கடலுக்கு அடியில் படமாக்கப்பட்ட தேசப்பற்று படம் ‘காஸி’

கடலுக்கு அடியில் படமாக்கப்பட்ட தேசப்பற்று படம் ‘காஸி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghaziநம் இந்திய நாட்டைப் பற்றியும் நாட்டுப்பற்றைப் பற்றியும் பேசி வெளிவந்துள்ள பல படங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்தக் கால கப்பலோட்டிய தமிழன் தொடங்கி 1921, ஜெய்ஹிந்த்.மதராசப்பட்டினம் , லகான் வரை ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் தேசம் பற்றிப் பேசியவை.

அந்த வகையில் ஒரு படமாக ‘காஸி’ படமும் உருவாகியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் அடிப்படையில் படக்கதை உருவாகியிருக்கிறது.

கண் முன்னே எதிரில் நின்று போர் தொடுக்காமல் எதிரி நாடு மறைந்து கொண்டு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் நம் நாட்டின் மீது போர் தொடுக்கிறது. அதை நம் நாட்டு வீரர்கள் எப்படி எதிர்கொண்டு எதிர்க்கிறார்கள்?

எதிரிகளிடமிருந்து அவர்கள் எப்படி நம் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள் என்பதே கதைக்களம்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராணா டகுபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.டாப்சி தான் கதாநாயகி. இவர்களுடன் கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, ஓம்புரி, நாசர் போன்ற அனுபவ நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.

சங்கல்ப் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தை பிவிபி சினிமா நிறுவனம் மேட்டினி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது.

நீர்மூழ்கி கப்பல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் கடலிலும், கடலுக்கு அடியிலும் படமாக்கப்பட்டுள்ளன.

கடலில் எடுக்கப்பட்டவை மட்டுமல்ல படத்தில் வரும் அந்தக் கடலடிக் காட்சிகளும் ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தைத் தரும் என்கிறது படக் குழு.படத்தின் தணிக்கை முடிந்து விட்டது. யூ சான்றிதழ் பெற்றுள்ளது. இம்மாதம் 17 ஆம் தேதி வெளியாகிறது.

தேசம் பற்றிப் பேசும் இப்படம் மொழி எல்லை கடந்தது அல்லவா? ‘காஸி’ திரைப்படம் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

சிங்கம் படத்தின் வியாபாரமும் முதல் நாள் வசூலும்…

சிங்கம் படத்தின் வியாபாரமும் முதல் நாள் வசூலும்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

si 3ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள சி3 படம் நேற்று ரிலீஸ் ஆனது.

தமிழகத்தில் மட்டும் ரூ. 40 கோடிக்கு இப்படம் வியாபாரம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் தெலுங்கில் 18 கோடியும், இந்தியில் ரூ. 7 கோடியும், கேரளா மற்றும் கன்னடத்தில் ரூ. 5 கோடியும், சேட்டிலைட் ரைட்ஸ் ரூ. 15 கோடிக்கு விற்கப்பட்டதாம்.

இந்நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் முதல்நாளில் ரூ. 62 லட்சத்தை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஆந்திரா, கேரளாவில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Singam 3 movie box office collection report

சசிகலாவுக்கு எதிராக எம்ஜிஆரின் ஜோடி லதா.?

சசிகலாவுக்கு எதிராக எம்ஜிஆரின் ஜோடி லதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ops and sasikalaதமிழக முதல்வர் பதவி மற்றும் அதிமுக கட்சி இடையே பலத்த மோதல் வலுத்துள்ளது.

தமிழக எம்எல்ஏக்களில் ஒரு அணியினர் ஓ. பன்னீர் செல்வத்திற்க்கும் மற்றொரு அணியினர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எம்ஜிஆருடன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்த லதா அவர்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது… கட்சியை ஆரம்பித்து அதை வழிநடத்த எவ்வளவு சிரமப்பட்டார் எம்.ஜி.ஆர் என்பதை நான் அறிவேன்.

மக்கள் சேவைக்காக இக்கட்சியை ஆரம்பித்தார். அதன்பின்னர் ஜெயல்லிதா வழிநடத்தினார்.

ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுப்பது கடினம். ஆனால் அவரிடமே நல்ல பெயரை பெற்றவர் ஓ.பி.எஸ்.

இந்த குழப்பம் நிலை நீடித்தால் நானும் களத்தில் இறங்குவேன்” என கூறியுள்ளார்.

Old Actress Latha supports O Panneer Selvam

ஓபிஎஸ்-சசிகலாவை முந்திய ‘சிங்கம்’ சூர்யா

ஓபிஎஸ்-சசிகலாவை முந்திய ‘சிங்கம்’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Singam Suriyaகடந்த சில தினங்களாவே ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் மோதல் தமிழகத்தை ஆட்டி(சி) படைத்து வருகிறது.

இதனால் கூகுள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் வலைத்தளங்களில் இந்த செய்தியே அதிகளவில் பேசப்பட்டு டிரெண்ட் ஆனது.

இந்நிலையில் நேற்று சூர்யாவின் சிங்கம் 3 படம் வெளியானது.

அரசியல் பரபரப்பில் இப்படம் ரசிகர்களிடையே எடுபடாது என சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

மேலும் நேரலை ஜல்லிக்கட்டு போட்டியும் அதிக பார்வையாளர்களை கவரும் என கணித்தனர்.

ஆனால், சிங்கம் 3 படத்தை தான் தமிழக மக்கள் அதிகளவில் கூகுளில் தேடியுள்ளனர்.

இதனையடுத்துதான் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் ட்ரெண்டிங்கில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriyas trending on Singam3 release date

 

விஜய்க்கு ஜோடியாகும் ரஜினிகாந்த் பட நாயகி

விஜய்க்கு ஜோடியாகும் ரஜினிகாந்த் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sonakshi-Sinha-30பைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதனையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி, லைக்கா தயாரிக்கவுள்ள படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் ரஜினியுடன் லிங்கா படத்தில் டூயட் பாடியவர்.

மேலும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்திப் படமான அகிரா படத்திலும் சோனாக்ஷி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sonakshi sinha likely to join with Vijay 62 movie

அட! சமந்தா ஜெராக்ஸ் மாதிரியே இருக்காரே.? யார் இவர்.?

அட! சமந்தா ஜெராக்ஸ் மாதிரியே இருக்காரே.? யார் இவர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samanthaஉலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்க.. என்று நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டு இருப்போம்.

ஆனால் நம்மள போல இருக்கிற ஆள நாம பாத்து இருக்கமாட்டோம். (இரட்டையர்களாக இருந்தால் அது வேறுகதை.)

ஆனால் சில நடிகர், நடிகையர் போல் சிலர் இருப்பதை பார்த்து இருப்போம்.

அப்படி ஒருவர்தான் அமெரிக்காவில் வசித்துவரும் அஷு ரெட்டி (Ashu Reddy) என்பவர்.

இவர் அச்சு அசலாக, அதாவது சமந்தாவின் ஜெராக்ஸ் போலவே காணப்படுகிறார்.

அவரின் படங்கள் இதோ… (வித்தியாசம் கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம்…)

samantha model

More Articles
Follows