முதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம் எனும் பழமொழி எளிமையானதென்றாலும், பல துறைகளுக்கும் பொருந்தும் ஒரு சிறந்த பழமொழியாகும்.

ஒரு சினிமாவை பொறுத்தவரை இந்த பழமொழி இன்னும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. ஒரு திரைப்படத்திற்கு முதல் அபிப்ராயமாக விளங்குவது அதன் டீசர் தான். ஒரு ரசிகன் படத்திலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை மிகச்சரியாக எடுத்துக் கூறுவதாக, ரசிகனை திரைக்கு இழுக்கும் உத்தியாக, படத்தின் அடிப்படையை விளக்குவதாக அமைவது படத்தின் டீசர் தான். அந்த வகையில் மிகச் சிறந்த ஒரு டீசராக அமைந்திருக்கிறது சமீபத்தில் வெளியான நடிகர் சிபிராஜின் “ரங்கா” படத்தின் டீஸர்.

60 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய “ரங்கா” படத்தின் டீஸர் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் விமர்சகர்களையும், பிரபலங்களையும் ஒரு சேரக் கவர்ந்து பாராட்டுகளை பெற்றுள்ளது.

“பாஸ் மூவிஸ்”தயாரிப்பாளர் விஜய் கே செல்லைய்யா டீஸர் பற்றி கூறியது…
“இதனை நாங்கள் ஒரு மிகச் சிறப்பான தொடக்கமாக கருதுகிறோம். டீஸர் பார்த்துவிட்டு சினிமா நண்பர்கள் தந்த பாராட்டு இன்னும் உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது. அனைத்து பாராட்டும் இயக்குநர் DL வினோத் அவர்களுக்குரியது. இப்படத்தில் அவரது உழைப்பானது, திரைக்கதையிலிருந்து படத்தை உருவாக்கியது வரையிலும், மிகச் சிறப்பானது மேலும் இப்போது டீஸரை அவர் அளித்த விதம் அபாரமானது.
மேலும் இப்படத்தில் ரூபன் அவர்களின் எடிட்டிங்கும், ராம்ஜீவனின் பின்னணி இசையும் அர்வியின் அபாராமான காட்சியமைப்பும் மிகச் சிறப்பாக அழுத்தமாக கதையையும், கதாப்பாதிரங்களையும் எடுத்துக்காட்டியுள்ளது. இத்தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இனி வெளியாகப்போகும் டிரெய்லரில் இவர்கள் செய்யப்போகும் அதிசயங்களுக்காக காத்திருக்கிறேன்” என்றார்.

இப்படத்தை எழுதி இயக்குகியுள்ளார் DL வினோத், நாயகனாக சிபிராஜும் நாயகியாக நிகிலா விமலும் நடித்துள்ளார்கள். சதீஷ் , மோஹ்னீஸ் ரஹீஹா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களாக

இசை – ராம்ஜீவன்

எடிட்டிங் – ரூபன்

ஒளிப்பதிவு – அர்வி

கலை – அருண் சங்கர் துரை

பாடலகள் – தாமரை, விவேக், முன்னா சௌஹத் அலி

சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன்.

உடைகள் – சத்யா NJ, பாரதி BS

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா

விளம்பர டிசைன்ஸ் – 24 AM

ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

சந்தானம் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடிக்க இருக்கும் புதியபடம் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் ஒரு படத்தின் அறிவிப்பு பெரிய சர்ப்ரைஸை தருகிறது. முதன்முதலாக சந்தானம் மூன்று வேடமேற்று ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தின் கன்டெண்ட் முழுக்க முழுக்க ரசிர்களை சிரித்து மகிழ வைக்கும் என்கிறார்கள்

இதுவரைக்கும் உள்ள சந்தானம் காமெடிகளில் இது அதன் உச்சத்தை எட்டும் என்கிறார்கள். இப்படத்தை கே.ஜே ஆர் ஸ்டியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார், இவர் அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறார். மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படத்தையும், விஜய்சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க.பெ.ரணசிங்கம் படத்தையும் தயாரித்து வருகிறார். விஸ்வாசம் படத்தை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெளியீட்டவரும் இவரே. இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ். சினிஸும் இப்படத்தின் தயாரிப்பில் பங்கு பெறுகிறார். இவர் ஜெய்-அஞ்சலி நடிப்பில் வெளியான பலூன் படத்தை இயக்கியவர்.

இப்படத்தின் பெயர் என்ன என்பதை வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு அறிவிக்க இருக்கிறது படடீம்.

இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான படமாக இருக்கிறதுக்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பதோடு இப்படத்தை இயக்க இருப்பவர் மிகப் பிரபலமான எழுத்தாளர் கார்த்திக் யோகி என்பதும் தான். கார்த்திக் யோகி தமிழ்சினிமாவில் பல வெற்றிகரமான திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்தவர். இப்படக்குழுவினர் இது மிக வித்தியாசமான கிரியேட்டிவான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தில் நிச்சயம் சந்தானத்தின் ட்ரிபிள் அவதாரம் வேறலெவலில் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

வெகுவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. திறமை வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இண்ரஸ்டிங்கான நட்சத்திர பட்டாளமும் இப்படத்தில் இணைய இருப்பது கூடுதல் செய்தி. அந்த விவரங்கள் வெகுவிரைவில் அப்டேட் செய்யப்படும் என்கிறது படக்குழு. பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

BREAKING ரஜினிக்கு அடுத்துதான் விஜய்; சிம்புக்கு டைம் பிரச்சினை… : சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பல்வேறு கேள்விக்கு பதிலளித்தார்.

“ஆடை அணிவது அவரவர்களின் தனி மனித உரிமை. நம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றிருக்கிறார். அங்கு அவர் கோட் சூட் அணிந்திருக்கிறர்.

அது ஒரு குளிர் பிரதேசம். எனவே அதற்கு ஏற்பதான் உடை அணிய வேண்டும். இதனை கிண்டல் செய்பவர் மனநோயாளிகள்.

ஆயிரம் இருந்தாலும் அவர் நம் தமிழகத்தின் முதலமைச்சர். அதனை எப்படி இழிவாக பார்க்க முடியும்.

பெருந்தலைவர் காமராஜ் ரஷ்யா செல்லும்போது வேட்டி சட்டையுடன் சென்றார். அது இன்னும் பெருமையாக இருந்தது.

பின்னர் ரஜினி, விஜய் சிம்பு குறித்த கேள்விகளை கேட்டனர்.

சினிமாவில் ரஜினிகாந்திற்கு அடுத்த நிலையில் விஜய் இருக்கிறார். அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார்.
யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள், விஜய் கட்சி ஆரம்பித்தால் அதை வரவேற்பேன்.

சிம்பு படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதுதான் அவரது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.” என பதிலளித்தார் சீமான்.

Seeman talks about EPS Rajini Vijay and Simbu

கவுண்டமணியை கலாய்த்த வைபவ்; சிக்ஸர் பட ரிலீசில் சிக்கல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1991ல் பிரபு, குஷ்பூ, கவுண்டமணி நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவையே கலக்கிய படம் சின்னத்தம்பி.

இதில் மாலை கண் நோய் உள்ளவராக கவுண்டமணி நடித்திருப்பார்.

அந்த படத்தில் ஒரு காட்சியில்.. மாலை 6 மணிக்குள் தன் வீட்டிற்கு வந்துடுவார். அப்போது தன் தந்தை போட்டோவை பார்த்து…

டேய் தகப்பா.. ராத்திரியில என்ன பாவம் நீ செஞ்சியோ… எனக்கு 6 மணிக்கு மேல கண் தெரியல என்று திட்டுவார். ஆனா ஒன்னே ஒன்னுடா.. நான் கரண்ட் பில் கட்டணதேயில்லடா என்பார் கவுண்டமணி.

அதுபோல் இன்று வெளியாகும் சிக்ஸர் படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணி போட்டோவை வைத்து.. டேய் தாத்தா.. என குறிப்பிட்டு அதே டயலாக்கை வைத்து பட நாயகன் வைபவ் திட்டியிருப்பார்.

இந்த நிலையில் இன்று வெளியாகவுள்ள இந்த சிக்ஸர் படத்திற்கு கவுண்டமணி எதிர்ப்பு தெரிவித்து இப்பட தயாரிப்பாளர்களான தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படத்தையும், வசனங்களையும் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளனர் என்றும் அந்த காட்சியை நீக்க வற்புறுத்தியுள்ளார்.

மேலும் மன்னிப்பும் கேட்க வேண்டும் எனவும் மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீசில் தெரிவித்துள்ளனர் கவுண்டமணி.

அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வைபவ், பல்லக் லால்வாணி, சதீஷ், ராதாரவி, இளவரசு, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Goundamani send Legal notice to Sixer team to remove controversy scene

2 வாரத்திற்குள் 2 படங்கள் ரிலீஸ்; ஆச்சரியப்படுத்தும் ஆர்யா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெளன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் தற்போது இயக்கியுள்ள படம் மகாமுனி.

ஆர்யாவுடன் மகிமா நம்பியார் இந்துஜா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆர்யா நடித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானது.

இந்த காட்சிகளை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

செப்டம்பர் 6ல் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு சென்சார்போர்டு யு/ஏ வழங்கியுள்ளது.

இந்த படம் வெளியாகி 2வது வாரத்திற்குள் ஆர்யாவின் அடுத்த படம் ரிலீசாகவுள்ளது.

சூர்யாவுடன் ஆர்யா இணைந்துள்ள காப்பான் படம் செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது.

இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

Within 2 weeks Arya plans to release 2 movies

விலையில்லா விருந்தகம்.; வியக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் படங்கள் ரிலீசாகும் சமயத்தில் இவரது ரசிகர்கள் வித்தியாசமாக எதையாவது செய்து மக்களை கவர்ந்து விடுகின்றனர்.

மேலும் அவ்வப்போது மக்களுக்கும் நற்பணிகளை செய்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் உருவாக்கியுள்ள புதிய திட்டம் தான் விலையில்லா விருந்தகம்.

தினமும் காலை 7:35 முதல் 8:35 மணி வரை, ஓட்டலில் விலையில்லாமல் காலை உணவை உண்ணலாம்.

வருகிற ஒரு வருடத்திற்கு இது போல செய்யவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை, மதுரை, கடலூர், சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இதை செய்துள்ளனர்.

இவர்களின் இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Vilayilla Viruthangam Free food scheme by Vijay fans

More Articles
Follows