விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் கர்ணன் பட ஹீரோயின்

vijay sethupathi rajisha vijayan‘ஒரு சினிமாக்காரன்’, ‘ஃபைனல்ஸ்’ உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளவர் கேரளாவைச் சேர்ந்த ரஜிஷா விஜயன்,
இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கர்ணன்’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்தான் இந்த ஜோடி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை ராஜபக்சே குடும்பத்தினருக்கு நெருக்கமான முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என சிலர் தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post