ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ஆனார் ராஜுமகாலிங்கம்

Raju Mahalingam appointed as the state secretary of Rajini Makkal Mandramநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்த உடன் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரஜினி நடிப்பில் வளர்ந்துள்ள 2.ஓ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ஆக பணியாற்றியவர் ராஜு மகாலிங்கம் இந்த அறிவிப்பை தொடர்ந்து தன் பணியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அவருக்கு தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவர் ரஜினி மக்கள் மன்ற மாநிலச் செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பணியில் முக்கிய பங்கு வகுத்து வருகிறார் ராஜுமகாலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை அவரது நண்பரான தமிழருவி மணியன் சந்தித்து பேசினார்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Raju Mahalingam appointed as the state secretary of Rajini Makkal Mandram

Overall Rating : Not available

Latest Post