‘பொன்னியின் செல்வன் 2’ தமிழக உரிமையை தட்டி தூக்கிய உதயநிதி

‘பொன்னியின் செல்வன் 2’ தமிழக உரிமையை தட்டி தூக்கிய உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு 2022ல் வெளியானது.

மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியள்ள இந்த படத்தில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி சரத்குமார் ஐஸ்வர்யா ராய் த்ரிஷா ஐஸ்வர்ய லட்சுமி பார்த்திபன் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Red Giant Movies bagged Tamil Nadu theatrical distribution for Ponniyin Selvan 2

LCU வை நோக்கி செல்கிறதா லியோ. படப்பிடிப்பில் இணைந்தார் விக்ரம் பட நடிகர் !

LCU வை நோக்கி செல்கிறதா லியோ. படப்பிடிப்பில் இணைந்தார் விக்ரம் பட நடிகர் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொழில் நுட்ப கலைஞர்கள் அடங்கிய லியோ வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படத்தின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் விரைவில் துவங்கி செட் வேலைகள் நடந்து வருகிறது.

மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ‘லியோ’ படத்தின் நட்சத்திரக் குழுவில் இணையவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனரின் முந்தைய படங்களான ‘கைதி’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய படங்களை இணைக்கும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் கீழ் இந்தப் படம் வருமா என்ற யூகம் நீண்ட நாட்களாகவே உள்ளது. ஃபஹத் களமிறங்கியதால் LCU கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

‘Vikram’ movie star joining Vijay’s ‘Leo’ further confirming LCU?

3வது முறையாக இணைந்த மகேஷ்பாபு & திரிவிக்ரம்.; டைட்டில் இல்லாமலே ரிலீஸ் தேதி அறிவிப்பு

3வது முறையாக இணைந்த மகேஷ்பாபு & திரிவிக்ரம்.; டைட்டில் இல்லாமலே ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு மகேஷ் பாபு மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் ஹாட்ரிக் பிளாக்பஸ்டராக உருவாகி வருகிறது SSMB28.

இந்த முறை, கதையின் களம், மேக்கிங், தொழில்நுட்பம், மகேஷ் பாபுவின் கதாபாத்திரம் என அனைத்துமே முந்தைய இரண்டு படங்களை விட அட்டகாசமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும்.

இப்படத்தில் மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பைப் மெருகேற்றி, இதுவரையில் காணாத மகேஷ்பாபுவை ரசிகர்களுக்காக திரையில் கொண்டு வந்துள்ளார்.

ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் வெளியீட்டு தேதியை, மகேஷ் பாபுவின் கதாப்பாத்திர லுக்குடன் கூடிய ஒரு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளனர்.

இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும், #SSMB28 திரைப்படம் ஜனவரி 13, 2023 அன்று சங்கராந்தி விழாக்கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகும். இந்த போஸ்டரில் மகேஷ் பாபு ஸ்டைலான தோற்றம் மற்றும் லேசான தாடியுடன் அழகின் உருவமாக, சிகரெட் புகைத்து கொண்டு சாலையில் நேர்த்தியாக நடந்து செல்கிறார்.

மேலும் போஸ்டரில் அடியாட்கள் அவரை வணங்குகிறார்கள். இந்த போஸ்டர் பொதுமக்களையும், திரைப்பட ரசிகர்களையும் ஒரு சேர மகிழ்விக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் சார்பில் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தைத் தயாரிக்கிறார். குடும்ப அம்சங்களுடன் கூடிய ஆக்‌ஷன் கலந்த இந்த என்டர்டெய்னரில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

மகேஷ் பாபுவை இதுவரை பார்த்திராத கேரக்டரில் காண்பிக்க, இயக்குநர் திரிவிக்ரம் தனித்தன்மையுடன் கூடியதொரு கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

#SSMB28 படத்தை தேசிய விருது பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நவின் நூலி எடிட்டிங் செய்கிறார், கலை இயக்குநராக AS பிரகாஷ், இசையமைப்பாளராக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் S தமன் மற்றும் ஒளிப்பதிவாளராக PS வினோத் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

SSMB 28 to release on 13 January 2024

BREAKING : ஷங்கர் உடன் இணைந்து கேம் சேஞ்சர் ஆன ராம் சரண். RC 15 டைட்டில் வெளியானது!

BREAKING : ஷங்கர் உடன் இணைந்து கேம் சேஞ்சர் ஆன ராம் சரண். RC 15 டைட்டில் வெளியானது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிக்கும் அரசியல் திரில்லர் படத்திற்கு கேம் சேஞ்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தற்காலிகமாக RC15 என்று பெயரிடப்பட்டது.

மார்ச் 25 அன்று, ராம் சரணின் பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டங்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இன்று, ராம் சரணின் பிறந்தநாளில், அவர் ஷங்கர் படத்தில் நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்தார். இதற்கு ‘கேம் சேஞ்சர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது, மேலும் ராம் சரண் தலைப்பை வெளிப்படுத்தும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அது தற்சமயம் வைரலாகி வருகிறது.

Ram Charan’s next with Kiara Advani titled Game Changer

BREAKING நடிகர் அரசியல்வாதி இன்னசென்ட் Innocent காலமானார்.; குஷ்பூ & ரவீணா இரங்கல்.; வாழ்க்கை குறிப்பு

BREAKING நடிகர் அரசியல்வாதி இன்னசென்ட் Innocent காலமானார்.; குஷ்பூ & ரவீணா இரங்கல்.; வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரை உலகில் பிரபலமான நடிகர் இன்னசென்ட்.

1970-களில் இவரது கலை பயணத்தை தொடங்கினார். அந்த சமயங்களில் சென்னை கோடம்பாக்கத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த கதைகளை இவர் அடிக்கடி பகிர்வதும் உண்டு.

அப்போது பிரபலமான உமா லாட்ஜின் மாடியில் படுத்து உறங்கிய பழைய நாட்களை நினைவு கூர்வார்.

கடந்த 50 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் காமெடியன் & குணசித்திர கேரக்டர் என பல்வேறு வேடங்களில் நடித்த வருகிறார்.

இவர் நடிக்கும் படங்களில் இவர் விதவிதமான தொப்பிகளை அணிவார்.

கிட்டத்தட்ட 750 மேற்ப்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். மலையாளம், தமிழ், இந்தி, கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டிய இவர் ஒருமுறை பாராளுமன்ற எம்பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். (Innocent had won from the Chalakudy constituency in the 2014 Lok Sabha elections)

மேலும் கேரள நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 2003 இல் இருந்து 2018 வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருந்தார். (President of the Association of Malayalam Movie Artistes (A.M.M.A.).

பிருதிவிராஜ் சுகுமாரனின் 2022 வெளியான படமான கடுவா என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக கேன்சர் பிரச்சனை இருந்துள்ளது. ஆனால் 2015 இல் அவர் முற்றிலுமாக விடுபட்டதாக அறிவித்தார்.

ஆனாலும் சமீபத்தில் அது பற்றிய உருக்கமான கடிதம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

நோய் தீவிரம் அடைந்ததை ஒட்டி இவர் கொச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனை தரப்பில் கடிதம் வெளியானது… அதில்.. மூத்த மலையாள நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான இன்னசென்ட்-இன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ECMO வழங்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

(எக்ஸ்ட்ராகார்போரல் மெம்பிரேன் ஆக்சிஜனேற்றம் (ECMO) என்பது இருதய நுரையீரல் செயல்பட வழங்கப்படும் ஒரு வடிவமாகும்.)

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மார்ச் 26 ஆம் தேதி இரவு 11 மணியளவில் மரணம் அடைந்தார்.

இவரின் மறைவு நடிகை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் டப்பிங் கலைஞரும் தமிழ் மற்றும் மலையாள சினிமா நடிகையுமான ரவீனா ரவி தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகரை இழந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் மலையாள ரசிகர்களும் மலையாள திரையுலகினரும் தங்களது இரங்கல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கூடுதல் தகவல்..

பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இன்னொசென்ட்.

3 முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார்.

புற்றுநோயிலிருந்து தான் மீண்டு வந்தது குறித்து அவர், ‘லாஃப்டர் இன் தி கேன்சர் வார்ட்” (Laughter in the Cancer Ward) என்ற புத்தகத்தையும் எழுதினார்.

மேலும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தி வந்தார்.

1980 களில், அவர் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 40 படங்களில் நடித்தார்.

பரதன் இயக்கிய ‘ஓர்மக்கை’ மற்றும் கேஜி ஜார்ஜ் இயக்கிய ‘லேகாயுதே மரணம் ஒரு பிளாஷ்பேக்’ போன்ற படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இன்னசென்ட் இருந்துள்ளார்.

பல படங்களை தயாரித்தவர் இன்னசென்ட். ‘விடா பறையும் முன்பே’ படத்தை வங்கி ரோல் செய்வதற்காக தனது மனைவியின் தங்க ஆபரணங்களை அடகு வைத்தார்.

ஒருமுறை தேர்தலில் தோற்ற அன்று.., தனது நகைச்சுவையான பாணியில், மக்கள் தன்னை திரைப்படங்களுக்குத் திரும்பச் சொன்னார்கள் என்று கூறினார் இன்னசென்ட்.

Malayalam actor Innocent passes away at 75

லியோ விஜய் பற்றிய பாபு ஆண்டனியின் பதிவு வைரல்!

லியோ விஜய் பற்றிய பாபு ஆண்டனியின் பதிவு வைரல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி லியோவில் விஜய்யுடன் பணியாற்றியது குறித்து போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.பூவிழி வாசலிலே, சூரியன், விண்ணை தாண்டி வருவாயா படங்களில் என் நடிப்பை பார்த்து எனக்கு ரசிகனாக மாறியதாக விஜய் என்னிடம் கூறியது எனக்கு பேரின்பத்தை தந்தது என தெரிவித்துள்ளார். தளபதி விஜயை முதன் முதலில் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம் என மனதார பாராட்டியுள்ளார்.

Babu Antony post about Vijay goes viral

More Articles
Follows