ரஜினியிடம் ஆர்.கே.சுரேஷ் பெற்ற ஆஸ்கர் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய அரை டஜன் படங்கள் கடந்தாண்டு (2016) இல் ரிலீஸ் ஆனது.

இதில் தர்மதுரை படத்தை சீனுராமசாமி இயக்க, ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார்.

இப்படம் 100 நாட்களை கடந்த நிலையில், இப்படக்குழுவினர் அந்த நாள் தர்மதுரை ஹீரோவான ரஜினியை சந்தித்து ஷீல்டை கொடுத்தனர்.

இதுகுறித்து இப்படத் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் கூறியதாவது…

“சூப்பர் ஸ்டாரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்.

அவரின் படங்களை பார்க்க முட்டி மோதி டிக்கெட்டுகளை வாங்கியவன் நான்.

தாரை தப்பட்டை படத்தில் எனது வில்லன் கேரக்டரை மிகவும் பாராட்டினார்.

என் தயாரிப்பில் உருவான தர்மதுரை படத்தையும் பாராட்டினார்.

நான் கடவுளாக நினைத்த ரஜினிகாந்த் அவர்களை நேரில் பார்த்ததும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றது எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல்” என்றார் குறிப்பிட்டுள்ளார் இந்த வில்லன் ஆர்கே. சுரேஷ்.

Rajinis appreciation is like oscar award to me says RK Suresh

விஜய்-அஜித்தை கண்டித்த கங்கை அமரன், தன் மகனை கண்டிப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் பன்முகம் கொண்டவர் கங்கை அமரன்.

தற்போது டிவி ரியால்ட்டி ஷோக்களில் நடுவராக பங்கு பெற்று வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இவரது பேட்டியில் சமீபத்திய திரைப்பட பாடல்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அதில்… “முக்கியமாக அஜித்தின் வேதாளம் படத்திலுள்ள ஆலுமா டோலுமா என்ற பாடலையும் விஜய்யின் தெறி படத்திலுள்ள ஜித்து ஜில்லாடி பாடலையும் குறிப்பிட்டு இருந்தார்.

இதெல்லாம் ஒரு பாட்டா? என்றும் கேட்டு இருந்தார்.

இந்நிலையில், இவரது அண்ணன் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான டிரெண்ட் சாங் சமீபத்தில் வெளியானது.

சிம்பு பாடிய இப்பாடலை மகளிர் அமைப்புகள் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

அன்று விஜய், அஜித் பாடல்களை குறை சொன்ன கங்கை அமரன், இன்று அவரது மகன் இசையில் உருவான பாடலை கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஏனோ? என விவரமறிந்தவர்கள் கேட்டு வருகின்றனர்.

Will Gangai Amaran ask Yuvan about Trend Song

போகனுக்கு வந்த சோதனை… ஆறுதலாக அமையும் ‘பைரவா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லஷ்மண் இயக்கத்தில் உருவான போகன் படத்தில் ஜெயம் ரவி, அர்விந்த் சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீடு 2016 டிசம்பர், 2017 ஜனவரி என தள்ளிக்கொண்டே போனது.

இறுதியாக 2017 பிப்ரவரியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதனால் போகன் ரசிகர்களுக்கு ஆறுதலாக இதன் ட்ரைலரை பைரவா வெளியாகும் தியேட்டர்களில் இடைவெளியில் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Bogan Trailer will be screened with Bairavaa movie

பர்ஸ்ட் லுக்குடன் ரிலீஸ் தேதியை அறிவித்த விக்ரம்-கௌதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா மற்றும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை தொடந்து விக்ரம் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார் கௌதம் மேனன்.

‘துருவ நட்சத்திரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

கௌதம் மேனனின் ‘ஒன்றாக எண்டர்டையின்மண்ட்’ நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

நாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் தகவல்கள் விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

2017 ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் எனவும் பர்ஸ்ட் லுக்கில் தெரிவித்துள்ளனர்.

#Dhruva Natchathiram movie First look confirmed with movie release date

‘தெறி’க்கு கிடைக்காத ‘வெற்றி’ பைரவாவுக்கு கிடைச்சுடுச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் பிரம்மாண்ட் தியேட்டர்கள் இருந்தாலும் ஆடியன்ஸின் உண்மையான பல்ஸ் அறிந்திடும் தியேட்டர்கள் என சில தியேட்டர்கள் உள்ளன.

அதில் முக்கியமானது சென்னை, குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டர்.

இங்கு பைரவா படம் வெளியாகவுள்ளதால் தற்போதே இதன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த தியேட்டரில் சில பிரச்சினைகளால் தெறி படம் வெளியாகவில்லை.

அன்று தெறிக்கு கிடைக்காத வெற்றி தியேட்டர் இன்று பைரவாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Theri and Bairavaa movie connected with Vettri theatre

 

அஜித்-57 படத்தின் பட்ஜெட் எகிறியதா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

சிவா இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் காஜல், அக்ஷராஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டினாலும் இன்னும் இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை.

இப்படம் தொடங்கப்படும்போது ரூ 65 கோடி வரைதான் பட்ஜெட் ஒதுக்கினாராம் தயாரிப்பாளர்.

ஆனால் இதுவரை எடுத்த காட்சிகளை பார்த்தபோது தயாரிப்பாளர் மிகவும் சந்தோஷப்பட்டுள்ளாராம்.

எனவே, இன்னும் கூடுதல் செலவு ஆனாலும் பரவாயில்லை. நன்றாக முடிந்து தாருங்கள் என்று இயக்குனரிடம் கூறியதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Ajith 57 movie budget updates

More Articles
Follows