தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மாஸ்டர் படம் 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் மாஸ்டரை அமேசான் ப்ரைமில் பார்க்க முடியும் என்பது மகிழ்ச்சி என அமேசான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார் விஜய்.
தியேட்டரில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு கிடைக்காத பகுதிகளில் இருக்கும் ரசிகர்கள் மாஸ்டரை பார்க்க முடியும்” எனவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ்.
இந்த படம் வெளியான 10 நாட்களில் வசூல் 200 கோடி ரூபாயை கடந்து விட்டது என கூறப்படுகிறது.
ஒருவேளை படம் வசூல் வேட்டை செய்வது உண்மை என்றால் 16 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய என்ன காரணம்?
திரையரங்கு உரிமையாளர்கள் முறையாக வசூல் கணக்கை காட்டாமல் தில்லு முல்லு செய்திருப்பதால் ஏற்பட்ட இழப்பே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
தியேட்டர்களில் (அரசுக்கு தெரியாமல்) முறைகேடாக 100% இருக்கைகள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் திரையரங்கு நிர்வாகத்தினரோ 50% மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறி தயாரிப்பாளருக்கு கணக்கு காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் தியேட்டரிலேயே 500, 800, 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்ற நிலையில் தயாரிப்பாளருக்கு சாதாரண டிக்கெட் கட்டணம் மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளதாம்.
அதன்படி மாஸ்டர் தயாரிப்பாளருக்கு வரவேண்டிய பங்கு தொகையில் ரூ 50 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது வரை திரையரங்கு பங்கு தொகை 65 கோடி ரூபாய் மட்டுமே என்று கூறப்படுகிறது.
அமேசானில் ஓடிடி வெளியாவதால் மாஸ்டர் தயாரிப்பாளருக்கு கூடுதலாக 20 கோடி ரூபாய் வரை கிடைக்கும் எனவும் தெரிகிறது.
Reason behind Master OTT release quickly
