சென்னையில் ‘அண்ணாத்த’ செட்.; டிசம்பர் மாத சூட்டிங்கில் ரஜினி பங்கேற்பு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அண்ணாத்த படத்திற்காக இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா.

இமான் இசையைமக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது-

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்தப் படத்தை இந்தாண்டு 2020 தீபாவளிக்கு வெளியிட நினைத்து விறுவிறுப்பாக படத்தை படமாக்கினார் சிவா.

ஆனால் கொரோனா பிரச்சினையால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

தற்போது 6 மாதத்திற்கு பிறகு சூட்டிங் நடத்த அரசு அனுமதியளித்துள்ளதால் சென்னையில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

எனவே கிழக்குக் கடற்கரைச் சாலையில் செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ரஜினி இல்லாத காட்சிகளை எடுக்கவிருக்கிறார்களாம்.

அதன்படி கீர்த்தி சுரேஷ் – நயன்தாரா இருவரும் தோன்றும் காட்சிகளை படமாக்கவுள்ளனர்.

அண்ணாத்தே படப்பிடிப்பில் டிசம்பர் அல்லது ஜனவரியில் ரஜினி பங்கேற்பார் என கூறப்படுகிறது.

எல்லாம் திட்டமிட்டப்படி நடந்தால் 2021 கோடை விடுமுறையில் படத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இதனிடையில் தன் அரசியல் கட்சி அறிவிப்பு, மதுரை மாநாடு, தமிழகளவில் பிரச்சாரம், தேர்தல் களம் என ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajini’s ‘Annaatthe’ To Resume Shooting In december

அடுத்த எம்ஜிஆராக விஜய் போஸ்டர்கள்..; மாஸ்டரை மாட்டி விடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் ஆரம்ப கால சினிமாக்களில் அடுத்த ரஜினியாக ரஜினியாக சித்தரிக்கப்பட்டு இருந்தார்.

இவன் பாத்தா சின்ன ரஜினிடா என்பது போல பல பாடல் வரிகள் விஜய்க்காக எழுதப்பட்டது. விஜய்யுடம் அவ்வப்போது தலைவர் ரஜினி என புகழ்பாடி வந்தார்.

தற்போது ரஜினிக்கு அடுத்த இடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் வந்துள்ளார்.

எனவே தற்போது ரஜினியின் புகழ் பாடாமல் நேரடியாக எம்ஜிஆர் புகழ் பாட ஆரம்பித்துவிட்டார்.

மெர்சல் உள்ளிட்ட படங்களில் எம்ஜிஆர் ரசிகராகவே வந்தார் விஜய்.

இதனையடுத்து விஜய் ரசிகர்களும் தளபதியை வாத்தியார் எம்ஜிஆருக்கு அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

ரஜினி பட வசூலை விஜய் படங்கள் முறியடித்துவிட்டதாக கட்டுக்கதைகளை கட்டி வருகின்றனர்.

அண்மையில் விஜய் சங்கீதா திருமண நாள் வந்தபோது புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி என டிசைன் செய்து போஸ்டர்களை ஒட்டினர்.

தற்போது விஜய்யின் எந்த பட அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனாலும் மாஸ்டர் ஓடிடி ரிலீஸ் வேண்டாம். ஒரே தளபதி தியேட்டர் (OTT) என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்துவிட்டனர்.

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் எம்ஜிஆர் போட்டோக்களில் விஜய் முகத்தை வைத்து டிசைன் செய்து போஸ்டர்கள் நாளைய தமிழகமே.. வாத்தி கம்மிங் என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதை எல்லாம் ஆளும் அதிமுக கட்சி கவனித்து வருகிறதாம்.

பெரும்பாலும் விஜய் படங்களின் ரிலீசின் போது ஏதாவது ஒரு அரசியல் பிரச்சினை வரும்.

விஜய் ரசிகர்கள் செய்வதை பார்த்தால் மாஸ்டர் ரிலீஸ் ஆகும்போது மாஸ்டர் சிக்கலில் மாட்டிக் கொள்வாரோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

Posters in Madurai hail Thalapathy Vijay as ‘future leader’

ப்ரா அணிந்து பூங்காவில் உடற்பயிற்சி..; மக்கள் தாக்கியதாக கோமாளி நடிகை புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பள்ளி மாணவியாக நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

இவர் பார்க் ஒன்றிற்கு தன் தோழிகளுடன் உடற்பயிற்சி செய்ய சென்றிருக்கிறார்.

அப்போது தங்களை சிலர் பெண்களும் ஆண்களும் இணைந்து தங்களை தாக்கியதாக சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு நடந்த சம்பவங்களை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில்… அவர் உடற்பயிற்சி செய்தபோது தான் ஸ்போர்ட் ப்ரா அணிந்திருப்பதாக கூறியுள்ளார்.

அங்கிருந்த சிலர் தங்களை தாக்கியதாகவும், ஆபாச உடையணிந்து ஆபாக நடனமாடியதாக பொய் புகார் கூறுவதாகவும் சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டாமா என ஒரு பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே சமயம் அந்த வீடியோவில் தன்னை டாக்டர் என சொல்லும் ஒரு நபர் சம்யுக்தா மீது எந்த தவறும் இல்லை என கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து நடந்த வாக்குவாதத்தின் போது அங்கு காவல்துறையினர் வந்து விசாரணை நடத்துவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

https://www.instagram.com/samyuktha_hegde/channel/?utm_source=ig_embed

Comali fame Samyuktha Hegde shares ordeal of being abused while working out

சக்ரவியூகம் குறும்படத்தை வெள்ளித்திரையில் இயக்கவுள்ளராம் .சந்தோஷ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தோஷ்குமார் ‘க்ளீன் போல்ட்’ குறும்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர்
சந்தோஷ்குமார். அதில் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால்
கவனிக்கப்படத்தக்கவராக மாறியதால் தனது அடுத்தடுத்த குறும்படங்களால்
சினிமாக்காரர்களிடம் நெருக்கமாகியுள்ளார். இந்நிலையில் இவர் விஜய்
ஆதிராஜை வைத்து எடுத்த ‘சக்ரவியூகம்’ குறும்படத்துக்கு சமூக
வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து விருதுகள் வாங்கியிருப்பதுடன் பிரபல
சினிமா நிறுவனத்திடமிருந்து படம் இயக்குவதற்கான வாய்ப்பும் வந்துள்ளது.
இந்தத் தகவல் ஆச்சரியமாக இல்லை? ஆனால் அதுதான் உண்மை. சந்தோஷ்குமார்
வெகுவிரைவில் ‘சக்ரவியூகம்’ குறும்படத்தை வெள்ளித்திரைக்காக
இயக்கவுள்ளராம் .

இதுகுறித்து இயக்குநர் சந்தோஷ்குமார் கூறியது, ‘‘எனக்கு சொந்த ஊர்
கோயமுத்தூர். சினிமா பின்னணி எதுவும் கிடையாது. படிச்சது கம்ப்யூட்டர்
சயின்ஸ். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. சினிமா ஒரு ரசிகராகத்தான்
அறிமுகம். எம்.பி.ஏ. படிக்கும்போது சக நண்பர் ஒருவர் டிஜிட்டல் கேமரா
வைத்திருந்தார். அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொள்ள
விளையாட்டாக நண்பர்களை வைத்து ஒரு வீடியோ எடுத்தேன். அந்த வீடியோவுக்கு
நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. சிலர் ‘குறும்படம் ட்ரை பண்ணலாமே’
என்றார்கள். அப்போது நான் ஸ்டூடண்ட் என்பதால் கையில் பணம் இல்லாததால்
அந்த முயற்சியை அப்படியே ஓரங்கட்டி வைத்துவிட்டேன்.

பிறகு வேலைக்குப் போனதும் மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்கள்
எடுக்கும் முயற்சியில் இறங்கினேன். முதல் முயற்சியாக ‘க்ளீன் போல்ட்’
எடுத்தேன். அதற்கு ஒரு மில்லியன் வியூஸ் கிடைத்தது. தொடர்ந்து
‘நெமிசிஸ்’(nemesis), ‘அத்தியாயம்’ என்று பல ஜானர்ல ஷார்ட் ஃபிலிம்
எடுத்தேன்.தற்போது வெளிவந்துள்ள ‘சக்ரவியூகம்’ சைபர் இன்வெஸ்டிகேஷன்
பற்றிய கதை. நகரில் சில கொலைகள் நடக்கிறது. அதுவும் செலக்டிவ்வாக
நடக்கிறது. கொலையாளி யார்? கொலைகாரன் யார்? என்பதை ஒரு முழு
சினிமாவுக்கான விறுவிறுப்புடன் சொல்லியுள்ளேன்.

துப்பறியும் அதிகாரியாக விஜய் ஆதிராஜ் நடித்துள்ளார். அவர் எங்கள்
குறும்படத்தில் நடித்தது மறக்க முடியாதது. விஜய் ஆதிராஜ் சார் எனக்கு
முகநூலில் அறிமுகமானார். நாங்கள் வேலைக்குப் போகிறவர்கள் என்று
தெரிந்ததும் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அவருக்காக ஸ்பெஷல்
உணவு ஆர்டர் செய்தாலும் ‘நீங்கள் என்ன சாப்பிடுவீர்களோ அதுவே போதும்’
என்றார். அதே மாதிரி தங்கும் விஷயத்திலும் சாதாரண ஓட்டல் போதும் என்று
சொல்லிவிட்டார். சில சமயம் பொதுவெளியில் படமாக்கும்போது கூடுதலாக நேரம்
செலவழிக்க வேண்டிய சூழ்நிலை வரும். அந்த சமயத்தில் பல மணி நேரம் காரில்
காத்திருந்து ஒத்துழைப்புக் கொடுத்தார்.

என்னுடன் வேலை செய்யும் ப்ரீத்தியும் இன்னொரு லீட் கேரக்டரில் நடித்துக்
கொடுத்தார். கேரக்டர் ரோல்களில் நடித்துள்ளவர்கள் என்னுடைய நண்பர்கள்.
நான் கேட்டதும் உடனே ‘சரி’ சொல்லி படப்பிடிப்புக்கு வந்தார்கள்.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவாளர் ஜிக்கு ஜாக்கோப் பீட்டர், இசையமைப்பாளர்
ஸ்டேன்லி சேவியர், எடிட்டர் பிரேம் சாய் ஆகியோர் பிரமாதமான ஒத்துழைப்பைக்
கொடுத்தார்கள். குறும்படமாக இருந்தாலும் காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுத்தோம்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் படப்பிடிப்பு நடக்கும். நண்பர்கள் மற்றும்
என்னுடைய குடும்பத்தினர் சப்போர்ட் இல்லாமல் என்னால் இவ்வளவு
குறும்படங்கள் பண்ணியிருக்க முடியாது. அவர்களுடைய தொடர் ஆதரவால்தான்
என்னுடைய சினிமா பயணம் சாத்தியமானது.
இயக்குநர் அருண்காந்த் தன்னுடைய ‘அருண்காந்த் ஓ.டி.டி.தளத்தில் ரிலீஸ்
செய்து கொடுத்தார்.

குறும்படங்கள் மூலம் முழு சினிமாவை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை
வந்துள்ளது. தற்போது அதற்கான முயற்சியில் உள்ளேன். பிரபல தயாரிப்பு
நிறுவனங்களுக்கு கதை சொல்லியுள்ளேன். க்ரீன் சிக்னலுக்காகக்
காத்திருக்கிறேன்’’ என்று சொல்லும் சந்தோஷ்குமார், நயன்தாரா, டாப்ஸி
போன்ற முன்னணி நடிகைகளுக்கான வுமன் சென்ட்ரிக் கதைகளும் வைத்துள்ளாராம்.
தவிர ‘சக்ரவியூகம்’ குறும்படத்தை மல்டிஹீரோ படமாக எடுக்கும் ஐடியாவிலும்
உள்ளாராம்.

chakra viyugam santhosh plans to direct a film

இன்னும் 10 மாசமானாலும் கொரோனா தடுப்பூசிக்கு வாய்ப்பே இல்லையாம்; ஓ.. அவிங்களே சொல்லிட்டாங்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தி லட்சக்கணக்கான மனித உயிர்களை கொன்று குவித்து வருகிறது கொரோனா.

2020 தொடக்கம் முதல் மக்கள் தங்கள் இயல்பான வாழ்க்கையை தொலைத்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 6 மாதங்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சின்ன குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக மருத்துவ வல்லுனர்களே தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து அடுத்தாண்டு (ஜீன் 2021) பாதி வரை கிடைக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இதுவரை உலகில் ஓரிரு நாடுகளில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகளில், எதுவும் 50 விழுக்காடு கூட எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை எனவும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்யா நாடு கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், நெடுநாள் பாதிப்புகளை அந்த மருந்து குணப்படுத்துமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Covid Vaccination Not Expected Until Middle Of Next Year says WHO

பப்ஜிக்கு தடை…; FAUG வீடியோ கேம் ஆரம்பித்து அக்‌ஷய்குமார் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைஞர் சமுதாயத்தை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் பப்ஜி, கட் கட் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்த செய்தியை நம் தளத்தில் ஓரிரு தினங்களுக்கு முன் ப்ரேக்கிங் செய்தியாக பார்த்தோம்.

இந்த நிலையில் பப்ஜிக்கு இணையாக FAU-G என்ற அதிரடி கேமை தொடங்குவதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் இயக்கத்தின் கீழ் அச்சமற்ற மற்றும் யுனைடெட்-கார்ட்ஸ் எனும் FAU-G அதிரடி கேமை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

“பொழுதுபோக்கு தவிர, இந்த கேம் விளையாடுபவர்கள் நமது ராணுவ வீரர்களின் தியாகங்களைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள்.

இந்த கேமின் நிகர வருவாயில் 20% பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும்” என அக்சய்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Bollywood super star Akshay Kumar announces the launch of action game FAU-G

More Articles
Follows