சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ நாயகி ராஷ்மிகா

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ நாயகி ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற ஒரு படம், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், மித்ரன் இயக்கத்தில் ஹீரோ, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதற்கு அடுத்து லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ள பட அறிவிப்பையும் அண்மையில் அறிவித்தனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சூட்டிங்கை இந்தாண்டு ஜூலையில் தொடங்கவுள்ளனர்.

தற்போது முதற்கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில் தெலுங்கில் ஹிட்டான கீதா கோவிந்தம் பட நாயகி ராஷ்மிகா மந்தனாவை நாயகியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ஏற்கெனவே பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலும் ராஷ்மிகா தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விரைவில் இணைய உள்ளதாக செய்தி வந்தது. படக்குழுவோ திரைக்கதை பணிகள் இன்னும் முடியவில்லை.

தென்சென்னையை மீண்டும் தன் வசமாக்கும் Dr ஜெ.ஜெயவர்தன் MP?

தென்சென்னையை மீண்டும் தன் வசமாக்கும் Dr ஜெ.ஜெயவர்தன் MP?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Current MP Dr J Jayavardhan and South Chennai constituency news updatesவருகிற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

மேலும் 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் சிறந்த ஆளுமைகளாக விளங்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் மறைவுக்கு பின்னர் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால் தமிழகத்தை இந்திய அரசியலே உற்று கவனித்து வருகிறது.

இந்நிலையில் தென் சென்னை தொகுதி மற்றும் அதன் வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தன் குறித்து காண்போம்.

கடந்த 2008-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி தென்சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இணைக்கப்பட்டன.

இந்த தொகுதியில் 2009-ல் நடைபெற்ற தேர்தலில் திரு சி ராஜேந்திரன் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 3,08,567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 42.38 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பின்னர் கடந்த 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

அப்போது தமிழத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது.

அச்சமயம் டாக்டர் ஜெயவர்தன் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். இவர் இந்த தொகுதியில் வசித்து வருகிறார்.

இவர் 4,34,540 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 41.34 விழுக்காடாகும்.

தற்போது இந்த 2019 தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் மீண்டும் அதே வெற்றி உற்சாகத்துடனும் களம் காண்கிறார்.

தென் சென்னை தொகுதி மக்களிடம் எந்த கெட்ட பெயரும் வாங்காமல் நல்ல திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளவர் இவர்.

இவரை எதிர்த்து திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.

இளம் வேட்பாளரும் அடிப்படையில் மருத்துவருமான Dr. ஜெ.ஜெயவர்தன் M.P அவர்களுக்கா? அல்லது தொகுதிக்கு அறிமுகமே இல்லாத தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கா? என்பதை சில நாட்கள் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது என கள ஆய்வு செய்யும் நிபுணரிடம் கேட்டபோது…

“தென்சென்னையில் இம்முறை தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இரண்டு மாபெரும் தலைவர்களும் இல்லாமல் தமிழகத்தின் பிரதான இருபெரும் கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.

தென்சென்னையை பொறுத்தவரை தொகுதியில் சிறப்பாக பணியாற்றி கெட்டபெயர் எதுவும் எடுக்காமல் தொகுதிக்கு அறிமுகமான Dr. ஜெ. ஜெயவர்தனுக்கு அறிமுகம் ஏதும் தேவையில்லை.

ஆனால் திமுகவை பொறுத்தவரை அவர்களுது வேட்பாளருக்கே முதலில் அறிமுகம் தேவை.” என்றனர்.

1977 மற்றும் 1980-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியிலிருந்து போட்டியிட்ட திரு ஆர் வெங்கட்ராமன் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பணியாற்றியதுடன் பின்னர் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத்தலைவராகவும் (1910-2009) பணியாற்றினார் என்பது கூடுதல் தகவல்..

Current MP Dr J Jayavardhan and South Chennai constituency news updates

Current MP Dr J Jayavardhan with TN CM EPS

விமலுக்கு வில்லனாக பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ?

விமலுக்கு வில்லனாக பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Public Star Durai Sudhakar as baddie in Kalavani 2விமல் மற்றும் ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கிய முதல் படம் களவாணி.

இப்படம் அனைத்து சென்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது.

தற்போது களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் சற்குணம்.

முதல் பாகத்தில் நடித்த பலரும் இந்த பாகத்திலும் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் மயில்சாமி, பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் இணைந்துள்ளனர்.

இதில் துரை சுதாகர் வில்லன் வேடம் ஏற்றுள்ளதாகவும், அவரின் வில்லன் கேரக்டர் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இடம்பெற்ற ஓட்டு கேக்க வந்தாய்ங்களா… பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் வருகிற மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Public Star Durai Sudhakar as baddie in Kalavani 2

தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரஜினியின் அதிரடி ஆரம்பம்

தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரஜினியின் அதிரடி ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth plans to Start Thalaivar 166 on 10th April 2019பேட்ட படத்தை முடித்துவிட்டு ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக ஓரிரு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அப்படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இது ரஜினி நடிப்பில் உருவாகும் 166வது படமாகும். எனவே தலைவர் 166 என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

நாயகியாக நயன்தாரா நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி இப்பட சூட்டிங்கை மும்பையில் தொடங்கவிருக்கிறார்களாம்.

ரஜினி நடித்த பாட்ஷா படம் மும்பையை கதைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Rajinikanth plans to Start Thalaivar 166 on 10th April 2019

ரஜினியின் ‘காலா’ பன்ச் டயலாக்கை பாடலாக்கிய ஹிப் ஹாப் ஆதி

ரஜினியின் ‘காலா’ பன்ச் டயலாக்கை பாடலாக்கிய ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hip Hop Aadhi used Rajinis Punch dialogue for his Natpe Thunai movieடைரக்டர் சுந்தர் சி. தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள படம் நட்பே துணை.

பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் வேங்கமகன் ஒத்தையில நிக்க மொத்தமா வராங்களே என்ற பாடல் தொடங்குகிறது.

இந்த பாடலின் லிரிக் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்பாடலை சின்னப்பொண்ணு மற்றும் ஹிப்ஹாப் ஆதி இணைந்து பாடி உள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் க்யா ரே செட்டிங்கா… வேங்க மகன் ஒத்தையில நிக்கேன். தில்லு இருந்தா மொத்தா வாங்களேன்.. என்ற பன்ச் டயலாக் இருக்கும்.

தற்போது இது பாடலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hip Hop Aadhi used Rajinis Punch dialogue for his Natpe Thunai movie

கமல் 1… ரஜினி 3… இது சிபிராஜ் போடும் டைட்டில் கணக்கு

கமல் 1… ரஜினி 3… இது சிபிராஜ் போடும் டைட்டில் கணக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sibiraj next movie titled Shiva Directed by Dharani Dharanசத்யராஜ் மற்றும் சிபிராஜ் இணைந்து நடித்த ‘ஜாக்சன் துரை’ படத்தை இயக்கினார் தரணிதரன்.

இப்படம் வெற்றி படமாக அமையவே தற்போது சிபிராஜை மீண்டும் இயக்கவுள்ளார் தரணிதரன்.

இப்படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறாராம். இவர்கள் இருவரும் ஏற்கெனவே சத்யா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இப்படத்திற்கு சிவா என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல் படத்தலைப்பான ‘சத்யா’ என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்தார் சிபிராஜ்.

அதற்கு முன்பே போக்கிரி ராஜா என்ற ரஜினி படத்தலைப்பில் நடித்தார்.

சிபிராஜின் மற்றொரு படத்திற்கு ரங்கா என்ற ரஜினி படத்தலைப்பையே வைத்துள்ளனர்.

ஆக கமல் தலைப்பில் ஒரு படம்.. ரஜினி படத்தலைப்பில் 3 படம் என சிபிராஜ் நடித்துள்ளது (வருவது) இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த சிவா படத்தை காவ்யா மகேஷ் என்பவர் தயாரிக்கிறாராம்.

Sibiraj next movie titled Shiva Directed by Dharani Dharan

More Articles
Follows