தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், வசூல் பற்றியும் பேச்சுக்களும் எழுந்துள்ளன.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ரஞ்சித் கூறியதாவது…
கபாலி பார்த்துவிட்டு இயக்குனராக ஜெயித்துவிட்டீர்கள் என ரஜினி பாராட்டினார். மகிழ்ச்சி. இது வழக்கமான ரஜினி படம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
என்னை பொறுத்தவரை நான் ரஜினியை சரியான விதத்தில் பயன்படுத்தி உள்ளேன்.
அவருடைய படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. இது ரஜினி படம் என்பதே போதும்.
ஆனால் நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு மீடியாக்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை அனைவரும் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டனர்.
இந்த படத்தின் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்றது சரியல்ல. சென்னையிலுள்ள காசி தியேட்டரில் நான் படம் பார்க்க போன போது ரசிகர்களே வந்து என்னிடம் இதுபற்றி தெரிவித்தார்கள்.
எனக்கு அதிகாரம் இருந்தால் நிச்சயம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதை தடுத்திருப்பேன்.”
இவ்வாறு ரஞ்சித் தன் கபாலி அனுவங்களை தெரிவித்திருக்கிறார்.
