ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய் 62 படத்தின் நாயகி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய் 62 படத்தின் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rakul Preet Singh may romance with Vijay for AR Murugadoss movieமெர்சல் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி உறுதியாகிவிட்டது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 100 கோடிக்கு மேல் தயாரிக்கவுள்ளதாம்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என அனிருத் கூறியுள்ளதால், அவர் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் நாயகி பற்றிய தகவல் வந்துள்ளது.

இதில் ஸ்பைடர் பட நாயகி ராகுல் ப்ரித்திசிங் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

‘ஸ்பைடர்’ படத்தை இயக்கும்போது ராகுல் பிரித்திசிங்கின் நடிப்பு திறமையையை கண்டு ஏஆர்.முருகதாஸ் அசந்துபோனதால் இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Rakul Preet Singh may romance with Vijay for AR Murugadoss movie

புலிமுருகனை தமிழுக்கு கொண்டு வந்தவரின் அடுத்த படைப்பு அகோரி

புலிமுருகனை தமிழுக்கு கொண்டு வந்தவரின் அடுத்த படைப்பு அகோரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pulimurugan Tamil version fame RP Bala produces Agoriசமீபத்தில் தமிழ்ச் சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘புலிமுருகன்’ . இது மோகன்லால் நடிப்பில் வந்த பிரம்மாண்ட வெற்றிப் படமாகும். அந்த ‘புலிமுருகன்’ படத்தை தமிழில் வழங்கியவர் ஆர்.பி.பாலா.

அவர் தயாரிக்கும் புதிய படம் ‘அகோரி’.

ஆர்.பி. பிலிம்ஸ் வழங்கும் ஆர்.பி.பாலாவின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர். டி.எஸ்.ராஜ்குமார் இயக்கும் படம் ‘அகோரி’ . இப்படத்துக்கு , வசனத்தை ஆர்.பி.பாலா எழுத ஒளிப்பதிவு செய்கிறார்/

ஆர்.ஷரவணகுமார்,இசை.பிரசாந்த் கே கே, சண்டைப் பயிற்சி-.டேஞ்சர் மணி, நடனம் -பூபதி, கதாநாயகனாக, சித்து, ஆதவ், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

“அகோரி” என்கிற இந்தப் பிரம்மாண்ட படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இன்று மிகச் சிறப்பாக நடந்நது.. படத்தைப்பற்றி இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் கூறுகையில்…

” இப்படத்தின் கதை, திரைக்கதையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைத்துள்ளோம். அது மட்டுமின்றி இப்படத்தில் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை பணியாற்ற வழியமைத்துக் கொடுத்த எங்கள் தயாரிப்பாளர் ஆர்.பி.பிலிம்ஸ் ஆர்.பி.பாலா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

தயாரிப்பாளர் ஆர்.பி.பாலா கூறுகையில்…

”எனது முதல் படமான “அகோரி” தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் மிகப்பெரிய முத்திரை பதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

காரணம் இப்படத்தின் கதைக்களமும் கையாளும் விதமும் புதிய கோணத்தில் இருக்கும்.இதற்கு எங்கள் படத்தின் தலைப்பு “அகோரி” என்பதே ஓர் உதாரணம் எனலாம்” என்றார்.

காளையை அவமதித்த விஜய்சேதுபதி 10 லட்சம் நஷ்டஈடு தர நோட்டீஸ்

காளையை அவமதித்த விஜய்சேதுபதி 10 லட்சம் நஷ்டஈடு தர நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VijaySethupathi insulted Jallikattu He must pay Rs 10 Lakhs‘ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கும் கருப்பன் படத்தில் விஜய் சேதுபதி, தான்யா, பாபிசிம்ஹா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோசன் போஸ்டர் அண்மையில் வெளியானது.

இதில் ஜல்லிக்கட்டு காளையை விஜய்சேதுபதி அடக்குவது போல உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதி, இயக்குனர் பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் காத்தான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது… “காளையின் பெயருக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில், கருப்பன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக சந்திக்கத் தயார் என கருப்பன் குழுவினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VijaySethupathi insulted Jallikattu He must pay Rs 10 Lakhs

புரிதல் இல்லாத பெற்றோரை திருத்த வருகிறாள் ‘ஓவியா’

புரிதல் இல்லாத பெற்றோரை திருத்த வருகிறாள் ‘ஓவியா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviya movie will teach lesson for misunderstanding parentsஇமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’.

புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார்.

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார்

இன்றைய எந்திரமயமான, அதேசமயம் வேகமாகிப்போன வாழ்க்கை சூழலில் பெரும்பாலான கணவன்-மனைவியர்க்கிடையே சரியான புரிதல் இல்லாத நிலைதான் இருக்கிறது.
அதுவே இவர்கள் பெற்றோர்களாக மாறியபின்பும் இந்த புரிதல் இல்லாமை தொடர்வதால், பாதிக்கப்படுவது பெரும்பாலும் அவர்களது குழந்தைகள் தான்.

அப்படி ஒரு தம்பதியின் குழந்தை ஒன்று, அதன் பெற்றோர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, சண்டையினால் சரியான கவனிப்பின்மை காரணமாக இறந்து பேயாக மாறுகிறது.. அதன்பின் தனது இந்த நிலைமைக்கு காரணமான தனது பெற்றோருக்கு அது பாடம் புகட்டுகிறதா, இல்லை பாவம் என விட்டுவிடுகிறதா என்பது தான் படத்தின் கதை.

மலையும் மலைசார்ந்த இடமும் தான் கதைக்களம் என்பதால் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பு நடைபெற்று வருகிறது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள்: காண்டீபன், மிதுனா, சுவிக்சா ஜெயரத்தினம் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு: நிஷாந்தன் & விபின் சந்திரன்
இசை: பத்மஜன்
நடனம்: அனீஸ் ரஹ்மான்
பாடல்கள் : அண்ணாமலை, முருகன் மந்திரம் & M.F.ஜான்சன்
பாடியவர்கள் : வைக்கம் விஜயலக்ஷ்மி, ஆனந்த் அரவிந்தக்ஷன், ஜாஸின் & பூர்ணிமா
இயக்கம்: கஜன் சண்முகநாதன்
தயாரிப்பு: காண்டீபன் ரங்கநாதன் (இமாலயன் என்டர் டெயின்மென்ட்)

Oviya movie will teach lesson for misunderstanding parents

oviya movie stills

கலைஞர்கள் உழைப்பதற்கு ஊக்கம் தருவது விருதுகளே… ‘ஜிலீர்’ ஜீவா

கலைஞர்கள் உழைப்பதற்கு ஊக்கம் தருவது விருதுகளே… ‘ஜிலீர்’ ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor jeevaதமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2012க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு ஜீவா தேர்வாகியுள்ளார்.

2012ல் கெளதம் வாசுதேவ் மேனன். இயக்கத்தில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் நடித்ததற்காக அவர் இவ்விருதைப் பெறுகிறார்.

இது பற்றி நடிகர் ஜீவா பேசும் போது “ஒரு நடிகருக்கு படத்தில் நடித்ததற்கு வணிக ரீதியான வெற்றி முக்கியம் அது போல் விருதுகளும் முக்கியம்.

கிடைக்கிற விருது அங்கீகாரம் கலைஞர்களை உற்சாக மன நிலைக்கு இட்டுச் செல்லும். அது மட்டுமல்ல மேலும் உழைக்க ஊக்கம் தரும்.

அவ்வகையில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படம் விமர்சன ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்ட படம் .இப்படி பேசப்படும் வகையில் அந்தப் படத்தை கெளதம் மேனன் சார் உருவாக்கியிருந்தார்.

அந்த படத்துக்காக என்னைச் சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள தமிழக அரசுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உற்சாகமும் பெருமையும் அளிக்கும் வகையிலான இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்து பரிந்துரை செய்த விருதுக் குழுவினருக்கும் என் நன்றி.

இந்த நேரத்தில் என்னுடன் அந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் கூறிக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல 2009 முதல் 2014 வரையிலான படங் களுக்கு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞரகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

Jeeva won TN State Best Actor award for 2012

மெலோடி கூட்டணி உடைகிறதா.? இமானை தவிர்த்த பிரபுசாலமன்.?

மெலோடி கூட்டணி உடைகிறதா.? இமானை தவிர்த்த பிரபுசாலமன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director nivas k prasannaகுத்துப் பாடல்களுக்கு மத்தியில் மெலோடிக்கு இன்னும் மவுசு இருக்கிறது என்று நிரூபித்து வருபவர் இசையமைப்பாளர் இமான்ன்.

இவரது படங்களில் நிச்சயம் ஒரு மெலோடி பாடலாவது தவறாமல் இடம்பெற்று மாபெரும் ஹிட்டடித்து விடும்.

அதுவும் பிரபுசாலமன், இமான், யுகபாரதி கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு உற்சாம்தான்.

இந்நிலையில், பிரபுசாலமன் அடுத்து இயக்கவுள்ள கும்கி2 படத்திற்கு இமான் இசையைமக்கவில்லையாம்.

அவருக்கு பதிலாக நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார்.

இவர் தெகிடி, சேதுபதி, ஜீரோ, கூட்டத்தில் ஒருத்தன் படங்களுக்கு இசைமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nivas Prassana compose Music for Kumki2 Whether Director avoids Imman

More Articles
Follows