ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு ரெண்டு ஜோடி.?

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு ரெண்டு ஜோடி.?

Sonakshi sinhaமெர்சல் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இதன் சூட்டிங் வருகிற ஜனவரியில் தொடங்கவிருக்கிறது.

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை பார்த்தோம்.

இதில் ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் மற்றொரு நாயகியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் ரஜினியுடன் லிங்கா படத்தில் டூயட் பாடியவர்.

மேலும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்திப் படமான அகிரா படத்திலும் சோனாக்ஷி நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Rakul Preeti and Sonakshi Sinha  likely to team up with Murugadoss for Vijay 62

2018ல் ரஜினி-கமல்-விக்ரம்-சூர்யா இவர்களுக்கு 2; அஜித்-விஜய்க்கு மட்டும் 1

2018ல் ரஜினி-கமல்-விக்ரம்-சூர்யா இவர்களுக்கு 2; அஜித்-விஜய்க்கு மட்டும் 1

rajini kamal ajith vijay vikram suriyaதமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி-கமலுக்கு அடுத்த இடத்தை விஜய், அஜித் பிடித்துள்ளனர்.

இவர்களோடு விக்ரம், சூர்யா ஆகியோரும் தங்களுக்கான இடத்தை பிடித்துள்ளனர்.

இந்த 6 ஹீரோக்களும் முக்கியமாக கருதப்படும் நிலையில் இவர்களின் படங்கள் ஒரே ஆண்டில் வெளியானால் எப்படி இருக்கும்?

அதுவும் ஒவ்வொரு நடிகருக்கும் 2 படங்கள் வெளியானால், தமிழ் சினிமாவிற்கு அந்த ஆண்டு நிச்சயம் கொண்டாட்டமான ஆண்டாகத்தான் இருக்குமல்லவா?

தற்போது அந்த மகிழ்ச்சியான செய்தியைத்தான் பார்க்கப் போகிறோம்.

ரஜினி நடித்துள்ள 2.0 மற்றும் காலா ஆகிய 2 படங்களும் அடுத்த 2018ல் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேதிகள் இன்னும் உறுதியாகவில்லை.

அதுபோல் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய 2 படங்களும் 2018ல் ரிலீஸ் ஆகிறது.

இவர்களைப்போல் விக்ரம் நடித்து வருகின்ற துருவ நட்சத்திரம் மற்றும் ஸ்கெட்ச் ஆகிய 2 படங்களும் 2018ல் வெளியாகவுள்ளன.

சாமி 2 (சாமி ஸ்கொயர்) படமும் இந்தாண்டில் வெளியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் 2018 பொங்கலுக்கும் அடுத்து நடிக்கவுள்ள செல்வராகவன் படம் 2018 தீபாவளிக்கும் ரிலீஸ் என தெரிவித்துள்ளனர்.

இந்த 4 ஹீரோக்களும் தலா 2 படங்களை கொடுக்கவுள்ளனர்.

ஆனால் விஜய் மற்றும் அஜித் ஒரு படங்களையாவது நிச்சயம் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது.

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் 2018ல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அதுபோல் அஜித்தின் ஏதாவது ஒரு படம் 2018ல் வெளியாகும் என நம்பலாம்.

இதுவரை அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்? என்பதே கன்ப்யூஸ்னாகத்தான் உள்ளது என்பது வேறு கதை.

Tamil cinema 6 top stars have movie release in year 2018

இந்தியளவில் 2.0 பட ரிலீஸ் ஏற்படுத்திய குழப்பம்; சரி செய்யுமா லைகா?

இந்தியளவில் 2.0 பட ரிலீஸ் ஏற்படுத்திய குழப்பம்; சரி செய்யுமா லைகா?

2 point 0 movie stillsலைகா நிறுவனத்திற்காக ஷங்கர் ரூ. 400 கோடியில் உருவாக்கியுள்ள படம் 2.0.

ரஜினிகாந்த், அக்ஷ்ய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் இசை சமீபத்தில் துபாய் நாட்டில் வெளியிடப்பட்டது.

இப்படம் 2018 ஜனவரி 26 தேதியன்று வெளியாகும் என்று முன்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக ‘2.0’ படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதம் தள்ளிப் போய்விட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதற்கு முக்கிய காரணம் 2.0 படத்தின் வில்லன் அக்சய்குமார் நடித்துள்ள மற்றொரு ஹிந்தி படமான ‘பேடு மேன்’ (PAD MAN) என்ற படம்தான்.

இப்படமும் அதே ஜனவரி 26ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் புதிய குழப்பம் ஏற்பட்டது.

ரஜினிகாந்த்திற்கு இந்தியளவில் மிகப்பெரிய மாஸ் உள்ளதால், அவரது படங்கள் வெளியாகும் நாளில் மற்ற படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.

எனவே ரஜினியின் படம் தள்ளிப்போனால், நாம் நம் படத்தை வெளியிடலாமா? என்று ஆலோசிக்க ஆரம்பித்து விட்டனர் மற்ற தயாரிப்பாளர்கள்.

மேலும் கோடை விடுமுறை சமயத்தில் தங்கள் படங்களை வெளியிடலாம் என சில தயாரிப்பாளர்கள் நினைத்த்திருந்த நிலையில் 2.0 படம் அப்போது வெளியானால் தம் படம் பாதிக்கப்படுமே என்ற மற்றொரு குழப்பமும் உருவாகிவிட்டதாம்.

இதனால் சம்பந்தப்பட்ட 2.0 படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்தால் அனைவரது குழப்பமும் தீர்ந்துவிடுமே என்பது திரையிலகினரின் எதிர்பார்ப்பாகும்.

தலைவரும் முழுசா சொல்லலையே? தீராத குழப்பத்தில் ரஜினி ரசிகர்கள்

தலைவரும் முழுசா சொல்லலையே? தீராத குழப்பத்தில் ரஜினி ரசிகர்கள்

rajinikanth2.0 படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26, 2018 என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் திடீரென சில நாட்களாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

இதனால் ரஜினியின் மற்றொரு படம் காலா முன்பே வெளியாகுமா? என்ற சந்தேகம் உருவானது.

இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் நேற்று நள்ளிரவு துபாயில் இருந்து சென்னை வந்த ரஜினிகாந்த் சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ‘2.0’ படத்திற்கு முன்பாக ‘காலா’ படம் ரிலீஸ் ஆகாது என்பதை உறுதி செய்தார்.

ஆனால் 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை அவர் உறுதியாக சொல்லவில்லை.

எனவே தலைவரும் முழுசா சொல்லலையே என்று தீராத குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

ரஜினியின் காலா படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ரஜினியின் காலா படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

rajinikanth in kaalaரஜினிகாந்த்-ரஞ்சித்-தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் மும்பை கேங்ஸ்டர் படம் காலா.

இப்படம் மும்பையில் வாழ்ந்த நெல்லைத் தமிழர் ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இப்படம் அடுத்த 2018 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராஜசேகரன் என்பவர், காலா படத்தின் மூலக்கரு மற்றும் தலைப்பு என்னுடையது என்றும் அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வரவே, அப்போது, காப்புரிமை சட்டத்தின் கீழ்தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும் என காலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட கோர்ட், மனுதாரர் ராஜசேகரனை, சென்னை ஐகோர்ட்டில் முறையிட அறிவுறுத்தியதுடன் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சிவாஜியின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழும் சிவாஜியும் விழா

சிவாஜியின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழும் சிவாஜியும் விழா

Sivaji Ganesan 90th Birthday Celebrationsஅகமதாபாத் தமிழ் சங்கம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜியின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு ”சிவாஜியும் தமிழும்” என்ற தலைப்பில் மாபெரும் விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது.

விழாவில் அகமதாபாத் தமிழ் சங்க தலைவர் முனைவர். எஸ். கவிதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்களின் நிறுவன வேந்தர் தா.இரா. பாரிவேந்தர் தலைமை வகித்தார்.

விழாவில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.பி. சந்தோஷம், வசந்த் அன்ட் கோ தலைவரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ., புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து, நக்கீரன் தமிழ் சங்க பொதுச்செயலாளர் மீடியா பாஸ்கர் மற்றும் கவிஞர் இன்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டார். ”தேசியத்திற்கு சிவாஜி” என்ற தலைப்பில் எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

அந்த காலத்தில் சிறந்த நடிகர்கள் இருந்தனர். அவர்கள் கதாப்பாத்திரமாக நடித்தனர். ஆனால் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி நடித்தவர் சிவாஜி.

பெருந்தலைவர் காமராஜரின் உண்மைத் தொண்டர். காமராஜரின் பொற்கால ஆட்சியை அவர் சினிமாவில் காட்ட தயங்கியதில்லை.

வீரபாண்டிய கட்டபொம்மன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை உள்ளிட்டோரின் வரலாற்றை நம் கண்முன்னே கொண்டு வந்தார்.

ஒவ்வொரு படத்திலும் மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டினார். நாட்டுப்பற்றை கொடுத்தார். இவ்வாறு எச். வசந்தகுமார் கூறினார்.

நாயகன் அறிமுகம்

இந்த விழாவில் மராட்டிய மாநிலத்தில், 30&க்கும் மேற்பட்ட நடன பள்ளிகள் அமைத்து தமிழ் கலாச்சாரம் மற்றும் நடன பயிற்சி அளித்து வரும் மேக் மோகன் பால், அவரின் மனைவி மேரி மேக்மோகன் பால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேக் மோகனின் மகன், லாபி நடன கலைஞர் ஆவார். இவர் ஏற்கனவே இந்தியில் ஆல்பம் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி 2 இந்தி படங்களிலும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் புது படத்தில் அறிமுகமாகவும் உள்ளார். இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

விழா குறித்து லாபி கூறும்போது, ”என் பெயர் லாபி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பை தாங்க. ஆனா நான் தமிழ் பையன். கோயம்புத்தூர் தாங்க என் சொந்த மாவட்டம்.

அப்பா, அம்மா எல்லோரும் ரொம்ப நாளுக்கு முன்னாலே மும்பை வந்துட்டாங்க. நடன போட்டியில் சர்வதேச அளவில் பங்கு பெற்று உள்ளேன். நடன போட்டிக்கு 7 நாடுகளுக்கு மேல் சென்றிருக்கிறேன்.

தற்போது இந்தியில் முன்னணி கதாப்பாத்திரத்தில் 2 படங்கள் பண்றேன். தமிழ் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு.

தமிழ்நாட்டிற்கு வந்து சிவாஜி சார் விழாவுல கலந்துகிட்டது ரொம்ப பெருமையா இருக்கு.

அவர் மிகப்பெரிய மனிதர். அவர் போல நானும் வரணும். தமிழ் மக்களாகிய உங்களின் ஆதரவும், ஆசிர்வாதமும் எனக்கு தேவை.” என்றார்.

சிவாஜியும், தமிழும் விழாவிற்கான ஏற்பாடுகளை அகமதாபாத் தமிழ் சங்கம், சென்னை தமிழ் சங்க தலைவர் டாக்டர். டி. இளங்கோவன், வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம், நக்கீரன் தமிழ் சங்கம், டெல்லி தமிழ் சங்க பொதுச்செயலாளர் முனைவர். இரா. முகுந்தன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பாரிவேந்தர் தமிழ் மன்றம், செஞ்சி தமிழ் சங்கம், சிவாஜி நலப் பேரவை மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவில் அகமதாபாத் தமிழ் சங்க துணை தலைவர் ஆர். திருநாவுக்கரசு நன்றியுரை கூறினார். மீடியா பாஸ்கரன் மற்றும் செழியன் ஆகியோர் விழா ஒருங்கிணைப்பாளராக இருந்தனர். செய்தி தொடர்பு பணிகளை செல்வரகு கவனித்தார்.

Sivaji Ganesan 90th Birthday Celebrations

sivaji function

More Articles
Follows