தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிக்கு இரண்டு மகள்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் ஆண் குழந்தைகளே. அப்படியிருக்கையில் எப்படி பேத்தி என நினைக்கிறீர்களா..?
இது நிஜப் பேத்தி அல்ல. காலா படத்தில் ரஜினியின் பேத்தியாக நடித்த பேபி மீனலோச்சனி பற்றிய செய்தி.
இவர் தற்போது ஒரு முக்கிய கேரக்டரில் விஜய்யுடன் சர்கார் படத்தில் நடிக்கிறாராம்.
ஏற்கெனவே தெறி படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜய்யுடன் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி உள்ளிட்டோர் நடிக்க முருகதாஸ் இயக்கி வருகிறார்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.