தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெரும்பாலும் ரஜினிகாந்த் தன் பட சூட்டிங்கை முடித்துவிட்டு ஓய்வெடுக்க இமயமலை செல்வது வழக்கம். ஆனால் சமீப காலமாக படங்களை முடித்துவிட்டு இமயமலை செல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்.
தற்போது ‘ஜெயிலர்’ மற்றும் ‘லால் சலாம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.
இந்த படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற ‘காவாலா மற்றும் ஹூக்கும்… ஆகிய பாடல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘டைகர் கா ஹூக்கும்…. தலைவர் அலப்பறை…’ என்ற பெயரில் நேற்று ஒரு பாடல் வெளியானது. இதில் ரஜினிகாந்த் மிகவும் ஸ்டைலிஷ் ஆக மாஸாக வருகிறார்.
எனவே அந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ரஜினிகாந்த் தற்போது மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு ஓய்வெடுத்து வருகிறார். சிவப்பு டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து ரஜினிகாந்த் கூலாக கடற்கரையில் ஓய்வெடுக்கும் புகைப்படங்களை ரசிகர் ஒருவர் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு பக்கம் ரீல் ரஜினி.. ஒரு பக்கம் ரியல் ரஜினி என புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Reel Rajinis Jailer & Real Rajini Maldives stills goes viral