Breaking: மே 1ல் செம வெய்ட்டு காட்ட வரும் காலா ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து வருகிறது.

கபாலி படத்தை தொடர்ந்து இப்படத்தையும் ரஞ்சித் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ஜீன் 7ல் படத்தை ரிலீஸ் செய்வோம் என இப்பட தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதன் பாடல்களை மே 9ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் அதிரடி அறிவிப்பாக இப்படத்தில் இடம் பெற்றுள்ள செம வெய்ட்டு என்ற சிங்கிள் சாங்கை மட்டும் நாளை மே 1ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Rajinis Kaala single Semma Weightu from 1st May 2018

Wunderbar Films‏Verified account @wunderbarfilms 5m5 minutes ago
Weight-ah Oru Single! #SemmaWeightu 1st Single from #Kaala Releasing Tomorrow at 7pm. Stay Tuned

 

விஜய் 62 படத்தின் பைக் சீன் லீக்கானது; படக்குழுவினர் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோலிவுட் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சென்னையில் நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாட்களாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில், இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அந்த காட்சியில் கல்லூரி மாணவர்களுடன், பைக்கில் விஜய் ஊர்வலமாக போவது போல் ஒரு காட்சி உள்ளதாம். அதை முருகதாஸ் இரவு நேரத்தில் படமாக்கியுள்ளார்.

அதை வீடியோ எடுத்த ஒருவர் இணையத்தில் பகிர அது வைரலாக பரவி வருகிறது.

அதைப்பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

Vijays bike riding video from Thalapathy 62 goes viral

மனிதனுக்கும் ஒட்டகத்துக்கும் உள்ள பாசத்தை சொல்ல வரும் சிகை இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

”M10 PRODUCTIONS” சார்பாக M.S. முருகராஜ் தயாரிப்பில் வெளியான படம் “யா யா”.

இப்படத்தில் “மிர்ச்சி” சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா, சந்தியா ஆகியோர் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில், தனது நிறுவனத்தின் அடுத்த படைப்பை தயாரிக்க இருக்கிறார் தயாரிப்பாளர் M.S.முருகராஜ்.

M.S. முருகராஜ் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க எமோஷனலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஜனரஞ்சகமான படமாக உருவாகவிருக்கிறது.

மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் சொல்லும் படமான இதனை ’சிகை’ பட இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கவிருக்கிறார்.

படத்தின் திரைக்கதை அமைப்பு வேலைகள் நடைபெற்றுவருகிறது. படத்தின் பூஜை விரைவில் நடைபெறவிருக்கிறது. படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்கள் அறிவிக்கப்படும்.

Sigai fame director next project deals with Camel and Man

கொடிய மிருகங்களை படம் பிடிக்க காட்டுக்கு செல்லும் ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “பொட்டு“ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள்.

பரத், நமீதா நடித்துள்ள இந்த பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது.

அதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “கா“ என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.

இப்படம் உலக மக்களுக்கானது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.

கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – அறிவழகன்
இசை – அம்ரிஷ்
எடிட்டிங் – கோபிகிருஷ்ணா
கலை – லால்குடி இளையராஜா
ஸ்டன்ட் – விக்கி
நிர்வாக தயாரிப்பு – சங்கர்
தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்
இணை தயாரிப்பு – ரவிகாந்த்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நாஞ்சில்

முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது.

கிரைம் திரில்லர் படமாக உருவாக உள்ளது “கா“.

படப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

Andrea Jeremiah as Wild Life Photographer for Kaa movie

டாக்டர் ராஜசேகர் படத்தை இயக்குகிறாரா ஐஸ்வர்யா தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ்.

இந்த இரண்டு படங்களை அடுத்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை எடுக்கவிருந்தார் ஐஸ்வர்யா. அது குறித்த அறிவிப்பும் வெளியானது.

அதன்பின்னர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளதாக பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார்.

ஆனால் அதுவும் கிடப்பிலேயே போடப்பட்டது.

இந்நிலையில், விரைவில் மற்றொரு புதிய படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறாராம் ஐஸ்வர்யா தனுஷ்.

அதில் தெலுங்கின் பிரபலமான நடிகர் டாக்டர் ராஜசேகர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ளதாம்.

Aishwarya Dhanush teams up with Telugu Actor Dr Rajasekar

Breaking: காலா இசை வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேச  அறிவிப்பை தொடர்ந்து வெளியாக உள்ள படம் ‘காலா’.

எனவே அவரது ரசிகர்கள் அனைவரும் காலாவுக்காக காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.

இப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அடுத்த பாடல்களுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழா மே 9ம் தேதி நடக்கும் என தயாரிப்பாளர் தனுஷ் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் மற்ற படங்களை போலவே இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனம் இதன் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. டிவி சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது.

Rajinikanths  Kaala movie audio launch on 9th May 2018

More Articles
Follows