தனுஷ் படத்தில் ‘வாம்மா மின்னலே’ கேரக்டரில் பாகுபலி கலைஞர்

தனுஷ் படத்தில் ‘வாம்மா மின்னலே’ கேரக்டரில் பாகுபலி கலைஞர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இதில் ஒரு முக்கிய கேரக்டரில் பாகுபலி, காஸி படப்புகழ் ராணா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அவரது காட்சி நாம் கண் மூடி திறப்பதற்குள் வந்து செல்லும் காட்சி என கூறப்படுகிறது.

அதாவது மாயி படத்தில் வடிவேலு காமெடி காட்சியில் வாம்மா மின்னலே என்று ஒரு உருவம் தோன்றி மறையுமே அது போல கேரக்டர் எனவும் சொல்லப்படுகிறது.

அப்படி என்ன கேரக்டர் என்றுத்தானே யோசிக்கிறீர்கள்? நாங்களும்தான்.

இக்காட்சியை 30 நிமிடங்கள் படம் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி கமல் கருத்து

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassanஜல்லிக்கட்டு பிரச்சினையின் போதே கமல் தன்னுடைய பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து தமிழக முதல் அமைச்சர் பதவிக்கு அதிமுகவில் எழுந்த மோதலை தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்திற்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சட்டசபையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

ஆனால் அவையில் கடும் அமளி நடைபெற்று வருவதால் அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பு நடைபெறும் முன்பே தன் கருத்தை கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்…

அதில் ‘இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Kamal tweets about Tamilnadu Assembly majority issue

விஜய்-அஜித் படத்தயாரிப்பாளரின் படத்தில் சிவகார்த்திகேயன்?

விஜய்-அஜித் படத்தயாரிப்பாளரின் படத்தில் சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanமோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் தற்போது நயன்தாரா, ஸ்நேகாவுடன் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து பொன்ராம் இயக்கத்தில் சமந்தா உடன் ஜோடியாக நடிக்கிறார் சிவா.

இதன்பின்னர் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படங்களை முடித்துவிட்டு இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் சிவா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை விஜய் நடித்த கில்லி, சிவகாசி மற்றும் அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தயாரித்த ஏ.எம். ரத்னம் தயாரிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தகவல்கள் பரவியுள்ளன.

Sivakarthikeyan’s next with Producer AM Rathnam

கபாலி முதல் பாட்ஷா வரை ரஜினியுடன் பயணிக்கும் சாந்தனு

கபாலி முதல் பாட்ஷா வரை ரஜினியுடன் பயணிக்கும் சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mupparimanam release along with Baasha digital versionஅதிரூபன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள படம் முப்பரிமாணம்.

இப்படத்தின் டீசரை ரஜினியின் கபாலி படம் வெளியான போது, அத்துடன் இணைத்து வெளியிட்டனர்.

கபாலி படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இப்படத்தின் டீசர் திரையிடப்பட்டது.

இதனையடுத்து காதலர் தினத்தில் முப்பரிமாணம் படத்தின் பாடல்களை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

இந்நிலையில் முப்பரிமாணம் படம் வருகிற மார்ச் மாதம் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அன்றைய தினம் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படம் டிஜிட்டல் பதிப்பு வெளியாகவுள்ளது.

இது தற்செயலாக நடந்தாலும், ரஜினியுடன் தொடர்ந்து சாந்தனு பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Mupparimanam release along with Baasha digital version

அஜித்தை குறி வைக்கும் சிவகார்த்திகேயன்

அஜித்தை குறி வைக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IMG_20170217_140227மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு வேலைக்காரன் என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்த தலைப்பு பற்றிய அறிவிப்பை சற்றுமுன் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான இன்று வெளியிட்டனர்.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை மே 1ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினம் அஜித் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன்-நயன்தாரா இணையும் படத்தலைப்பு

சிவகார்த்திகேயன்-நயன்தாரா இணையும் படத்தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velaikkaran movie stillsஇன்று பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதற்கு ரசிகர்கள் முதல் திரையுலகினர் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு வேலைக்காரன் என்று பெயரிட்டுள்ளனர்.

More Articles
Follows