நல்ல நேரம் பார்த்து கட்சியை அறிவிக்கும் பகுத்தறிவாளர் கமல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அரசியல் கட்சி அறிவிப்பை இன்று காலை கமல் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று மாலை மதுரையில் நடைபெறும் கூட்டத்தில்தான் கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார்.

அதற்கு காரணம் இன்று வளர்பிறை என்பதாலும் துக்லா பட்சம் (பரணி) என்பதாலும் அப்போதுதான் அறிவிக்கிறாராம்.

ஆன்மிக நம்பிக்கையில்லாத பகுத்தறிவாளர் கமல் இப்படி செய்யலாமா? என விவரமறிந்தவர்கள் கேட்கின்றனர்.

6 அத்தியாயம் படம் பார்த்த பிரபலங்களின் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாரதிராஜா

தெளிவான சிந்தனை, சரியான திட்டமிடல் , புதிய வகை கதை சொல்லல், என தமிழ்சினிமாவை புது தளத்திற்கு அழைத்து செல்லும் இந்த 6 அத்தியாயம்.

இயக்குனர் ஏ.வெங்கடேஷ்

ரொம்பவே வித்தியாசமான முயற்சி , 6 கதைகளின் முடிவும் ஆச்சரியபடுத்துகின்றன, நிச்சயம் வெற்றி பெறும். 6 இயக்குனர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குனர் அறிவழகன்

இந்த படத்தில் கையாளப்பட்ட திரைக்கதை யுக்தி பார்வையாளர்களின் துடிப்பை இறுதிவரை பரபரப்பாகவே வைத்திருக்கும். அதுவே இதன் வெற்றி!

இயக்குனர் ரவிகுமார்

இந்த ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திறமையான 6 இயக்குனர்கள் மற்றும் நிறைய இளம் டெக்னிசியன்களை அறிமுகவாவதே இதன் சிறப்பு.

இயக்குனர் தாமிரா

ஒரே படத்தில் பலவித வண்ணங்கள் பலவித சுவைகள் உங்களை சுவாரசப்படுத்தும்.

இயக்குனர் மீராகதிரவன்

ஆறு இயக்குனர்களின் பார்வையில் ஆறுவிதமான பேய்கள் பற்றிய அலசல் தமிழ்சினிமா கண்டிராத புதிய முயற்சி.

தயாரிப்பாளர் / இயக்குனர் சுரேஷ்காமாட்சி

தமிழ்சினிமா எப்போதுமே புதுவகை முயற்சிகளுக்கு கை கொடுக்கும் , அதன்படி இந்த 6அத்தியாயம் தமிழ்சினிமாவின் புது அத்தியாயமாக வெற்றி பெறும்.

இயக்குனர் கே.எஸ் .தங்கசாமி

ஒரு திரைப்படம் 6 திரைகதைகள் & 6 களங்கள் , 6 இயக்குனர்கள், இந்த திரைப்படம் மூலமாக நிறைய தொழில்நுட்ப கலைஞர்கள் அறிமுகம் ஆகிறார்கள் தயாரிப்பாளர் உட்பட, அனைவரும் திரைத்துறையில் சாதிக்க 6 அத்தியாயம் பாலமாக அமையும். நெஞ்சார்ந்த வாழ்த்துகள்…

நடிகை அதுல்யாரவி

ரொம்ப வித்தியாசமான முயற்சி, 6 விதமான கதைகள், யூகிக்க முடியாத கிளைமேக்ஸ் என இறுதிவரை பரபரப்பாக கொண்டுசென்றுள்ளனர் , நிச்சயம் வெற்றிபெறும்.

நடிகர் ராமதாஸ்

ஆறு புள்ளிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அழகிய கோலம் இந்த 6 அத்தியாயம்.

நடிகர் வின்செண்ட் அசோகன்

சிரிப்பு , ஆச்சரியம் , காதல் , பயம் , அமானுஷ்யம் , மிரட்சி என அனைத்துமே ஒரே படத்தில் , எதிர்ப்பார்ப்பில்லாமல் சென்ற எனக்கு வியப்பில் ஆழ்த்தியது இந்த 6 அத்தியாயம்.

மனுஷ்யபுத்திரன்

குறும்படங்களுக்கும், திரைப்படங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருப்பதே இது போன்ற படங்களும் அதன் கருத்தாக்கமுமே.

மின்னம்பலம்

மிகக் குறைவான செலவில் (ஓரிரு லட்சங்கள்) ஒவ்வொரு படமும் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறியும்போது ஆச்சர்யமாக உள்ளது. இவ்வளவு சிக்கனமாக எடுக்கப்பட்ட படமும் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தர முடியும், பார்வையாளர்களின் ஆவலைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்னும்போது கோடிகள் கொட்டப்பட்டு உருவாகி விரைவில் திரையரங்குகளிலிருந்து விடைபெற்றுச் செல்லும் படங்கள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகின்றன. பார்வையாளர்களைக் கவர அளவு முக்கியமில்லை என்பதை ‘6 அத்தியாயம்’ உணர்த்துகிறது.

அம்புலி ஹரிஸ்நாரயானன்

6 அத்தியாயம் படத்தின் ப்ரிவியூ ஷோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது… எதிர்பார்ப்புக்கு குறைவில்லாமல் ஆறு கதைகளும்… ஃப்ரெஷ்ஷாக இருந்தது… ஆறும் ஹாரர்தான்.. ஆனால், ஆறும் வேறு வேறு வகை ஹாரர்… அதுதான் இந்த படத்தின் பலம்.. மேலும், ஆறு கதைகளின் க்ளைமேக்சை முடிவாய் கோர்த்து ஒன்றாக சொன்ன முயற்சி நல்ல யுத்தி.

கூடுதல் போனசாய்… End Credits-ல் வரும் நண்பர் சாம் மற்றும் ம.கா.பா ஆனந்தின் பாடலான ‘குண்டுமல்லி ஒண்ணு வச்சிவிடவா’ பாடல் நல்லதொரு ஃபினிஷிங் டச்சாய் அனிமேஷன் அட்டகாசம்.

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்த தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் வடசென்னை மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வளர்ந்து வருகிறது.

மேலும் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் மே மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், வரலட்சுமி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வருகிறது ‘மாரி 2’.

இப்படப்பிடிப்பினை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.

இப்படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது.

இப்படத்தினை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்கவிருக்கிறது.

இதுகுறித்து இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறது.

அறம் படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷை இயக்கும் கோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து கோபி இயக்கிய படம் ‘அறம்’.

இப்படம் மிக பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து இப்படம் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று படக்குழு கூறியிருந்தது.

ஆனால் தற்போது நயன்தாரா பிசியாக உள்ளதால் இப்படம் சற்று தள்ளிப்போயுள்ளது.

இதனால் இடைப்பட்ட காலத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தை கோபி இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

தமிழகத்தின் 50 ஆண்டு கால தண்ணீர் பிரச்னையை சொல்லவரும் கேணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான்.

கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று.

ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது.

இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”.

“காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர்.

அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல் நடிகர்கள் பார்த்திபன், நாசர், தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் ரேவதி, அனுஹாசன், ரேகா, பார்வதி நம்பியார் என மிகப்பெரிய பட்டாளமே இந்த கதைக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நாளில் வெளியாகும் இப்படத்தை, மலையாளத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கியிருக்கும் எம்.ஏ.நிஷாத் இயக்கியிருக்கிருக்கிறார். “ஃபிராகிரண்ட் நேச்சர் ஃபிலிம்ஸ்” சார்பாக சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

மேலும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் கே.ஜே.ஜேசுதாஸ் இணைந்து “கேணி” திரைப்படத்திற்காக பாடியிருக்கும் “அய்யா சாமி” பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

பெண் கொடுமைக்கு எதிரான படம் தமிழனானேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழனின் தவறான மனப்போக்கால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன.

அதனை அன்றைய ஆதித்தமிழன் எதிர்கொண்டால் எப்படி அணுகுவான்? அதற்குத் தீர்வு காண எப்படி நடந்து கொள்வான்? என்பதைப் பேசும் படம் தான் ’தமிழனானேன்’

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ‘தமிழனானேன்’. கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கி நடித்திருக்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன், அவருக்கு ஜோடியாக வந்தனா வரதராஜன், நடித்துள்ளார்.

சரவணன், பிரீத்தா, திருலோகச்சந்தர், அத்விக், ஷக்தி, ஜான் போன்ற புதுமுகங்களும் நடித்துள்ளனர்.

விக்னேஷ் அருள் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகு ராமையா இசை அமைத்துள்ளார்.படம் பற்றி இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

“இது தொலைந்து போன நம் பாரம்பரியங்களைத் தேடும் கதை. மறைந்து போன நம் வீரக் கலைகளைத் தேடும் கதை. நம் ஆதி கலைகளைத் தேடுகிற படமாக இருந்தாலும் நவீன ஹாலிவுட் தொழில் நுட்பங்கள் படத்தில் பயன் படுத்தப் பட்டுள்ளன.

படம் மூன்று வித அடுக்காக இருக்கும். முதல் அடுக்கு என்பது இப்படத்தை ஒரு சாதாரண பார்வையில் பார்த்தால் ஒரு சாதாரண ஆக்‌ஷன் படம் போலத் தெரியும்.

இன்னொரு அடுக்கு என்பது ஒவ்வொரு காட்சியும் ஷாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும். ஒரு காட்சியைத் தவற விட்டாலும் படம் புரியாது.

மற்றொரு அடுக்கினை நோக்கினால் படத்தில் இருக்கும் தத்துவார்த்தக் கருத்துகள் தெரிய வரும்.

படத்தில் வரும் சண்டைக் காட்சிகளுக்கு யாருக்கும் டூப் போடப்படவில்லை . கயிறுகள், பஞ்சு மூட்டைகள் பயன்படுத்தப்படவில்லை.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலையும் காட்டவில்லை. எல்லாமே அசல் காட்சிகள் தான்.

இப்படம் இம்மாதம் 23 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது ” என்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன்.

More Articles
Follows