் நடித்து வருவது பற்றிய செய்தியை நாம் பார்த்தோம்.

இந்நிலையில் விஜய்யுடன் நடித்து வருவது பற்றி பாப்ரி கோஷ் சமீபத்தில் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில்…

‘சூட்டிங்கில் சற்று ஓய்வு நேரம் கிடைத்தால், ஜஸ்ட் தரையில ஒரு பாய் போட்டு அங்கேதான் ஓய்வு எடுப்பார்.

ஒரு மிகப்பெரிய நடிகரான விஜய் சாரின் அந்த எளிமையை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

‘றெக்க’ கட்டி பறந்த விஜய்சேதுபதி-லட்சுமிமேனன் ஜோடி

‘றெக்க’ கட்டி பறந்த விஜய்சேதுபதி-லட்சுமிமேனன் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and lakshmi menonவிஜய்சேதுபதியின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக உள்ளதாலோ என்னவோ அவரது படப்பிடிப்பை இந்தியாவிலேயே நடத்தினர்.

சொல்லப்போனால் பெரும்பாலும் தமிழகத்திலேயே நடத்தினர்.

தற்போதுதான் ஒரு சினிமா படப்பிடிப்புக்காக முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ளார்.

ரத்னசிவா இயக்கும் றெக்க படத்திற்காக பாங்காங் சென்றுள்ளார்.

இவருடன் நாயகி லட்சுமி மேனன் உள்ளிட்ட படக்குழுவினரும் சென்றுள்ளனர்.

தற்போது இவர்களின் இரண்டு டூயட் பாடல்கள் அங்கே படமாக்கப்பட்டு வருகிறதாம்.

தனுஷுடன் மோதும் ‘கபாலி’ வில்லன் டோனி லீ

தனுஷுடன் மோதும் ‘கபாலி’ வில்லன் டோனி லீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

winston chao kabali villainதனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படம் செப்டம்பர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நாளில் மற்ற தமிழ் படங்கள் வெளியாகிறதா? என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஜாக்கிசான் நடித்த ஸ்கிப் ட்ரேஸ் (Skip Trace) என்ற படத்தின் தமிழ் பதிப்பு வெளியாகவுள்ளது.

இதில் கபாலி படத்தில் ரஜினியை மிரட்டும் சீன வில்லன் டோனி லீயாக நடித்த வின்ஸ்டன் சவோ நடித்துள்ளார்.

இதிலும் ஜாக்கிசானுக்கு வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு தமிழில் இரு கில்லாடிகள் என பெயரிட்டுள்ளனர்.

பர்த்டே பப்ளி ஹன்சிகா… இவர் மனசு யாருக்கு வரும்.?

பர்த்டே பப்ளி ஹன்சிகா… இவர் மனசு யாருக்கு வரும்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hanshiநடிகை ஹன்சிகா தனது 25வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஆதவரற்ற குழந்தைகளை தத்தெடுத்து வருகிறார் இவர்.

திருமணம் ஆகாமலே ஒரு தாயுள்ளதோடு கிட்டதட்ட 27க்கும் மேற்பட்ட குழந்தைகளை வளர்ந்து வருகிறார்.

மேலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சிகிச்சைக்கும் உதவியுள்ளார்.

விரைவில் மும்பையில், ஒரு இல்லம் அமைத்து, அதில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு அளிக்க இருக்கிறார்.

இந்நிலையில், இன்று தன் ட்விட்டர் பக்கத்தில்….

“25 வயதாகும் முன்னர் என் அம்மா என் தலையை வாரி விடுகிறார்” என கூறி அவர் அம்மா தலை வாரும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

வாழ்த்துக்கள் ஹன்சிகா

More Articles
Follows