பாபா முத்திரை.. கழகம் இல்லாமல் படை.. கட்சி ஆபிஸ்..; தனிக்கட்சி அறிவிப்பில் சுறுசுறுப்பான சூப்பர் ஸ்டார்

பாபா முத்திரை.. கழகம் இல்லாமல் படை.. கட்சி ஆபிஸ்..; தனிக்கட்சி அறிவிப்பில் சுறுசுறுப்பான சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis new political party Symbol flag Party office updates தமிழகமே எதிர்ப்பார்த்த தனது கட்சி அறிவிப்பை டிசம்பர் 3ஆம் தேதி தெரிவித்தார் ரஜினிகாந்த்.

2021 ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.

டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான தேதியை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்துள்ளார்.

இதனையடுத்து கட்சிப் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினிகாந்த்.

தனக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபம் சென்னை நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளதால் கட்சி அலுவலகமாக மாற்ற உள்ளார்.

தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தனது திருமண மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றினார் விஜயகாந்த் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரஜினியின் புதிய கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அர்ஜுன மூர்த்திக்கும், மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழருவி மணியனுக்கும் தனித் தனி அறைகள் வழங்கப்படவுள்ளதாம்.

இதனை தொடர்ந்து கட்சி கொடி வடிவமைக்கும் பணிகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன.

தற்போது நீலம், வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களிலும் நடுவில் ஸ்டார் சின்னத்தில் ரஜினிகாந்த் படம் உள்ள கொடியை ரஜினி ரசிகர்கள் வைத்துள்ளனர்

ஆனால் ரஜினி கட்சிக் கொடி இதிலிருந்து முற்றிலும் வேறுபடவுள்ளது.

ரஜினி போட்டோ கொடியில் இடம்பெறாது. ரஜினி அடிக்கடி காட்டும் பாபா முத்திரையே இடம் பெறும்.

தற்போது தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளின் பெயர்களில் கழகம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

எனவே கழகம் என்ற வார்த்தை இல்லாமல் கட்சியின் பெயரில் ‘படை’ என்ற வார்த்தை இடம்பெறவுள்ளதாம்.

விரைவில் ‘கொடி பறக்கும்’..

Rajinis new political party Symbol flag Party office updates

HEY.. இது வேற லெவல் கூட்டணி..; மீண்டும் ‘பியார் பிரேமா காதல்’..

HEY.. இது வேற லெவல் கூட்டணி..; மீண்டும் ‘பியார் பிரேமா காதல்’..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish Elan Yuvan team up for new project2018 ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்’.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடியாக நடித்திருந்தனர்.

படம் காதலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற ஹரிஷும், ரைசாவும் நட்புடன் பழகினர்.

இதனால் படத்தில் நிஜக் காதலர்களைப் பார்ப்பது போல அவர்களிடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டானது.

இளன் என்பவர் படத்தை இயக்க யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

கே புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது HEY கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

அதாவது Harish Elan Yuvan புதிய படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.

விரைவில் மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

Harish Elan Yuvan team up for new project

நெல்சன் இல்லை.?. ‘தளபதி 65’ டைரக்டர் அவரா.? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

நெல்சன் இல்லை.?. ‘தளபதி 65’ டைரக்டர் அவரா.? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masterலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் அடுத்தாண்டு 2021 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

இப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவுள்ள தளபதி 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

முதலில் ஏஆர் முருகதாஸ் இயக்கவிருந்த நிலையில் பின்னர் விலகினார்.

எனவே விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால் கோலமாவு கோகிலா & டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க போவதாக தகவல்கள் வந்தன.

இதனிடையில் இயக்குனர் அட்லீ விஜய்யை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே தளபதி 65 படத்தை அட்லீ இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியாக வெளியான ‘பிகில்’ படமே எதிர்ப்பார்த்த நிலையில் இல்லை.

இதனால் மீண்டும் அட்லீயுடன் கூட்டணியா? என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருத்தல் நலமே..

Who will be the director of Vijays Thalapathy 65

டிஆர் தலைவர்… சிம்பு உஷா உள்ளிட்டவர்கள் உறுப்பினர்கள்..; தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் ஆரம்பம்

டிஆர் தலைவர்… சிம்பு உஷா உள்ளிட்டவர்கள் உறுப்பினர்கள்..; தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

T Rajendher started Tamilnadu movie makers sangamடி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக விழா இன்று (5th Dec) நடைபெற்றது

தலைவர் – டி.ராஜேந்தர்
செயலாளர் – N. சுபாஷ் சந்திர போஸ்
செயலாளர் – JSK. சதிஷ் குமார்
பொருளாளர் – K.ராஜன்
துணை தலைவர் – P.T. செல்வ குமார்
துணை தலைவர் – R. சிங்கார வடிவேலன்
இணை செயலாளர் – K.G. பாண்டியன்
இணை செயலாளர் – M. அசோக் சாம்ராஜ்
இணை செயலாளர் – சிகரம்.R.சந்திர சேகர்

1. புதிய, சிறிய படத்தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்க நினைக்கிறோம்

2. VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவீனங்களை தவீர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம்.

3. திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கி தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்க்கு, புதிய, உரிய வழி காட்டுவோம்.

4. F.M.S, சாட்டிலைட், O.T.T. மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தை பெருக்கி லாபம் ஈட்ட முயற்சி மேற்கொள்வோம்.

5. பட வெளியீட்டின் போது ஏற்படும் பல வித சிக்கல்களை, இயன்றவரை சுமுகமாக பேசி தீர்க்க ஆவண செய்வோம்.

தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான திருமதி உஷா ராஜேந்தர், STR பிக்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் இந்த சங்கத்தில் உறுப்பினராக இணைகின்றனர்.

T Rajendher launches Tamilnadu movie makers sangam

தமிழக அரசு விருது வென்ற சரத்குமாரின் ‘சிம்மராசி’ பட இயக்குனர் காலமானார்

தமிழக அரசு விருது வென்ற சரத்குமாரின் ‘சிம்மராசி’ பட இயக்குனர் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simmarasi director Erode Soundar passed awayகேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ‘சேரன் பாண்டியன்’, நாட்டாமை, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் ஈரோடு சௌந்தர்.

மேலும் சிம்மராசி, சீதனம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, படத்தின் கதைக்காகவும், ‘சிம்மராசி’ படத்தின் வசனத்துக்காகவும் தமிழக அரசு விருதை வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு 2019ல் தனது பேரன் கபிலேஷை நாயகனாகவும் தனது தம்பி மகன் பாலசபரீஸ்வரனை வில்லனாகவும் ‘உள்ளேன் அய்யா’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தி இயக்கியிருந்தார் ஈரோடு சவுந்தர்.

இவருக்கு தற்போது 62 வயதாகிறது.

இவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு இருந்துள்ள நிலையில் நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

எனவே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி ஈரோடு சௌந்தர் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Simmarasi director Erode Soundar passed away

கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி.; மருந்தை கண்டுபிடித்த நிறுவனர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார்

கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி.; மருந்தை கண்டுபிடித்த நிறுவனர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Biontech founderஉலகையே அச்சுறுத்தும் நோயாக கொரோனா உருவெடுத்துள்ளது.

இதற்கு தடுப்பூசி & மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து, 95 சதவீதம் பலனளிக்கும் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளன.

இந்த தடுப்பூசிக்கு, இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகத்தின் அனுமதி கிடைத்துவிடும்.

இதனிடையில், இந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு சில தினங்களுக்கு முன்னர் தான் அங்கீகாரம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கொரொனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடு என்ற பெருமையை பிரிட்டன் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து பயோஎன்டெக் நிறுவனத்தின் பங்குகள் ஒரே வாரத்தில் 9% உயர்ந்துள்ளதாம்.

அந்நிறுவனத்தின் பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் பயோஎன்டெக் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஜெர்மனியின் உகுர் சாஹின் (Ugur Sahin) உலகின் டாப் 500 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்துள்ளார்.

அதாவது ஃபுளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 493-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

கணஅதிகாரிகளாக இருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Biontech founder ugur sahin joins worlds 500 richest people

More Articles
Follows